Wednesday, November 22, 2023
ஆசிரியர்களின் வாண்மை விருத்தி : கல்வியியலாளன் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ),
இலங்கையின் மிகப்பெரிய ஒழுங்கமைப்பாகப் பாடசாலைகளையே கருதமுடியும். அவ்வாறான பாடசாலைகளில் மிக உயர்ந்த மனித வளமாக விளங்குபவர்கள் ஆசிரியர்களாவர்.
ஆசிரியர்களை ஊக்குவிப்பது தொடர்பான காரணிகள் சிலவற்றை முன்வைத்துள்ளார் என்றும் அவற்றுள் மேற்பார்வைசெய்தல் என்பது ஒரு காரணியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியரும் வாண்மையும்
ஆசிரியத்துவம் என்பது தெளிசிந்தனையை அடிப்படையாகக்கொண்டது, ஆக்கசிந்தனையைப் பேணிவளர்ப்பது, பகுத்தறிவுபூர்வமான முடிவுகளை நோக்கி நகரவைப்பது, சகிப்புத்தன்மையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது, மாணவர்கள் கற்றலுக்காகத் தாமதித்த நேரங்கள் பற்றி கவலைகொள்வது, தொடர்ந்து கற்றுக்கொண்டிருப்பது, வழிகாட்டலையும் ஆலோசனைகளையும் வழங்கும் ஆற்றலைக் கொண்டிருப்பது சமூக முன்னேற்றத்திற்கு உதவுவது, நல்லிணக்க மேம்பாட்டிற்கு உதவுவது, மனிதவள மேம்பாட்டிற்கு மனித வளத்தைப் பயன்படுத்தும் நிலைக்குத் திட்டமிடுவது என்று பலவாறு எடுத்துரைக்கலாம்.
ஆசிரியர் பாடஅறிவு தொடர்பாக உயர்தராதரம் கொண்டிருத்தல், விளைதிறனுடைய கற்பித்தல், வகுப்பறை முகாமைத்துவம், பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் சுயமேம்பாட்டிற்கு வழிகோலுதல், பாடசாலை அபிவிருத்திப் பணிகளில் ஊக்கமுடன் பங்குபற்றுதல் ஆகிய விடயங்களும் உலகளாவியரீதியில் வலியுறுத்தப்படுகின்றன.
ஆணைக்குழு அறிக்கை (2003) 'மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிக் கொண்டுள்ள மனப்பாங்கினை அடிப்படையாகக் நடைபெறுகின்றமை, மாணவர்கள் கொண்டே வகுப்பறைக் கருமங்கள் ஆசிரியர்களில் மிகுந்த கௌரவத்தைக் கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களில் வகுப்பறைகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் பெரும்பாலும் வினைத்திறன் பொருந்தியனவாக அமையும். இவ்வாறான நல்ல மனப்பாங்கினைக் கொண்டுள்ள ஆசிரியர்களது சேவையை நல்ல மாணவர்கள் மற்றும் சமூகம் உட்பட வெளிவாரியாக அவதானிப்பவரின் நம்பிக்கை, வரவேற்பு, விருப்பு, அன்பு அடிப்படையாகக் என்பவற்றையும் ஆசிரியர்கள் சுவீகரித்துக்கொள்வதை கொண்டு வாண்மையுள்ள நல்ல அங்கீகரிக்கப்படுகின்றனர் எனக் குறிப்பிடப்படுகின்றது. ஆசிரியர்கள்
சமூகத்தில் வாழும் அனைவருக்கும் சில பொதுவான ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைக்கோலங்கள், அணுகுமுறைகள், பழக்கவழக்கங்கள், செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. இவற்றை ஒழுங்கு முறையில் எல்லாப் பிள்ளைகளுக்கும் கற்பிக்கும் நிறுவனமே பாடசாலையாகும். இப்பாடசாலையின் மைய விசைச்சக்கரம் போன்றவரே ஆசிரியர். ஆசிரியர் புதிய தலைமுறையினருக்கான அறிவையும் அறிவுதேடும் விழிப்புணர்வையும், அறிவுதேடும் மூலகங்களையும் இனங்காண்பதற்கு அடிப்படையாக இருக்கின்றார்.
