Wednesday, November 22, 2023

பாடசாலைக் கல்வி முறையில் மதிப்பீட்டுச் செயன் முறை : கல்வியியலாளன் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ),

பாடசாலைக் கல்வி முறையில் மதிப்பீட்டுச் செயன் முறை இலங்கை பாடசாலைக் கல்வி முறையில் 10175 (2018) பாடசாலைகள் பொதுக் கல்வியை 4,215,487 (2018) மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன. இவர்களின் அடைவு, தேர்ச்சி மட்டத்தை அளவிடுவதற்காக பல்வேறு மதிப்பீட்டு நுட்பமுறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையின் பாடசாலை மட்ட மதிப்பீட்டின் தோற்றமும் வளர்ச்சியில் 1997 இல் அறிமுகஞ்செய்யப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தமானது பாடசாலை மட்ட கணிப்பீடு, மதிப்பீட்டுக்கு முதன்மையளித்துள்ளது. கற்றல் கற்பித்தல் செயன் முறைகளில் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீடு மதிப்பீட்டில் ஒரு மாற்றத்தை இது ஏற்படுத்தியது. எண்ணக்கரு அறிமுகம் பாடசாலை என்பது முறைசார் ரீதியில் வடிவமைக்கப்பட்ட வரையறைக்குள் மாணவர்களின் அறிவு, ஆற்றல்களை உற்பத்தி செய்யும் இடமாக போசிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட அடைவுகளை அளவுகோள் இட்டு அளந்து பார்க்கும் ஒரு நுட்ப முறையே மதிப்பீடாகக் கருதப்படுகின்றது. இம்மதிப்பீடு பற்றி பல்வேறு அறிஞர்களும் பல்வேறு வடிவங்களில் முன் வைத்துள்ளனர்.அந்த வகையில் “மதிப்பிடுதல் என்பது நேரடியாக சோதித்தோ, வேறு வழிகளில் அனுமானித்தோ, செயல் சோதனைகள் நடத்தியோ பெறப்படும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மதிப்பு சார்ந்த தீர்மானமாகும். கல்விச் செயற்பட்டின் போது மேற்கொள்ளும் மதிப்பீடு வழமையாக “உருவாக்க மதிப்பீடு” எனப்படும். அது கற்றல்-கற்பித்தலை முன்னேற்றுதற்காகத் தகவல்களை அறுதியீட்டு முறையிற் பெற ஆசிரியர்களும் மாணவர்களும் மேற்கொள்ளும் செயற்பாடுகளைக் குறிக்கும். உருவாக்க மதிப்பீடு ஆசிரியர் அவதானிப்பு, வாய்மொழி வினாவுதல், வகுப்பறைக் கலந்துரையாடல், சுயவிவரப்பதிவு மதிப்பீடு, திறன் வெளிப்பாட்டு மதிப்பீடு, வீட்டு வேலையும் பரீட்சைகளும் உட்பட்ட மாணவர் பணிகளின் மதிப்பீடு என்பவற்றை உள்ளடக்குகிறது. விளைவான தகவல்கள் மாணவர்களின் தேவைகளை நிறைவாக்குமாறு கற்பித்தலையும் கற்றலையும் இணக்குவிக்கப் பயன்படும்போது, மதிப்பீடு உருவாக்க மதிப்பீடாகிறது. ‘’மதிப்பீடு என்பது நடைமுறைப்படுத்துபவரின் முடிவுகள் அடங்கிய செயல்களை திருப்தியாக உள்ளதா என ஆய்வு செய்து அதனுடைய சிறப்புகளுக்கு எதிர்பார்ப்புகளுக்கேற்ப திட்டம் மற்றும் திட்டம் சார்ந்த நோக்கங்கள் வரைவுப்படுத்துவது ஆகும்’’ - (டக்மேன் 1975) எனவே,ஏதாவது செயற்பாட்டின் வெற்றியைத் தீர்மானிக்க முறையான செயல் ஒழுங்கு மதிப்பீடு என சுருங்கக் கூறலாம். இச்செயல் ஒழுங்கை பாடசாலை மட்டத்தில் செயற்படுத்துவது பாடசாலை மட்ட மதிப்பீட்டுச் செயன் முறை எனலாம். கல்விச் செய்பாடுகளுள் பல்வேறு பண்புகளை அளப்பதற்கு பல அளவீட்டு உபகரணங்கள் (கரசித்திப்படுகின்றன.கல்வி அளவீட்டுக்குப் பயன்படுத்தபடும் மாணவர் அடைவு , பாட அடைவ , திறன்கள் மனப்பங்ககள், என பலவிடயங்கள் அளவிடப்பட்டு மதிப்பிடப்படுகின்றன. பாடசாலை மட்ட மதிப்பீட்டு வடிவங்கள் பாடசாலை மட்டத்தில் இடம்பெறும் மதிப்பீட்டுப் பணிகளை நாம் பின்வருமாறு அடையாளப்படுத்தலாம். 1.தவணை மதிப்பீட 2.இறுதியாண்டு மதிப்பீடு 3.கற்றல் -கற்பித்தல் மதிப்பீடு 4.பண்பு சார் மதிப்பீடு இவை ஆசிரியர் சார்பாகவும், மாணவர் சார்பாகவும், பாடசாலை சார்பாகவும் இடம்பெறும் மதிப்பீடுகள் ஆகும். இவற்றில் கற்றல் கற்பித்தல் தொடர்பான அடைவு மட்ட மதிப்பீடுகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. பாடசாலை மட்ட மதிப்பீடுகள் இடையீட்டு மதிப்பீடு, தெடர் மதிபபீடு, இறுதிமதிப்பீடு என நியம அடிப்படையிலும் ,நியதி அடிப்படையிலும் பாடசாலை மட்டத்தில் மதிப்பீடுகள் இடம்பெற்று வருகின்றன. 1994இல் தே.க.நிறுவகத்தினைச் சேர்ந்த மதிப்பீட்டுக் கிளையினர் மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 30 பாடசாலைகளில் இந்த முன்னோடி நிகழ்ச்சித்திட்டம் அறிமுகஞ் செய்யப்பட்டது. 1995இல் மேலும் 20 பாடசாலையும், 1998இல் 1998/04 சுற்றறிக்கைபடி அனைத்துப் பாடசாலைகளிலும் நடைமுறைக்கு வந்தது. அத்துடன் 2002இல் ஓ.எல்.பெறுபேற்றிலும் சேர்க்கப்பட்டது. என்றாலும், மாணவர் அடைவு எழுத்துப் பரீட்சை மூலம் மட்டுமே மதிப்பீ;;டு செய்யப்பட்டது. இது அரையாண்டுப் பரீட்சை, இறுதியாண்டுப் பரீட்சை எனவும் தற்போது நடைமுறையில் முதலாம் தவணை, இரண்டாம் தவணை, மூன்றாம் தவணை பரீட்சைகள் என பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மதிப்பீடு செய்வதற்கான நோக்கங்கள் :- 1. மதிப்பீடு வழிமுறைகளை அறிவுறுத்துகிறது. 2. மதிப்பீடு இயக்க கற்றல் 3. மதிப்பீடு மாணவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிவிக்கின்றனர். 4. மதிப்பீடு கற்பித்தல் பயிற்சியை அளிக்கிறது. மதிப்பீட்டின் முக்கிய பணிகள 1. மாணவர்களின் நேரம் மற்றும் கவனத்தைக் கவருதல். 2. மாணவர்களுக்கு பொருத்தமான கற்றல் செயல்பாடுகளை உருவாக்குதல். 3. மாணவர்கள் மீது கவனம் செலுத்தி தேவையான நேரத்தில் போதிய பின்விளைவுகளை வழங்குதல். 4. மாணவர்களிடையே வேறுபடுத்தக்கூடிய தரம் (அ) மதிப்பெண்கள் (அ) தேர்வில் தேர்ச்சி / தோல்வியின் முடிவுகளை கொண்டு தீர்மானங்களை செயல்படுத்தல். 5. மாணவர்களின் தரநிலை மற்றும் கருத்துரையை உட்புறப்படுத்த மாணவர்களுக்கு உதவுதல். கிப்ஸ் (2003) இம்திப்பீட்டு முறைகளின் முக்க்pயத்துவத்தை நோக்குவோமாயின் 1. மாணவர்களின் கற்றல் விருத்தி பற்றிய சரியான தீர்மானங்களுக்கு வரமுடியும் 2. மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை கண்டறியவும் விசாரிக்கவும் உதவுதல் 3. கலைத்திட்டம், கற்பித்தல் நடைமுறைகள், கற்பித்தல் உபகரணங்கள், கல்வி நிருவாகம், முகாமைத்துவ முறைமை ,கல்விச் செயற்திட்டங்கள் போன்வற்றின் விளைதிறன்களைக் கண்டறிய முக்கியத்துவம் பெறுகின்றது. 4. நாட்டில் நடைமுறையில் உள்ள கல்வி முறையுடன் தொடர்பான பிரச்சினைகளை,குறைபாடுகளை கண்டறிந்து அவற்றுக்குப்பதிலாக பரிகாரங்களை மேற்கொள்ளக் கூடிய கல்விக் கொள்கைகளை வகுப்பதற்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் பயன்மிக்கதாக இருக்கும். திட்டமிடவும், அறிவுறுத்தி வழிகாட்டவும் உட்காட்சி மூலம் ஆசிரியர்கள் மாணவர்களின் புரிதலின்படி வழிகாட்டவும், திட்டமிடவும் மேலும் போதிய பின்னூட்டத்தை வழங்கவும் மதிப்பீடு ஆசிரியர்களுக்கு பயன்படுகிறது. கலைத்திட்டத்தின் உள்ளடக்கம், தேர்ச்சி ஆகியவற்றுக்கேற்ப தயாரிக்கப்பட்ட நியதிகளை மாணவர்கள் அடைந்துள்ளனரா என்பதைப் பரீட்சித்தல் நியதி அடிப்படையிலான கணிப்பீடாகும். பெரும்பாலும் பாடசாலைகளில் 1. தவணைப் பரீட்சை 2. அலகுப் பரீட்சை 3. பாடசாலை மட்டக் கணிப்பீடு என்பன தொடர்ச்சியாக மேற் கொள்ளப்படுகின்றன. அவை பற்றிய பதிவுகள் பேணப்படுகின்றன. மாணவர்களுக்கும் சகல பாடசாலைகளிலும் தவணைப்பரீட்சை முடிவுகளும் வழங்கப்படுகின்றன. ஒரு சில பாடசாலைகளில் அலகுப் பரீட்சைகளின் பெறுபேறுகளை பிள்ளைகளுக்கு அட்டவணையாகவோ பதிவாகவோ வழங்குகின்றர்கள். சில பாடசாலைகளில் அலகுப் பரீட்சைகளின் பெறுபேறுகளை தேர்ச்சி அறிக்கையாகவே வழங்குகின்றார்கள். எனினும் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களுக்கு பாடசாலை மட்டக் கணிப்பீடு தொடர்பான அடைவுகள் பதிவுகளாக வழங்கப்படுவதில்லை. பாடசாலை மட்டக் கணிப்பீடு இலங்கையில் பாடசாலைகளில் அமுல்ப்படுத்தும் முன்னதாக தவணைப் பரீட்சைகளின் தேர்ச்சி அறிக்கை மாணவர்களது கற்றல் அடைவுகளில் பாரிய தாக்கத்தையும் ஒரு வித பயத்தையும் கொண்டமைந்திருந்தது. இன்று தரம் 1 முதல் 11 வரை பாடசாலைகளில் மாணவர் வகுப்பு ஏற்றங்கள் என்பன தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சகல பாடங்களிலும் நூறு புள்ளிகளைப் பெற்ற மாணவனும் எல்லாப் பாடங்களிலும் மொத்தமாக நூறு புள்ளிகளைப் பெற்ற மாணவனும் சித்தியடைய எவ்விதத் தடையுமில்லை. இதுவும் அடைவு மட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க இயலாமைக்கான ஒரு காரணமாக ஆசிரியர்கள் முன் வைக்கும் விடயமாக அமைகின்றது. தவணைப் பரீட்சை பெறுபேறுகளில் கடந்த காலங்களில் பேணப்பட்டு வந்த சித்தியடைந்தார்/சித்தியடையவில்லை என்ற வரிகள் தற்போது இல்லாமல் இருப்பதுவும் கற்றல் அடைவுகளை எளிமைக்குட்படுத்தியிருப்பதாகக் கருதப்படுகின்றது.. மாணவர் உரிமை, மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் காரணமாக பரீட்சைகள் தொடர்பான செயற்பாடுகள் தரம் 1 தொடக்கம் 10 வரை முன்னெடுக்கப்பட்டாலும் தரம் 11 இல் க.பொ.த சாதாரண தரத்தில் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் வைக்கப்படும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் பெறுபேறுகளின் அடிப்படையிலும் பாடசாலை மட்டக் கணிப்பீடுகளின் துணையோடு மாணவர்கள் சித்தியடைவதாகக் கருதப்பட்டாலும் பல மாணவர்கள் தேவையான பெறுபேற்றை உரிய முறையில் அடையாமல் திண்டாடுவதையம் அதனால் விரக்திக்குச் செல்லும் நிலையையும் பத்திரிகை மற்றும் ஊடகத்தினூடாக வெளிவரும் செய்திகளும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. OL பரீட்சை, இடைநிலைக் கல்வியின் முடிவில் மாணவர்களின் பாடவாரி அடைவுகட்குச் சான்றளிக்கும் நோக்குடனிருந்தது. இப் பரீட்சையின் பின் சில மாணவர்கள் பாடசாலை நீங்குவர். மற்றோர், AL இல் தமது கல்வியைத் தொடரத் தகுதி பெறவேண்டும் பாடசாலையிற் 11 ஆண்டுகள் கற்றும் இப் பரீட்சையிற் பல சிறார் எல்லாப் பாடங்களிலும் தவறுவது கவலைக்குரிய ஒரு விடயமாகும். இன்னுங் கவலைக்குரியது ஏதெனில், கட்டாய பாடமான கணிதத்தில் தவறுவோரின் வீதம் அதிகமாயிருப்பதாகும். AL பரீட்சை இரு நோக்கங்களை நிறைவேற்றுகிறது: மூத்த இடைநிலைக் கட்டத்திற் பாடசாலைக் கல்வியின் முடிவில், திறன் வெளிப்பாட்டை அளப்பதுடன் பல்கலைக்கழகங்கட்கு மாணவர்களைத் தெரிதற்கான அடிப்படையாகவும் உள்ளது. பல்கலைக்கழக அனுமதிகள் போட்டி மிக்கன. மாணவரெவருதும் எதிர்காலம் இப் பரீட்சையில் அவருடைய செயற்திறனிற் தங்கியுள்ளது. இதனால், மாணவர்கள் உருப்போட முற்படுகின்றனர். பரீட்சைக்கு மாணவர்களை ஆயத்தமாக்கத் தனிப்போதனை நிறுவன ஆசிரியர்கள் மீண்டும் குறுக்கிடுகின்றனர். இந்த உச்சமான போட்டி சமூக நலமற்றது. எனவே தேர்வுநாடுவோரை பல்கலைக்கழக அனுமதிக்குத் தெரிய மாற்றுப் பொறிமுறை ஒன்று அவசியம். கடுமையான பரீட்சை மையமாதலும் பொதுப் பரீட்சைகள் மூலம் மதிப்பிடுவதன்; குறைபாடுகளும் சிறாரின் ஒட்டுமொத்த விருத்தியைப் பாதகமாகப் பாதித்துள்ளன. பாடசாலைகளில், மாணவர்களை வினாத்தாள்கட்கு விடையெழுத ஆயத்தப்படுத்துவதாகக் கற்பித்தல் ஒடுங்கியுள்ளது. மாணவர்கள் இணை-கலைத்திட்டச் செயற்பாடுகளையும் சமூகச் செயற்பாடுகளையும் பாடசாலையிலும் வீட்டிலும் சமூகத்திலும் புறக்கணித்துப் பயிற்றல் வகுப்பிற்குப் போகையில், மாணவரின் ஆளுமை விருத்தி மாணவர்களாலும் பெற்றோராலும் கவனிக்கப்படாதுள்ளது அல்லது அறவே புறக்கணிக்கப்படுகிறது. இதன் பயனாகத், தேசிய கல்வி ஆணைக்குழு வரையறுத்த பரந்த இலக்குகளும் குறிக்கோள்களும் எதிர்நோக்கும் சிறாரின் ஒட்டுமொத்த விருத்தியை உறுதிப்படுத்தப் பாடசாலை முறைமை தவறியுள்ளது. பொதுவாகப் பயன்படும் தரப்படுத்திய பரீட்சைகளான கட்டுரை வகை, பல-தெரிவு வகை, பொருத்துதல் என்பன ‘நாயை ஆட்டும் வால்’ போல கலைத்திட்டத்துக்கு ஆணையிடுகின்றன. இப் பரீட்சைகள் போயொழியும் வரை, மாணவர்களை எதிர்காலத்திற்கு ஆயத்தமாக்க எத் திறன்களைக் கற்பிக்க வேண்டுமென ஆசிரியர்கட்கு விளங்காது. எனவே, வகுப்பறை மதிப்பீடுகள் எதிர்காலத்தில் மாணவர்கட்குத் தேவைப்படும் ஆற்றல்களுடன் இணங்குவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்தவேண்டும். நம்பகமான, திறன் வெளிப்பாட்டு அடிப்படையிலான அளவுகோல்களைக் கொண்ட வகுப்பறை-மதிப்பீடுகளின் ‘புதிய அலையின்’ ஒரு பகுதியாக ஆசிரியர்கள் அமைய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம் மதிப்பீட்டு முறைகள், வழமையான சோதனைகளை மட்டுங் கொண்டிராது, பிரச்சினை தீர்ப்பதிலும் தகவல்களைப் பகுத்தாய்ந்து தொகுத்தலிலும் மாணவர்கள் தமது திறன்களைப் புலப்படுத்துவதைக் கோரும் புதிய வழக்குமுறைகளையும் உள்ளடக்க வேண்டும். ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் , கனடா, ஸ்கன்டினேவிய நாடுகள், அவுஸ்திரேலியா போன்ற விருத்திபெற்ற நாடுகள் பாடசாலை மதிப்பீட்டு, கணிப்பீட்டு நடைமுறையைப் பலப்படுத்த நம்பகமான மதிப்பீட்டுச் செயற்பாடுகளைப் பயன்படுத்துகின்றன. நம்பகமான மதிப்பீட்டின் பின்னுள்ள சிந்தனை ஏதெனின், பாடசாலைக்கு வெளியேயுள்ள வாழ்க்கைக்கு அதிகம் பொருந்தும் முறைகளில் மாணவர்கள் தமது அறிவைப் புலப்படுத்தச் செய்வதாகும். துயார்படுத்திய சோதனைகள் அடைவு மதிப்பீட்டில் ஒரு பாகத்தை வகித்தாலும், நம்பகமான மதிப்பீடு வேறு நன்மைகளையுந் தருகிறது. பாரம்பரிய மதிப்பீடுகளில் கற்பித்தல், மாணவர்களைச் சோதனைக்கு ஆயத்தப்படுத்தற்கு வரையப்பட்டுள்ளது. கல்விச் செய்முறையின் போது மாணவரொருவர் பெற்ற அறிவையும் திறன்களையும் பிரயோகித்து நிஜ உலகப்பணிகளை நிறைவேற்றலில் அம் மாணவரின் தேர்ச்சியை நம்பகமான மதிப்பீட்டு முறை மதிப்பிடுகிறது. ஒப்படை எழுதுதல், தனிப்பட்ட அல்லது கூட்டுத் திட்டங்கள், சுயவிவரப்பதிவு, ஆசிரியர் அவதானிப்புகள், திறன் வெளிப்பாடு அல்லது புலப்படுத ;தல் மதிப்பீடு, திறனுக்குச் சான்றுகூறும் பிற செயற்பாடுகள் ஆகியவற்றை நம்பகமான மதிப்பீடு உள்ளடக்கலாம். இலங்கை பாடசாலைக் கல்வி முறையில் 10175 (2018) பாடசாலைகள் பொதுக் கல்வியை 4,215,487 (2018) மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன. இவர்களின் அடைவு, தேர்ச்சி மட்டத்தை அளவிடுவதற்காக பல்வேறு மதிப்பீட்டு நுட்பமுறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையின் பாடசாலை மட்ட மதிப்பீட்டின் தோற்றமும் வளர்ச்சியில் 1997 இல் அறிமுகஞ்செய்யப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தமானது பாடசாலை மட்ட கணிப்பீடு, மதிப்பீட்டுக்கு முதன்மையளித்துள்ளது. கற்றல் கற்பித்தல் செயன் முறைகளில் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீடு மதிப்பீட்டில் ஒரு மாற்றத்தை இது ஏற்படுத்தியது. எண்ணக்கரு அறிமுகம் பாடசாலை என்பது முறைசார் ரீதியில் வடிவமைக்கப்பட்ட வரையறைக்குள் மாணவர்களின் அறிவு, ஆற்றல்களை உற்பத்தி செய்யும் இடமாக போசிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட அடைவுகளை அளவுகோள் இட்டு அளந்து பார்க்கும் ஒரு நுட்ப முறையே மதிப்பீடாகக் கருதப்படுகின்றது. இம்மதிப்பீடு பற்றி பல்வேறு அறிஞர்களும் பல்வேறு வடிவங்களில் முன் வைத்துள்ளனர்.அந்த வகையில் “மதிப்பிடுதல் என்பது நேரடியாக சோதித்தோ, வேறு வழிகளில் அனுமானித்தோ, செயல் சோதனைகள் நடத்தியோ பெறப்படும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மதிப்பு சார்ந்த தீர்மானமாகும் (ஏயடரந துரனபநஅநவெ) கல்விச் செயற்பாட்டின் போது மேற்கொள்ளும் மதிப்பீடு வழமையாக “உருவாக்க மதிப்பீடு” எனப்படும். அது கற்றல்-.கற்பித்தலை முன்னேற்றுதற்காகத் தகவல்களை அறுதியீட்டு முறையிற் பெற ஆசிரியர்களும் மாணவர்களும் மேற்கொள்ளும் செயற்பாடுகளைக் குறிக்கும். உருவாக்க மதிப்பீடு ஆசிரியர் அவதானிப்பு, வாய்மொழி வினாவுதல், வகுப்பறைக் கலந்துரையாடல், சுயவிவரப்பதிவு மதிப்பீடு, திறன் வெளிப்பாட்டு மதிப்பீடு, வீட்டு வேலையும் பரீட்சைகளும் உட்பட்ட மாணவர் பணிகளின் மதிப்பீடு என்பவற்றை உள்ளடக்குகிறது. விளைவான தகவல்கள் மாணவர்களின் தேவைகளை நிறைவாக்குமாறு கற்பித்தலையும் கற்றலையும் இணக்குவிக்கப் பயன்படும்போது, மதிப்பீடு உருவாக்க மதிப்பீடாகிறது. ‘’மதிப்பீடு என்பது நடைமுறைப்படுத்துபவரின் முடிவுகள் அடங்கிய செயல்களை திருப்தியாக உள்ளதா என ஆய்வு செய்து அதனுடைய சிறப்புகளுக்கு எதிர்பார்ப்புகளுக்கேற்ப திட்டம் மற்றும் திட்டம் சார்ந்த நோக்கங்கள் வரைவுப்படுத்துவது ஆகும்’’ - டக்மேன் 1975 எனவே,ஏதாவது செயற்பாட்டின் வெற்றியைத் தீர்மானிக்க முறையான செயல் ஒழுங்கு மதிப்பீடு என சுருங்கக் கூறலாம். இச்செயல் ஒழுங்கை பாடசாலை மட்டத்தில் செயற்படுத்துவது பாடசாலை மட்ட மதிப்பீட்டுச் செயன் முறை எனலாம். கல்விச் செய்பாடுகளுள் பல்வேறு பண்புகளை அளப்பதற்கு பல அளவீட்டு உபகரணங்கள் (கருவிகள்) பயன்படு;த்தப்படுகின்றன.கல்வி அளவீட்டுக்குப் பயன்படுத்தபடும் மாணவர் அடைவு , பாட அடைவ , திறன்கள் மனப்பங்ககள், என பலவிடயங்கள் அளவிடப்பட்டு மதிப்பிடப்படுகின்றன. பாடசாலை மட்ட மதிப்பீட்டு வடிவங்கள் பாடசாலை மட்டத்தில் இடம்பெறும் மதிப்பீட்டுப் பணிகளை நாம் பின்வருமாறு அடையாளப்படுத்தலாம். 1.தவணை மதிப்பீட 2.இறுதியாண்டு மதிப்பீடு 3.கற்றல் -கற்பி;த்தல் மதிப்பீடு 4.பண்பு சார் மதிப்பீடு இவை ஆசிரியர் சார்பாகவும், மாணவர் சார்பாகவும், பாடசாலை சார்பாகவும் இடம்பெறும் மதிப்பீடுகள் ஆகும். இவற்றில் கற்றல் கற்பித்தல் தொடர்பான அடைவு மட்ட மதிப்பீடுகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. பாடசாலை மட்ட மதிப்பீடுகள். இடையீட்டு மதிப்பீடு, தெடர் மதிபபீடு, இறுதிமதிப்பீடு என நியம அடிப்படையிலும்; நியதி அடிப்படையிலும் பாடசாலை மட்டத்தில் மதிப்பீடுகள் இடம்பெற்று வருகின்றன. 1994இல் தே.க.நிறுவகத்தினைச் சேர்ந்த மதிப்பீட்டுக் கிளையினர் மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 30 பாடசாலைகளில் இந்த முன்னோடி நிகழ்ச்சித்திட்டம் அறிமுகஞ் செய்யப்பட்டது. 1995இல் மேலும் 20 பாடசாலையும், 1998இல் 1998/04 சுற்றறிக்கைபடி அனைத்துப் பாடசாலைகளிலும் நடைமுறைக்கு வந்தது. அத்துடன் 2002இல் ஓ.எல்.பெறுபேற்றிலும் சேர்க்கப்பட்டது. என்றாலும், மாணவர் அடைவு எழுத்துப் பரீட்சை மூலம் மட்டுமே மதிப்பீ;;டு செய்யப்பட்டது. இது அரையாண்டுப் பரீட்சை, இறுதியாண்டுப் பரீட்சை எனவும் தற்போது நடைமுறையில் முதலாம் தவணை, இரண்டாம் தவணை, மூன்றாம் தவணை பரீட்சைகள் என பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மதிப்பீடு செய்வதற்கான நோக்கங்கள் :- 1. மதிப்பீடு வழிமுறைகளை அறிவுறுத்துகிறது. 2. மதிப்பீடு இயக்க கற்றல் 3. மதிப்பீடு மாணவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிவிக்கின்றனர். 4. மதிப்பீடு கற்பித்தல் பயிற்சியை அளிக்கிறது. மதிப்பீட்டின் முக்கிய பணிகள 1. மாணவர்களின் நேரம் மற்றும் கவனத்தைக் கவருதல். 2. மாணவர்களுக்கு பொருத்தமான கற்றல் செயல்பாடுகளை உருவாக்குதல். 3. மாணவர்கள் மீது கவனம் செலுத்தி தேவையான நேரத்தில் போதிய பின்விளைவுகளை வழங்குதல். 4. மாணவர்களிடையே வேறுபடுத்தக்கூடிய தரம் (அ) மதிப்பெண்கள் (அ) தேர்வில் தேர்ச்சி ஃ தோல்வியின் முடிவுகளை கொண்டு தீர்மானங்களை செயல்படுத்தல். 5. மாணவர்களின் தரநிலை மற்றும் கருத்துரையை உட்புறப்படுத்த மாணவர்களுக்கு உதவுதல். கிப்ஸ் (2003) இம்திப்பீட்டு முறைகளின் முக்க்pயத்துவத்தை நோக்குவோமாயின் 1. மாணவர்களின் கற்றல் விருத்தி பற்றிய சரியான தீர்மானங்களுக்கு வரமுடியும் 2. மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை கண்டறியவும் விசாரிக்கவும் உதவுதல் 3. கலைத்திட்டம், கற்பித்தல் நடைமுறைகள், கற்பித்தல் உபகரணங்கள், கல்வி நிருவாகம், முகாமைத்துவ முறைமை ,கல்விச் செயற்திட்டங்கள் போன்வற்றின் விளைதிறன்களைக் கண்டறிய முக்கியத்துவம் பெறுகின்றது. 4. நாட்டில் நடைமுறையில் உள்ள கல்வி முறையுடன் தொடர்டபான பிரச்சினைகளை,குறைபாடகளை கண்டறிந்து அவற்றுக்குப்பதிலாக பரிகாரங்களை மேற்கொள்ளக் கூடிய கல்விக் கொள்கைகளை வகுப்பதற்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் பயன்மிக்கதாக இருக்கும். திட்டமிடவும், அறிவுறுத்தி வழிகாட்டவும் உட்காட்சி மூலம் ஆசிரியர்கள் மாணவர்களின் புரிதலின்படி வழிகாட்டவும், திட்டமிடவும் மேலும் போதிய பின்னூட்டத்தை வழங்கவும் மதிப்பீடு ஆசிரியர்களுக்கு பயன்படுகிறது. கலைத்திட்டத்தின் உள்ளடக்கம், தேர்ச்சி ஆகியவற்றுக்கேற்ப தயாரிக்கப்பட்ட நியதிகளை மாணவர்கள் அடைந்துள்ளனரா என்பதைப் பரீட்சித்தல் நியதி அடிப்படையிலான கணிப்பீடாகும். பெரும்பாலும் பாடசாலைகளில் 1. தவணைப் பரீட்சை 2. அலகுப் பரீட்சை 3. பாடசாலை மட்டக் கணிப்பீடு என்பன தொடர்ச்சியாக மேற் கொள்ளப்படுகின்றன. அவை பற்றிய பதிவுகள் பேணப்படுகின்றன. மாணவர்களுக்கும் சகல பாடசாலைகளிலும் தவணைப்பரீட்சை முடிவுகளும் வழங்கப்படுகின்றன. ஒரு சில பாடசாலைகளில் அலகுப் பரீட்சைகளின் பெறுபேறுகளை பிள்ளைகளுக்கு அட்டவiணாயாகவோ பதிவாகவோ வழங்குகின்றர்கள். சில பாடசாலைகளில் அலகுப் பரீட்சைகளின் பெறுபேறுகளை தேர்ச்சி அறிக்கையாகவே வழங்குகின்றார்கள். எனினும் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களுக்கு பாடசாலை மட்டக் கணிப்பீடு தொடர்பான அடைவுகள் பதிவுகளாக வழங்கப்படுவதில்லை. பாடசாலை மட்டக் கணிப்பீடு இலங்கையில் பாடசாலைகளில் அமுல்ப்படுத்தும் முன்னதாக தவணைப் பரீட்சைகளின் தேர்ச்சி அறிக்கை மாணவர்களது கற்றல் அடைவுகளில் பாரிய தாக்கத்தையும் ஒரு வித பயத்தையும் கொண்டமைந்திருந்தது. இன்று தரம் 1 முதல் 11 வரை பாடசாலைகளில் மாணவர் வகுப்பு ஏற்றங்கள் என்பன தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சகல பாடங்களிலும் நூறு புள்ளிகளைப் பெற்ற மாணவனும் எல்லாப் பாடங்களிலும் மொத்தமாக நூறு புள்ளிகளைப் பெற்ற மாணவனும் சித்தியடைய எவ்விதத் தடையுமில்லை. இதுவும் அடைவு மட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க இயலாமைக்கான ஒரு காரணமாக ஆசிரியர்கள் முன் வைக்கும் விடயமாக அமைகின்றது. தவணைப் பரீட்சை பெறுபேறுகளில் கடந்த காலங்களில் பேணப்பட்டு வந்த சித்தியடைந்தார்ஃ சித்தியடையவில்லை என்ற வரிகள் தற்போது இல்லாமல் இருப்பதுவும் கற்றல் அடைவுகளை எளிமைக்குட்படுத்தியிருப்பதாகக் கருதப்படுகின்றது.. மாணவர் உரிமை, மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் காரணமாக பரீட்சைகள் தொடர்பான செயற்பாடுகள் தரம் 1 தொடக்கம் 10 வரை முன்னெடுக்கப்பட்டாலும் தரம் 11 இல் க.பொ.த சாதாரண தரத்தில் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் வைக்கப்படும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் பெறுபேறுகளின் அடிப்படையிலும் பாடசாலை மட்டக் கணிப்பீடுகளின் துணையோடு மாணவர்கள் சித்தியடைவதாகக் கருதப்பட்டாலும் பல மாணவர்கள் தேவையான பெறுபேற்றை உரிய முறையில் அடையாமல் திண்டாடுவதையம் அதனால் விரக்திக்குச் செல்லும் நிலையையும் பத்திரிகை மற்றும் ஊடகத்தினூடாக வெளிவரும் செய்திகளும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. பு.ஊ.நு. ழு-டு பரீட்சை, இடைநிலைக் கல்வியின் முடிவில் மாணவர்களின் பாடவாரி அடைவுகட்குச் சான்றளிக்கும் நோக்குடனிருந்தது. இப் பரீட்சையின் பின் சில மாணவர்கள் பாடசாலை நீங்குவர். மற்றோர், பு.ஊ.நு. யு-டுஇல் தமது கல்வியைத் தொடரத் தகுதி பெறவேண்டும் பாடசாலையிற் 11 ஆண்டுகள் கற்றும் இப் பரீட்சையிற் பல சிறார் எல்லாப் பாடங்களிலும் தவறுவது கவலைக்குரிய ஒரு விடயமாகும். இன்னுங் கவலைக்குரியது ஏதெனில், கட்டாய பாடமான கணிதத்தில் தவறுவோரின் வீதம் அதிகமாயிருப்பதாகும். AL பரீட்சை இரு நோக்கங்களை நிறைவேற்றுகிறது: மூத்த இடைநிலைக் கட்டத்திற் பாடசாலைக் கல்வியின் முடிவில், திறன் வெளிப்பாட்டை அளப்பதுடன் பல்கலைக்கழகங்கட்கு மாணவர்களைத் தெரிதற்கான அடிப்படையாகவும் உள்ளது. பல்கலைக்கழக அனுமதிகள் போட்டி மிக்கன. மாணவரெவருதும் எதிர்காலம் இப் பரீட்சையில் அவருடைய செயற்திறனிற் தங்கியுள்ளது. இதனால், மாணவர்கள் உருப்போட முற்படுகின்றனர். பரீட்சைக்கு மாணவர்களை ஆயத்தமாக்கத் தனிப்போதனை நிறுவன