Saturday, March 21, 2020

தமிழ் - திருக்குறள்- பத்து அதிகாரங்கள் : தொகுப்பு – ஆசிரியர் எஸ்.எஸ்.ஜீவன்


     தமிழ் - திருக்குறள்- பத்து அதிகாரங்கள்

தொகுப்பு – ஆசிரியர் எஸ்.எஸ்.ஜீவன்


         திருக்குறளின் சிறப்புகள் 


           “இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை

மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்

மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”

திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் ஆவார்.


இவரது காலம் கி.மு.31 என்று கூறுவர். இதை தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. இவரது ஊர்இ பெற்றௌர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கப்பெறவில்லை. இவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்பது இறுதி.


தமிழ் மொழியில் இந்த நூல் இயற்றப்பட்டிருந்தாலும் இதில் தமிழ் என்ற சொல் எந்த குரலிலும் இடம் பெறவில்லை. அதே போல கடவூள் என்ற சொல்லும் இடம்பெறவில்லை. 


திருக்குறள் (வூhசைரமமரசயட) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.


திருக்குறள் இரண்டு அடிகளால் ஆன குறள் வெண்பாக்களால் ஆனது.


திருக்குறள் முப்பால்களை கொண்டது. அவை அறத்துப்பால்இ பொருட்பால்இ காமத்துப்பால் ஆகியவை ஆகும்.

அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள்இ 

பொருட்பாலில் 70 அதிகாரங்கள்இ 

காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.

மொத்தம் - 133 


திருக்குறளில் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக 133 அதிகாரங்களையூம்இ 1330 குறள்களையூம் கொண்டது.

அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள் - திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் -380

     பொருட்பாலில் 70 அதிகாரங்கள் - திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் -700

     காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் - திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் -250

     மொத்தம் - 133              (133ஒ10)                                  1330              


திருக்குறள் தமிழ்ச் செய்யூள்களில் முதல் பாவாகிய வெண்பாவில் முதல் வகையாகிய குறட்பாக்களால் ஆனது.


திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. 


திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையூம்இ 


திருக்குறளில் மொத்தம் 14இ000 சொற்கள் உள்ளன. 

திருக்குறளில் மொத்தம் 42இ194 எழுத்துக்கள் உள்ளன. 


முதன்முதலில் திருக்குறள் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 


திருக்குறளின் முதல் பெயர்- முப்பால் 


நெருஞ்சிப்பழம் என்ற பழவகை மட்டுமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது. 


யானை 8 முறையூம்இ பாம்பு 3 முறையூம் சுட்டப்பட்டுள்ளன.


பனைஇ மூங்கில் ஆகிய மரங்கள் மட்டுமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது. 


ஒரு குறளில் “பற்று” என்ற சொல் ஆறு முறை இடம்பெற்றுள்ளது. இதுவே ஒரே குறலில் அதிகப்படியாக வரும் சொல் ஆகும். 


குறிப்பறிதல் என்ற அதிகாரம் மட்டுமே திருக்குறளில் இருமுறை வருகிறது. அதிகாரங்கள்: குறிப்பறிதல் – (பொருட்பால் – அதிகாரம் 71) 

     குறிப்பறிதல் – (காமத்துப்பால் – அதிகாரம் 110)


மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம்இ பொருள்இ இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.


திருவள்ளுவர் செஞ்ஞாப்போதார்இ தெய்வப்புலவர்இ நாயனார்இ முதற்பாவலர்இ நான்முகனார்இ மாதானுபங்கிஇ பெருநாவலர்இ பொய்யில்புலவர் என பல சிறப்புப் பெயர்களால் போற்றப்படுகிறார்.


திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறிஸ்து ஆண்டு (கிபி) + 31 ஸ்ரீ திருவள்ளுவர் ஆண்டு. எ.கா: 2013 +31 ஸ்ரீ 2044 (கி.பி.2013-ஐ திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்)


முதலாம்இ இறுதிக் குறள்கள் சிறப்பினை வலுப்பத்துகின்றது. 

குறள் : 01

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


உரை:

அகர எழுத்துகளுக்கு முதன்மைஇ ஆதிபகவன்இ உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவூளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.


குறள் : 1330

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்.


உரை:

காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும்இ ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.


  திருக்குறள்; - அதிகார வைப்புக்கள்

 


அறத்துப்பால்

1. பாயிரவியல்

1.கடவூள்வாழ்த்து

2.வான்சிறப்பு

3.நீத்தார்பெருமை

4.அறன்வலியூறுத்தல்


2. இல்லறவியல்

5.இல்வாழ்க்கை

6.வாழ்க்கைத்துணைநலம்

7.மக்கட்பேறு

8.அன்புடைமை

9.விருந்தோம்பல்

10.இனியவைகூறல்

11.செய்ந்நன்றியறிதல்

12.நடுவூநிலைமை

13.அடக்கமுடைமை

14.ஒழுக்கமுடைமை

15.பிறனில்விழையாமை

16.பொறையூடைமை

17.அழுக்காறாமை

18.வெஃகாமை

19.புறங்கூறாமை

20.பயனிலசொல்லாமை

21.தீவினையச்சம்

22.ஒப்புரவறிதல்

23.ஈகை

24.புகழ்


3.துறவறவியல்

25.அருளுடைமை

26.புலான்மறுத்தல்

27.தவம்

28.கூடாவொழுக்கம்

29.கள்ளாமை

30.வாய்மை

31.வெகுளாமை

32.இன்னாசெய்யாமை

33.கொல்லாமை

34.நிலையாமை

35.துறவூ

36.மெய்யூணர்தல்

37.அவாவறுத்தல்





4.ஊழியல்

38.ஊழ்







பொருட்பால்

1.அரசியல்

39.இறைமாட்சி

40.கல்வி

41.கல்லாமை

42.கேள்வி

43.அறிவூடைமை

44.குற்றங்கடிதல்

45.பெரியாரைத்துணைக்கோடல்

46.சிற்றினஞ்சேராமை

47.தெரிந்துசெயல்வகை

48.வலியறிதல்

49.காலமறிதல்

50.இடனறிதல்

51.தெரிந்துதௌpதல்

52.தெரிந்துவினையாடல்

53.சுற்றந்தழால்

54.பொச்சாவாமை

55.செங்கோன்மை

56.கொடுங்கோன்மை

57.வெருவந்தசெய்யாமை

58.கண்ணோட்டம்

59.ஒற்றாடல்

60.ஊக்கமுடைமை

61.மடியின்மை

62.ஆள்வினையூடைமை

63.இடுக்கணழியாமை


2.அங்கவியல்

64.அமைச்சு

65.சொல்வன்மை

66.வினைத்தூய்மை

67.வினைத்திட்பம்

68.வினைசெயல்வகை

69.தூது

70.மன்னரைச்சேர்ந்தொழுகல்

71.குறிப்பறிதல்

72.அவையறிதல்

73.அவையஞ்சாமை

74.நாடு

75.அரண்

76.பொருள்செயல்வகை

77.படைமாட்சி

78.படைச்செருக்கு

79.நட்பு

80.நட்பாராய்தல்

81.பழைமை

82.தீநட்பு

83.கூடாநட்பு

84.பேதைமை

85.புல்லறிவாண்மை

86.இகல்

87.பகைமாட்சி

88.பகைத்திறந்தெரிதல்

89.உட்பகை.

90.பெரியாரைப்பிழையாமை

91.பெண்வழிச்சேறல்

92.வரைவின்மகளிர்

93.கள்ளுண்ணாமை

94.சு+து

95.மருந்து



3.ஒழிபியல்

96.குடிமை

97.மானம்

98.பெருமை

99.சான்றாண்மை

100.பண்புடைமை

101.நன்றியில்செல்வம்

102.நாணுடைமை

103.குடிசெயல்வகை

104.உழவூ

105.நல்குரவூ

106.இரவூ

107.இரவச்சம்

108.கயமை



காமத்துப்பால்

1.களவியல் (ஏழு அதிகாரம்)

109.தகையணங்குறுத்தல்

110.குறிப்பறிதல்

111.புணர்ச்சிமகிழ்தல்

112.நலம்புனைந்துரைத்தல்

113.காதற்சிறப்புரைத்தல்

114.நாணுத்துறவூரைத்தல்

115.அலரறிவூறுத்தல்


2.கற்பியல் (பதினெட்டு அதிகாரம்)

116.பிரிவாற்றாமை

117.படர்மெலிந்திரங்கல்

118.கண்விதுப்பழிதல்

119.பசப்புறுபருவரல்

120.தனிப்படர்மிகுதி

121.நினைந்தவர்புலம்பல்

122.கனவூநிலையூரைத்தல்

123.பொழுதுகண்டிரங்கல்

124.உறுப்புநலனழிதல்

125.நெஞ்சொடுகிளத்தல்

126.நிறையழிதல்

127.அவர்வயின்விதும்பல்

128.குறிப்பறிவூறுத்தல்

129.புணர்ச்சிவிதும்பல்

130.நெஞ்சொடுபுலத்தல்

131.புலவி

132.புலவிநுணுக்கம்

133.ஊடலுவகை




 


















               திருக்குறள் பொருட்பால்

                 அரசியல் 


முன்னுள்ள அதிகாரம் கேள்வி



           பொருட்பால் - அரசியல்


பொருட்பால் - அரசியல் - அதிகாரம் 01ஃ(43)


                 அதிகாரம் - 01

               01.அறிவூடைமை

அதிகார முன்னுரை

அஃதாவதுஇ கல்வி கேள்விகளினாய அறிவோடு உண்மை அறிவூடையனாதல். அதிகார முறைமையூம் இதனானே விளங்கும்.


குறள் 1ஃ421 (அறிவற்றங்)

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு       

முள்ளழிக்க லாகா வரண் (01)               


அறிவூ அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள் அழிக்கல் ஆகா அரண்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

அறிவூ அற்றங் காக்கும் கருவி - அரசர்க்கு அறிவென்பது இறுதிவாராமற் காக்கும் கருவியாம்;

செறுவார்க்கும் அழிக்கலாகா உள் அரணும் ஆம் - அதுவேயூமன்றிப் பகைவர்க்கு அழிக்காலாகாத உள் அரணுமாம்.


பொருள் :

அரசர்க்கு அறிவென்பது இறுதிவாராமற் (துன்பம்) காக்கும் கருவியாம்; அது மட்டுமன்றி மன்றிப் பகைவர்க்கு அழிக்காலாகாத உள் அரணுமாம்.


………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

காத்தல் முன்னறிந்து பரிகரிததல். உள்ளரண் உள்ளாய அரண்; உள்புக்கு அழிக்கலாகா அரண் என்றுமாம். 

இதனான் அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.


குறள் 2 (சென்றவிடத்தாற்)

சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ             

நன்றின்பா லுய்ப்ப தறிவூ (02)                    


சென்ற இடத்தால் செல விடா தீது ஒரீஇ

நன்றின் பால் உய்ப்பது அறிவூ.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

சென்ற இடத்தால் செல விடா- மனத்தை அது சென்ற புலத்தின்கட் செல்லவிடாது;

தீது ஒரீஇ நன்றின் பால் உய்ப்பது அறிவூ- அப்புலத்தின் நன்மைதீமைகளை ஆராய்ந்து தீயதனின் நீக்கி நல்லதன்கட் செலுத்துவது அறிவூ.

பொருள் :

மனத்தை அது சென்ற புலத்தின்கட் செல்லவிடாது; அப்புலத்தின்கண் நன்மைதீமைகளை ஆராய்ந்து தீயதனை நீக்கி நல்லதன்கண் செலுத்துவது அறிவூ.


………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்: 

வினைக்கேற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. ஓசைஇ ஊறுஇ ஒளிஇ சுவைஇ நாற்றம் எனப்புலம் ஐந்தாயினும்இ ஒரு காலத்து ஒன்றின்கணல்லது செல்லாமையின்இ 'இடத்தால்' என்றார். 'விடாது' என்பது கடைக்குறைந்து நின்றது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன்போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது 'அறிவூ' என்றார்இ அஃது உயிர்க்குணம்ஆகலின்.



குறள் 3 (எப்பொருள்யார்)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்    

மெய்ப்பொருள் காண் பதறிவூ(03)                         


எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவூ.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் - யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும்;

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவூ - அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவூ.


பொருள் :

யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவின் சிறப்பாகும்.


………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..


விளக்கம்:

குணங்கண் மூன்றும் மாறி மாறி வருதல் யார்க்கும் உண்மையின்இ உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும்இ இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும்இ உறுதிப்பொருள் பகைவர் வாயினும்இ கெடுபொருள் நட்டார் வாயினும் ஒரோவழிக் கேட்கப்படுதலான்இ 'எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்' என்றார். அடு்க்குப் பன்மை பற்றி வந்தது. 'வாய்' என்பதுஇ அவர் அப்பொருளின்கட் பயிலாமை உணரநின்றது. மெய்யாதல்- நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காதுஇ அப்பொருளின் பயன்நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவூ என்பதாம்.




குறள் 4 (எண்பொருளவாக)

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்       

நுண்பொருள் காண்ப தறிவூ (04)                                                 


எண் பொருளவாகச் செலச் சொல்லித் தான் பிறர் வாய்

நுண் பொருள் காண்பது அறிவூ.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

தான் எண் பொருளவாகச் செலச் சொல்லி-  தான் சொல்லும் சொற்களை அரிய பொருளவாயினும் கேட்பார்க்கு எளிய பொருளவாமாறு சொல்லி;

பிறர் வாய் நுண்பொருள் காண்பது அறிவூ - பிறர் வாய்க் கேட்கும் சொற்களின் நுண்ணிய பொருள் காண அரிதாயினும்இ அதனைக் காண வல்லது அறிவூ.


பொருள் :

தான் சொல்லும் சொற்களை அரிய பொருளவாயினும் கேட்பார்க்கு எளிய பொருள் ஆகுமாறு சொல்லி பிறர் வாய்க் கேட்கும் சொற்களின் நுண்ணிய பொருள் காண அரிதாயினும்இ அதனைக் காண வல்லது அறிவூ.

…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

உடையவன் தொழில் அறிவின்மேல் ஏற்றப்பட்டது. சொல்வன வழுவின்றி இனிது விளங்கச் சொல்லுக என்பார் சொன்மேல் வைத்தும்இ கேட்பன வழுவினும் இனிது விளங்கா வாயினும் பயனைக் கொண்டொழிக என்பார் பொருண்மேல் வைத்தும் கூறினார்.


குறள்-5 (உலகந்தழீஇய)

உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங்       

கூம்பலு மில்ல தறிவூ (05)                         


உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்லது அறிவூ.



பொருள் கொண்டு கூட்டும் முறை:

உலகம் தழீஇயது ஒட்பம் - உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம்;

மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவூ - அந்நட்பின்கண் முன் மலர்தலும்இ பின் கூம்புதலும் இன்றி ஒருநிலையனாவது அறிவாம்.


பொருள் :

உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம்; நட்பின்கண் முன் மலர்தலும்இ பின் கூம்புதலும் இன்றி ஒருநிலையனாவது அறிவாம்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..


விளக்கம்:

'தழீஇயது'இ 'இல்லது' என்பன அவ்வத் தொழின்மேல் நின்றன. உலகம் என்பது ஈண்டு உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப் போல வேறுபடாதுஇ கோட்டுப்பூப் போல ஒரு நிலையே நட்பாயினான்இ எல்லாவின்பமும் எய்தும் ஆகலின்இ அதனை 'அறிவூ' என்றார். காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன. இதனைச் செல்வத்தின் மலர்தலும்இ நல்குரவிற் கூம்பலும் இல்லதென்று உரைப்பாரும் உளர்.


குறள் 6 (எவ்வதுறைவது)

எவ்வ துறைவ துலக முலகத்தோ       

டவ்வ துறைவ தறிவூ (06)                       


எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவூ.



பொருள் கொண்டு கூட்டும் முறை:

உலகம் எவ்வது உறைவது- உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று;

உலகத்தோடு அவ்வது உறைவது அறிவூ-  அவ்வூலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவூ.


பொருள்:

உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று; உலகத்தோடு அவ்வூலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவூ.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

உலகத்தை எல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பார் இல்லையெனக் கருதித் தான் நினைந்தவாறே ஒழுகிற் பாவமும் பழியூம் ஆகலான்இ அவ்வாறு ஒழுகுதல் அறிவன்று என விலக்கியவாறாயிற்று. 

இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.



குறள் 7 (அறிவூடையாராவ)

அறிவூடையா ராவ தறிவா ரறிவிலா       ;

ரஃதறி கல்லா தவர் (07)                                 


அறிவூ உடையார் ஆவது அறிவார் அறிவிலார

அஃது அறிகல்லாதவர்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

அறிவூடையார் ஆவது அறிவார் - அறிவூடையராவார் வரக்கடவதனை முன் அறியவல்லார்;

அறிவிலார் அஃது அறிகல்லாதவர்-  அறிவிலராவார் அதனை முன்னறிய மாட்டாதார்.


பொருள் :

அறிவூடையராவார் வரக்கடவதனை முன் அறியவல்லார்; ஆனால் அறிவிலராவார் அதனை முன்னறிய மாட்டாதார்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

விளக்கம்:

'முன்னறிதல்' முன்னே எண்ணியறிதல். 'அஃதறிகல்லாமை'யாவது வந்தாலறிதல். இனிஇ 'ஆவதறிவார்' என்பதற்குத் தமக்கு நன்மையறிவார் என்று உரைப்பாருமுளர்.



குறள் 8 (அஞ்சுவது)

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ       

தஞ்ச லறிவார் தொழில் (08)                              


அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை- அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம்; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்- அவ்வஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம்.

பொருள் :

அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம்; அவ் அஞ்சுவதற்கு அஞ்சுதல் அறிவார் தொழிலாம்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்:

பாவமும் பழியூம் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும்இ சாதிபற்றி 'அஞ்சுவது' என்றார். 'அஞ்சாமை'இ எண்ணாது செய்து நிற்றல். 'அஞ்சுதல்' எண்ணித் தவிர்தல். அதுகாரியமன்று என்று இகழப்படாதென்பார் 'அறிவார் தொழில்'1 என்றார். அஞ்சாமை இறைமாட்சியாகச் சொல்லப்பட்டமையின்இ ஈண்டு அஞ்சவேண்டும்இடம் கூறியவாறு.

இவை இரண்டு பாட்டானும் அதனை உடையாரது இலக்கணம் கூறப்பட்டது.



குறள் 9 (எதிரதாக்)

எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை       

யதிர வருவதோர் நோய் (09)                          


எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவது ஓர் நோய்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு - வரக்கடவதாகிய அதனை முன் அறிந்து காக்கவல்ல அறிவினை உடையார்க்கு; அதிரவருவது ஓர் நோய்- அவர் நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை.


பொருள் :

வரக்கடவதாகிய அதனை முன் அறிந்து காக்கவல்ல அறிவினை உடையார்க்கு; அவரை நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்:

'நோய்' என வருகின்றமையின்இ வாளா 'எதிரதா' என்றார். இதனால் காக்கலாம் காலம் உணர்த்தப்பட்டது. 'காத்தல்' அதன் காரணத்தை விலக்குதல். அவர்க்குத் துன்பமின்மை இதனால் கூறப்பட்டது.



குறள் 10 (அறிவூடையார்)

அறிவூடையா ரெல்லா முடையா ரறிவிலா       

ரென்னுடைய ரேனு மிலர் (10).                               


அறிவூ உடையார் எல்லாம் உடையார்

அறிவூ இலார் என் உடையரேனும் இலர்.



பொருள் கொண்டு கூட்டும் முறை:

அறிவூடையார் எல்லாம் உடையார்- அறிவூடையார் பிறிதொன்றும் இலராயினும்இ எல்லாம் உடையராவார்;. அறிவிலார் என்னுடையரேனும் இலர் - அறிவிலாதார் எல்லாம் உடையராயினும்இ ஒன்றும் இலராவார்.




பொருள் :

அறிவூடையார் பிறிதொன்றும் இலராயினும்இ எல்லாம் உடையராவார்;. ஆனால் அறிவிலாதார் எல்லாம் உடையராயினும்இ ஒன்றும் இலராவார்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்:

எல்லாம் அறிவாற் படைக்கவூம்இ காக்கவூம்படுதலின் அஃதுடையாரை 'எல்லாம் உடையார்' என்றும்இ அவையெல்லாம் முன்னே அமைந்து கிடப்பினும் அழியாமற் காத்தற்குந் தெய்வத்தான் அழிவூவந்துழிப் படைத்தற்குங் கருவியூடையர் அன்மையின் அஃது இல்லாதாரை 'என்னுடையரேனும் இலர்' என்றும் கூறினார். என்னும் என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது.

இதனான் அவரது உடைமையூம்இ ஏனையாரது இன்மையூம் செல்வங்கள் கூறப்பட்டன.













          வினா – விடைக் கட்டமைப்புக்கள்



அறிவூடைமை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியூள்ளவற்றை ஆதாரமாகக் 

கொண்டு பின்வருவனவற்றைத்  தௌpவூபடுத்துக. 

(அ) அறிவினது சிறப்பு 

(ஆ) அதனது இலக்கணம் 

(இ) அது உடையாரது சிறப்பும் இல்லாரது இழிவூம்                   (20 புள்ளிகள்)





அறிவூடைமை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியூள்ளவற்றை ஆதாரமாகக் 

கொண்டு பின்வருவனவற்றைத்  தௌpவூபடுத்துக.

அ).அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.      

ஆ).அறிவினது இலக்கணம் கூறப்பட்டது.

இ). அதனை உடையாரது இலக்கணம் கூறப்பட்டது.

ஈ).இதனான் அவரது உடைமையூம்இ ஏனையாரது இன்மையூம் செல்வங்கள் கூறப்பட்டன.

(20 புள்ளிகள்)












பொருட்பால் - அரசியல் - அதிகாரம் 02ஃ(44)


                அதிகாரம் - 02

02.குற்றம் கடிதல்


அதிகாரமுன்னுரை:

அஃதாவதுஇ காமம் வெகுளி கடும்பற்றுள்ளம் மானம் உவகை மதன் என்னப்பட்ட குற்றங்கள் ஆறனையூம் அரசன் தன்கண்நிகழாமற் கடிதல். இவற்றை வடநூலார் பகை வர்க்கம் என்ப. இவை குற்றம் என்றுஅறிதலும்இ கடிதலும் அறிவூடையார்க்கல்லது கூடாமையின்இ அதன்பின் வைக்கப்பட்டது.


குறள்-01 (செருக்கும்) 

செருக்குஞ் சினமுஞ் சிறுமையூ மில்லார்       

பெருக்கம் பெருமித நீர்த்து (01)                          


செருக்கும் சினமும் சிறுமையூம் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து.



பொருள் கொண்டு கூட்டும் முறை:

செருக்கும் சினமும் சிறுமையூம் இல்லார் பெருக்கம் - மதமும் வெகுளியூம் காமமுமாகிய குற்றங்களில்லாத அரசரது செல்வம்; பெருமித நீர்த்து - மேம்பாட்டு நீர்மையினை உடைத்து.


பொருள்:

மதமும் வெகுளியூம் காமமுமாகிய குற்றங்களில்லாத அரசரது செல்வம்; மேம்பாட்ட தன்மையினை உடையது.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்: 

மதம் செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகலின் அளவிறந்த காமம் சிறுமை எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான்இ இவற்றைக் கடிந்தார் செல்வம் நல்வழிப்பாடும்இ நிலைபேறுமுடைமையின் மதிப்புடைத்து என்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.



குறள்-02 (இவறலு மாண்பிறந்த) 

இவறலு மாண்பிறந்த மானமு மாணா       

வூவகையூ மேத மிறைக்கு (02)                        


இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா

உவகையூம் ஏதம் இறைக்கு.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

இவறலும்- வேண்டும்வழிப் பொருள் கொடாமையூம்; மாண்பு இறந்த மானமும் - நன்மையின் நீங்கிய மானமும்; மாணா உவகையூம்ஸ்ரீ அளவிறந்த உவகையூம்; இறைக்கு ஏதம்ஸ்ரீ அரசனுக்குக் குற்றம்.


பொருள்: 

வேண்டும் வழிப் பொருள் கொடாமையூம்;இ நன்மையின் நீங்கிய மானமும்;இ அளவிறந்த உவகையூம்;இ அரசனுக்குக் குற்றமாம்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்: 

மாட்சியான மானத்தின் நீக்குதற்கு 'மாண்பிறந்த மானம்' என்றார். அஃதாவதுஇ "அந்தணர் சான்றௌர் அருந்தவத்தோர் தம் முன்னோர் தாய் என்றிவ"1ரை வணங்காமையூம்இ முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின. அளவிறந்த உவகையாவது கழிகண்ணோட்டம்; பிறரும் "சினனே காமங் கழிகண்ணோட்டம்" என்று இவற்றை "அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது"2 என்றார்.  இவை யிரண்டு பாட்டானும் குற்றங்களாவன இவையென்பது கூறப்பட்டது.



குறள்-03 (தினைத்துணையாங்) 

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்       

கொள்வர் பழிநாணு வார் (03)                                                           


தினைத் துணையாம் குற்றம் வரினும் பனைத் துணையாக்

கொள்வர் பழி நாணுவார்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

பழி நாணுவார் - பழியை அஞ்சுவார்; தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத் துணையாக் கொள்வர்- தங்கண் திணையளவாம் குற்றம் வந்ததாயினும் அதனை அவ்வளவாகவன்றிப் பனையின் அளவாகக் கொள்வர்.


பொருள்: 

பழியை அஞ்சுவார்; தங்கண் திணையளவாம் குற்றம் வந்ததாயினும் அதனை அவ்வளவாகவன்றிப் பனையின் அளவாகக் கொள்வர்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்: 

'குற்றம்' சாதிப்பெயர். தமக்கு ஏலாமையிற் சிறிதென்று பொறார்; பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அது வாராமற் காப்பர் என்பதாம்.



குறள்-04 (குற்றமே) 

குற்றமே காக்க பொருளாக் குற்றமே       

யற்றந் தஷரூஉம் பகை                                  


குற்றமே காக்க பொருளாக் குற்றமே

அற்றம் தஷரூஉம் பகை.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

அற்றம் தஷரூஉம் பகை குற்றமே- தனக்கு இறுதி பயக்கும் பகை குற்றமே; குற்றமே பொருளாக் காக்க- ஆகலான்இ அக்குற்றம் தன்கண் வராமையே பயனாகக் கொண்டு காக்க வேண்டும்.


பொருள்: 

தனக்கு இறுதி பயக்கும் பகை குற்றமே குற்றமே பொருளாகக்காக்க ஆகலான்இ அக்குற்றம் தன்கண் வராமையே பயனாகக் கொண்டு காக்க வேண்டும்.

……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்: 

இவைபற்றியல்லதுஇ பகைவர் அற்றம் தாராமையின் இவையே பகையாவனவென்னும் வடநூலார் மதம் பற்றிக் 'குற்றமே யற்றந் தஷரூஉம் பகை' என்றும்இ இவற்றது இன்மையே குணங்களது உண்மையாகக் கொண்டென்பார் 'பொருளாக' என்றும் கூறினார். 'குற்றமே காக்க' என்பதுஇ "அரும்பண்பினால் தீமை காக்க" என்பதுபோல நின்றது.



குறள்-05 (வருமுன்னர்க்) 

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்      

வைத்தூறு போலக் கெடும் (05)                                           


வரு முன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்

வைத் தூறு போலக் கெடும்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

வரு முன்னர்க் காவாதான் வாழ்க்கை - குற்றம் வரக் கடவதாகின்ற முற்காலத்திலே அதனைக் காவாத அரசன் வாழ்க்கை; எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் - அது வந்தால் எரி முகத்து நின்ற வைக்குவை போல அழிந்துவிடும்.



பொருள்:

குற்றம் வரக் கடவதாகின்ற முற்காலத்திலே அதனைக் காவாத அரசன் வாழ்க்கை; எரிமுன்னர் அது வந்தால் எரி முகத்து நின்ற வைக்குவை போல அழிந்துவிடும்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்:

'குற்றம்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'முன்னர்' என்றதன் ஈற்றது பகுதிப்பொருள் விகுதி. 'வரும்' என்னும் பெயரெச்சம் 'முன்னர்' என்னும் காலப்பெயர் கொண்டது; அதனாற் காக்கலாங் காலம் பெறப்பட்டது. குற்றம் சிறிதாயினும் அதனாற் பெரிய செல்வம் அழிந்தே விடும் என்பது உவமையாற் பெற்றாம்.



குறள் 06 (தன்குற்ற) 

தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி       

னென்குற்ற மாகு மிறைக்கு (06)                          


தன் குற்றம் நீங்கிப் பிறர் குற்றம் காண்கில் பின்

என் குற்றம் ஆகும் இறைக்கு.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

தன் குற்றம் நீங்கிப் பிறர் குற்றம் காண்கிற் பின் - முன்னர்த் தன் குற்றத்தைக் கண்டு கடிந்து பின்னர்ப் பிறர் குற்றம் காணவல்லனாயின்; இறைக்கு ஆகும் குற்றம் என் - அரசனுக்கு ஆகக்கடவ குற்றம் யாது?


………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்:

அரசனுக்குத் தன் குற்றம் கடியாவழியே பிறர் குற்றம் கடிதல் குற்றமாவது; கடிந்தவழி முறை செய்தலாம் என்பார்இ 'என் குற்றமாகும்' என்றார்; எனவேஇ தன் குற்றங் கடிந்தவனே முறைசெய்தற்குரியவன் என்பதாயிற்று.

இவை நான்கு பாட்டானும் அவற்றது கடிதற்பாடு பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையாற் கூறுப.


குறள்- 07 (செயற்பால) 

செயற்பால செய்யா திவறியான் செல்வ      

முயற்பால தன்றிக் கெடும் (07)                          


செயல் பால செய்யாது இவறியான் செல்வம்

உயற்பாலது அன்றிக் கெடும். 


பொருள் கொண்டு கூட்டும் முறை:

செயற்பால செய்யாது இவறியான் செல்வம் - பொருளால் தனக்குச் செய்துகொள்ளப்படுமவற்றைச் செய்துகொள்ளாது அதன்கட் பற்றுள்ளஞ் செய்தானது செல்வம்; உயற்பாலதன்றிக் கெடும் - பின் உளதாம் பான்மைத்தன்றி வறிதே கெடும்.


பொருள்:

பொருளால் தனக்குச் செய்துகொள்ளப்படுமவற்றைச் செய்துகொள்ளாது அதன்கட் பற்றுள்ளஞ் செய்தானது செல்வம்; பின் உளதாம் பான்மைத்தன்றி வறிதே கெடும்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்:

'செயற்பால'வாவன: அறம் பொருள் இன்பங்கள். பொருளாற் பொருள் செயதலாவது- பெருக்குதல்;

அதுஇ "பொன்னி னாகும் பொருபடை யப்படை- தன்னி னாகுந் தரணி தரணியிற்- பின்னை யாகும் பெரும்பொருள் அப்பொருள் துன்னுங் காலைத் துன்னாதன இல்லையே"3 என்பதனான் அறிக. அறம் செய்யாமையானும்இ பொருள் பெருக்காமையானும் 'உயற்பாலதன்றி' யென்றும்இ இன்பப் பயன் கொள்ளாமையிற் 'கெடும்' என்றும் கூறினார். 'உயற்பாலதின்றி' என்று பாடம் ஓதுவாரும் உளர்.


குறள்-08 (பற்றுள்ளமென்னும்) 

பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு      ;

மெண்ணப் படுவதொன் றன்று (08)                        


பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும

எண்ணப் படுவது ஒன்று அன்று.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

பற்றுள்ளம் என்னும் இவறன்மை - பொருளைவிடத் தகுமிடத்து விடாது பற்றுதலைச் செய்யூம் உள்ளமாகிய உலோபத்தினது தன்மை; எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று - குற்றத்தன்மைகள் எல்லாவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்றன்றுஇ மிக்கது.


பொருள்:

பொருளைவிடத் தகுமிடத்து விடாது பற்றுதலைச் செய்யூம் உள்ளமாகிய உலோபத்தினது தன்மை; எற்றுள்ளும் குற்றத்தன்மைகள் எல்லாவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்றன்றுஇ மிக்கது.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்:

இவறலது தன்மையாவதுஇ குணங்களெல்லாம் ஒருங்கு உளவாயினும் அவற்றைக் கீழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல இயல்பு; ஒழிந்தன அதுமாட்டாமையின்இ 'எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்றன்று' என்றார். எவற்றுள்ளும் என்பது இடைக்குறைந்து நின்றது.

இவை இரண்டு பாட்டானும் உலோபத்தின் தீமை கூறப்பட்டது.


குறள்-09 (வியவற்க) 

வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க      

நன்றி பயவா வினை (09)                                           


வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

எஞ்ஞான்றும் தன்னை வியவற்க -  தான் இறப்ப உயர்ந்த ஞான்றும் மதத்தால் தன்னை நன்கு மதியாது ஒழிக் நன்றி பயவா வினை நயவற்க- தனக்கு நன்மை பயவா வினைகளை மானத்தால் விரும்பாது ஒழிக வேண்டும்.


பொருள்: 

தான் இறப்ப உயர்ந்த ஞான்றும் மதத்தால் தன்னை நன்கு மதியாது ஒழிக் தனக்கு நன்மை பயவா வினைகளை மானத்தால் விரும்பாது ஒழிக்க.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்:

தன்னை வியந்துழி இடமும் காலமும் வலியூம் அறியப்படாமையானும்இ அறனும் பொருளும் இகழப்படுதலானும்இ 'எஞ்ஞான்றும் வியவற்க' என்றும்இ கருதியது முடித்தேவிடுவல் என்று அறம் பொருள் இன்பங்கள் பயவா வினைகளை நயப்பின் அவற்றாற் பாவமும் பழியூம் கேடும் வருமாகலின்இ அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார். இதனான் மதஇ மானங்களின் தீமை கூறப்பட்டது.



குறள்-10 (காதலகாதல்) 

காதல காத லறியாமை யூய்க்கிற்பின்      

னேதில வேதிலார் நூல் (10)                        


காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்- தான காதலித்த பொருள்களை அவர் அக்காதலறியாமல் அனுபவிக்கவல்லனாயின்; ஏதிலார் நூல் ஏதில- பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம்.


பொருள்: 

தான் காதலித்த பொருள்களை அவர் அக்காதலறியாமல் அனுபவிக்க வல்லனாயின்; பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

விளக்கம்:

அறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பாராகலின்இ அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம் வெகுளிஇ உவகை என்பன முற்றக் கடியூம் குற்றம் அன்மையின்இ இதனாற் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறிஇ ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.










           வினா – விடைக் கட்டமைப்புக்கள்



குற்றம் கடிதல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியூள்ளவற்றை ஆதாரமாகக் 

கொண்டு பின்வருவனவற்றைத்  தௌpவூபடுத்துக. 

(அ) மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.

ஆ).குற்றங்களாவன இவையென்பது கூறப்பட்டது.

இ).அவற்றது கடிதற்பாடு பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையாற் கூறுப.

ஈ).உலோபத்தின் தீமை கூறப்பட்டது.

உ).இதனான் மதஇ மானங்களின் தீமை கூறப்பட்டது.

ஊ).ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.

                 (20 புள்ளிகள்)







பொருட்பால் - அரசியல் - அதிகாரம் 03ஃ(45)


                அதிகாரம் - 03

        03.பெரியாரைத்துணைக்கோடல்


அதிகார முன்னுரை:

அஃதாவதுஇ மூவிரு குற்றமும் முறைமையிற் கடிதலிற் காவற் சாகாடு உகைத்தற்கு உரியனாய அரசன்இ தீநெறி விலக்கி நன்னெறிச் செலுத்தும் பேரறிவூடையாரைத் தனக்குத் துணையாகக்கோடல். அதிகார முறைமையூம் இதனானே விளங்கும். பேரறிவூடையராவார்இ அரசர்கட்கும் அங்கங்கட்கும் மானுடத் தெய்வக் குற்றங்கள் வாராமற் காத்தற்குரிய அமைச்சர்இ புரோகிதர்.


குறள்-01 (அறனறிந்து மூத்த)

அறனறிந்து மூத்த வறிவூடையார் கேண்மைஅறன் 

திறனறிந்து தேர்ந்து கொளல் (01)


அறிந்து மூத்த அறிவூ உடையார் கேண்மை 

திறன் அறிந்து தேர்ந்து கொளல்.


பொருள் கொண்டு கூட்டும் முறை: 

அறன் அறிந்து மூத்த அறிவூடையார் கேண்மை - அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவூடையாரது கேண்மையை; தேர்ந்து திறன் அறிந்து கொளல் - அரசன் அதனது அருமையை ஓர்ந்துஇ கொள்ளும் திறமறிந்து கொள்க.


பொருள்: 

அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவூடையாரது கேண்மையை; அரசன் அதனது அருமையை ஓர்ந்துஇ கொள்ளும் திறமறிந்து கொள்க.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்:

அறநுண்மை நூலானே அன்றி உய்த்துணர்வானும் அறியவேண்டுதலின்இ 'அறனறிந்து' என்றார். மூத்தல்' அறிவானும்இ சீலத்தானும்இ காலத்தானும் முதிர்தல். 'அறிவூடையார்' நீதியையூம்இ உலகியலையூம் அறிதலை உடையார். 'திறனறி'தலாவதுஇ நன்கு மதித்தல்இ உயரச்செய்தல்இ அவர்வரைநிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறனறிந்து செய்தல்.



குறள்-02 (உற்றநோய்)

உற்றநோய் நீக்கி யூறாஅமை முற்காக்கும் 

பெற்றியார்ப் பேணிக் கொளல் (02) 


உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

உற்ற நோய் நீக்கி - தெய்வத்தானாகஇ மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை நீக்குமாறு அறிந்து நீக்கி; உறாஅமை முன் காக்கும் பெற்றியார் - பின் அப்பெற்றியன வாராவண்ணம் முன்னறிந்து காக்கவல்ல தன்மையினை உடையாரை; பேணிக் கொளல் - அரசன் அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்க.


பொருள்: 

தெய்வத்தானாகஇ மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை நீக்குமாறு அறிந்து நீக்கி; பின் அப்பெற்றியன வாராவண்ணம் முன்னறிந்து காக்கவல்ல தன்மையினை உடையாரை அரசன் அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்ள வேண்டும்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்: 

தெய்வத்தான் வரும் துன்பங்களாவன: மழையினதின்மை மிகுதிகளானும்இ காற்றுத் தீப் பிணி என்று இவற்றானும் வருவன. அவை கடவூளரையூம்இ தக்கோரையூம் நோக்கிச் செய்யூம் சாந்திகளான் நீக்கப்படும். மக்களான் வரும் துன்பங்களாவன: பகைவர்இ கள்வர்இ சுற்றத்தார்இ வினைசெய்வார் என்று இவர்களான் வருவன. அவை சாம பேத தான தண்டங்களாகிய நால்வகை உபாயத்துள் ஏற்றதனான் நீக்கப்படும். 'முற்காத்த'லாவதுஇ தெய்வத்தான் வருவனவற்றை உற்பாதங்களான் அறிந்து அச்சாந்திகளாற் காத்தலும்இ மக்களான் வருவனவற்றை அவர் குணம்இ இங்கிதம்இ ஆகாரம்இ செயல் என்பவற்றான் அறிந்து அவ்வூபாயங்களுள் ஒன்றாற் காத்தலுமாம். ஆகவேஇ புரோகிதரையூம் அமைச்சரையூம் கூறியவாறாயிற்று. இங்கிதம்- குறிப்பான் நிகழும் உறுப்பின் தொழில். ஆகாரம்- குறிப்பின்றி நிகழும் வேறுபாடு. உவப்பன- நன்கு மதித்தன்முதலியன.

இவை இரண்டு பாட்டானும்இ பெரியாரது இலக்கணமும் அவரைத் துணையாகக் கொடல் வேண்டும் என்பதூஉம் கொள்ளுமாறும் கூறப்பட்டன.



குறள்-03 (அரியவற்றுள்)

அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப் 

பேணித் தமராக் கொளல் 


அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல்; அரியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் அரிது.


பொருள்: 

அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல்; அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் அரிது.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்: 

உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்குரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றதுஇ இதனால் அவையெல்லாம் உளவாதல் நோக்கி.


குறள் - 04(தம்மிற்பெரியார்)

தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல் 

வன்மையூ ளெல்லாந் தலை (04) 


தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையூள் எல்லாம் தலை.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் - அறிவூ முதலியவ்ற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர்வழி நின்று ஒழுகுதல்;

வன்மையூள் எல்லாம் தலை - அரசர்க்கு எல்லா வலியூடைமையினும் தலை.


பொருள்:

அறிவூ முதலியவ்ற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர்வழி நின்று ஒழுகுதல்;

அரசர்க்கு எல்லா வலியூடைமையினும் தலை.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்: 

பொருள் படை அரண்களாகிய வலியினும் இத் துணைவலி சிறந்ததென்றதுஇ இவர் அவற்றான் நீக்கப்படாத தெய்வத்துன்பம் முதலியனவூம் நீக்குதற்கு உரியராகலின்.



குறள்-05(சு+ழ்வார்)

சு+ழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன் 

சு+ழ்வாரைச் சு+ழ்ந்து கொளல் (05)


சு+ழ்வார் கண்ணாக ஒழுகலான் மன்னவன்

சு+ழ்வாரைச் சு+ழ்ந்து கொளல்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

சு+ழ்வார்கண்ணாக ஒழுகலான்- தன்பாரம் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடத்தலான்; மன்னவன் சு+ழ்வாரைச் சு+ழ்ந்து கொளல்- அரசன் அத்தன்மையராய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்க.


பொருள்: 

தன்பாரம் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடத்தலான்; மன்னவன் அரசன் அத்தன்மையராய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்க.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்: 

இரண்டாவது விகாரத்தால் தொக்கது. தானே சு+ழவல்லனாயினும்இ அளவிறந்த தொழில்களான் ஆகுலம் எய்தும் அரசன்பாரம் அதுவே தொழிலாய அமைச்சரான் அல்லது இனிது நடவாமைபற்றிஇ அவரைக் 'கண்ணாக'க் கூறினார். ஆராய்தல் அமைச்சியலுட் சொல்லப்படும் இலக்கணத்தினர் என்பதனை ஆராய்தல். இவை மூன்று பாட்டானும் பெரியாரைத் துணைக்கோடலின் சிறப்புக் கூறப்பட்டது.



குறள்-06 (தக்காரினத்)

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் 

செற்றார் செயக்கிடந்த தில் (06) 


தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்தது இல். 


பொருள் கொண்டு கூட்டும் முறை:

தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை - தக்காராகிய இனத்தை உடையனாய்த் தானும் அறிந்தொழுக வல்ல அரசனை; செற்றார் செயக்கிடந்தது இல் - பகைவர் செய்யக்கிடந்ததொரு துன்பமும் இல்லை.


பொருள்:

தக்காராகிய இனத்தை உடையனாய்த் தானும் அறிந்தொழுக வல்ல அரசனை; பகைவர் செய்யக்கிடந்ததொரு துன்பமும் இல்லை.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்:

'தக்கார்' அறிவூ ஒழுக்கங்களாற் தகுதியூடையார். 'ஒழுகுதல்' அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல். வஞ்சித்தல்இ கூடினரைப் பிரித்தல்இ வேறுபகை விளைத்தல் என்று இவற்றானும்இ வலியானும் பகைவர்செய்யூம் துன்பங்கள் பலதிறத்தவாயினும்இ தானும் அறிந்து அறிவார் சொல்லுங் கொண்டு ஒழுகுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராது என்பார்இ 'செற்றார் செயக்கிடந்தது இல்' என்றார்.



குறள் 447(இடிக்குந்)

இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே 

கெடுக்குந் தகைமை யவர் (07) 


இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே

கெடுக்கும் தகைமையவர்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

இடிக்கும் துணையாரை ஆள்வாரை - தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் துணையாம் தன்மையை உடையாரை இவர் நமக்குச் சிறந்நார் என்று ஆளும் அரசரை;

கெடுக்கும் தகைமையவர் யார் - கெடுக்கும் பெருமையூடைய பகைவர் உலகத்து யாவர்?


பொருள்:

தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் துணையாம் தன்மையை உடையாரை இவர் நமக்குச் சிறந்நார் என்று ஆளும் அரசரை கெடுக்கும் பெருமையூடைய பகைவர் உலகத்து யாவர்?

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்:

தீயனஇ பாவங்களும் நீதியல்லனவூம். துணையாந் தன்மையாவதுஇ தமக்கு அவை இன்மையூம்இ அரசன்கண் அன்புடைமையூமாம். அத்தன்மை உடையார் நெறியின் நீங்கவிடாமையின்இ அவரை ஆளும் அரசர் ஒருவரானும் கெடுக்கப்படார் என்பதாம். 'நெருங்கிச் சொல்லும் அளவினோரை' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அதன்பயன் கூறப்பட்டது.



குறள்-08(இடிப்பாரை)

இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன் 

கெடுப்பா ரிலானுங் கெடும் (08) 


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் - கழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன்; கெடுப்பார் இலானும் கெடும் - பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும்.


பொருள்:

கழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன்; பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்:

'இல்லாத'இ 'ஏமரா' என்பன பெயரெச்ச அடுக்கு. கெடுப்பார் உளராவர் என்பது தோன்றஇ 'இலானும்' என்றார். தானே கெடுதலாவதுஇ பாகன் இல்லாத யானைபோல நெறியல்லா நெறிச் சென்று கெடுதல்.



குறள்-09(முதலிலார்க்)

முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ் 

சார்பிலார்க் கில்லை நிலை (09) 


முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்

சார்பு இலார்க்கு இல்லை நிலை.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

முதல் இலார்க்கு ஊதியம் இல்லை - முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம்; மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை - அதுபோலத் தம்மைத் தாங்குவதாந் துணை இல்லாத அரசர்க்கு அதனான் வரும் நிலையில்லை.


பொருள்:

முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம்; அதுபோலத் தம்மைத் தாங்குவதாந் துணை இல்லாத அரசர்க்கு அதனான் வரும் நிலையில்லை.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்:

முதலைப் பெற்றே இலாபம் பெறவேண்டுமாறு போலத் தாங்குவாரைப் பெற்றே நிலைபெற வேண்டும் என்பதாம். 'நிலை' அரசர் பாரத்தோடு சலியாது நிற்றல்.


குறள்-10 (பல்லார்பகை)

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல் (10)



பொருள் கொண்டு கூட்டும் முறை:

பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே - தான் தனியனாய்வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலிற் பதிற்றுமடங்கு தீமை உடைத்து;

நல்லார் தொடர் கைவிடல் - அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளாது ஒழிதல்.


பொருள்:

தான் தனியனாய்வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலிற் பதிற்றுமடங்கு தீமை உடைத்து; அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளாது ஒழிதல்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………



விளக்கம்:

பலர் பகையாயக்கால் "மொதி முள்ளொடு முட்பகை கண்டிடல்- பேது செய்து பிளந்திடல்"1 என்பவை யல்லது ஒருங்கு வினையாக் குறித்துச் செய்தாலும் ஒருவாற்றான் உய்தல் கூடும்; நல்லார் தொடர் கைவிட்டால் ஒருவாற்றான் உய்தல்கூடாமையின்இ இது செய்தல் அதனினும் தீது என்பதாம்.

இவை மூன்று பாட்டானும் அது செய்யாவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.













          வினா – விடைக் கட்டமைப்புக்கள்



பெரியாரைத்துணைக்கோடல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியூள்ளவற்றை ஆதாரமாகக்  கொண்டு பின்வருவனவற்றைத்  தௌpவூபடுத்துக. 

அ).பாட்டானும் பெரியாரது இலக்கணமும்இ அவரைத் துணையாகக் கோடல் வேண்டும்

என்பதூஉம்இ கொள்ளுமாறும் கூறப்பவன  (1-2)

ஆ).பெரியாரைத் துணைக் கோடலின் சிறப்புக் கூறப்படுவன (3-5)

இ). அதன் பயன் கூறப்படுவன (6-7); 

ஈ).அது செய்யாத வழிப்படும குற்றம் கூறப்படுவன  (8.10)

          (20 புள்ளிகள்)





பெரியாரைத்துணைக்கோடல் என்ற அதிகாரத்தில் 

அ).பெரியாரது இலக்கணமும் 

ஆ).அவரைத் துணையாகக் கொடல் வேண்டும் என்பதூஉம் கொள்ளுமாறும் கூறப்பட்டன.

இ).பெரியாரைத் துணைக்கோடலின் சிறப்புக் கூறப்பட்டது.

ஈ).அதன்பயன் கூறப்பட்டது.

உ).அது செய்யாவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.

(20 புள்ளிகள்)




பொருட்பால் - அரசியல் - அதிகாரம் 04ஃ(46)


                அதிகாரம் - 04

            04.சிற்றினம் சேராமை

அதிகார முன்னுரை

அஃதாவது சிறிய இனத்தைப் பொருந்தாமை. சிறிய இனமாவதுஇ "நல்லதன் நலனும் தீயதன் தீமையூம் இல்லை என்போ"1ரும்இ விடரும் தூர்த்தரும் நடரும் உள்ளிட்ட குழு. அறிவைத் திரித்து இருமையூம் கெடுக்கும் இயல்பிற்றாய அதனைப் பொருந்திற் பெரியாரைத் துணைக்கோடல் பயனின்று என்பது உணர்த்தற்கு இஃது அதன்பின் வைக்கப்பட்டது.



குறள்-01 (சிற்றினமஞ்சும்)

சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்     

சுற்றமாச் சு+ழ்ந்து விடும் (01).                          


சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சு+ழ்ந்து விடும்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

பெருமை சிற்றினம் அஞ்சும் - பெரியோர் இயல்பு சிறிய இனத்தை அஞ்சாநிற்கும்;

சிறுமைதான் சுற்றமாச் சு+ழ்ந்து விடும் - ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்தபொழுது அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியூம்.


பொருள்

பெரியோர் இயல்பு சிறிய இனத்தை அஞ்சாநிற்கும்; ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்தபொழுது அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியூம்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

தத்தம் அறிவூ திரியூமாறும் அதனால் தக்கு வரும் துன்பமும் நோக்கலின் அறிவூடையார் அஞ்சுவர் என்றும் அறிவொற்றுமையால் பிறிது நோக்காமையின் அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள் பண்பின்மேல் நின்றன. இதனால்இ சிறியவினம் பெரியோர்க்கு ஆகாது என்பது கூறப்பட்டது.



குறள்-02 (நிலத்தியல்பா)

நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்     

கினத்தியல்ப தாகு மறிவூ (02).                            


நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு

இனத்து இயல்பதாகும் அறிவூ.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும் - தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மைத்தாம்;

மாந்தர்க்கு இனத்து இயல்பு அறிவூ அதாகும் - அதுபோல மாந்தர்க்குத் தாம் சேர்ந்த இனத்தினது இயல்பானே அறிவூம் தன் தன்மைதிரிந்து அவ்வினத்தின் தன்மைத்தாம்.


பொருள்

தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மைத்தாம்;

அதுபோல மாந்தர்க்குத் தாம் சேர்ந்த இனத்தினது இயல்பானே அறிவூம் தன் தன்மைதிரிந்து அவ்வினத்தின் தன்மைத்தாம்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

எடுத்துக்காட்டுவமை. விசும்பின்கண் தன்தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்தவழி நிறம்இ சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போலத் தனிநிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவூ பிறவினத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியூம்என இதனால் அதனது காரணம் கூறப்பட்டது.



குறள்-03 (மனத்தானாம்)

மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா       

மின்னா னெனப்படுஞ்சொல் (03)                               


மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்

இன்னான் எனப்படும் சொல்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம்- மாந்தர்க்குப் பொதுஉணர்வூ தம் மனம் காரணமாக உண்டாம்;

இன்னான் எனப்படும் சொல் இனத்தான் ஆம்- இவன் இத்தன்மையன் என்று உலகத்தாரால் சொல்லப்படும் சொல்இ இனம் காரணமாக உண்டாம்.


பொருள்

மாந்தர்க்குப் பொதுஉணர்வூ தம் மனம் காரணமாக உண்டாம்;. இவன் இத்தன்மையன் என்று உலகத்தாரால் சொல்லப்படும் சொல்இ இனம் காரணமாக உண்டாம்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

இயற்கையாய புலன் உணர்வூ மாத்திரத்திற்கு இனம் வேண்டாமையின்இ அதனை 'மனத்தானாம்' என்றும்இ செயற்கையாய விசேடவூணர்வூ பற்றி நல்லன் என்றாகத் தீயன் என்றாக நிகழும் சொற்குஇ இனம் வேண்டுதலின் அதனை 'இனத்தானாம்' என்றும் கூறினார். உவமை அளவை கொள்ளாது அத்திரிபும் மனத்தானாம் என்பாரை நோக்கி இதனான் அது மறுத்துக்கூறப்பட்டது.


குறள்-04 (மனத்துளது)

மனத்துளது போலக் காட்டி யொருவற்       

கினத்துள தாகு மறிவூ (04)                              


மனத்து உளது போல் காட்டி ஒருவற்கு

இனத்து உளது ஆகும் அறிவூ.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

அறிவூ- அவ்விசேட உணர்வூ; ஒருவற்கு மனத்து உளது போலக்காட்டி - ஒருவற்கு மனத்தின்கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி; இனத்து உளதாகும் - அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உளதாம்.


பொருள்

அவ்விசேட உணர்வூ ஒருவற்கு மனத்தின்கண்ணே உளதாவது போலத் அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உளதாம்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

விளக்கம்

மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியூம்இபின் நோக்கியவழிப் பயின்ற இனத்து உளதாயூம் இருத்தலின்இ காட்டி என இறந்தகாலத்தால் கூறினார். விசேட உணர்வூதானும் மனத்தின்கண்ணே அன்றே உளதாவது என்பார் நோக்கிஇ ஆண்டுப்புலப்படும் துணையே உள்ளதுஇ அதற்கு மூலம் இன்னதென்பது இதனால் கூறப்பட்டது.


குறள்-05 (மனந்தூய்மை)

மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு       

மினந்தூய்மை தூவா வரும் (05).                                


மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனம் தூய்மை தூவா வரும்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் - அவ்விசேட உணர்வூ புலப்படுதற்கு இடனாய மனம் தூயனாதல்தன்மையூம் செய்யூம் வினை தூயனாதல் தன்மையூமாகிய இரண்டும்;

இனம் தூய்மை தூவா வரும் - ஒருவற்கு இனம் தூயனாதல்தன்மை பற்றுக்கோடாக உளவாம்.


பொருள்

அவ்விசேட உணர்வூ புலப்படுதற்கு இடனாய மனம் தூயனாதல்தன்மையூம் செய்யூம் வினை தூயனாதல் தன்மையூமாகிய இரண்டும்; ஒருவற்கு இனம் தூயனாதல்தன்மை பற்றுக்கோடாக உளவாம்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

மனம் தூயனாதலாவதுஇ விசேடஉணர்வூ புலப்படுமாறு இயற்கையாய் அறியாமையி்ன் நீங்குதல். செய் வினை தூயனாதலாவதுஇ மொழி மெய்களால் செய்யூம் நல்வினை உடையனாதல். தூவென்பது அப்பொருட்டாதல்இ "தூவறத் துறந்தாரை" என்பதனானும் அறிக. ஒருவன் இனம் தூயனாகவே அதனோடு பயிற்சிவயத்தான் மனம் தூயனாய் அதன்கண் விசேடஉணர்வூ புலப்பட்டு அதனால் சொல்லும் செயலும் தூயனாம் என இதனால் இனத்துள்ளவாமாறு கூறப்ப்டது.



குறள்-06 (மனந்தூயார்க்கு)

மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க்கு       

கில்லைநன் றாகா வினை (06)                                      


மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு

இல்லை நன்று ஆகா வினை.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும் - மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்றாகும்;

இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - இனம் தூயர் ஆயினார்க்கு நன்றாகாத வினை யாதொன்றும் இல்லை.


பொருள்: 

மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்றாகும்; இனம் தூயர் ஆயினார்க்கு நன்றாகாத வினை யாதொன்றும் இல்லை.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………



விளக்கம்

காரியம் காரணத்தின் வேறுபடாமையின் எச்ச நன்றாகும் என்றும்இ நல்லினத்தோடு எண்ணிச் செயல்படுதலின் எல்லாவினையூம் நல்லவாம் என்றும் கூறினார்.



குறள்-07 (மனநலமன்னு)

மனநல மன்னுயிர்க் காக்க மினநல       

மெல்லாப் புகழுந் தரும் (07).                    


மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம் தரும் - நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும்; இனநலம் எல்லாப் புகழும் தரும் - இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையூம் கொடுக்கும்.


இதன்பொருள்

நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும்; இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையூம் கொடுக்கும்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

'மன்னுயிர்' என்றதுஇ ஈண்டு உயர்திணைமேல் நின்றது. 'தரும்' என்னும் இடவழுவமைதிச் சொல் முன்னும் கூட்டப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்சவூம்மை. மனம் நன்றாதல்தானே அறமாகலின்இ அதனை 'ஆக்கம் தரும்' என்றும்இ புகழ்கொடுத்தற்குரிய நல்லோர் தாமே இனமாகலின் 'இனநலம் எல்லாப் புகழும் தரும்' என்றும் கூறினார்இ மேல் மனநன்மைஇ இனநன்மை பற்றி வரும் என்பதனை உட்கொண்டு. அஃது இயல்பாகவே உடையார்க்கு அவ்வின் நன்மை வேண்டா என்பாரை நோக்கிஇ அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையூம் தரும் என அவர்க்கும் அதுவேண்டும் என்பது இவ்விரண்டுபாட்டானும் கூறப்பட்டது.


குறள்-08 (மனநலநன்கு)

மனநல நன்குடைய ராயினுஞ் சான்றௌர்க்       

கினநல மேமாப் புடைத்து (08)                                


மன நலம் நன்கு உடையர் ஆயினும் சான்றௌர்க்கு

இன நலம் ஏமாப்பு உடைத்து. 


பொருள் கொண்டு கூட்டும் முறை:

மன நலம் நன்கு உடையராயினும் - மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்; சான்றௌர்க்கு இன நலம் ஏமாப்பு உடைத்து - அமைந்தார்க்கு இனநன்மை அதற்கு வலிமையாதலை உடைத்து.


பொருள்

மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்; அமைந்தார்க்கு இனநன்மை அதற்கு வலிமையாதலை உடைத்து.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

விளக்கம்

'நன்கால்' என்னும் மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது. அந்நல்வினை உள்வழியூம்இ மனநலத்தை வளர்த்து வருதலின்இ அதற்கு ஏமாப்புடைத்து ஆயிற்று.

குறள்-09 (மனநலத்தின்)

மனநலத்தி னாகு மறுமைமற் றஃது      

மினநலத்தி னேமாப் புடைத்து (09).        


மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃது

இன நலத்தின் ஏமாப்பு உடைத்து.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

மன நலத்தின் மறுமை ஆகும் - ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்;

மற்று அஃதும் இன நலத்தின் ஏமாப்பு உடைத்து - அதற்கு அச் சிறப்புத்தானும் இனநன்மையான் வலி பெறுதலை உடைத்து.


பொருள்

ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்; அதற்கு அச் சிறப்புத்தானும் இனநன்மையான் வலி பெறுதலை உடைத்து.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

'மனநலத்தின் ஆகும் மறுமை' என்றதுஇ மறுமை பயப்பது மனநன்மைதானே பிறிதொன்றன்று என்னும் மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு. 'மற்று' வினைமாற்று. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. ஒரோவழித் தாமத குணத்தான் மனநலம் திரியினும்இ நல்லினம் ஒப்ப நிறுத்தி மறுமை பயப்பிக்கும் என நிலைபெறச்செயயூமாறு கூறப்பட்டது.

இவை ஐந்து பாட்டானும் சிற்றினம் சேராமையது சிறப்பு நல்லினம் சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறுஅறிக.



குறள்-10 (நல்லினத்தி)

நல்லினத்தி னூங்குத் துணையில்லை தீயினத்தி      

னல்லற் படுப்பதூஉ மில் (10).                                           


நல் இனத்தின் ஊங்குத் துணை இல்லை தீ இனத்தின்

அல்லல் படுப்பதூஉம் இல்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

நல்இனத்தின் ஊங்குத் துணையூம் இல்லை - ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையூம் இல்லை;

தீயினத்தின் ஊங்கு அல்லல் படுப்பதூஉம் இல் - தீய இனத்தின் மிக்க பகையூம் இல்லை.


பொருள்

ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையூம் இல்லை; தீய இனத்தின் மிக்க பகையூம் இல்லை.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. 'ஊங்கு' என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயருறாமல் காத்தலின் அதனைத் துணை என்றும்இ தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் பகையென்றும் கீறினார். அல்லற்படுப்பது என்பது ஏதுப்பெயர்.

இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டன.















          வினா – விடைக் கட்டமைப்புக்கள்



சிற்றினம் சேராமை எனும் அதிகாரத்தினை ஆதாரமாகக் கொண்டுஇ           

அ. இனத்தின் சேர்தலும் அதன் முக்கியத்துவமும் (1-4)

ஆ. சிறியோருடன் சேராமையூம்இ அதற்கான காரணமும்இ சிறப்பும் (5-7)

இ. நல்லினத்தின் நன்மையூம்இ சிற்றினத்தின் தீமையூம் (8-10)

ஈ. அதிகார வைப்பு முறை   என்பன எடுத்துக் கூறுமாற்றினை விளக்குக. (20 புள்ளி)





சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியூள்ளவற்றை ஆதாரமாகக் 

கொண்டு பின்வருவனவற்றைத்  தௌpவூபடுத்துக.

அ).சிறியவினம் பெரியோர்க்கு ஆகாது என்பது கூறப்படுவன.

ஆ).தரும் என அவர்க்கும் அதுவேண்டும் என்பது கூறப்படுவன.

இ).அதற்கு மூலம் இன்னதென்பது இதனால் கூறப்படுவன.

ஈ)இசிற்றினம் சேராமையது சிறப்பு நல்லினம் சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறுஅறிக.

உ).இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்படுவன. (20 புள்ளிகள்)






பொருட்பால் - அரசியல் - அதிகாரம் 05ஃ(47)


                அதிகாரம் - 05

            05.தெரிந்துசெயல்வகை 

அதிகார முன்னுரை

அஃதாவதுஇ அரசன் தான்செய்யூம் வினைகளை ஆராய்ந்து செய்யூந்திறம். அச்செயல் பெரியாரைத்துணைக்கோடல் பயனுடைத்தாய வழி அவரோடும் செய்யப்படுவதாகலின் இது சிற்றினஞ்சேராமையின்பின் வைக்கப்பட்டது.


குறள்-01 (அழிவதூஉ)

அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு      

மூதியமுஞ் சு+ழ்ந்து விடல் (01).                      


அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்

ஊதியமும் சு+ழ்ந்து விடல்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

அழிவதூஉம் - வினைசெய்யூங்கால் அப்பொழுது அதனால் அழிவதனையூம்;

ஆவதூஉம் - அழிந்தால் பின்ஆவதனையூம்; ஆகி வழிபயக்கும் ஊதியமும் - ஆய்நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையூம்; சு+ழ்ந்து செயல் - சீர்தூக்கி உறுவதாயிற் செய்க.


பொருள்

வினைசெய்யூங்கால் அப்பொழுது அதனால் அழிவதனையூம்; அழிந்தால் பின்ஆவதனையூம்; ஆய்நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையூம்; சீர்தூக்கி உறுவதாயிற் செய்க.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

உறுவதாவதுஇ நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்குஇ எதிர்வினும் அது வளர்ந்துவருதல். அழிவதின்மையின்இ எதிர்வின்கண் வரும் ஆக்கத்தை 'ஊதியம்' என்றார். எனவேஇ அவ்வூ+தியம் பெறின் நிகழ்வின்கண் அழிவதும் ஆவதும் தம்முள் ஒத்தாலும்இ ஒழிதற்பாற்று என்பது பெற்றாம். இரண்டு காலத்தினும் பயனுடைமை தெரிந்து செய்க என்பதாம்.


குறள்-02 (தெரிந்தவினத்)

தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்     

கரும்பொருள் யாதொன்று மில் (02)                                  


தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு

அரும் பொருள் யாது ஒன்றும் இல்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு - தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே செய்யத்தகும் வினையை ஆராய்ந்து பின் தாமேயூம் எண்ணிச்செய்து முடிக்கவல்ல அரசர்க்கு;

அரும்பொருள் யாதொன்றும் இல் - எய்துதற்கரிய பொருள் யாது ஒன்றும் இல்லை.


பொருள்

தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே செய்யத்தகும் வினையை ஆராய்ந்து பின் தாமேயூம் எண்ணிச்செய்து முடிக்கவல்ல அரசர்க்கு; எய்துதற்கரிய பொருள் யாது ஒன்றும் இல்லை.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

ஆராயப்படுவன எல்லாம் ஆராய்ந்துபோன 'இனம்' என்றுமாம். 'செய்வார்க்கு' என்றதனால்இ வினையென்னும் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. வினையாவது மேற்சேறன் முதல் வேறல் ஈறாய தொழில். பொருள்கட்கு ஏதுவாய அதனில் தவறாமையின்இ அரிய பொருள்களெல்லாம் எளிதின் எய்துவர் என்பதாம். அது செய்யூமாறும் கூறப்பட்டன.


குறள்-03 (ஆக்கங்கருதி)

ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை      

யூ+க்கா ரறிவூடை யார் (03                                      


ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை

ஊக்கார் அறிவூடையார்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை - மேல்எய்தக்கடவ ஊதியத்தினை நோக்கி முன் எய்திநின்ற முதல்தன்னையூம் இழத்தற்கு ஏதுவாய செய்வினையை;

அறிவூடையார் ஊக்கார் - அறிவூடையார் மேற்கொள்ளார்.


பொருள்

மேல்எய்தக்கடவ ஊதியத்தினை நோக்கி முன் எய்திநின்ற முதல்தன்னையூம் இழத்தற்கு ஏதுவாய செய்வினையை; அறிவூடையார் மேற்கொள்ளார்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

'கருதி' யென்னும் வினையெச்சம் 'இழக்கு'மென்னும் பெயரெச்சவினை கொண்டது. எச்சவூம்மை விகாரத்தாற் றொக்கது. ஆக்கமேயன்றி முதலையூ மிழக்கும் வினைகளாவனஇ வலியூம் காலமும் இடனுமறியாது பிறர் மண்கொள்வான்சென்று தம்மண்ணுமிழத்தல் போல்வன. முன்செய்துபோந்த வினையாயினும் என்பார்இ 'செய்வினை' யென்றார்.


குறள்-04 (தௌpவிலதனை)

தௌpவிலதனைத் தொடங்கா ரிளிவென்னு     

மேதப்பா டஞ்சு பவர் (04)                                       


தௌpவூ இலதனைத் தொடங்கார் இளிவூ என்னும்

ஏதப்பாடு அஞ்சுபவர் 


பொருள் கொண்டு கூட்டும் முறை:

தௌpவூ இலதனைத் தொடங்கார் - இனத்தொடும் தனித்தும் ஆராய்ந்து துணிதலில்லாத வினையைத் தொடங்கார்; இளிவூ என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் - தமக்கு இளிவரவூ என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார்.


பொருள்

இனத்தொடும் தனித்தும் ஆராய்ந்து துணிதலில்லாத வினையைத் தொடங்கார்; தமக்கு இளிவரவூ என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

தொடங்கின் இடையின் மடங்கலாகாமையின்இ 'தொடங்கார்' என்றார். இளிவரவூ அவ்வினையாற் பின் அழிவூ எய்தியவழி அதன்மேலும்இ அறிவூம் மானமும் இலர் என்று உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃதுண்டாதல் ஒருதலையாகலின்இ தௌpவூ உள்வழித் தொடங்குக என்பதாம்.


குறள்-05 (வகையறச்)

வகையறச் சு+ழா தெழுதல் பகைவரைப்     

பாத்திப் படுப்பதோ ராறு. (05)                     


வகை அறச் சு+ழாது எழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பது ஓர் ஆறு.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

வகை அறச் சு+ழாது எழுதல் - சென்றால் நிகழும் திறங்களையெல்லாம் முற்ற எண்ணாது சில எண்ணிய துணையானே அரசன் பகைவர் மேற் செல்லுதல்; பகைவரைப் பாத்திப் படுப்பது ஓர் ஆறு - அவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வதொரு நெறியாம்.


பொருள்

சென்றால் நிகழும் திறங்களையெல்லாம் முற்ற எண்ணாது சில எண்ணிய துணையானே அரசன் பகைவர் மேற் செல்லுதல்; அவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வதொரு நெறியாம்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

அத்திறங்களாவன: வலிஇ காலம்இ இடன் என்று இவற்றால் தனக்கும் பகைவர்க்கும் உளவாம் நிலைமைகளும்இ வினை தொடங்குமாறும்இ அதற்கு வரும் இடையூ+றுகளும்இ அவற்றை நீக்குமாறும்இ வெல்லுமாறும்இ அதனால் பெறும் பயனும் முதலாயின. அவற்றுள் சில எஞ்சினும் பகைவர்க்கு இடனாம்ஆகலான்இ முற்றுப்பெற எண்ணவேண்டும் என்பதாம்.

இவைமூன்று பாட்டானும் ஒழியத்தகும் வினையூம்இ ஒழியாவழிப்படும் இழுக்கும் கூறப்பட்டன.


குறள்-06 (செய்தக்க)

செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க   

செய்யாமை யானுங் கெடும். (06)                   


செய் தக்க அல்ல செயக் கெடும் செய் தக்க

செய்யாமையானும் கெடும்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

செய்தக்க அல்ல செயக் கெடும் - அரசன் தன் வினைகளுட் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தலாற் கெடும்; செய் தக்க செய்யாமையானும் கெடும் - இனிஇ அதனானே யன்றிச் செய்யத்தக்கனவற்றைச் செய்யாமைதன்னானுங் கெடும்.


பொருள்

அரசன் தன் வினைகளுட் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தலாற் கெடும்; இனிஇ அதனானே யன்றிச் செய்யத்தக்கனவற்றைச் செய்யாமைதன்னானுங் கெடும்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

செய்யத்தக்கன அல்லவாவன: பெரிய முயற்சியினவூம்இ செய்தாற் பயனில்லனவூம்இ அது சிறியதாயினவூம்இ ஐயமாயினவூம்இ பின் துயர் விளைப்பனவூம் என இவை. செய்யத்தக்கவாவன: அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல்இ செய்யாமைகளான்இ அறிவூ ஆண்மை பெருமை என்னும் மூவகையாற்றலுள் பொருள்இ படை என இருவகைத்தாய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான்இ இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின. இதனால்இ செய்வன செய்து ஒழிவன ஒழிக என இருவகையனவூம் உடன் கூறப்பட்டன.



குறள்-07 (எண்ணித்)

எண்ணித் துணிக கருமந் துணிந்தபி  

னெண்ணுவ மென்ப திழுக்கு. (07)          


எண்ணித் துணிக கருமம் துணிந்த பின்

எண்ணுவம் என்பது இழுக்கு.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

கருமம் எண்ணித் துணிக- செய்யத்தக்க கருமமும் முடிக்கும் உபாயத்தை எண்ணித் தொடங்குக்

துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு- தொடங்கி வைத்துப் பின் எண்ணக் கடவேம் என்றொழிதல் குற்றம்ஆதலான்.


பொருள்

செய்யத்தக்க கருமமும் முடிக்கும் உபாயத்தை எண்ணித் தொடங்குக் தொடங்கி வைத்துப் பின் எண்ணக் கடவேம் என்றொழிதல் குற்றம்ஆதலான்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

துணிவூபற்றி நிகழ்தலின்இ 'துணிவூ' எனப்பட்டது. சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. உபாயம் என்பது அவாய்நிலையான் வந்தது. அதுஇ கொடுத்தல்இ இன்சொற்சொல்லல்இ வேறுபடுத்தல்இ ஒறுத்தல் என நால்வகைப்படும். இவற்றை வடநூலார்இ தான சாம பேத தண்டம் என்ப. அவற்றுள்இ முன்னைய இரண்டும் ஐவகைய் ஏனைய மூவகைய. அவ்வகைகள் எல்லாம் ஈண்டு உரைப்பிற் பெருகும். இவ்வூபாயம் எல்லாம் எண்ணாது தொடங்கின் அவ்வினை மாற்றானால் விலக்கப்பட்டு முடியாமையானும்இ இடையின் ஒழிதலாகாமையானும்இ அரசன்துயர் உறுதலின் அவ்வெண்ணாமையை 'இழுக்கு' என்றார். செய்வனவற்றையூம்இ உபாயம் அறிந்தே தொடங்குக வென்பதாம்.



குறள்-08 (ஆற்றின்)

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று    

போற்றினும் பொத்துப் படும்.(08)                   


ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று

போற்றினும் பொத்துப் படும்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

ஆற்றின் வருந்தா வருத்தம் - முடியூம் உபாயத்தால் கருமத்தை முயலாத முயற்சி;

பலர் நின்று போற்றினும் பொத்துப்படும் - துணைவர் பலர்நின்று புரைபடாமல் காப்பினும் புரைபடும்.


பொருள்

முடியூம் உபாயத்தால் கருமத்தை முயலாத முயற்சி; துணைவர் பலர்நின்று புரைபடாமல் காப்பினும் புரைபடும்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

முடியூம் உபாயத்தான் முயறலாவதுஇ கொடுத்தலைப் பொருள் நசையாளன்கண்ணும்இ இன்சொல்லைச் செப்பமுடையான் கண்ணும்இ மடியாளன்இ பிறரோடு பொருதுநொந்தவன் என இவர்கண்ணும்இ வேறுபடுத்தலைத் துணைப்படையாளன்இ தன்பகுதியோடு பொருந்தான் என இவர்கண்ணும்இ ஒறுத்தலை இவற்றின் வாராவழி இவர்கண்ணும்இ தேறப்படாத கீழ்மகன்கண்ணும் செய்து வெல்லுமாற்றான் முயறல். புரைபடுதல்- கருதிய நன்மையன்றிக் கருதாத தீமைபயத்தல். உபாயத்தது சிறப்புக் கூறியவாறு.



குறள்-09 (நன்றாற்றலுள்)

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்     

பண்பறிந் தாற்றாக் கடை.                         


நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு அவர் அவர்

பண்பு அறிந்து ஆற்றாக் கடை.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு - வேற்று வேந்தர்மாட்டு நன்றான உபாயஞ் செய்தற்கண்ணுங் குற்றமுண்டாம்;  அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக் கடை - அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின்.


பொருள்

வேற்று வேந்தர்மாட்டு நன்றான உபாயஞ் செய்தற்கண்ணுங் குற்றமுண்டாம்;  அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

விளக்கம்

நன்றான உபாயமாவதுஇ கொடுத்தலும் இன்சொற்சொல்லுதலும் ஆம்இ அவை யாவர்கண்ணும் இனியவாதற் சிறப்புடைமையின். உம்மை சிறப்பும்மை. அவற்றை 'அவரவர் பண்பறிந்துஆற்றா'மையாவதுஇ அவற்றிற்கு உரியரல்லாதார்கண்ணே செய்தல். 'தவறு' அவ்வினை முடியாமை.


குறள்-10 (எள்ளாத)

எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு     

கொள்ளாத கொள்ளா வூலகு                                           


எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் தம்மொடு

கொள்ளாத கொள்ளாது உலகு.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது - அரசர் வினைமுடித்தற்பொருட்டுத் தந்நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வாராயின் உலகந் தம்மை இகழாநிற்கும்;

எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் - ஆகலான் அஃது இகழா உபாயங்களை நாடிச்செய்க.


பொருள்

அரசர் வினைமுடித்தற்பொருட்டுத் தந்நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வாராயின் உலகந் தம்மை இகழாநிற்கும்; ஆகலான் அஃது இகழா உபாயங்களை நாடிச்செய்க.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

'தம்' என்பது ஆகுபெயர். தந்நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்தலாவது: தாம் வலியராய் வைத்து மெலிந்தார்க்குரிய கொடுத்தன் முதலிய மூன்றனைச் செய்தலும்இ மெலியராய் வைத்து வலியார்க்குரிய ஒறுத்தலைச் செய்தலுமாம். இவையிரண்டும் அறிவிலார் செய்வனவாகலின்இ 'உலகங்கொள்ளா'தென்றார். அஃது எள்ளாதன செய்தலாவதுஇ அவற்றைத் தத்தம் வன்மை மென்மைகட்கு ஏற்பச்செய்தல். மேல் (பார்க்க:குறள்468) இடவகையான் உரிமைகூறிய உபாயங்கட்கு வினைமுதல் வகையான் உரிமைகூறியவாறு.

இவை நான்கு பாட்டானும் செய்வனவற்றிற்கு உபாயமும் அதனது உரிமையூங் கூறப்பட்டன.











           வினா – விடைக் கட்டமைப்புக்கள்



தெரிந்துசெயல்வகை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியூள்ளவற்றை

ஆதாரமாகக்  கொண்டு பின்வருவனவற்றைத்  தௌpவூபடுத்துக. 

(அ) ஒழியத்தகும் வினையூம்இ ஒழியாவழிப்படும் இழுக்கும் கூறப்பவன.

ஆ).அரிய பொருள்களெல்லாம் எளிதின் எய்துவர் என்பதாம். அது செய்யூமாறும் கூறப்படுவன.

இ).செய்வன செய்து ஒழிவன ஒழிக என இருவகையனவூம் உடன் கூறப்படுவன.

ஈ).செய்வனவற்றிற்கு உபாயமும் அதனது உரிமையூங் கூறப்படுவன.

                  (20 புள்ளிகள்)




பொருட்பால் - அரசியல் - அதிகாரம் 06ஃ(48)


                அதிகாரம் - 06

              06. வலியறிதல்

அதிகார முன்னுரை

அஃதாவதுஇ அவ்வூபாயங்களுள் ஒறுத்தல் குறித்த அரசன் நால்வகை வலியையூம் அளந்தறிதல். அதிகார முறைமையூம் இதனானே விளங்கும்.


குறள்-01 (வினைவலியூந்)

வினைவலியூந் தன்வலியூ மாற்றான் வலியூந் 

துணைவலியூந் தூக்கிச் செயல். (01) 


வினை வலியூம் தன் வலியூம் மாற்றான் வலியூம்

துணை வலியூம் தூக்கிச் செயல்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

வினை வலியூம் - தான் செய்யக் கருதிய வினைவலியையூம்; தன் வலியூம் - அதனைச்செய்து முடிக்கும் தன் வலியையூம்; மாற்றான் வலியூம் - அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையூம்; துணை வலியையூம் - இருவர்க்கும் தூணையாவார் வலியையூம்; தூக்கிச் செயல் - சீர்தூக்கித் தன் வலி மிகுமாயின் அவ்வினையைச் செய்க.


பொருள்

தான் செய்யக் கருதிய வினைவலியையூம்; தன் வலியூம் - அதனைச்செய்து முடிக்கும் அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையூம்;இருவர்க்கும் தூணையாவார் வலியையூம்; சீர்தூக்கித் தன் வலி மிகுமாயின் அவ்வினையைச் செய்க.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

இந்நால் வகை வலியூள் 'வினைவலி' அரண்முற்றலும்இ கோடலும் முதலிய தொழிலானும்இ ஏனைய மூவகை ஆற்றலானும் கூறுபடுத்துத் தூக்கப்படும். 'தன்வலி' மிகவின்கட் செய்க என்ற விதியால்இ தோற்றல் ஒருதலையாய குறைவின்கண்ணும்இ வேறல் ஐயமாய ஒப்பின்கண்ணும் ஒழிக என்பது பெற்றாம்.


குறள்-02 (ஒல்வதறிந்து)

ஒல்வதறிவ தறிந்ததன் கட்டங்கிச் 

செல்வார்க்குச் செல்லாத தில். (02)


ஒல்வது அறிந்து அதன்கண் தங்கிச்

செல்வார்க்குச் செல்லாதது இல்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

ஒல்வது அறிவது- அறிந்து தமக்கியலும் வினையையூம் அதற்கறிய வேண்டுவதாய வலியையூம் அறிந்து அதன்கண் தங்கிச் செல்வார்க்கு - எப்பொழுதும் மன மொழி மெய்களை அதன்கண் வைத்துப் பகைமேற் செல்லும் அரசர்க்கு; செல்லாதது இல் - முடியாத பொருள் இல்லை.


பொருள்

அறிந்து தமக்கியலும் வினையையூம் அதற்கறிய வேண்டுவதாய வலியையூம் அறிந்து அதன்கண் எப்பொழுதும் மன மொழி மெய்களை அதன்கண் வைத்துப் பகைமேற் செல்லும் அரசர்க்கு; முடியாத பொருள் இல்லை.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

'ஒல்வது' எனவே வினைவலி முதலாய மூன்றும் அடங்குதலின்இ ஈண்டு 'அறிவது' என்றது துணைவலியே யாயிற்று. எல்லாப் பொருளும் எய்துவர் என்பதாம்.

இவை இரண்டு பாட்டானும் வலியின் பகுதியூம் அஃதறிந்து மேற்செல்வார் எய்தும் பயனும் கூறப்பட்டன.



குறள்-03 (உடைத்தம்)

உடைத்தம் வலியறியா ஷரூக்கத்தி னூக்கி 

'யிடைக்கண் முரிந்தார் பலர். (03)


உடைத்தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

உடைத் தம் வலி அறியார் - கருத்தாவாதலை உடைய தம் வலியின் அளவூ அறியாதே; ஊக்கத்தின் ஊக்கி - மன எழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கி; இடைக்கண் முரிந்தார் பலர் - அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப்பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர்.


பொருள்

கருத்தாவாதலை உடைய தம் வலியின் அளவூ அறியாதே மன எழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கி; அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப்பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

உடைய என்பதுஇ அவாய் நின்றமையின்இ செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. மூவகை ஆற்றலுள்ளுஞ் சிறப்புடைய அறிவூடையோர் சிலராதலின்இ 'முரிந்தார் பலர்' என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக என்பது எஞ்சிநின்றது.


குறள்:-04 (அமைந்தாங்)

அமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னை 

வியந்தான் விரைந்து கெடும் (04). 


அமைந்து ஆங்கு ஒழுகான் அளவூ அறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

ஆங்கு அமைந்து ஒழுகான் - அயல் வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதுஞ் செய்யாது; அளவூ அறியான் - தன் வலியளவூ அறிவதுஞ்செய்யாது; தன்னை வியந்தான் - தன்னை வியந்து அவரோடு பகைத்த அரசன்; விரைந்து கெடும் - விரையக் கெடும்.


பொருள்

அயல் வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதுஞ் செய்யாது; தன் வலியளவூ அறிவதுஞ்செய்யாது; தன்னை தன்னை வியந்து அவரோடு பகைத்த அரசன்; விரையக் கெடும்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

காரியத்தைக் காரணமாக உபசரித்து 'வியந்தான்' என்றார். விரைய என்பது திரிந்து நின்றது. நட்பாய் ஒழுகுதல்இ வலியறிந்து பகைத்தல் என்னும் இரண்டனுள் ஒன்றன்றே அயல்வேந்தரோடு செய்ற்பாலது; இவையன்றித் தான் மெலியனாய் வைத்து அவரோடு பகைகொண்டானுக்கு ஒருபொழுதும் நிலையின்மையின்இ 'விரைந்துகெடும்' என்றார்.

இவை இரண்டுபாட்டானும் தன் வலியறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.



குறள்-05 (பீலிபெய்)

பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ் 

சால மிகுத்துப் பெயின் (05).


பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

பீலி பெய் சாகாடும் அச்சு இறும்- பீலி ஏற்றிய சகடமும் அச்சு முறியூம்; அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்- அப் பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின்.


பொருள்

பீலி ஏற்றிய சகடமும் அச்சு முறியூம்; ஏனென்றால் அப் பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின் அச்சு முறியூம்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


விளக்கம்

உம்மை சாகாட்டது வலிச்சிறப்பேயன்றிப் பீலியது நொய்ம்மைச் சிறப்புத் தோன்ற நின்றது. 'இறும்' என்னும் சினைவினை முதன்மேன் நின்றது. எளியர் என்று பலரோடு பகைகொள்வான்இ தான் வலியனே ஆயினும் அவர் தொக்கவழி வலியழியூம் என்னும் பொருள் தோன்ற நின்றமையின்இ இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம்; இதனை நுவலா நுவற்சி என்பாரும்இ ஒட்டு என்பாரும் உளர். ஒருவன் தொகுவார் பலரோடு பகைகொள்ளற்க என்றமையின்இ இதனான் மாற்றான் வலியூம் அவன் துணைவலியூம் அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.


குறள்-06 (நுனிக்கொம்பர்)

நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி 

னுயிர்க்கிறுதி யாகி விடும். (06)


நுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்

உயிர்க்கு இறுதி ஆகி விடும்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

கொம்பர் நுனி ஏறினார் அஃது இறந்து ஊக்கின் - ஒரு மரக்கோட்டினது நுனிக்கண்ணே ஏறிநின்றார் தம் ஊக்கத்தால் அவ்வளவினைக் கடந்து மேலும் ஏற ஊக்குவராயின்; உயிர்க்கு இறுதி ஆகி விடும் - அவ்வூ+க்கம் அவர் உயிர்க்கு இறுதியாய் முடியூம்.


பொருள்

ஒரு மரக்கோட்டினது நுனிக்கண்ணே ஏறிநின்றார் தம் ஊக்கத்தால் அவ்வளவினைக் கடந்து மேலும் ஏற ஊக்குவராயின்; அவ்வூ+க்கம் அவர் உயிர்க்கு இறுதியாய் முடியூம்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

'நுனிக்கொம்பர்' என்பது கடைக்கண் என்பது போலப் பின்முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை. பன்மை அறிவின்மைபற்றி இழித்தற்கண் வந்தது. இறுதிக்கு ஏதுவாவதனை 'இறுதி' என்றார். பகைமேற் செல்வான் தொடங்கித் தன்னாற் செல்லலாம் அளவூஞ் சென்றுநின்றான்இ பின் அவ்வளவின் நில்லாது மனவெழுச்சியான் மேலுஞ் செல்லுமாயின்இ அவ்வெழுச்சி வினைமுடிவிற்கு ஏதுவாகாது அவன் உயிர்முடிவிற்கு ஏதுவாம் என்னும் பொருள்தோன்ற நின்றமையின்இ இதுவூம் மேலை அலங்காரம்.


அளவறிந்து நிற்றல் வேண்டும் என்றமையின்இ இதனால் வினைவலி அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.



குறள்-07 (ஆற்றின்)

ஆற்றி னளவறிந் தீக வதுபொருள் 

போற்றி வழங்கு நெறி. (07) 


ஆற்றின் அளவூ அறிந்து ஈக அது பொருள்

போற்றி வழங்கும் நெறி.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

ஆற்றின் அளவூ அறிந்து ஈக - ஈயூம் நெறியானே தமக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக் அது பொருள் போற்றி வழங்கும் நெறி - அங்ஙூனம் ஈதல் பொருளைப் பேணிக்கொண்டு ஒழுகும் நெறியாம்.


பொருள்

ஈயூம் நெறியானே தமக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக அங்ஙூனம் ஈதல் பொருளைப் பேணிக்கொண்டு ஒழுகும் நெறியாம்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………



உரைவிளக்கம்

ஈயூம் நெறி மேல் இறைமாட்சியூள் "வகுத்தலும் வல்லதரசு" (பார்க்க: 385-ஆம் குறளுரை) என்புழி உரைத்தாம். எல்லைக்கேற்ப ஈதலாவதுஇ ஒன்றான எல்லையை நான்கு கூறாக்கிஇ அவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கிஇ ஒன்றனை மேல் இடர்வந்துழி அது நீக்குதற்பொருட்டு வைப்பாக்கிஇ நின்றவொன்றனை ஈதல்; பிறரும் "வருவாயூட் கால்வழங்கி வாழ்தல்" (பார்க்க: திரிகடுகம்-21) என்றார். பேணிக்கொண்டொழுகுதல் ஒருவரோடு நட்பிலாத அதனைத் தம்மோடு நட்பு உண்டாக்கிக் கொண்டு ஒழுகுதல். முதலிற் செலவூ சுருங்கிற் பொருள் ஒருகாலும் நீங்காது என்பதாம்.


குறள்-08 (ஆகாறளவூ)

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை ஆகு 

போகா றகலாக் கடை. (08)


ஆறு அளவூ இட்டிது ஆயினும் கேடு இல்லை

போகு ஆறு அகலாக் கடை.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

ஆகு ஆறு அளவூ இட்டிதாயினும் கேடு இல்லை - அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவூ சிறிதாயிற்றானும் அதனாற் கேடில்லையாம்; போகு ஆறு அகலாக் கடை - போகின்ற நெறியளவூ அதனிற் பெருகாதாயின்.


பொருள்

அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவூ சிறிதாயிற்றானும் அதனாற் கேடுஇல்லையாம் போகின்ற நெறியளவூ அதனிற் பெருகாதாயின்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

'இட்டிது' எனவூம்இ 'அகலாது' எனவூம் வந்த பண்பின் தொழில்கள் பொருள்மேல் நின்றன. பொருள் என்பது அதிகாரத்தான் வருவித்துஇ அளவூ என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவூம் தம்முள் ஒப்பினும் கேடில்லை என்பதாம்.



குறள்-09 (அளவறிந்து)

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யூளபோல 

வில்லாகித் தோன்றாக் கெடும். (09)


அளவூ அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல

இல்லாகித் தோன்றாக் கெடும்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

அளவூ அறிந்து வாழாதான் வாழ்க்கை - தனக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப வாழமாட்டாதான் வாழ்க்கைகள்; உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் - உள்ளனபோலத் தோன்றிஇ மெய்ம்மையான் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும்.


பொருள்

தனக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப வாழமாட்டாதான் வாழ்க்கைகள்; உள்ளனபோலத் தோன்றிஇ மெய்ம்மையான் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

அவ்வெல்லைக்கேற்ப வாழ்தலாவதுஇ அதனிற் சுருக்கக் கூடாதாயின் ஒப்பவாயினும் ஈத்தும் துய்த்தும் வாழ்தல். தொடக்கத்திற் கேடு வெளிப்படாமையின்இ 'உளபோல'இ 'தோன்றா' என்றார். முதலிற் செலவூ மிக்கால் வரும் ஏதங் (பார்க்க: நல்வழி-25) கூறியவாறு.



குறள்-10 (உளவரை)

உளவரை தூக்காத வொப்புர வாண்மை  

வளவரை வல்லைக் கெடும். (10)


உள வரை தூக்காத ஒப்புரவூ ஆண்மை

வள வரை வல்லைக் கெடும்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

உள வரை தூக்காத ஒப்புரவூ ஆண்மை - தனக்குள்ள அளவூ தூக்காமைக்கு ஏதுவாய ஒப்புரவாண்மையால்; வள வரை வல்லைக் கெடும் - ஒருவன் செல்வத்தின் எல்லை விரையக் கெடும்.


பொருள்

தனக்குள்ள அளவூ தூக்காமைக்கு ஏதுவாய ஒப்புறவாமையால்ஒருவன் செல்வத்தின் எல்லை விரையக் கெடும்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

உரைவிளக்கம்

ஒப்புரவே ஆயினும் மிகலாகாது என்றமையான் இதுவூமது.(479 ஆம் குறளிற் கூறியதுபோன்று)

இவை நான்கு பாட்டானும் மூவகை ஆற்றலுள் பெருமையின் பகுதியாய பொருள்வலியறிதல் சிறப்பு நோக்கி வகுத்துக் கூறப்பட்டது.











           வினா – விடைக் கட்டமைப்புக்கள்



வலியறிதல் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு 

அ. வலியறிதலிக் பகுதிகளும் அவற்றை அறிந்து போருக்குச் செல்வோரின் பயனும் (1-2)

ஆ. தன்விமை அறியாததால் ஏற்படும் இழுக்கு (3-4)

இ. பகைவனதும் துணைவனதும் வினை வலிமை என்பனவற்றை அறியாததன் இழுக்கு (5-6)

ஈ. பொருட செல்வத்தின் வலியறிதல் (7-10)

உ. அதிகார வைப்பு முறை  என்பனவற்றை விளக்குக.

            (20 புள்ளிகள்)





வலியறிதல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியூள்ளவற்றை ஆதாரமாகக் 

கொண்டு பின்வருவனவற்றைத்  தௌpவூபடுத்துக.

அ).வலியின் பகுதியூம் அஃதறிந்து மேற்செல்வார் எய்தும் பயனும் கூறப்படுவன.

ஆ).தன் வலியறியாவழிப்படும் இழுக்குக் கூறப்படுவன.

இ).மூவகை ஆற்றலுள் பெருமையின் பகுதியாய பொருள்வலியறிதல் சிறப்பு நோக்கி வகுத்துக் கூறப்படுவன .


(20 புள்ளிகள்)






பொருட்பால் - அரசியல் - அதிகாரம் 07ஃ(49)


                அதிகாரம் - 07

             07. காலமறிதல்

அதிகார முன்னுரை:

அஃதாவதுஇ வலியான் மிகுதியூடையனாய்ப் பகைமேற் சேறலுற்ற அரசன் அச்செலவிற்கு ஏற்ற காலத்தினை அறிதல். அதிகார முறைமையூம் இதனானே விளங்கும்.


குறள்-01 (பகல்வெல்லுங்)

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும் 

'வேந்தர்க்கு வேண்டும் பொழுது.(01)


பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்

'வேந்தர்க்கு வேண்டும் பொழுது.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

கூகையைக் காக்கை பகல்வெல்லும் - தன்னின் வலிதாய கூகையைக் காக்கை பகற்பொழுதின்கண் வெல்லாநிற்கும்; இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது - அதுபோலப் பகைவரது இகலை வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கேற்ற காலம் இன்றியமையாதது.


பொருள்

தன்னின் வலிதாய கூகையைக் காக்கை பகற்பொழுதின்கண் வெல்லாநிற்கும்; இகல் வெல்லும் அதுபோலப் பகைவரது இகலை வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கேற்ற காலம் இன்றியமையாதது.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

எடுத்துக்காட்டு உவமை. காலமல்லாவழி வலியாற் பயனில்லையென்பது விளக்கிநின்றது. இனிக் காலமாவதுஇ வெம்மையூம் குளிர்ச்சியூம் தம்முள் ஒத்து நோய்செய்யாதுஇ தண்ணீரும் உணவூம் உடைத்தாய்த் தானை வருந்தாது செல்லும் இயல்பினதாம். இதனாற் காலத்தது சிறப்புக் கூறப்பட்டது.


குறள்-02 (பருவத்தோ)

பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத் 

தீராமை யார்க்குங் கயிறு. (02) 


பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்கும் கயிறு.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் - அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல்; திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு - ஒருவர்கண்ணும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமற் பிணிக்கும் கயிறாம்.


பொருள்

அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல்; திருவினைத் ஒருவர்கண்ணும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமற் பிணிக்கும் கயிறாம்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

காலத்தோடு பொருந்துதல் காலம் தப்பாமல் செய்தல். 'தீராமை' என்றதனால்இ தீர்தன்மாலையது என்பது பெற்றாம். வினை வாய்த்துவருதலான்இ அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது என்பதாம்.



குறள்-03 (அருவினை)

அருவினை யென்ப வூளவோ கருவியாற் 

கால மறிந்து செயின். (03)


அருவினை என்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

அருவினை என்ப உளவோ- அரசரால் செய்தற்கு அரிய வினைகளென்று சொல்லப்படுவன உளவோ; கருவியான் காலம் அறிந்து செயின்- அவற்றை முடித்தற்காம் கருவிகளுடனே செய்தற்காம் காலம் அறிந்து செய்வாராயின்.


பொருள்

அரசரால் செய்தற்கு அரிய வினைகளென்று சொல்லப்படுவன உளவோ; அவற்றை முடித்தற்காம் கருவிகளுடனே செய்தற்காம் காலம் அறிந்து செய்வாராயின்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

கருவிகளாவன: மூவகையாற்றலும்இ நால்வகை உபாயங்களும்ஆம்; அவை உளவாயவழியூம் காலம் வேண்டும் என்பது அறிவித்தற்குக் 'கருவியான்' என்றார். எல்லாவினையூம் எளிதில் முடியூம் என்பதாம்.



குறள்-04 (ஞாலங்)

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்  

கருதி யிடத்தாற் செயின். (04)


ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தான் செயின்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

ஞாலம் கருதினும் கைகூடும் - ஒருவன் ஞாலம் முழுதும் தானே ஆளக் கருதினான் ஆயினும்இ அஃது அவன் கையகத்ததாம்; காலம் கருதி இடத்தான் செயின் - அதற்குச் செய்யூம் வினையைக் காலமறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின்.


பொருள்

ஒருவன் ஞாலம் முழுதும் தானே ஆளக் கருதினான் ஆயினும்இ அஃது அவன் கையகத்ததாம்; காலம் அதற்குச் செய்யூம் வினையைக் காலமறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

இடத்தான் என்பதற்குஇ மேற் கருவியான் என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க. கைகூடாதனவூம்இ கைகூடும் என்பதாம். :

இவைமூன்று பாட்டானும் காலமறிதற் பயன் கூறப்பட்டது.



குறள்-05 (காலங்கருதி)

காலங் கருதி யிருப்பர் கலங்காது 

'ஞாலங் கருது பவர். (05)


காலம் கருதி இருப்பர் கலங்காது

'ஞாலம் கருதுபவர்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

கலங்காது ஞாலம் கருதுபவர்- தப்பாது ஞாலமெல்லாம் கொள்ளக்கருதும் அரசர்; காலம் கருதி இருப்பர்- தம் வலிமிகுமாயினும்இ அது கருதாதுஇ அதற்கேற்ற காலத்தையே கருதி அது வருந்துணையூம் பகைமேற் செல்லார்.



பொருள்

தப்பாது ஞாலமெல்லாம் கொள்ளக்கருதும் அரசர்; தம் வலிமிகுமாயினும்இ அது கருதாதுஇ அதற்கேற்ற காலத்தையே கருதி அது வருந்துணையூம் பகைமேற் செல்லார்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

'தப்பாமை' கருதியவழியே கொள்ளுதல். வலிமிகுதி 'காலங் கருதி' என்பதனாற் பெற்றாம். அது கருதாது செல்லின்இ இருவகைப் பெருமையூம் தேய்ந்து வருத்தமும் உறுவாராகலின்இ 'இருப்பர்' என்றார். இருத்தலாவதுஇ நட்பாக்கல்இ பகையாக்கல்இ மேற்சேறல்இ இருத்தல்இ பிரிதல்இ கூட்டல் என்னும் அறுவகைக் குணங்களுள் மேற்செலவிற்கு மாறாயது. இதனால் காலம் வாராவழிச் செய்வது கூறப்பட்டது.


குறள்-06 (ஊக்கமுடையான்)

ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர் 

தாக்கற்குப் பேருந் தகைத்து. (06)’


ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

ஊக்கம் உடையான் ஒடுக்கம்- வலிமிகுதி உடைய அரசன் பகைமேற் செலலாது காலம் பார்த்து இருக்கின்ற இருப்பு; பொரு தகர் தாக்கற்குப் பேரும் தகைத்து- பொருகின்ற தகர்இ தன்பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால்வாங்குந் தன்மைத்து.


பொருள்

வலிமிகுதி உடைய அரசன் பகைமேற் செலலாது காலம் பார்த்து இருக்கின்ற இருப்பு பொருகின்ற தகர்இ தன்பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால்வாங்குந் தன்மைத்து.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

உவமைக்கண் 'தாக்கற்கு' என்றதனால்இ பொருளினும் வென்றி எய்தற்பொருட்டு என்பது கொள்க. இதனால் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட்டது.


குறள்-07 (பொள்ளென)

பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த் 

துள்வேர்ப்ப ரொள்ளி யவர். (07)


பொள் என ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து

உள் வேர்ப்பர் ஒள்ளியவர்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

ஒள்ளியவர்- அறிவூடைய அரசர்; ஆங்கே பொள் எனப் புறம் வேரார்- பகைவர் மிகை செய்தபொழுதே அவர் அறியப் புறத்து வெகுளார்; காலம் பார்த்து உள் வேர்ப்பர்- தாம் அவரை வெல்லுதற்கு ஏற்ற காலத்தினை அறிந்து அது வரும் துணையூம் உள்ளே வெகுள்வர்.


பொருள்

அறிவூடைய அரசர்; ஆங்கே பொள் பகைவர் மிகை செய்தபொழுதே அவர் அறியப் புறத்து வெகுளார்; தாம் அவரை வெல்லுதற்கு ஏற்ற காலத்தினை அறிந்து அது வரும் துணையூம் உள்ளே வெகுள்வர்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

'பொள்ளென' என்பது குறிப்புமொழி. 'வேரார்'இ 'வேர்ப்பர்' எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார். அறிய வெகுண்டுழித் தம்மைக் காப்பார் ஆகலிற் 'புறம் வேரார்' என்றும்இ வெகுளி ஒழிந்துழிப் பின்னும் மிகைசெய்யாமல் அடக்குதல் கூடாமையின் 'உள்வேர்ப்பர்' என்றும் கூறினார்.


குறள்-08 (செறுநரைக்)

செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை 

காணிற் கிழக்காந் தலை. (08)


செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

செறுநரைக் காணின் சுமக்க- தாம் வெல்லக்கருதிய அரசர்இ பகைவர்க்கு இறுதிக்காலம் வருந்துணையூம் அவரைக்கண்டால் பணிக் இறுவரை காணின் தலை கிழக்காம்- பணியவேஇ அக்காலம் வந்திறும்வழி அவர் தகைவின்றி இறுவர்.


பொருள்

தாம் வெல்லக்கருதிய அரசர்இ பகைவர்க்கு இறுதிக்காலம் வருந்துணையூம் அவரைக்கண்டால் பணிக் பணியவேஇ அக்காலம் வந்திறும்வழி அவர் தகைவின்றி இறுவர்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

பகைமை ஒழியூம் வரை மிகவூம் தாழ்க என்பார் 'சுமக்க' என்றும்இ அங்ஙூனம் தாழவே அவர் தம்மைக் காத்தல்இகழ்வார்இ ஆகலின் தப்பாமற் கெடுவர் என்பார்இ அவர் தலைஇ கீழாம் என்றும் கூறினார். தலைமேற்கொண்டதொரு பொருளைத் தள்ளுங்கால் அது தன் தலைகீழாக விழுமாகலின்இ அவ்வியல்பு பெறப்பட்டது.

இவையிரண்டு பாட்டானும் இருக்கும்வழிப் பகைமை தோன்றமல் இருக்க என்பது கூறப்பட்டது.


குறள்-09 (எய்தற்கு)

எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே 

செய்தற் கரிய செயல். (09)


எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே 

செய்தற்கு அரிய செயல்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

எய்தற்கு அரியது இயைந்தக்கால்- பகையை வெல்லக் கருதும் அரசர் தம்மால் எய்துதற்குஅரிய காலம் வந்து கூடியக்கால்; அந்நிலையே செய்தற்கு அரிய செயல்- அது கழிவதற்கு முன்பேஇ அது கூடாவழித் தம்மால் செய்தற்கு அரிய வினைகளைச் செய்க.


பொருள்

பகையை வெல்லக் கருதும் அரசர் தம்மால் எய்துதற்குஅரிய காலம் வந்து கூடியக்கால்; அந்நிலையே அது கழிவதற்கு முன்பேஇ அது கூடாவழித் தம்மால் செய்தற்கு அரிய வினைகளைச் செய்க.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………




உரைவிளக்கம்

ஆற்றல் முதலியவற்றால் செய்துகொள்ளப்படாமையின் 'எய்தற்கரிய' என்றும்இ அது தானே வந்துஇயைதல் அரிதாகலின்இ 'இயைந்தக்கால்' என்றும்இ இயைந்தவழிப் பின் நில்லாது ஒடுதலின்இ 'அந்நிலையே' என்றும்இ அது பெறாவழிச் செய்யப்படாமையின் 'செய்தற்கரிய' என்றும் கூறினார்.

இதனால் காலம் வந்துழி விரைந்து செய்க என்பது கூறப்பட்டது.


குறள்-10 (கொக்கொக்க)

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் 

குத்தொக்க சீர்த்த விடத்து. (10) 


கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்

குத்து ஒக்க சீர்த்த இடத்து.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க- ஒருவினைமேல் செல்லாது இருக்கும் காலத்துக் கொக்கு இருக்குமாறுபோல இருக்க் மற்றுச் சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க- மற்றைச் செல்லும் காலம் வாய்த்தவழி அது செய்து முடிக்குமாறுபோலத் தப்பாமல் செய்து முடிக்க.


பொருள்

ஒருவினைமேல் செல்லாது இருக்கும் காலத்துக் கொக்கு இருக்குமாறுபோல இருக்க் மற்றைச் செல்லும் காலம் வாய்த்தவழி அது செய்து முடிக்குமாறுபோலத் தப்பாமல் செய்து முடிக்க.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

மீன் கோடற்கு இருக்கும்வழிஇ அது வருந்துணையூம் முன்னறிந்து தப்பாமற்பொருட்டு உயிர் இல்லது போன்று இருக்கும் ஆகலானும்இ எய்தியவழிப் பின்தப்புவதற்கு முன்பே விரைந்து குத்துமாகலானும்இ இருப்பிற்கும் செயலிற்கும் கொக்கு உவமையாயிற்று. 'கொக்கொக்க' என்றார் ஆயினும் அது கூம்புமாறு போலக் கூம்புக என்றும்இ 'குத்தொக்க' என்றாராயினும்இ அது குத்துமாறு போலக் குத்துகவென்றும் உரைக்கப்படும்இ இது தொழிலுவமம் ஆகலின். உவமை முகத்தால் இருப்பிற்கும் செயலிற்கும் இலக்கணம் கூறியவாறாயிற்று.











          வினா – விடைக் கட்டமைப்புக்கள்



காலமறிதல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியூள்ளவற்றை ஆதாரமாகக் 

கொண்டு பின்வருவனவற்றைத்  தௌpவூபடுத்துக. 

(அ).காலத்தது சிறப்புக் கூறப்படுவன.

ஆ).காலமறிதற் பயன் கூறப்படுவன.

இ).காலம் வாராவழிச் செய்வது கூறப்படுவன.

ஈ).அவ்விருப்பின் சிறப்புக் கூறப்படுவன

உ).இருக்கும்வழிப் பகைமை தோன்றமல் இருக்க என்பது கூறப்படுவன.

ஊ).உவமை முகத்தால் இருப்பிற்கும் செயலிற்கும் இலக்கணம் கூறியூள்ளமை

                 (20 புள்ளிகள்)


பொருட்பால் - அரசியல் - அதிகாரம் 08ஃ(50)


                அதிகாரம் - 08


            08. இடனறிதல்

அதிகாரமுன்னுரை: 

அஃதாவதுஇ வலியூம் காலமும் அறிந்து பகைமேற் செல்வான் தான் வெல்லுதற்கு ஏற்ற நிலத்தினை அறிதல். அதிகார முறைமையூம் இதனானே விளங்கும்.


குறள்-01 (தொடங்கற்க)

'தொடங்கற்க வெவ்வினையூ மௌ;ளற்க முற்று' 

'மிடங்கண்ட பின்னல் லது. (01)


தொடங்கற்க எவ் வினையூம் எள்ளற்க முற்றும்

'இடம் கண்டபின் அல்லது.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

முற்றும் இடம் கண்டபின் அல்லது - பகைவரை முற்றுதற்கு ஆவதோர் இடம் பெற்றபின் அல்லது; எவ்வினையூம் தொடங்கற்க - அவர்மாட்டு யாதொரு வினையூம் தொடங்காது ஒழிக் எள்ளற்கஸ்ரீ அவரைச் சிறியர் என்று இகழாது ஒழிக.


பொருள்

பகைவரை முற்றுதற்கு ஆவதோர் இடம் பெற்றபின் அல்லது; அவர்மாட்டு யாதொரு வினையூம் தொடங்காது ஒழிக் எள்ளற்க அவரைச் சிறியர் என்று இகழாது ஒழிக.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

முற்றுதல்- வளைத்தல். அதற்கு ஆம் இடமாவதுஇ வாயில்களானும்இ நூழைகளானும் அவர் புகலொடு போக்கொழியூம்வகை அரணினைச் சு+ழ்ந்துஇ ஒன்றற்கொன்று துணையாய்த் தம்முள் நலிவிலாத பல படையிருப்பிற்கும்இ மதிலும் அகழும் முதலிய அரண் செய்யப்பட்ட அரசிருப்பிற்கும் ஏற்ற நிலக்கிடக்கையூம்இ நீரும் உடையது. அதுபெற்றால் இரண்டும் செய்க என்பதாம்.



குறள்-02 (முரண்சேர்ந்த)

'முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கு மரண்சேர்ந்தா' 

'மாக்கம் பலவூந் தரும். (02)


முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம்

'ஆக்கம் பலவூம் தரும்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

முரண்சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் - மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும்; அரண்சேர்ந்து ஆம் ஆக்கம் பலவூம் தரும் - அரணைச் சேர்ந்தாகின்ற ஆக்கம் பல பயன்களையூம் கொடுக்கும்.


பொருள் :

மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும்; அரண்சேர்ந்து அரணைச் சேர்ந்தாகின்ற ஆக்கம் பல பயன்களையூம் கொடுக்கும்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

உரைவிளக்கம்

'மாறுபாடா'வதுஇ ஞாலம் பொதுவெனப் பொறா அரசர் மனத்தின்கண் நிகழ்வதாகலானும்இ வலியூடைமை கூறிய அதனாலும் இது பகைமேற் சென்ற அரசர்மேற்றாயிற்று. உம்மை சிறப்பும்மை. அரண் சேராத ஆக்கமும் உண்மையின்இ ஈண்டு ஆக்கம் விசேடிக்கப்பட்டது. 'ஆக்கம்' என்றது அதற்கு ஏதுவாய முற்றினை. அது கொடுக்கும் பயன்களாவன: பகைவரால் தமக்கு நலிவின்மையூம்இ தாம் நிலைபெற்று நின்று அவரை நலிதலும் முதலாயின.



குறள்-03 (ஆற்றாரும்)

'ஆற்றாரு மாற்றி யடுப விடனறிந்து 

'போற்றார்கட் போற்றிச் செயின். (03)


'ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து

'போற்றார் கண் போற்றிச் செயின்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

ஆற்றாரும் ஆற்றி அடுப - வலியர் அல்லாதாரும்இ வலியராய் வெல்வர்; இடன் அறிந்து போற்றிப் போற்றார்கண் செயின் - அதற்கு ஏற்ற இடத்தினை அறிந்து தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினைசெய்வராயின்.


பொருள்

வலியர் அல்லாதாரும்இ வலியராய் வெல்வர்; இடன் அறிந்து போற்றிப் அதற்கு ஏற்ற இடத்தினை அறிந்து தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினைசெய்வராயின்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

வினை என்பதூஉம்இ தம்மை என்பதூஉம் அவாய்நிலையான் வந்தன. காத்தல்இ பகைவரான் நலிவூ வாராமல் அரணானும் படையானும் காத்தல். இவ்வாற்றான்இ வினைசெய்வராயின் மேற்சொல்லிய 

(குறள்: 492) வலியின்றியூம் வெல்வர் என்பதாம்.



குறள்-04 (எண்ணியார்)

எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து '

துன்னியார் துன்னிச் செயின். (04)


எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து

'துன்னியார் துன்னிச் செயின்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

தாம் வினைசெய்தற்கு ஏற்ற இடத்தினை அறிந்து சென்ற அரசர்; துன்னிச் செயின் - அரணைப் பொருந்திநின்று அதனைச் செய்வராயின்; எண்ணியார் எண்ணம் இழப்பர்ஸ்ரீ அவரை வெல்வதாக எண்ணியிருந்த பகைவர் அவ்வெண்ணத்தினை இழப்பர்.


பொருள்

தாம் வினைசெய்தற்கு ஏற்ற இடத்தினை அறிந்து சென்ற அரணைப் பொருந்திநின்று அதனைச் செய்வராயின்; எண்ணியார் எண்ணம் இழப்பர்ஸ்ரீ அவரை வெல்வதாக எண்ணியிருந்த பகைவர் அவ்வெண்ணத்தினை இழப்பர்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………



உரைவிளக்கம்

அரண் என்பது அவாய்நிலையான் வந்தது. எண்ணம் என்றதுஇ எண்ணப்பட்ட தம் வெற்றியை. அதனை இழப்பர் என்றார்இ அவர் வினைசெய்யாமல் தம்மைக் காத்தமையின். இதனால் அவர் பகைவர் தோற்பர் என்பதாயிற்று.

இவை நான்கு பாட்டானும்இ பகைவர் அரணின் புறத்து இறுப்பார் அதற்கு ஆம் இடம் அறிதல் கூறப்பட்டது.



குறள்-05 (நெடும்புனலுள்)

'நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி 

'னீங்கி னதனைப் பிற. (05)


'நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின

;'நீங்கின் அதனைப் பிற.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

முதலை நெடும்புனலுள் பிற வெல்லும்- முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின் பிறவற்றை எல்லாம் தான் வெல்லாநிற்கும்; புனலின் நீங்கின் அதனைப் பிற அடும்- அப்புனலின் நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லாநிற்கும்.


பொருள்

முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின் பிறவற்றை எல்லாம் தான் வெல்லாநிற்கும்; புனலின் அப்புனலின் நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லாநிற்கும்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

எனவேஇ எல்லாரும் தந்நிலத்து வலியர் என்பது கூறப்பட்டது. 'பிற' என்பதுஇ முன்னும் கூட்டப்பட்டது. நிலைப்படா நீரின்கண் பிறவெல்லாம் நிற்றல் ஆற்றாமையின் அவையெல்லாம் முதலைக்கு எளியவாம்; அவை இயங்குதற்கு உரிய நிலத்தின்கண்இ அஃது இயங்கல் ஆற்றாமையின் அஃது அவற்றிற்கு எல்லாம் எளிதாம் என்றதுஇ மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்றலாற்றா இடன் அறிந்து செல்வராயின்இ அவர் தமக்கு எளியராவர்; அன்றித் தாம் நிற்கலாற்றா விடத்துச் செல்வராயின்இ அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றமையின்இ இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம். அவரை அவர் நிற்றல் ஆற்றாவிடத்துச் சென்று வெல்க என்பதாம்.



குறள்-06 (கடலோடா)

'கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு 

'நாவாயூ மோடா நிலத்து. (06)


'கடல் ஓடா கால் வல் நெடும் தேர் கடல் ஓடும்

'நாவாயூம் ஓடா நிலத்து.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

கால் வல் நெடுந்தேர் - நிலத்தின்கண் ஓடும் கால் வலிய நெடிய தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா; கடல் ஓடும் நாவாயூம் நிலத்து ஓடா - இனிஇ அக்கடலின்கண் ஓடும் நாவாய்கள் தாமும்இ நிலத்தின்கண் ஓடமாட்டா.


பொருள்

நிலத்தின்கண் ஓடும் கால் வலிய நெடிய தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா;இனிஇ அக்கடலின்கண் ஓடும் நாவாய்கள் தாமும்இ நிலத்தின்கண் ஓடமாட்டா.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

'கடலோடா' என்ற மறுதலையடையான்இ நிலத்துஓடும் என்பது வருவிக்கப்பட்டது. 'கால்வல் நெடுந்தேர்' என்பதுஇ ஓடுதற்கு ஏற்ற காலும்இ பெருமையூம் உடையவாயினும் என்பதுபட நின்றது. மேற்சென்றார் பகைவரிடங்களை அறிந்துஇ அவற்றிற்கு ஏற்ற கருவிகளான் வினைசெய்க என்பது தோன்ற நின்றமையின். இதுவூம் மேலை அலங்காரம் ஆயிற்று.



குறள்-07 (அஞ்சாமை)

'அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை 

'யெண்ணி யிடத்தாற் செயின். (07)


'அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை

'எண்ணி இடத்தான் செயின்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின் - பகையிடத்து வினைசெய்யூம் திறங்களை எல்லாம் ஒழியாது எண்ணி அவற்றை அரசர் இடத்தொடு பொருந்தச் செய்வராயின்; அஞ்சாமை அல்லால் துணை வேண்டா - அச்செயற்குத் தம் திண்மையல்லது பிறிதொரு துணை வேண்டுவதில்லை.


பொருள்

பகையிடத்து வினைசெய்யூம் திறங்களை எல்லாம் ஒழியாது எண்ணி அவற்றை அரசர் இடத்தொடு பொருந்தச் செய்வராயின்; அச்செயற்குத் தம் திண்மையல்லது பிறிதொரு துணை வேண்டுவதில்லை.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

திண்ணியராய் நின்று செய்து முடித்தலே வேண்டுவதல்லது 'துணைவேண்டா' என்றார்இ அவ்வினை தவறுதற்கு ஏதுவின்மையின்.

இவை மூன்று பாட்டானும்இ வினைசெய்தற்குஆம் இடனறிதல் கூறப்பட்டது.



குறள்-08 (சிறுபடை)

'சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா 

'னூக்க மழிந்து விடும். (08)


'சிறு படையான் செல் இடம் சேரின் உறு படையான்

'ஊக்கம் அழிந்து விடும்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

உறுபடையான்- பெரும்படையூடைய அரசன்; சிறுபடையான் செல் இடம் சேரின்- ஏனைச் சிறுபடை உடையானை அழித்தல் கருதிஇ அவன் புகலைச் சென்று சாருமாயின்; ஊக்கம் அழிந்து விடும்ஸ்ரீ அவனால் தன்பெருமை அழியூம்.


பொருள்

பெரும்படையூடைய அரசன்; சிறுபடையான் ஏனைச் சிறுபடை உடையானை அழித்தல் கருதிஇ அவன் புகலைச் சென்று சாருமாயின்; அவனால் தன்பெருமை அழியூம்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

'செல்லிடம்' அவனுக்குச் செல்லுமிடம். 'அழிந்துவிடும்' என்பது எழுந்திரு்க்கும் என்றாற்போல ஒருசொல். ஊக்கத்தின் அழிவூஇ உடையான்மேல் ஏற்றப்பட்டது. தன்படைப்பெருமை நோக்கி இடன் நோக்காது செல்வனாயின்இ அஃதுஇ அப்படைக்கு ஒருங்கு சென்று வினைசெயல் ஆகாமையானாகப் பயிற்சியின்மையானாகப் பெருமையாற் பயனின்றித் தான் அழிந்துவிடும் என்பதாம்.


குறள்-09 (சிறைநலனுஞ்)

சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்த  

'ருறைநிலத்தோ டொட்ட லரிது. (09)


சிறை நிலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்

'உறை நிலத்தோடு ஒட்டல் அரிது.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

சிறை நலனும் சீரும் இலர் எனினும் - அரண் அழித்தற்குஇ அருமையூம் பெருமையூமாகிய ஆற்றலும் உடையர் அல்லராயினும்; மாந்தர் உறை நிலத்தோடு ஒட்டல் அரிது - வினைக்குரிய மாந்தரை அவர் உறைகின்ற நிலத்தின்கண் சென்று தாக்குதல் அரிது.


பொருள் 

அரண் அழித்தற்குஇ அருமையூம் பெருமையூமாகிய ஆற்றலும் உடையர் அல்லராயினும்; மாந்தர் வினைக்குரிய மாந்தரை அவர் உறைகின்ற நிலத்தின்கண் சென்று தாக்குதல் அரிது

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

'நிலத்தோடு' என்பது வேற்றுமை மயக்கம். ஆண்மையூடையாரைச் சிறுமை நோக்கி இருப்பின்கண் சென்று தாக்கின்இ அவர் அது விட்டுப்போதல் துணிவினதுஅன்றிச் சாதல் துணிவினராவர்; ஆகவேஇ அவர்க்குப் பெரும்படை உடையூம் என்பதாம்.



குறள் 10 (காலாழ்)

'காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா  

'வேலாண் முகத்த களிறு. (10)


'கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா

'வேல் ஆள் முகத்த களிறு.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

கண் அஞ்சா வேல்ஆள் முகத்த களிறு - பாகர்க்கு அடங்காவூமாய்இ வேலாட்களைக் கோத்த கோட்டவூமாய களிறுகளை; கால் ஆழ் களரின் நரி அடும் - அவைஇ கால்ஆழும் இயல்பிற்றாய சேற்றுநிலத்துப்பட்டுழி நரி கொல்லும்.


பொருள்

பாகர்க்கு அடங்காவூமாய்இ வேலாட்களைக் கோத்த கோட்டவூமாய களிறுகளை; அவைஇ கால்ஆழும் இயல்பிற்றாய சேற்றுநிலத்துப்பட்டுழி நரி கொல்லும்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

'முகம்' ஆகுபெயர். ஆண்மையூம்இ பெருமையூம் உடையாரும் தமக்கு ஏலா நிலத்துசசெல்லின் அவற்றாற் பயனின்றி மிகவூம் எளியரால் அழிவர் என்பது தோன்ற நின்றமையின்இ இதுவூம் அவ்வலங்காரம். 'வேலாழ் முகத்த' என்று பாடம் ஓதுவாருமுளர். வேற்படை குளித்த முகத்தவாயின்இ அதுவூம் நரி அடுதற்கு ஏதுவாய் முடிதலின்இ அது பாடமன்மை அறிக.

இவை மூன்றுபாட்டானும்இ பகைவரைச் சார்தலாகா இடனும்இ சார்ந்துழிப்படும் இழுக்கும் கூறப்பட்டன.













           வினா – விடைக் கட்டமைப்புக்கள்



இடனறிதல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியூள்ளவற்றை ஆதாரமாகக் 

கொண்டு பின்வருவனவற்றைத்  தௌpவூபடுத்துக. 

அ).பகைவர் அரணின் புறத்து இறுப்பார் அதற்கு ஆம் இடம் அறிதல் கூறப்படுவன.

ஆ).வினைசெய்தற்குஆம் இடனறிதல் கூறப்படுவன.

இ).பகைவரைச் சார்தலாகா இடனும்இ சார்ந்துழிப்படும் இழுக்கும் கூறப்படுவன.

(20 புள்ளிகள்)



பொருட்பால் - அரசியல் - அதிகாரம் 09ஃ(51)


                அதிகாரம் - 09

           09. தெரிந்துதௌpதல்

அதிகார முன்னுரை: 

அஃதாவதுஇ அமைச்சர் முதலாயினாரைப் பிறப்பு குணம் அறிவூ என்பனவற்றையூம்இ செயலையூம் காட்சி கருத்து ஆகமம் என்னும் அளவைகளான் ஆராய்ந்து தௌpதல். வலிமுதன் மூன்றும் அறிந்து பகைமேற் செல்வானுக்குத் தானே வினையூற்றுச் செய்தற்பொருட்டும்இ அறைபோகாமற் பொருட்டும் இது வேண்டுதலின்இ அவற்றின்பின் வைக்கப்பட்டது.


குறள்-01 (அறம்பொரு)

அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின் 

'றிறந்தெரிந்து தேறப் படும். (01)


அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்

'திறம் தெரிந்து தேறப் படும்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் - அரசனால் தௌpயப்படுவான்ஒருவன்இ அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப்பொருட்டான் வரும் அச்சமும் என்னும்; நான்கின் திறம் தெரிந்து தேறப்படும்- உபதை நான்கின் திறத்தான் மனவியல்பு ஆராய்ந்தால் பின்பு தௌpயப்படும்.


பொருள்

அரசனால் தௌpயப்படுவான்ஒருவன்இ அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப்பொருட்டான் வரும் அச்சமும் என்னும்; நான்கின் உபதை நான்கின் திறத்தான் மனவியல்பு ஆராய்ந்தால் பின்பு தௌpயப்படும்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

அவற்றுள்இ 

அற உபாதையாவது: 

புரோகிதரையூம் அறவோரையூம் விட்டுஇ அவரால் இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப்போக்கி அறனும் உரிமையூம் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம்; இதுதான் யாவர்க்கும் இயைந்தது; நின் கருத்து என்னை? எனச் சு+ளுறவோடு சொல்லுவித்தல்.


பொருள் உபாதையாவது: 

சேனைத்தலைவனையூம்இ அவனோடு இயைந்தாரையூம் விட்டுஇ அவரான் இவ்வரசன் வேறன்மாலையன் ஆகலின் இவனைப்போக்கிக் கொடையூம் உரிமையூம் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம்; இதுதான் யாவர்க்கும் இயைந்தது; நின்கருத்து என்னை? எனச் சு+ளுறவோடு சொல்லுவித்தல்.


இன்ப உபாதையாவது: 

தொன்றுதொட்டு உரிமையொடு பயின்றாள் ஒரு தவமுதுமகளை விட்டுஇ அவளால்இ உரிமையூள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்க வேண்டுமென்று என்னை விடுத்தாள்; அவளைக் கூடுவையாயின்இ நினக்குப் பேரின்பமேயன்றிப் பெரும் பொருளும் கைகூடுமெனச் சு+ளுறவோடு சொல்லுவித்தல்.


அச்ச உபாதையாவது: 

ஒரு நிமித்தத்தின் மேலிட்டு ஓரமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின்கண் அழைப்பித்துஇ இவர் அறைபோவான் எண்ணற்குக் குழீஇயினார் என்று தான்காவல்செய்துஇ ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சு+ழ்கின்றமையின்இ அதனை நாம் முற்படச் செய்துஇ நமக்கு இனிய அரசன் ஒருவனை வைத்தல் ஈண்டை யாவர்க்கும் இயைந்தது; நின்கருத்து என்னை? எனச் சு+ளுறவோடு சொல்லுவித்தல். இந்நான்கினும் திரிபு இலனாயவழி எதிர்காலத்துந் திரிபிலன் எனக் கருத்தளவையால் தௌpயப்படும் என்பதாம். இவ்வடநூற் பொருண்மையை உட்கொண்டு இவர் ஓதியது அறியாதுஇ பிறர் எல்லாம் இதனை உயிரெச்சம் எனப் பாடந்திரித்துத் தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார்.



குறள்-02 (குடிப்பிறந்து)

குடிப்பிறந்து குற்றத்தி னீங்கி வடுப்பரியூ 

'நாணுடையான் கட்டே தௌpவூ. (02)


குடிப் பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப் பரியூம்

'நாண் உடையான் கட்டே தௌpவூ.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

குடிப்பிறந்து - உயர்ந்த குடியிற் பிறந்து; குற்றத்தின் நீங்கி - குற்றங்களினின்று நீங்கி; வடுப் பரியூம் நாண் உடையான் கட்டே தௌpவூ - நமக்கு வடு வருங்கொல் என்று அஞ்சாநிற்கும் நாண் உடையவன்கண்ணதே அரசனது தௌpவூ.


பொருள்

உயர்ந்த குடியிற் பிறந்து; குற்றங்களினின்று நீங்கி; வடுப் பரியூம் நமக்கு வடு வருங்கொல் என்று அஞ்சாநிற்கும் நாண் உடையவன்கண்ணதே அரசனது தௌpவூ.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

குற்றங்களாவன: மேல் அரசனுக்குச் சொல்லிய வகை ஆறும் (குறள்:431 செருக்குஇ சினம்இ காமம்; 

குறள்:432 இவறல்இ மாண்பு இறந்த மானம்இ அளவிறந்த உவகை)இ மடிஇ மறப்புஇ பிழைப்பு என்று இவை முதலாயவூமாம். நாண்இ இழிதொழில்களின் மனம் செல்லாமை. இவை பெரும்பான்மையூம் தக்கோர்வாய்க் கேட்டலாகிய ஆகம அளவையான் தெரிவன. இந்நான்கும் உடையவனையே தௌpக என்பதாம்.



குறள்-03 (அரியகற்)

'அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியூங்கா 

'லின்மை யரிதே வெளிறு. (03)


'அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும் தெரியூங்கால்

'இன்மை அரிதே வெளிறு.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும் - கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும்; தெரியூங்கால் வெளிறு இன்மை அரிது - நுண்ணிதாக ஆராயூம் இடத்து வெண்மை இல்லாமை அரிது.


பொருள்

கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும்; நுண்ணிதாக ஆராயூம் இடத்து வெண்மை இல்லாமை அரிது.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

வெண்மை- அறியாமை; அஃது இவர்மாட்டு உளதாவதுஇ மனத்தது நிலையாமையான் ஒரோவழி ஆகலின்இ 'தெரியூங்கால்' என்றார். காட்சிஅளவையான் தெரிந்தால் அதுவூம் இல்லாதாரே தௌpயப்படுவர் என்பது குறிப்பெச்சம். இவ்வளவைகளான் இக்குணமும் குற்றமும் தெரிந்துஇ குணமுடையாரைத் தௌpக என்பது. இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.


குறள்-04 (குணநாடிக்)

'குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண் 

'மிகைநாடி மிக்க கொளல். (04)


'குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

'மிகை நாடி மிக்க கொளல்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

குணம் நாடி - குணம் குற்றங்களுள் ஒன்றே உடையார் உலகத்து இன்மையின் ஒருவன் குணங்களை ஆராய்ந்து; குற்றமும் நாடி - ஏனைக் குற்றங்களையூம் ஆராய்ந்து; அவற்றுள் மிகை நாடி- பின் அவ்விரு பகுதியூள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து; மிக்க கொளல்- அவனை அம்மிக்கவற்றானே அறிக.


பொருள்

குணம் குற்றங்களுள் ஒன்றே உடையார் உலகத்து இன்மையின் ஒருவன் குணங்களை ஆராய்ந்து; ஏனைக் குற்றங்களையூம் ஆராய்ந்து பின் அவ்விரு பகுதியூள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து அவனை அம்மிக்கவற்றானே அறிக.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

மிகை உடையவற்றை 'மிகை' என்றார். அவையாவன: தலைமையானாகஇ பன்மையானாக உயர்ந்தன. அவற்றான் அறிதலாவதுஇ குணமிக்கதாயின் வினைக்கு உரியன் என்றும்இ குற்றம் மிக்கதாயின் அல்லன் என்றும் அறிதல். குணமே உடையார் உலகத்து அரியர் ஆகலின்இ இவ்வகை யாவரையூம் தௌpக என்பது இதனான் கூறப்பட்டது.


குறள்-05 (பெருமைக்கு)

'பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங் 

'கருமமே கட்டளைக் கல். (05)


'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

'கருமமே கட்டளைக் கல்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல்- பிறப்புக் குணம் அறிவூ என்பனவற்றான் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது; தத்தம் கருமமே- தாம்தாம் செய்யூம் கருமமேஇ பிறிதில்லை.



பொருள்

பிறப்புக் குணம் அறிவூ என்பனவற்றான் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது; தாம்தாம் செய்யூம் கருமமேஇ பிறிதில்லை.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

இஃது ஏகதேச உருவகம். மக்களது பெருமையூம் சிறுமையூம் தப்பாமல் அறியலுறுவார்க்குப் பிற கருவிகளும் உளவாயினும்இ முடிந்த கருவி செயல் என்பதுஇ தேற்றேகாரத்தாற் பெற்றாம். இதனாற் குணம் குற்றங்கள் நாடற்குக் கருவி கூறப்பட்டது.



குறள்-06 (அற்றாரைத்)

'அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர் 

'பற்றிலர் நாணார் பழி. (06)


'அற்றாரைத் தேறுதல் ஒம்புக மற்று அவர்

'பற்று இலர் நாணார் பழி.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

அற்றாரைத் தேறுதல் ஓம்புக - சுற்றம் இல்லாரைத் தௌpதலை ஒழிக் அவர் மற்றுப் பற்று இலர்- அவர் உலகத்தோடு தொடர்பிலர்; பழி நாணார் - ஆகலாற் பழிக்கு அஞ்சார்.


பொருள்

சுற்றம் இல்லாரைத் தௌpதலை ஒழிக் அவர் மற்றுப் பற்று இலர்- அவர் உலகத்தோடு தொடர்பிலர்; - ஆகலாற் பழிக்கு அஞ்சார்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

'பற்றிலர்' என்பதனால்இ சுற்றம் என்பது வருவிக்கப்பட்டது. உலகத்தார் பழிப்பன ஒழிதற்கும்இ புகழ்வன செய்தற்கும் ஏதுவாகிய உலகநடை இயல்புஇ சுற்றம் இல்லாதார்க்கு இன்மையின்இ அவர் தௌpயப்படார் என்பதாம்.




குறள்-07 (காதன்மை)

'காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல் 

'பேதைமை யெல்லாந் தரும். (07)


'காதன்மை கந்தா அறிவூ அறியார்த் தேறுதல்

'பேதைமை எல்லாம் தரும்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

காதன்மை கந்தா அறிவூ அறியார்த் தேறுதல் - அன்புடைமை பற்றுக்கோடாகத் தமக்கு அறிய வேண்டுவன அறியாதாரைத் தௌpதல்; பேதைமை எல்லாம் தரும் - அரசனுக்கு எல்லா அறியாமையையூம் கொடுக்கும்.


பொருள்

அன்புடைமை பற்றுக்கோடாகத் தமக்கு அறிய வேண்டுவன அறியாதாரைத் தௌpதல்; அரசனுக்கு எல்லா அறியாமையையூம் கொடுக்கும்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

தன்னோடு அவரிடைநின்ற அன்புபற்றிஇ அரசன் அறிவிலார்மேல் வினையை வைப்பின்இ அஃது அவர் அறிவின்மையாற் கெடும்; கெட்டால்இ அவர்க்கு உளதே அன்றிஇ வினைக்குரியாரை அறியாமைஇ மேல் விளைவூ அறியாமை முதலாக அவனுக்கு அறியாமை பல உளவாம் என்பதாம்.


குறள்-08 (தேரான்)

'தேரான் பிறனைத் தௌpந்தான் வழிமுறை

'தீரா விடும்பை தரும். (08)


'தேரான் பிறனைத் தௌpந்தான் வழிமுறை

'தீரா இடும்பை தரும்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

பிறனைத் தேரான் தௌpந்தான் - தன்னொடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும்இ செயலானும் ஆராயாது தௌpந்த அரசனுக்கு; வழிமுறை தீரா இடும்பைதரும் - அத்தௌpவூ தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.


பொருள்

தன்னொடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும்இ செயலானும் ஆராயாது தௌpந்த அரசனுக்கு அத்தௌpவூ தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

இயைபுஇ தன் குடியொடு தொடர்ந்த மரபு. இதனானே அதுவூம் வேண்டும் என்பது பெற்றாம். தௌpதல் அவன்க்ண்ணே வினையை வைத்தல். அவ்வினை கெடுதலால் தன்குலத்துப் பிறந்தாரும்இ பகைவர் கைப்பட்டுக் கீழாய் விடுவர் என்பதாம். நான்கன் உருபு விகாரத்தான் தொக்கது.



குறள்-09 (தேறற்க)

'தேறற்க யாரையூந் தேராது தேர்ந்தபின்

'றேறுக தேறும் பொருள். (09)


'தேறற்க யாரையூம் தேராது தேர்ந்த பின்

' தேறுக தேறும் பொருள். 


பொருள் கொண்டு கூட்டும் முறை:

யாரையூம் தேராது தேறற்க- யாவரையூம் ஆராயாது தௌpயாது ஒழிக் தேர்ந்தபின் தேறும் பொருள் தேறுக- ஆராய்ந்தபின் தௌpயூம் பொருட்களை ஐயூறாது ஒழிக.


பொருள்

யாவரையூம் ஆராயாது தௌpயாது ஒழிக் தேர்ந்தபின் ஆராய்ந்தபின் தௌpயூம் பொருட்களை ஐயூறாது ஒழிக.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

'தேறற்க' என்ற பொதுமையான்இ ஒரு வினைக்கண்ணும் தௌpயலாகாது என்பது பெற்றாம். ஈண்டுத் 'தேறுக' என்றதுஇ தாற்பரியத்தால் ஐயூறவினது விலக்கின்மேல் நின்றது. 'தேறும் பொருள்' என்றதுஇ அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினைகளை. 'பொருள்' ஆகுபெயர்.


குறள்-10 (தேரான்தௌpவூம்)

'தேரான் றெளிவூந் தௌpந்தான்க ணையூறவூந்  

'தீரா விடும்பை தரும். (10)


'தேரான் தௌpவூம் தௌpந்தான் கண் ஐயூறவூம்

'தீரா இடும்பை தரும்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

தேரான் தௌpவூம் - அரசன் ஒருவனை ஆராயாது தௌpதலும்; தௌpந்தான்கண் ஐயூறவூம்- ஆராய்ந்து தௌpந்தவன்மாட்டு ஐயப்படுதலும் இவ்விரண்டும்; தீரா இடும்பை தரும் - அவனுக்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.


பொருள்

அரசன் ஒருவனை ஆராயாது தௌpதலும்; தௌpந்தான்கண் ஆராய்ந்து தௌpந்தவன்மாட்டு ஐயப்படுதலும் இவ்விரண்டும்; அவனுக்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

வினை வைத்தபின் ஒரு தவறு காணாது வைத்து ஐயூறுமாயின்இ அதனை அவன் அறிந்து இனி இது நில்லாது என்னும் கருத்தான் அவ்வினையை நெகிழ்த்துவிடும்; அதுவேயன்றிப் பகைவரால் எளிதிற் பிரிக்கவூம்படும்; ஆதலால்இ 'தௌpந்தான்கண் ஐயூறவூ'ம் ஆகாவாயிற்று. தௌpவிற்கு எல்லை கூறியவாறு.

இவை ஐந்து பாட்டானும் தௌpயப்படாதார் இவர் என்பதூஉம்இ அவரைத்தௌpந்தாற் படும் இழுக்கும்இ தௌpவிற்கு எல்லையூம் கூறப்பட்டன.
















            வினா – விடைக் கட்டமைப்புக்கள்



தெரிந்து தௌpதல் எனும் அதிகாரத்தினை ஆதாரமாகக் கொண்டுஇ  

அ).தக்கவர்களைத் தெரிந்து தௌpதல்இ ஒருவரிடத்து உள்ள குணங்குற்றங்களை ஆராய்ந்து குணம் மிக்கவராயின் தௌpதல்இ 

ஆ).ஒருவரது குணங்குற்றங்களை ஆராய்வதற்குரிய வழிஇ தௌpயப்படாதவர்கள் யாவரஇ; அவர்களைத் தௌpவதால் ஏற்படக்கூடிய தீங்குஇ 

இ).தௌpவதற்கான எல்லை என்பன பற்றி அறிதல்.

                 (20 புள்ளிகள்)




தெரிந்து தௌpதல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியூள்ளவற்றை ஆதாரமாகக் 

கொண்டு பின்வருவனவற்றைத்  தௌpவூபடுத்துக.

அ).குணமும் குற்றமும் தெரிந்துஇ குணமுடையாரைத் தௌpக என்பது கூறப்படுவன

ஆ)இகுணமே உடையார்உலகத்து அரியர்ஆகலின்இஇவ்வகை யாவரையூம் தௌpக என்பது கூறப்படுவன

இ).இதனாற் குணம் குற்றங்கள் நாடற்குக் கருவி கூறப்படுவன

ஈ)இதௌpயப்படாதார் இவர் என்பதூஉம்இ அவரைத்தௌpந்தாற் படும் இழுக்கும்இ தௌpவிற்கு எல்லையூம் கூறப்படுவன

(20 புள்ளிகள்)


பொருட்பால் - அரசியல் - அதிகாரம் 10ஃ(52)


                அதிகாரம் - 10

         10. தெரிந்து வினையாடல்


அதிகார முன்னுரை: 

அஃதாவதுஇ அத்தௌpயப்பட்டாரை அவர் செய்யவல்ல வினைகளை அறிந்து அவற்றின்கண்ணே ஆளும்திறம். அதிகார முறைமையூம் இதனானே விளங்கும்.


குறள்-01 (நன்மையூந்)

நன்மையூந் தீமையூ நாடி நலம்புரிந்த   

'தன்மையா னாளப் படும். (01)


நன்மையூம் தீமையூம் நாடி நலம் புரிந்த

'தன்மையான் ஆளப் படும்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

நன்மையூம் தீமையூம் நாடி - அரசன் முதற்கண் ஒருவினையைத் தன்கண் வைத்தால்இ அதன்கண் ஆவனவூம் ஆகாதனவூம் ஆய செயல்களை ஆராய்ந்தறிந்து; நலம்புரிந்த தன்மையான் - அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினை உடையான்; ஆளப்படும் - பின் அவனாற் சிறந்த வினைகளிலே ஆளப்படும்.


பொருள்:

அரசன் முதற்கண் ஒருவினையைத் தன்கண் வைத்தால்இ அதன்கண் அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினை உடையான்; பின் அவனாற் சிறந்த வினைகளிலே ஆளப்படும்.


………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………



உரைவிளக்கம்

தன்னை உரிமை அறிதற்பொருட்டு அகம் புறங்கட்கு நடுவாயதோர் வினையை அரசன் தன்கண்வைத்தவழிஇ அதன்கண் ஆம் செயல்களையே செய்தவன் பின்னும் அவ்வியல்பினன் ஆதல்பற்றிஇ அகமாய வினைக்கண்ணே ஆளப்படுவன் என்பது ஆயிற்று. 'புரிந்த' என்ற இறந்தகாலத்தான்இ முன்னுரிமை அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றாம்.


குறள்-02 (வாரிபெருக்கி)

வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை  

'யாராய்வான் செய்க வினை. (02)


வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை

'ஆராய்வான் செய்க வினை.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

வாரி பெருக்கி - பொருள் வரு வாயில்களை விரியச் செய்து; வளம்படுத்து அப்பொருளாற் செல்வங்களை வளர்த்து; உற்றவை ஆராய்வான்- அவ்வாயில்கட்கும் பொருட்கும் செல்வங்கட்கும் உற்ற இடையூ+றுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்கவல்லவன்; வினைசெய்க- அரசனுக்கு  வினைசெய்க.


பொருள்

பொருள் வரு வாயில்களை விரியச் செய்து; வளம்படுத்து அப்பொருளாற் செல்வங்களை அவ்வாயில்கட்கும் பொருட்கும் செல்வங்கட்கும் உற்ற இடையூ+றுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்கவல்லவன்; அரசனுக்கு  வினைசெய்க.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

வாயில்களாவன: மேல் இறைமாட்சியூள் 'இயற்றலும்' (குறள் 385) என்புழி உரைத்தனவூம்இ உழவூ பசுக்காவல் வாணிகம் என்னும் வார்த்தையூமாம். (வார்த்தை- தொழில்) செல்வங்களாவன: ஆண்டுப் பொருளும் இன்பமுமாக உரைக்கப்பட்டன. 'இடையூ+று'களாவன: அரசன் வினைசெய்வார்இ சுற்றத்தார்இ பகைவர்இ கள்வர் என்று இவரான் வரும் நலிவூகள்.


குறள்-03 (அன்பறிவூ)

அன்பறிவூ தேற்ற மவாவின்மை யிந்நான்கு 

'நன்குடையான் கட்டே தௌpவூ. (03)


அன்பு அறிவூ தேற்றம் அவா இன்மை இந்நான்கும்

'நன்கு உடையான் கட்டே தௌpவூ.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

அன்பு- அரசன்மாட்டு அன்பும்; அறிவூ - அவனுக்காவன அறியூம் அறிவூம்; தேற்றம்- அவை செய்தற்கண் கலங்காமையூம்; அவாவின்மை - அவற்றாற் பொருள் கையூற்றவழி அதன்மேல் அவா இன்மையூமாகிய் இந்நான்கும் உடையான்கட்டே தௌpவூ - இந்நான்கு குணங்களையூம் நிலைபெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தௌpவூ.


பொருள்

அரசன்மாட்டு அவனுக்காவன அறியூம் அறிவூம்; அவை செய்தற்கண் கலங்காமையூம்; அவற்றாற் பொருள் கையூற்றவழி அதன்மேல் அவா இன்மையூமாகிய் இந்நான்கும் இந்நான்கு குணங்களையூம் நிலைபெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தௌpவூ.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

'இந்நான்கும் நன்குஉடைமை' இவன் செய்கின்ற வினைக்கண் யாதும் ஆராய வேண்டுவது இல்லை என்று அரசன் தௌpதற்கு ஏதுவாகலின்இ அதன் அதன் பிறப்பிடன் ஆக்கிக் கூறினார்.

இவை மூன்று பாட்டானும் ஆடற்கு (ஆடற்கு உரியான்-ஆளுதற்கு உரியவன்)உரியானது இலக்கணம் கூறப்பட்டது.


குறள்-04 (எனைவகையாற்)

எனைவகையாற் றேறியக்கண்ணும் வினைவகையான் வகையான்

'வேறாகு மாந்தர் பலர். (04)


எனை வகையான் தேறியக் கண்ணும் வினை

'வேறு ஆகும் மாந்தர் பலர்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

எனை வகையான் தேறியக் கண்ணும் - எல்லா வகையானும் ஆராய்ந்து தௌpந்து வினைவைத்த பின்னும்; வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் - அவ்வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்.


பொருள்

எல்லா வகையானும் ஆராய்ந்து தௌpந்து வினைவைத்த பின்னும்; வினைவகையான் அவ்வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

கட்டியங்காரன் (சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத்தலைவன் சீவகன். அவனுடைய தந்தை சச்சந்தன்இ அம் மன்னனின் தலைமை அமைச்சன் கட்டியங்காரன்.)போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவது அல்லதுஇ அதனைக்குற்றம் என்று ஒழிந்து தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின்இ 'வேறாகு மாந்தர் பலர்' என்றார். வினை வைப்பதற்குமுன் எல்லாக் குணங்களும் உடையராய்இ வைத்தபின் விகாரப் படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம். இதனான் ஒருவகையால் ஒழிக்கப்படுவார் இவர் என்பது கூறப்பட்டது.


குறள்-05 (அறிந்தாற்றிச்)

அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்  

'சிறந்தானென் றேவற்பாற் றன்று. (05)


அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்

'சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் - செய்யூம் உபாயங்களை அறிந்து செயலானும் இடையூ+றுகளானும் வரும் துன்பங்களைப் பொறுத்து முடிவூசெய்ய வல்லானை அல்லது; வினைதான் சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று - வினைதான் இவன்நம்மாட்டு அன்புடையன் என்று பிறன்ஒருவனை ஏவூம் இயல்புடைத்துஅன்று.


பொருள்

செய்யூம் உபாயங்களை அறிந்து செயலானும் இடையூ+றுகளானும் வரும் துன்பங்களைப் பொறுத்து முடிவூசெய்ய வல்லானை அல்லது; வினைதான் வினைதான் இவன்நம்மாட்டு அன்புடையன் என்று பிறன்ஒருவனை ஏவூம் இயல்புடைத்துஅன்று.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

'செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம். அறிவூ ஆற்றல்களான் அல்லதுஇ அன்பான் முடியாது என இதனால் வினையினது இயல்பு கூறப்பட்டது.


குறள்-06 (செய்வானை)

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ 

'டெய்த வூணர்ந்து செயல். (06)



செய்வானை நாடி வினை நாடிக் காலத்தோடு

'எய்த உணர்ந்து செயல்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

செய்வானை நாடி - முதற்கண்ணே செய்வானது இலக்கண்த்தை ஆராய்ந்து; வினை நாடி - பின்செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து; காலத்தோடு எய்த உணர்ந்து செயல் - பின் அவனையூம் அதனையூம்இ காலத்தொடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க.


பொருள்

முதற்கண்ணே செய்வானது இலக்கணத்தை ஆராய்ந்து பின்செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து; காலத்தோடு பின் அவனையூம் அதனையூம்இ காலத்தொடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

செய்வானது இலக்கணமும்இ வினையினது இயல்பும் மேலே கூறப்பட்டன. காலத்தோடு எய்த உணர்தலாவதுஇ இக்காலத்து இவ்விலக்கணமுடையான் செய்யின் இவ்வியல்பிற்றாய வினைமுடியூம் என்று கூட்டி உணர்தல்.


குறள்-07 (இதனையிதனா)

இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந் 

'ததனை யவன்கண் விடல். (07)


இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து

'அதனை அவன்கண் விடல்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து - இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லன் எனக் கூறுபடுத்து ஆராய்ந்து; அதனை அவன்கண் விடல் - மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக.


பொருள்

இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லன் எனக் கூறுபடுத்து ஆராய்ந்து மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

கருவி: துணைவரும் பொருளும் முதலாயின. வினைமுதலும்இ கருவியூம்இ வினையூம் தம்முள் இயைதலாவதுஇ ஓர் ஒன்றௌடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல். விடுதல் அதற்கு அவனை உரியன் ஆக்குதல்.

குறள்-08 (வினைக்குரிமை)

வினைக்குரிமை நாடிய பின்றை யவனை  

'யதற்குரிய னாகச் செயல். (08)


வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை

'அதற்கு உரியனாகச் செயல்.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

வினைக்கு உரிமை நாடிய பின்றை - ஒருவனை அரசன்இ தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து துணிந்தால்; அவனை அதற்கு உரியனாகச் செயல் - பின் அவனை அதற்கு உரியனாக உயரச் செய்க.


பொருள்

ஒருவனை அரசன்இ தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து துணிந்தால்; அவனை பின் அவனை அதற்கு உரியனாக உயரச் செய்க.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

உயரச்செய்தலாவதுஇ அதனைத் தானே செய்து முடிக்கும் ஆற்றல் உடையவன் ஆக்குதல். அதுசெய்யாக்காலும் கெடும் என்பது கருத்து.



குறள்-09 (வினைக்கண்)

வினைக்கண் வினையூடையான் கேண்மைவே றாக 

'நினைப்பானை நீங்குந் திரு. (09)


வினைக்கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக

'நினைப்பானை நீங்கும் திரு.


பொருள் கொண்டு கூட்டும் முறை:

வினைக்கண் வினை உடையான் கேண்மை - எப்பொழுதும் தன்வினையின்கண்ணே முயறலை உடையான் அவ்வூரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை; வேறாக நினைப்பானைத் திரு நீங்கும் - அது பொறாதார் சொற்கேட்டு அரசன் மாறுபடக் கருதுமாயின்இ திருமகள் அவனை விட்டு நீங்கும்.


பொருள்

எப்பொழுதும் தன்வினையின்கண்ணே முயறலை உடையான் அவ்வூரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை; வேறாக அது பொறாதார் சொற்கேட்டு அரசன் மாறுபடக் கருதுமாயின்இ திருமகள் அவனை விட்டு நீங்கும்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

கேளாய் ஒழுகுகின்ற தன்மையாவதுஇ தான் பிறனாய் நில்லாது கேளிர் செய்யூம் உரிமையெல்லாம் செய்து ஒழுகுதல். அவனை அவமதிப்பாகக்கொண்டு செறக் கருதுமாயின் பின் ஒருவரும் உட்பட்டு முயல்வார் இல்லையாம்; ஆகவேஇ தன் செல்வம் கெடும் என்பது கருத்து.

இந்நான்கு பாட்டானும் ஆடற்குரியானை ஆளும்திறம் கூறப்பட்டது.



குறள்-10 (நாடோறு)

நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்  

'கோடாமை கோடா துலகு. (10) 


நாள் தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்

'கோடாமை கோடாது உலகு. 


பொருள் கொண்டு கூட்டும் முறை:

வினைசெய்வான் கோடாமை உலகு கோடாது - வினை செய்வான் கோடாது ஒழிய உலகம் கோடாது; மன்னன் நாடோறும் நாடுக - ஆதலான் அரசன் அவன் செயலை நாள்தோறும் ஆராய்க.


பொருள்

வினை செய்வான் கோடாது ஒழிய உலகம் ஆதலான் அரசன் அவன் செயலை நாள்தோறும் ஆராய்க.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


உரைவிளக்கம்

அஃது ஒன்றனையூம் ஆராயவே அதன் வழித்தாய உலகமெல்லாம் ஆராய்ந்தானாம்; அதனால் அவன் உரிமை அழியாமல் தன்னுள்ளே ஆராய்ந்து போதுக என்பதாம். இதனான் ஆண்டவழிச் செய்வது கூறப்பட்டது.


              பின்னுள்ள அதிகாரம் - 11.சுற்றம் தழாஅல்














            வினா –விடைக் கட்டமைப்புக்கள்



தெரிந்து வினையாடல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியூள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டு பின்வருவனவற்றைத்  தௌpவூபடுத்துக. 

(அ).ஆடற்கு (ஆடற்கு உரியான்-ஆளுதற்கு உரியவன்)உரியானது இலக்கணம் கூறப்படுவன.

ஆ).ஒருவகையால் ஒழிக்கப்படுவார் இவர் என்பது கூறப்படுவன.

இ).ஆடற்குரியானை ஆளும்திறம் கூறப்படுவன.

ஈ).இதனான் ஆண்டவழிச் செய்வது கூறப்படுவன

                (20 புள்ளிகள்)


            பொதுவான வினாக்கள்

அதிகாரவைப்பினை விளக்குக?


ஆசிரியர்
எஸ்.எஸ்.ஜீவன்
B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.

No comments:

Post a Comment