ஆசிரியர்களுக்கு விடயங்களில், எண்ணக்கருக்களில் புதிய அறிவும் புதிய கல்வித் தொழினுட்பக் கருவிகளை கையாள்வதில் பயிற்சியும் வழங்கப்படவேண்டியுள்ளது. மாற்றமடையும் மாணவர் அறிவுநோக்கு, சுதந்திரம் என்பவற்றிற்கமைய முகாமைத்துவம் செய்யும் ஆற்றலை விருத்திசெய்யவேண்டியுள்ளது. பல்கிப்பெருகும் அறிவு, புதிய கற்கை நெறிகள், புதிய மாதிரிக் கல்விநிறுவனங்கள் தொடர்பாக சரியான ஆலோசனையும் வழிகாட்டலும் வழங்குவதற்குரியவராக ஆசிரியர்கள் வல்லாண்மை பெற உதவவேண்டியுள்ளது. எனவே ஆசிரியர்களின் வாண்மைத்துவப் பண்புகளை மேலுயர்த்துதலே அவசியமாகின்றது.
ஆசிரியர் அபிவிருத்தி
ஆசிரியர்களின் வினைத்திறனையும் விளைதிறனையும் தொடர்ந்து பாதிக்கும் விடயங்கள் தொடர்பாகத் தெளிவான களஆய்வை மேற்கொண்டு அதன் அடிப்படையில் செயற்றிட்டங்களும் அவற்றை உள்ளடக்கிய நீண்டகால ஆசிரியர் விருத்தித் திட்டங்களும் தயாரிக்கப்பட்டு கட்டம் கட்டமாக இடைநிலை மதிப்பீட்டுச்செயல்முறைகளின்படி மாற்றியமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இத்தகைய விளைவுகளை உறுதிப்படுத்தும் தொழிற்பாடுகள் மற்றும் செயல்கள் பற்றி ஆசிரியர் கல்வி நிறுவனங்கள், மாகாணக் கல்விஅமைச்சு, தொழிற்சங்கங்கள், அரசுசார்பற்ற நிறுவனங்கள், ஊடகங்கள் என்பன ஆழமான கவனம் செலுத்தி முயற்சிகள் ஒன்றிணைக்கப்படுமாயின் ஆசிரியர்களை ஊக்கம் நிறைந்த சமூகப்பொறுப்புமிக்க உயர் வாண்மைத்துறையினராக உயர்த்தமுடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக இலக்குகள், சமூகத் தொழிற்பாடுகள், சமூக அசைவியக்கம், சமூக முன்னேற்றம் போன்ற ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இயங்கியல் நடைமுறைகளின் மையச்சக்கரமாகத் தொழிற்படும் பாடசாலைகளின் வினைத்திறனையும், விளைதிறனையும் தீர்மானிப்பவர்கள் ஆசிரியர்களே, ஆசிரியர்கள் ஒரு தொழில் செய்பவர்கள் என்ற நோக்கில் மாத்திரமன்றி மாற்றங்களை வழிப்படுத்துபவர்கள், விசைப் படுத்துபவர்கள் என்ற முறையிலும் முக்கியமானவர்கள்.
