Sunday, December 3, 2023

கற்றல் இடமாற்றம் : : கல்வியியலாளன் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ),

கற்றல் இடமாற்றம் 1. கற்றல் இடமாற்றம் என்றால் என்ன? முன்னர் கற்றுள்ள தகவல்களையும் அனுபவங்களையும் பிரிதொரு கற்றல் சந்தர்ப்பத்துடன் தொடர்புபடுத்திக்கொள்ளல் 2. கற்றல் இடமாற்றத்தின் இரு வகைகளும் எவை ? (+ ) சார்பான கற்றல் இடமாற்றம் உதவும் வகையில் இருப்பது கற்றவிடயங்கள் இன்னொரு சந்தர்ப்பத்தில் ( - ) சார்பான கற்றல் இடமாற்றம் முதலில் கற்றவைகள் இன்னொரு சந்தர்ப்பத்தில் தடை அல்லது குறுக்கீடாசு இருப்பது 3. கற்றல் இடமாற்றத்தை எவ்வாறு இலகுவாக்கலாம் அவதானம் ஞாபகம் - புலக்காட்சி தொடர்புகளை விருத்திசெய்தல் ஆரம்ப வகுப்புக்களில் ஆரம்ப திறன்களை சரியாக வளர்த்தல் கற்றலை தெளிவாக மேற்கொள்ளல் தொடர்ச்சியாக மேற்கொள்ளல் செயற்பாட்டு கற்பித்தலை ஊக்குவித்தல் பொருத்தமான சந்தர்ப்பங்களை உருவாக்கல் 4. சுற்றல் இடமாற்ற கொள்கைகள் உளப்பயிற்சி கட்டுப்பாட்டுக்கொள்கை கல்வி என்பது ஒருவகையான உளப்பயிற்சியே விஞ்ஞானம். மொழிப்பாடங்கள் அவதானிக்கும் திறனை வளர்ப்பன கணிதம் தர்க்க சிந்தனையை வளர்க்கும் வரலாறு தீர்ப்பளிக்கும் சிந்தனையை வளர்க்கும் என்பது உளவியல் கருத்தொன்றாகும் அதன்படி மனித உள்ளம் ஞாபகம்,தர்க்கித்தல் தீர்ப்பளித்தல் அவதானித்தல் முதலிய தனித்தனி ஆற்றல்களை கொண்டுள்ளது பயிற்சிகள் மூலம் அதனை விருத்திசெய்ய முடியும் அதனூடாக இடமாற்றம் நிகழும் பிளேட்டோ உயர் செம்மொழி படம் மூலம் கற்றல் - கற்றல் இடமாற்றம் நிகழும் மூளை பல கூறுகளை உடையது பலபாடங்களை கற்பதன் மூலம் உளக்கூறு விருத்தியடைந்து கற்றல் இடமாற்றம் நிகழும் ( மனனம் செய்தல் கூர்ந்து அவதானித்தல் ) ஒத்தமூலக்கொள்கை பயிற்சிஅனுபவம் செயல் என்பன சுற்றல் இடமாற்றத்தை ஏற்படுத்தும் பொதுமையாக்கல் கொள்கை கற்கப்படும் விடயங்களில் ஒழுங்கமைப்பையம் உட்பொருளையும் அகக்காட்சி பெற வேண்டும் ஒரு சூழலில் கற்கும் துலங்கல்கள் முழுமையாக தொகுதிகளாக்கப்பட்டு அவை மேலும் மேலும் திருத்தப்பட்டு நல்ல அமைப்புகளை பெற வேண்டும் பின் கற்றல் இடமாற்றம் ஏற்படும்' 5. கற்றல் இடமாற்றம் தொடர்பான கோட்பாடுகளினால் ஆசிரியர் பெறும் நன்மைகள் இடமாற்றம் நிகழ கற்பிக்க உதவும் பாடதொடர்பை ஏற்படுத்தலாம் கற்றல் பயன்பாட்டை உருவாக்கலாம் அளவு, பண்புரீதியான அடைவை ஏற்படுத்தலாம். கற்பித்தல் முறை உத்திகளை முறையாக பயன்படுத்தலாம் இலட்சிய உணர்வை ஏற்படுத்தல் சிறந்த வழிகாட்டல் மீளவலியுறுத்தல்களை மேற்கொள்ள இலகுவாக இருக்கும் 6. எண்ணக்கரு என்றால் என்ன? யாதேனும் பொருள் தொகுதியில் ஏற்படத்தக்க முக்கியமல்லாத மாற்றங்களை மறந்து அவற்றிற்கிடையிலான பிரதான இயல்பகளை மாத்திரம் கவனத்தில் கொண்டு அவற்றை தொகுதியாக்கி பொதுப்பெயரால் வழங்குவது உதாரணமாக ஆறு குளம் கால்வாய் சிற்றோடை - (நீர்பாசனத்தொகுதி ) 7. எண்ணக்கரு உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் தொடர்பாடல் திறன் அனுபவங்கள் கருத்துக்கள் மனப்பாங்குகள் 8. எண்ணக்கரு செயன்முறை எவ்வாறு உருவாக்கம் பெறுகிறது சூழல் தூண்டிகளுக்கு துலங்கல் காட்டுவதன் மூலம் எண்ணக்கரு செயன்முறை ஆரம்பமாகிறது சூழல் தூண்டிகளுக்கு புலன்களை வழிப்படுத்துவதால் கவனம் உருவாகிறது கவனம் மூலம் புலக்காட்சி ஏற்படுகிறது புலக்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டு அகக்காட்சி பெறல் மூலம் எண்ணக்கரு உருவாகிறது 9 எண்ணக்கருக்களின் வகைகள் தூல எண்ணக்கரு ( பௌதீக பொருள் சார்ந்தது ) - மரம் புத்தகம் பறவை கருத்து நிலை எண்ணக்கரு பௌதீக பொருள் சாராது உள்ளத்தில் உருவாகுவது (சனநாயகம் பொதுவுடைமைவாதம் ) 10. எண்ணக்கருக்களின் பயன்கள் சுற்றல் சூழலை எளிமையாக அமைக்கலாம் புரியாத விடயங்களை இலகுவாக இலகுவாக இனங்காணலாம் தொடர்பாடலை இலகுவாக்கிக்கொள்ளலாம் மீண்டும் மீண்டும் கற்க, கற்பிக்கத் தேவையில்லை கற்றலை ஒழுங்காக மேற்கொள்ளலாம் சுற்றல் பிரச்சினைகளை தீர்க்க முடியுமாதல் 11. எண்ணக்கரு உருவாக்கத்திற்கு ஆசிரியர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உண்மை அனுபவங்களை பெற்றக்கொடுத்தல் நேர் மீளவலியுறுத்தல் வழங்கல் எண்ணக்கரு தொடர்பான நேர் எதிர் வகைகளை தெரிவ செய்து உதாரணத்துடன் கற்பித்தல் எளிமையான தூண்டிகள் வழங்கல் இலகுவிலிருந்து கடினத்திற்கு செல்லல் முதிர்ச்சிக்கு ஏற்ப வழிநடத்தல் உங்கள் தேடலுக்கு எனது நன்றி கல்வியியலாளன் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ),

No comments:

Post a Comment