Tuesday, March 31, 2020

போர்த்துகேயர் காலம்  (கி.பி 1621 – 1658)

அறிமுகம்
கி.பி 1505ம் ஆண்டிலிருந்து போர்த்துகேயரின் ஆதிக்கம்
1543ம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாண அரசைக் கைப்பற்ற முயற்சி ஆரிய சக்கரவர்திகள் காலத்தில் நிலவிய அமைதியும், இலக்கிய  எழுச்சியும் இக்காலத்தில் நிலைபெறவில்லை.

IUIU


போர்த்துகேயர் கால இலக்கியங்கள்
1. பள்ளு - ஞானப்பள்ளு
2. புராணம் - ஞானந்தபுராணம்
3. அம்மானை - அர்ச்சயகப்பர் அம்மானை,திருச்செல்வர் அம்மானை
4. காவியம் - திருசெல்வர் காவியம்

ஞானப்பள்ளு
1624ல் படைக்கப்பட்டது என்கிறார் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்
ஆசிரியர் யாரென தெரியாது. எனினும் இயேசு சபையை சேர்ந்த செபஸ்த்தியன் பொஞ்சகொ சுவாமிகளின் உதவியுடன் பாடப்பட்டது என்பதை ஆசிரிய வணக்க பாடல் தெளிவுருத்துகின்றது

கத்தோலிக்க மத சார்பானது
இயேசுநாதரை பாடுடைய தலைவனாகக் கொண்டது
பிரபந்தமரபில் இரண்டாவதாக தோற்றம்பெற்றது
சிந்து, தரு, விருத்தம், வெண்பா முதலிய யாப்புக்களால் அமைந்தது
257 பாடல்களைக் கொண்டது
இரு பிரிவுகள் - குயில் கூவுதல், அறிவுறுத்ததல்
பள்ளன், மூத்தபள்ளி, இளையபள்ளி, பண்னைக்காரன்   முதலியோரை   உள்ளடக்கியது.
ஏனைய பள்ளு இலக்கியங்களில் இருந்து இது வேறுபாடுகின்றது

பள்ளு இலக்கியங்களில் மூத்தப்பள்ளி, பண்னைக்காரன்பள்ளன், ஆகியோர் பாட்டுடைத்தலைவனின் ஊரை சேர்ந்தவர்களாகவும் இளைய பள்ளியை வேற்றூரை சார்ந்தவராகவும் குறிப்பிடுவது மரபாகும்.

• ஆனால் ஞானப்பள்ளில்  இதற்கு மருதலையாக காணப்படுகின்றது. ஞானப்பள்ளில் முதல் மூவ்வரும்  ஜெருசலத்தை சேர்ந்தவர்களாகவும், இளையபள்ளி கத்தோலிக்க திருச்சபையினதும் போப்பாண்டவரின் தலைமை பீடமான உரோமபுரியை சார்ந்தவளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

• இளைய பள்ளி பிற பள்ளிகளில் இருந்து வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளால் இயேசு மீது பற்றுடையவளாகவும், சமய சார்பு உடையவராகவும் காட்டப்பட்டுள்ளால்

• மூத்தப்பள்ளி ஒழுக்கம் அற்றவளாக சித்தரிக்கப்பட்டுள்ளமை

• பண்னைக்காரன் ஏனையவற்றில் பரிகாச பாத்திரமாக விளங்க ஞானப்பள்ளில் தர்மத்தை போதிக்கும் கிறிஸ்தவ மத குருவாக காட்டப்பட்டுள்ளார்.

• ஏனைய பள்ளு இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதை போல சிறுங்காரசுவை இதில் பயன்படுத்தப்படவில்லை.

ஞானபள்ளு நூலின் தன்மை
கல்வி அறிவற்ற பாமரமக்களுக்கு கிறிஸ்தவ மத்ம் பற்றிய கருத்துக்களை புலப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கிலயே இந்நூல் படைக்கப்பட்டது.

கிறிஸ்தவம் அல்லாத ஏனைய மதங்களை மூடமதங்களென சாடும் தன்மையும் கொண்டது.
சமய பிரச்சார தன்மை மிக்கது - இந்துசமய நூல்கள், அவற்றின் கருத்துக்களை உள்வாங்கிப்படப்பட்டது.
இராச பிரதிநிதிகளை வாழ்த்தும் முறை–“நேரான மன்னவர்கள் நேய அதிபர்கள் நீடூழி வாழவே கூவாய் குயிலே”
பிற சமய கண்டனங்களை தெரிவித்தல் - “…மோச வாழ்க்கையும் மத்து குணங்களும்….”
பிறநாட்டு மன்னர் புகழ் பாடுதல் - “பேரான பாராளும் பிடித்துக்கால் மனுவென்றான் பிற தானம் வீசவே கூவாய் குயிலே” (பிடுத்துக்கல் - போர்த்துகெய நாட்டை குறிக்கின்றது)
கிறிஸ்தவ மத புகழ்பாடுதல் - “தலைவு பெற்றயாழ்ப்பாண சர்க்கிய கிறிஸ்த்தவர்கள் சக்கமும் வாழவே கூவாய் குயிலே…”
போர்த்துகேயர் கால கல்வி, சமூக, இலக்கிய சூழல் எவ்வாறு காணப்பட்டது என்பதனை அறிய இந்நூல் உதவுகின்றது.
ஞானாந்த புராணம்
 கிறிஸ்தவ மத விளக்க நூல்
தொம்பிளிப்பு புலவரால் பாடப்பட்டது
 1104 பாடல்கள்
விருத்தப்பாவால் பாடப்பட்டது
அர்ச்சயகப்பர் அம்மானை / சந்தியோகுமையோர் அம்மானை
ஈழத்து இலக்கிய வராலாற்றில் முதலாவது அம்மானை இலக்கியமாகும்.
கி.பி 1647ல் பேதுருப்புலவர் பாடியது
இயேசு சபை குருவான சுவாங் கறுவால் லூயிஸ் எனும் மத குருவின் வேண்டுகோளுக்கினங்க பாடப்பட்டது.
பாட்டுடைத் தலைவன் அர்ச். ஜேம்ஸ் என்ற புனிதர்
விருத்தப்பாவால் ஆனது 53 பகுதிகள் உள்ளது
சத்தோகு மையர் அம்மானை எனவும் அழைக்கப்படும்
கிழாளி கோவிலில் வருடா வருடம் படித்து வந்த மரபில் வந்ததே பிற்காலத்தில் அம்மானை வடிவமாக தோற்றம் பெற்றது.
“தோர்…” என தொடங்கும் பாடல் மூலம் பாண்டிய நாட்டு பண்டு தொட்டு நிலவி வந்த கதைகளை குறிப்பிடுகின்றது.
இசுப்பானியருக்கும் மூர்ச்சாதியினருக்கும் இடையே நடந்த போர் பற்றி கூறுகின்றது. அப்போரில் சன் ஜேம்ஸ் வென்புரவிவீரராக தோன்றி மூர்ச்சாதியினரை  தோற்கடித்த வரலாற்றை கூறுகின்றது. (இந்நூலின் 2ம் பாகத்தில் கடைசி 14 பாடல்களும் இவற்றை விளக்குகின்றது.
தொடக்கத்திலும் முடிவிலும் கோயில் வரலாறு குறிப்பிடப்படுகின்றது.
சென்னரி பாங்கும் நாட்டார் இலக்கிய தன்மையும் கொண்டது.

திருச்செல்வர் காவியம்
பாடியவர் பூலோகசிங்க முதலியார் (அருளப்ப நாவலர்)
பிற நாட்டு கதையொன்றின் தமிழாக்கம்
24 படலங்கள், விருத்தப்பாவால் ஆனது, 1947 செய்யுள்
கிறிஸ்தவ மத உயர்வை எடுத்துகாட்டுவன
அபினோர் என்ற அரசனுக்கு மகனாய் பிறந்து இளமையிலயே சத்திய வேதத்தில் சேர்ந்து தவம் செய்து மோட்சம் அடைந்த திரு செல்வராயர் சரித்திரத்தை தமிழில் காவியமாக படைத்தார்.
நாடகம் (போர்த்துகேயர், ஒல்லாந்தர்காலம்)

17ம் நூற்றாண்டிலயே இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது
தமிழ் நாட்டில் இதே காலத்தில் நடகத்துறை பரவலாக்கப்பட்ட நிலையானது இலங்கையிலும் தாக்கத்தைஏற்படுத்தியது.
போர்த்துகீசர் வருகையை அடுத்து அவர்களது பாராம்பரியங்கள்,  கத்தோலிக்க மதம் பெருமளவு பரவியிருந்த மன்னார் போன்ற இடங்களில் தமிழ் நாடக பாரம்பரியத்துடன் வளர்ச்சியடைந்தது.வடமோடி, தென்மோடி மரபுக்கூத்துக்கள் பரவலடைந்தது.
யாழ்ப்பாணம், மன்னார், மட்டகளப்பு, முல்லைத்தீவு பகுதிகளில் போர்த்துகீசர் காலத்தில் நாடகம் பயில் நிலையிலும்,நூல் வடிவிலும் வளர்ச்சியடைய காரணமாயிற்று.
இலங்கை தமிழ் கூத்து நூல்களின் ஆரம்ப கருத்தாவாக வட்டுக்கோட்டையை சேர்ந்த கணபதி ஐயர் குறிப்பிடத்தக்கவர். இவரது வாளபிமன்  நாடகமே பிரசித்தி பெற்றதாகும்
மேலும் கணபதி ஐயர் அபிமன்னர் சந்தரி நாடகம், அலங்காரரூபன் நாடகம், அதிரூபவதிநாடகம், முதலியவற்றையும் எழுதியுள்ளார்.
இனுவில் சின்னத்தம்பி புலவர் நொண்டி நாடகம், அநிருத்த நாடகம், கோவலன் நாடகம் என்பவற்றை எழுதினார்
மயில்வாகனப்புலவர் ஞானலங்காரரூப நாடகம்
லோறஞ்சி புலவர் எருமை நாடகம், எம்பரதோர் நாடகம், மூவிராயர் வாசகப்பா
கத்தோலிக்க மதத்தை சார்ந்தவர்கள் தமது மதத்தை பரப்புவதற்கும் இத்தகைய நாடக முறையை கைக் கொண்டனர்
கூத்து முறையில் வழங்கி வந்த ஆட்டமுறை இல்லாது போய் பாடல்கள் முக்கியத்துவம் பெறலாயிற்று.
மேடை அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்ப்ட்டது. “பாஸ்க்” எனப்படும் நாடக மரபு இலங்கை நாடகத்திலும் உள்வாங்கப்பட்டது.

 கலாநிதி சி.மௌனகுரு போன்றோரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

போர்த்துகேயர் கால இலக்கிய பண்புகள்
1. மத சார்புடைய இலக்கியங்கள் தோற்றம் பெற்றமை
2. பல்வேறு இலக்கிய வடிவங்கள் தோற்றம் பெற்றமை
3. பிரச்சார போக்குத்தன்மையுடைய இலக்கியங்கள் தோற்றம்
4. வடமொழி பிரயோகம்
5. அடிநிலை மக்களின் வாழ்க்கையை பிரதிபளிப்பன
6. கிறிஸ்தவ மத கருத்துக்ககள் பாடுபொருளாக அமைந்தமை
7. பாவினங்கள் பயன்டுத்தப்படல்
8. பிறர் புகழ் பாடுதல்

No comments:

Post a Comment