ஒரு கல்விமுறையின் ஆற்றலானது பெரும்பாலும் அல்லது கணிசமான அளவிற்கேனும் ஆசிரியரின் தனி இயல்பிலேயே தங்கியுள்ளது. நோக்கங்கள் எவ்வளவுதான் சிறப்புடையனவாகவும், விஞ்ஞான ரீதியாகவும் இருந்தாலும், ஆய்வுக் கருவிகள் பெருமளவில் நவீனமயமானவையாக இருந்தாலும், நிர்வாகம் எவ்வளவுதான் சீரானதாக அமைந்தாலும், பிள்ளைகளுக்குக் கிடைக்கக்கூடிய கல்வியின் விழுமியம் ஆசிரியர்களிலேயே தங்கியுள்ளது. ஆகையால் தகுதியானவர்களைத் தேவையான அளவிற்கு தெரிந்தெடுத்து அவர்களுக்குச் சிறந்த ஆசிரியர் பயிற்சியை அளித்து தொழிலின் முக்கியத்துவத்திற்கும் பொறுப்பிக்குமேற்ற ஒரு தகுதிநிலையையும் மதிப்பையும் கொடுத்தலைத் தவிர தலையாயது வேறொன்றுமில்லை.
கற்போரின் இயல்பறிந்தும் கற்றலின் வகை அறிந்தும் பொருத்தமான நுட்பவியலைப் பொருத்தமான நேரத்தில் முன்னெடுத்தல் கல்வித்தொழினுட்பவியல் ஆகும். கல்வி நுட்பவியலில் ஆற்றல் படைத்தோரே ஆசிரியவாண்மையில் மேலுயர்ச்சி பெற முடியும்.
மாணவரிடத்தும் ஆசிரியரிடத்தும் சுய கணிப்பீட்டை வளர்த்தல் வாயிலாக மேலும் முன்னேற்றங்களை வருவிக்கமுடியும். கற்றல் கற்பித்தலின் நிறைவிலே பயனுள்ள கற்பித்தலை மேற்கொண்டோம் என்று ஆசிரியரது உள்ளத்திலே தோற்றம்பெறும் உளநிறைவு சிறந்த கற்பித்தலின் "அகநிலை" கணிப்பீடாகக் கொள்ளப்படும்.
கற்பித்தலை ஒரு தொடர்பாடற்செயன்முறை என்றும் குறிப்பிடுவர். அறிபொருளை வழங்குதல்,கையளித்தல், பரப்புதல் முதலியவை கற்பித்தலிலும் இடம்பெறுகின்றன. தொடர்பாடலிலும் இடம்பெறுகின்றன.
(Accountabality) சார்ந்த பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆசிரியருக்குரிய பொறுப்புக்கூறும் செயற்பாடு படிப்படியாக அதிகரித்து வருகின்றது.ஆசிரியர் தமக்குரிய தற்படிமத்தை (Self image) மேலோங்கச் செய்வதற்குப் பின்வரும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு விதந்துரை கொள்கின்றனர்.
1. அறிவாற்றல்களைத் தொடர்ந்து பெருக்கிக்கொள்ளல்.
2. புலமைவலுவை உருவாக்கிக் கொள்ளல்.
3. ஆளுமையையும் தலைமைத்துவப் பண்புகளையும் உயர்த்திக் கொள்ளல்.
4. விடுப்புக்கதைகளைத் தவிர்த்துப் பாடசாலை நேரத்தை உச்சப் பயன்பாட்டுக்கு
உள்ளாக்குதல்,
5. கற்பித்தலை விடாமுயற்சியுள்ள செயற்பாடாக மேற்கொள்ளல்.
6. கற்பிக்கும் ஆற்றலும் உற்சாகமும் வீழ்ச்சியடையாதிருக்குமாறு பார்த்துக் கொள்ளல்.
எனவே இவ்வாறான இயல்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஆசிரியர்கள் வாண்மைத்துவத்தை அதிகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுதல் வேண்டும். இதற்குத் தொடர்ச்சியான வழிகாட்டல்களும் மேற்பார்வையும் இன்றியமையாத செயற்பாடுகளாகக் காணப்படுகின்றன.
உங்கள் தேடலுக்கு
எனது நன்றி
கல்வியியலாளன்
எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ),
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment