Wednesday, November 22, 2023

உள்ளக மேற்பார்வை : கல்வியியலாளன் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ),

உள்ளக மேற்பார்வை பாடசாலைமட்ட உள்ளக மேற்பார்வையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள். ஒரு வைத்தியர் நோயாளிகளோடு இடைவினை கொள்ளும்போது அவர் மேற்பார்வைக்கு உட்படுத்துவது இல்லை. ஆனால் ஓர் ஆசிரியர் மாணவர்களுடன் இடைவினை கொள்ளும்பொழுது மேற்பார்வைக்கு உட்படுத்தப்படுகின்றார். எவ்வளவுதான் தயாரிப்புடன் வகுப்பறையினுள் சென்றாலும் அவர் தகர்ப்புக்கு உள்ளாக்கப்படக்கூடிய நிலை காணப்படுகின்றது. கல்வி மேற்பார்வை ஆசிரியர் வாண்மை சார்ந்தது, வாண்மைக்கல்வியும் பயிற்சியும் இன்றி அதனை மேற்கொள்ள முடியாது. பெரும்பாலான வளர்முக நாடுகளில் கல்வி முகாமைத்துவ அதிகார மேல்மட்டங்களில் ஆசிரிய வாண்மைப்பயிற்சியற்றோர் இருத்தலும் பொதுவான பின்னடைவுக்குக் காரணமாகின்றது. கல்வி சார்ந்த மேற்பார்வையில் ஈடுபடுவோர் சமகாலத்து அறிவின் எழுநிலைகள்பற்றி அறிந்தவர்களாயிருத்தல் முக்கியமானது. அவர் தமது அறிவை இற்றைப்படுத்தியவண்ணம் இருத்தல் வேண்டும். காலாவதியான நிலையில்நின்று கல்விச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யமுடியாது. கல்வி மேற்பார்வையாளரிடம் இருக்கவேண்டிய சிறப்பார்ந்த உறுபண்புகளுள் ஒன்றாக "பொறுமை" உணரப்படுகின்றது. தவறுகளைச் சந்திக்கும்போதும் இலக்குகளைத் தெரிவுசெய்யும்போதும் நிலைகுலைந்துவிடாது பொறுமை தாங்கி புறவயமாக அணுகும் நிலையை வளர்த்துக்கொள்ளல் வேண்டும். எங்கே விடுபாடு (Lapse) நிகழ்ந்துள்ளது என்பதையும் அதன் விளைவுகள் யாவை என்பதையும் எவ்வாறு தவிர்த்துக்கொள்ளலாம் என்பதையும் விளக்கிக் கூறவேண்டும் தொழிற்பாடுகளிலே குறுக்கீடுகளை ஏற்படுத்துவதைப் ஆற்றுகைசெய்வோரின் உளநிலையை மேம்படுத்தவல்லது. கல்விச் செயல்முறையில் பின்வரும் மேற்பார்வைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 1.உள்ளக மேற்பார்வை 2.புறநிலை மேற்பார்வை 3.உறு நட்பு (Peer group) மேற்பார்வை மேற்பார்வையானது தரநிலை மேம்பாடு கொண்டதாகவும் அணுகுமுறையானது உளவியல் மயப்பட்டதாயும் இல்லாதவிடத்து எதிர்பார்த்த மேற்பார்வையின் வழியாக பெற்றுக்கொள்ள முடியாது. பயன்களை மேற்பார்வையானது எல்லா மட்டங்களிலும் மேற்கொள்ளப்படல் வேண்டும். அனைத்து துறைகளையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும். மேற்பார்வையில் பின்வரும் அடிப்படைகள் வலியுறுத்தப்படுகின்றன. 1. அறிவும் புலமையும் உளப்பாங்கும். 2. கல்விச் செயல்முறை பற்றியும் கல்விநிறுவனங்கள் பற்றியும் கொண்டுள்ள பிரக்ஞையும் அறிவும். 3. அறிவின் சமகால வளர்ச்சிபற்றித் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வு. 4. வாண்மை அறிவும் தொழிநுட்ப அறிவும் அவற்றின் பிரயோகமும். 5. தொடர்பாடல் திறனும் மொழிவழிக் கையளிப்பும். 6. செவிமடுக்கும் திறனும் உசாவல் விருப்பும். 7. நினைவு படுத்தும் திறனும் தொடர்புபடுத்தும் ஆற்றலும். 8. ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் ஆற்றலும் கூட்டுறவு நடத்தையும் 9. பொறுமையும் தளம்பலுறா மனவெழுச்சிகளும், 10. புறவயமான, ஆராய்ந்து தீர்ப்புக் கூறும் ஆற்றலும் நடைமுறைப்படுத்தலும். 11. பணியாளரின் தொழிற்படும் உளநிலையை மேம்படுத்தலும் வலுவூட்டுதலும் 12. ஒழுக்க நெறிகளை நடைமுறைப்படுத்தவல்ல ஊக்கல். மேற்பார்வையாளரிடத்து அறிவும் புலமையும் மேலோங்கி இருத்தல் கல்வியியல் மேற்பார்வையின் சிறப்புமிக்க பரிமாணமாகின்றது. அறிவு நாட்டம் உடையவர்களது கருத்துக்களைக் கீழுள்ள பணியாளர்கள் விருப்புடன் கேட்கமுயலும் நடப்பியல்நிலை காணப்படுகின்றது. உளவியற்பாங்கும் இசைவாக்கல் அணுகுமுறைகளும் மேற்பார்வைக்கு உட்படுவோரிடத்து எதிர்முரண்பாடுகளை வளர்க்காது உற்சாகத்தை வளர்க்க உதவும். பாடாலைகளின்பால் கற்பித்தல் செயற்பாடுகள் வினைத்திறனுள்ளதாக இருக்கவேண்டுமாயின் அதிபர்கள் தமது வினைத்திறன் சார்ந்த முகாமைத்துவச் செயல்முறைகள் ஊடாக செயல்களின் வினைத்திறனையும் மாணவர்களின் அடைவுகளையும் அதிகரிக்கவேண்டும். உள்ளக மேற்பார்வையானது ஆசிரியர்களின் குறைகளைக் கண்டறிவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. மேற்பார்வையின் பின்னர் ஒருவரை ஒருவர் விரோதியாகவே காணும் நிலை எழுந்துள்ளது. இது தவிர்க்கப்படல் வேண்டும். உங்கள் தேடலுக்கு எனது நன்றி கல்வியியலாளன் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ),

No comments:

Post a Comment