ஆசிரியர்கள் மீண்டும் குறுக்கிடுகின்றனர். இந்த உச்சமான போட்டி சமூக நலமற்றது. எனவே தேர்வுநாடுவோரை பல்கலைக்கழக அனுமதிக்குத் தெரிய மாற்றுப் பொறிமுறை ஒன்று அவசியம். கடுமையான பரீட்சை மையமாதலும் பொதுப் பரீட்சைகள் மூலம் மதிப்பிடுவதன்; குறைபாடுகளும் சிறாரின் ஒட்டுமொத்த விருத்தியைப் பாதகமாகப் பாதித்துள்ளன. பாடசாலைகளில், மாணவர்களை வினாத்தாள்கட்கு விடையெழுத ஆயத்தப்படுத்துவதாகக் கற்பித்தல் ஒடுங்கியுள்ளது. மாணவர்கள் இணை-கலைத்திட்டச் செயற்பாடுகளையும் சமூகச் செயற்பாடுகளையும் பாடசாலையிலும் வீட்டிலும் சமூகத்திலும் புறக்கணித்துப் பயிற்றல் வகுப்பிற்குப் போகையில், மாணவரின் ஆளுமை விருத்தி மாணவர்களாலும் பெற்றோராலும் கவனிக்கப்படாதுள்ளது அல்லது அறவே புறக்கணிக்கப்படுகிறது. இதன் பயனாகத், தேசிய கல்வி ஆணைக்குழு வரையறுத்த பரந்த இலக்குகளும் குறிக்கோள்களும் எதிர்நோக்கும் சிறாரின் ஒட்டுமொத்த விருத்தியை உறுதிப்படுத்தப் பாடசாலை முறைமை தவறியுள்ளது. பொதுவாகப் பயன்படும் தரப்படுத்திய பரீட்சைகளான கட்டுரை வகை, பல-தெரிவு வகை, பொருத ;துதல் என்பன ‘நாயை ஆட்டும் வால்’ போல கலைத்திட்டத்துக்கு ஆணையிடுகின்றன. இப் பரீட்சைகள் போயொழியும் வரை, மாணவர்களை எதிர்காலத்திற்கு ஆயத்தமாக்க எத் திறன்களைக் கற்பிக்க வேண்டுமென ஆசிரியர்கட்கு விளங்காது. எனவே, வகுப்பறை மதிப்பீடுகள் எதிர்காலத்தில் மாணவர்கட்குத் தேவைப்படும் ஆற்றல்களுடன் இணங்குவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்தவேண்டும். நம்பகமான, திறன் வெளிப்பாட்டு அடிப்படையிலான அளவுகோல்களைக் கொண்ட வகுப்பறை-மதிப்பீடுகளின் ‘புதிய அலையின்’ ஒரு பகுதியாக ஆசிரியர்கள் அமைய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம் மதிப்பீட்டு முறைகள், வழமையான சோதனைகளை மட்டுங் கொண்டிராது, பிரச்சினை தீர்ப்பதிலும் தகவல்களைப் பகுத்தாய்ந்து தொகுத்தலிலும் மாணவர்கள் தமது திறன்களைப் புலப்படுத்துவதைக் கோரும் புதிய வழக்குமுறைகளையும் உள்ளடக்க வேண்டும். ஐக்கிய அமெரிக்கா ,ஐக்கிய இராச்சியம் , கனடா, ஸ்கன்டினேவிய நாடுகள், அவுஸ்திரேலியா போன்ற விருத்திபெற்ற நாடுகள் பாடசாலை மதிப்பீட்டு, கணிப்பீட்டு நடைமுறையைப் பலப்படுத்த நம்பகமான மதிப்பீட்டுச் செயற்பாடுகளைப் பயன்படுத்துகின்றன. நம்பகமான மதிப்பீட்டின் பின்னுள்ள சிந்தனை ஏனெனில், பாடசாலைக்கு வெளியேயுள்ள வாழ்க்கைக்கு அதிகம் பொருந்தும் முறைகளில் மாணவர்கள் தமது அறிவைப் புலப்படுத்தச் செய்வதாகும். துயார்படுத்திய சோதனைகள் அடைவு மதிப்பீட்டில் ஒரு பாகத்தை வகித்தாலும், நம்பகமான மதிப்பீடு வேறு நன்மைகளையுந் தருகிறது. பாரம்பரிய மதிப்பீடுகளில் கற்பித்தல், மாணவர்களைச் சோதனைக்கு ஆயத்தப்படுத்தற்கு வரையப்பட்டுள்ளது. கல்விச் செய்முறையின் போது மாணவரொருவர் பெற்ற அறிவையும் திறன்களையும் பிரயோகித்து நிஜ உலகப்பணிகளை நிறைவேற்றலில் அம் மாணவரின் தேர்ச்சியை நம்பகமான மதிப்பீட்டு முறை மதிப்பிடுகிறது. ஒப்படை எழுதுதல், தனிப்பட்ட அல்லது கூட்டுத் திட்டங்கள், சுயவிவரப்பதிவு, ஆசிரியர் அவதானிப்புகள், திறன் வெளிப்பாடு அல்லது புலப்படுத ;தல் மதிப்பீடு, திறனுக்குச் சான்றுகூறும் பிற செயற்பாடுகள் ஆகியவற்றை நம்பகமான மதிப்பீடு உள்ளடக்கலாம். உங்கள் தேடலுக்கு எனது நன்றி கல்வியியலாளன் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ),

No comments:

Post a Comment