ஒரு பாடசாலையின் இலக்கினை அடையூம் வகையில் கலைத்திட்டத்தின் இலக்கு ஆசிரியரினால் பாடவிடயத்தினுhடாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இவ்வாறு ஒரு ஆசிரியH கலைத்திட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் அதன் அடிப்படை எண்ணக்கருக்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அது தயாரிக்கையில் கவனத்தில் எடுக்க வேண்டிய முக்கிய
அம்சங்களைப் பற்றி விரிவாக ஆராய்க
ஒரு பாடசாலையின் இலக்கினை அடையூம் வகையில் கலைத்திட்டத்தின் இலக்கு ஆசிரியரினால் பாடவிடயத்தினுhடாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இவ்வாறு ஒரு ஆசிரியH கலை;திட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் அதன் அடிப்படை எண்ணக்கருக்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதையூம் அது தயாரிக்கையில் கவனத்தில் எடுக்க வேண்டிய முக்கிய அம்சங்களைப் கருதத்தில் கொண்டு கலைத்திட்டத்த்pனை உருவாக்கி அதன் விசேட நோக்கம்- குறிக்கோள் -இலக்கினை சிறப்பாக அடையக் கூடிய வகையில் கலைத்திட்டத்தினை ஆசிரியHகள் முதலில் வகுப்பறையிலே ஒழுங்கான முறையில் செயற்படுத்த வேண்டும் . அவ்வாறு செயற்படுத்துகின்ற வேளையில் நாட்டின் தேசிய இலக்குகள் அடையப்படுவதனைக் காணலாம்.
கலைத்திட்டமானது இலக்கினை நோக்கினை அடையூம் வகையில் வடிவமைக்கப்படுவதோடு அது சிறப்பாகவூம் ஆசிரியரால் நடைமுறைப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். கலைத்திட்டமானது கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் அனைத்தையூம் திட்டமிடுகின்ற ஒன்றாகவே விளங்குகின்றது. பாடசாலையிலே கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டினை வினைத்திறனாகப் பேனுவதற்கு கலைத்திட்டதின் ஒழுங்கமைப்பு முக்கியமாகும். வகுப்பறைச் செயற்பாட்டில் இருந்தே நாட்டின் குறிக்கோள் அடையப்படுகின்றது. ஆகவேதான் வகுப்பறையில் நடைபெறுகின்ற அனைத்துச் செயற்பாடுகளும் ஓH கலைத்திட்ட ஒழுங்கமைப்பின் கீழ் இயங்கவேண்டியது அவசியமாகும். இதனை விரிவாக விளங்கிக்கொள்ள வேண்டுமாக இருந்தால்
• கலைத்திட்டம் என்றால் என்ன
• கலைத்திட்டத்தின் மூலம் இலக்கினை அடையூம் முறைகள்
• கலைத்திட்ட இலக்கினை அடைவதற்கு பாடத்திட்டம் எவ்வாறு முக்கியம் பெறுகின்றது.
• கலைத்திட்ட இலக்கினை அடைவதற்கு ஆசிரியH பாடத்திட்டத்தை எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
• கலைத்திட்ட உருவாக்கத்தில் கவனிக்க வேண்டிய விடையங்கள் யாவை
• கலைத்திட்டத்தில் அடங்க வேண்டிய முக்கிய அம்சங்கள் யாவை
போன்ற விடயங்களைக் ஆராய வேண்டியது முக்கியமான ஒன்றாகவே காணப்படுகின்றது.
அறிக்கை எழுச்சி உடலியக்கம் என்ற தளங்களில் அடையப்பட வேண்டிய இலக்குகளை ஆசிரியர் தௌpவூபடுத்திக்கொள்ள வேண்டும்.அறிவூ கிரகித்தல் பிரயோகித்தல் பகுப்பாய்வூ செய்தல் தொகுத்தல் மதிப்Pடு செய்தல் என்ற வகையில் அறிகை இலக்குகள் வகையீடு செய்யப்படும் பெறுதல் துலங்குதல் பெறுமானப்படுத்தல் ஒமுங்கதைத்தல் ஆற்றுகைக்குரிய வகிபாகமெடுத்தல் முதலியவை எழுச்சி ஆட்சியின் வகைப்பாடுகள் ஆகும்.தெறிதல் அசைவூகள் அடிப்படை அசைவூகள் புலன்சார் ஆற்றல்கள் உடல்சார் ஆற்றல்கள் திறன்சார் அசைவூகள் தொடபாடல் அசைவூகள் என்றவாறு உடலியக்க ஆட்சிகள் வகையீடு செய்யப்படும்.
வினைத்திறன் மிக்க கற்பித்தலுக்கு பாடத்தைத் திட்டமிடும் நடவடிக்கை அடிப்படையானதாக அமைகின்றது கலைத்திட்ட வழிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டு கற்பித்தலின் இலக்குகளை முதற்கண் தெரிவூபடுத்திகொள்ளல் வேண்டும் பாடத்தைத் திட்டமிடல் நேரவிரயத்தைத் தவிர்த்துக் கொள்வதற்கு ஆசிரியரின் பதகளிப் பைத் தனித்துக் கொள்வதற்கும் ஊக்க முடன் கற்பித்தலிலே ஈடுபடுவதற்கும் வழியமைக்கின்றது. கலைத்திட்ட செயற்பாடுகளுக்கு – கலைத்திட்டம் சிறப்பாக இயங்குவதற்கும் -இயற்குவதற்கும் மாணவனின் உடல்-உள திறன்கள் சிறப்பாக அமைய வேண்டும்.கற்றலின் வகை பற்றியூம் கடினமட்டம் (டுநஎநi ழக னுகைகiஉரவைல) பற்றியூம் சிந்தித்துச் செயலாற்றுதல் சிறந்த முறையிலே பாடத்தைதிட்டமிடுவதற்குத் துணை நிற்கின்றன.நெட்;ருக் கற்றல் (சுழவந டநயசniபெ ) பொருளுணர் கற்றல் ( அநயniபெகரட டுநயசn) என்றவகையான கற்றல் முறைகள் பற்றி அறிந்திருத்தல் திட்டமிடலுக்கு அவசியமாகின்றன. நெட்டுருக்கற்றல் மூன்று வகையான விளக்கப்படுகின்றது. அவை
1.குறிப்பிட்ட ஒழுங்குமுறையின்றிக் கற்றவற்றை மீட்டெடுத்தல். இது கட்டற்ற மீட்பு
எனப்படும்;
2.குறிப்பிட் ஒழுங்கிலே கற்றவற்றை மீட்டெடுத்தல் இது தொடர் ஒழுங்கு மீட்பு
(ளநசயைடசுநஉடட)எனப்படும்.
3. குறிப்பிட்ட ஒரு துhண்டியூடன் தொடர்புபடுத்திக் குறிப்பிட்ட எண்ணக்
கருவைமீட்டெடுத்தல் இது இணைத்தொடர்புக் கற்றல் எனப்படும் .
ஒத்திகை செய்தல் விபரித்தல் ஒழுங்கமைத்தல் கிரகிப்பு நெறிகை கவனக்குவிப்பு முதலியவற்றால் பொருளுணர் கற்றலை வளப்படுத்தலாம் கடின மட்டத்தை அறிவதற்குச் செயற்பணிப் பகுப்பாய்வூ துணை செய்கின்றது .கற்றற் பணிகளை நிரலாக்கம் செய்துள்ள உளவியலாளர் காக்னே கீழ் மட்டத்திலுள்ள கற்றற் பணிகளின் மீதே மேல் மடக்கற்றல் பணிகள் அமைந்துள்ள மையைக் குறிப்பிட்டுள்ளார் இந்தநிலையில் மாணவரின் அடித்தள ஆற்றல்மேம்பாடுகளுக்கு உதவூதல் மேலுயா;ந்து செய்வதற்குரிய அடிப்படைகளாவதை ஆசிரியர் மனங் கொள்ளல் வேண்டும் .
உதாரணமாக – வகுப்பறைச் செயற்பாடுகளை பாடதிட்டம்-வேலைத்திட்டம் -செயற்பாட்டுத்திட்மிடல் போன்ற திட்டங்களை ஒவ்வொரு தவணைக்கும் பகுத்து தொகுத்து அதனை கலைத்திட் ஒழுங்கமைப்புக்கு ஏற்ப வகுப்பறையில் செயற்படுத்தல். ஸ்கீம்-லெஷன் திட்மிடலைக் குறிப்பிடலாம்.
கலைத்திட்ட அமுலாக்கலில் பாட ஆசிரியரின் பொறுப்புக்கள்
1.பாடவிதான அபிவிருத்தி நிலையங்களினாலும் வலய பிரதேச கல்வி தினணக்களக்தினாலும் வழங்கப்படும் ஆலோசனையின்படி தனது பாடத்திட்டத்திற்குரிய ஆசிரிய கைநுhல் பாடத்திட்டம் கற்பித்தற் துணைச்சாதனங்கள் ஆகியவற்றையூம் பொறுப்புக்களையூம் சிறந்த முறையில் பரிமாறல். வழிகாட்டல் ஆலோசனைகளை சிறப்பாக கடைப்பிடித்து கலைத்திட் - பாடத்திட்ட ஒழுங்கமை;பையூம் செயற்பாட்டினையூம் மேற்கொள்ளல்.
உதாரணமாக – வகுப்பறைச் செயற்பாடுகளை தவணை அடிப்படையில் வேலைத்திட்டமாக தொகுத்தெடுத்தல்.
2.தான் கற்பிக்கும் தரங்களில் பாடங்களை கற்பித்தலுக்காக வழங்கப்பட்ட ஆலோசனை பற்றி எந்நேரமும் கவனத்தோடு இருந்தலும் அவ்வாறு புதிய ஆலோசனைக்கேற்ப கற்றல் தொடர்பாக திட்டமிடலும்.
உதாரணமாக – வகுப்பறைக் கற்பித்தலுக்கான கற்பித்தல் கருவிகள் -வளங்களைபங்கீடு செய்து கற்பித்தலை விசேட நோக்கங்களை அடையக் கூடியவகையில் கற்பித்தல்.
3.அக் குறிப்பிட்ட பாடத்தை கற்பிக்கும் ஏனைய ஆசிரியரோடு தொடர்பு கொண்டு கற்பித்தல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தல் .
உதாரணமாக – பகுதித்தலைவH வகுப்பாசிரியH போன்றவHகளுடன் தொடHபை ஏற்படுத்தி கலைத்திட்டத்தில் உள்ள விடயங்களை நேHத்தியாகச் செயற்படுத்தல்.
4.வகுப்பறையில் பாடப்பரப்பை கற்பித்தலுக்கு மேலதிகமாகவூம் கலைத்திட்ட நோக்கத்தை அடைவதற்காகவூம் பாட அறிவை வளர்த்து ஓரளவூ அனுபவமாக மாற்றுவதற்குரிய போட்டி பொருட்காட்சி சுற்றுலா வெளியீடு முதலிய இணைப்பாடவிதான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து முழுமையான கல்வி அனுபவத்தை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுத்தல்
5.கற்பித்தலில் இலக்குகளை அடையூம் வரையில் ஏற்ப்படுத்தலும் நிறைவேறாத விடப்பட்ட பாடப்பகுதியை éரணப்படுத்தலுக்கு மேலதிக கற்பித்தலை ஒழுங்கு செய்தலும் .
உதாரணமாக – வகுபறையிலே கலைத்திட்டத்தினை திட்டமிட்டு ஒழுங்கு படுத்தி அதனை செயற்படுத்தல் விஷேட நோக்கங்களை அடையவேண்டிய வகையில் கற்பித்தல்.
6.இந்தவிடயம் தொடர்பாக மாணவர்களது முன்னேற்றம் அடைவூ குறித்து சோதனைகளை நடாத்தி பதிவூகளை வைத்திருத்தலும் அவற்றை அடிப்படையாக்க கொண்டு பரிகார கற்பித்தலுக்கு வகை செய்தலும்
7.தனது பாடத்திற்கு பொறுப்பான ஒப்படைக் கோவைகளை மாணவர்களுக்கு வழங்குவதற்காக தயாரித்தல். உதாரணமாக – வகுப்பறைக் கற்பித்தலிலே பாடத்தினக் கற்பித்ததன் பின்னH ஒப்படைகளை வழங்குதல்.
8.நுhல் நிலையத்தையூம் மேலதிகமான பாடப்புத்தகங்களையூம் உபயோகத்திற்காக வழிகாட்டல்
9.வகுப்பறையில் வினாவங்கி ஒன்றை அமைப்பதன் மூலம் அதிலிருந்து பயன்பெற மாணவர்களை துhண்டுதலும் ஈடுபடுத்தலும் .
10.ஆசிரிய குழாத்துடனும் அதிபருடனும் எல்லா நடவடிக்கைகளிலும் ஒத்துளைப்பாக எல்லா வேலைகள் செய்தலும் பாடசாலை வேலைகள் தொடர்பாக பொதுவான பொறுப்பை ஏற்படுத்தலும் .
11.தன்னுடைய பாடம் தொடர்பாக சேவைக்கால கருத்தரங்கில் பங்குபற்றல் அத்தகைய சந்தர்ப்பங்களில் கற்றல் கற்பித்தல் செயன்முறையை தொடந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான விதத்தில் பயன்தரும் கருத்துள்ள ஒப்படைகளை வகுப்பறையில் செயற்படுத்துவற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் அமுலாக்கலை தரப்பட செய்யலாம் .
கலைத்திட்டத்தின் நோக்கங்களும் குறிக்கோள்களும் இலக்குகளும்
1.நோக்கங்கள்
நோக்கங்கள் நீண்டகாலத்தில் அடையப்படக்கூடியவை. ஆனால் இலக்குகளை அடைவதற்கு நீண்டகால நீட்சி வேண்டியதில்லை. அத்துடன் நோக்கங்கள் பரந்த தளத்தில் இடம் பெறும் நிரந்தர நடத்தைகளுடன் தொடர்புடையவை இந்நிலையில் கலைத்திட்டத்தினால் அடையப்பட வேண்டிய நோக்கங்கள் கீழே தரப்படுகின்ற.
1.மக்களாட்சிப் பண்புகளை அகல்விரி நிலையயில் வளர்த்தெடுத்தல்.
2.மரபுகளையூம் பண்பாட்டுச் செல்வங்களையூம் பாதுகாத்தல் மற்றும் கையளிப்புச் செய்தல்
3.இனத்துவ மற்றும் தேசிய அடையாளங்களைப் பராமரித்தல்
4.வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான ஊக்லையூம் திறன்களையூம் வளர்த்தல்
5.அடிப்படைப்பாடங்களில் ஆற்றல்களையூம் பாண்டித்தியத்தையூம் வளர்தல்
6.தனியாள் ஆளுமை மற்றும் படைப்பாற்றல் புத்தாக்கத் திறன்கள் முதலியவற்றை வளர்த்தலும் மேம்படுத்தலும்
7.நாட்டின் சமூக பொருளாதார விருத்திக்கு வினைத்திறனுடன் உதவூதல்
குறிக்கோள்
1.புலமை சார்ந்தவை
நுண்திறன்களை மேம்படுத்துதல் பாண்டித்தியம் பெறல் அறிவை அகலமாக்கியூம் ஆழமாக்கியூம் ;கொள்ளல் நுண்மதித் தொழிப்பாடுகளை முதலியவை இப்பிரிவில் இடம்பெறுகின்றன. உதாரணமாக – வகுப்பறையிலே புலமைகளை திறன்களை அதிகரிக்கும் முகமாக பாடத்திட்ட உள்ளடக்கங்களை சேHத்தல்.
2.தொழில்சார் குறிக்கோள்
தாம் மேற்கொள்ளலிருக்கும் தொடர் தொழிலை இனங் காணல் அதற்குரிய உளப்பக்குவம் பழக்கவளக்கங்கள் புலக் காட்சி மற்றும் ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளல் பொருளாதார வாழ்க்கையில் முழுவீழ்ச்சில் பங்கு கொள்ளல் இங்கே முக்கித்துவம் பெறும்.
உதாரணமாக – வகுபபறைக் கலைத்திட்டத்திலே தொழில் சாHந்த பாடங்களை கற்பித்தல் அப் பாடந் தொடHபான யெசயற்பாட்டு முறைகளையூம் மேம்படுத்தல்.
3.சமூகக் குறிக்கோள்
மனித விழுமியங்ளுக்கு மதிப்பளித்தல் இசைவாக்கமுள்ள ஆளிடைத் தொடர்புகள் சமூக நீதியை நிலை நாட்டுதல் பண்பாடு காத்தல் முதலியவை இதில் இடம் பெறுகின்றன.
உதாரணமாக – அழகியல் பாக்கலைத்திட்டம்-பாடுதல் -நடனம்-ஆடுதல்-பேசுதல்-நிகழ்வரங்குகள் என்பற்றைக் கலைத்திட்டத்தில் உள்ளடக்கி பாடத்திட்டத்திநுhடாக வளHத்தல்.
4.தனியாள் குறிகோள்கள்
உடல்நலம் உளநலம் மனவெழுச்சிநலம் முதலியவற்றின் மேம்பாடுகள் ஆக்க மலர்ச்சி தன்னிலை விழிப்புணர்வூ தன்னிலை முன்னேற்றம் முதலியவை இங்கே சிறப்புப் பெறுகின்றன.
உதாரணமாக – வகுபறைச் செயற்பாட்டிநுhடக உடல்-உள-சமுக விருத்திகளை மேற்கொள்ளல். சுகாதாரம்-உடற்கல்விப் பாடற்கள் அழகியல் பாடங்களின் கலைத்திட்டம்.
சமகாலப் பாடசாலைளிலும் பல்கலைக்கழகங்களிலும் புலமை சார்ந்த குறிகோள்களின் முக்கியத்துவம் பின்தள்ளப்பட்டு தொழில்சார் குறிகோள்கள் முன்னுரிமை பெறத் தொடங்கியூள்ளன. பல்கவைக்கழக மாணவர்கள் இலகுவாக உயர்ந்த தொழில்களைப் பெறுவதற்குரிய பாடத் தெரிவூகளையூம் நாட்மங்களையூம் காட்டி வருகின்றனர் ஆழ்ந்த ஆய்வூகளில் ஈடுபடல் படைப்பற்றல் மலர்ச்சி புத்தாக்கத்திறன்களை வளர்த்தல் அறிவை முன்னரங்கை முன்னோக்கி நகர்த்துதல் முதலிய துறைகளில் உற்சாக குறைநந்த வருகின்றது
இலக்குகள்
ஆசிரியர்களது திட்டமிடற் செயற்பாடுகள் இலக்குகளால் நிர்ணயிக்கப்படுகின்றன.கற்றல் கற்பித்தலில் நிகழும் முன்னேற்றங்கள் இலக்குகளை அடிப்படையாக வைத்தே கணிப்பீடு செய்யப்படுகின்றது.எவற்றைக் கற்க வேண்டும் என்ற திட்டவட்டமான அறிவூறுத்தல்களை வழற்குவதற்கு இலக்குகளே துணைநிற்கின்றன.இலக்குகள் அற்ற கற்பித்தற் செயற்பாடானது நிறுத்தல் தடை அற்ற வாகனத்தின் நிலைக்கு ஒப்புமையாகக் கூறப்படுதல் உண்டு.நேரவியத்தையூம் கற்றல் கற்பித்தல் ஜயப்பாடுகளையூம் நீக்கி ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையே பொருத்தமான தொடர்பாடலை மேற்கௌ;வதற்கு இலக்குகள் உதவூகின்றன.
இலக்குகளை
1.நடத்தைசார் இலக்குகள்
2.போதனை சார் இலக்குகள் என்றவாறு இலக்குகள் பாகுபடுத்தப்படுகிறன.மாணவரின் ஆற்றுகையிலும் நடத்தைகளைளிலும் நிகழும் மாற்றங்களைக் கணியப்படுத்தும் முயற்சிகளை அண்மைக்காலத்து உளவியலாளர் மேற்கொண்டுள்ளனர்.ம்
நடத்தைசார் இலக்குகள் பின்வரும் மூன்று தளங்களை அடியொற்றியதாக இருக்கு
1.ஆற்றுகை தொடர்பாக ஏற்றுக் கொள்ளக்கூடிய மட்டங்கள்
2.ஆற்றுகையை மேற்கொள்வதற்குக் கட்டமைப்புச் செய்யப்பட்ட நிலவரங்கள்.
3.அடைவூகளை ஈட்டியதற்கான சான்றாதாரங்கள்.
போதனை சாH இலக்குகள்
1.நடப்பு நிலவரங்கள் மீது நேரடியான கவனக்குவிப்பை இவை ஏற்படுத்துகின்றன.
2.எவை கற்பிக்கப்படல் வேண்டும் என்ற திட்டவட்டமான பணிப்பை இவை தருகின்றன.
3.பொருத்தமான முறையியல்கள் வளங்கள் கணிப்பீடுகள் முதலியவற்றை ஆசிரியர்கள் தெரிந்தெடுத்துக் கொள்வதற்கு நேரடியாக உதவூகின்றன.
4.மாணவர்களுடனும் பெற்றௌர்களுடனும் திட்டவட்டமான தொடர்புகளை மேற்கொள்வதற்குத் துணைநிற்கின்றன.
5.ஆசிரியர் தமது கற்பித்தலின் தரத்தைத் தாமே மதிப்பீடு செய்து கொள்வதற்கு இது வழியமைக்கின்றது.
6.உடனடியான பின்னுhட்டல்களைப் பெற்றுக் கொள்வதற்குப் போதனா இலக்குகள் துணைநிற்கின்றன.
1.உறுநோக்கு
அறிவூ திறன் மனப்பாங்குகள் தொடர்பாக ஈட்டப்பட்ட வேண்டிய வெளிப்பாடுகள் இதில் இடம் பெறும்.
2.உறு தொடர்பு
ஒவ்வோர் இலக்குகளுக்குமிடையே முரண்பாடுகளும் முறிவூகளுமற்ற நேர் இணைப்புக்கள் இருத்தல் இங்கே குறிப்பிடப்படுகின்றது.
3.பொருத்தப்பாடு
மாணவரின் குறித்த வகுப்பு மட்டம் விருத்தி மட்டம் ஆகியவற்றுக்கு பொருந்தக் கூடியதாக அமைந்திருத்தல் வேண்டும்
4.தகவூடைமை
எவற்றை வெளிப்படுத்தல் வேண்டுமோ அவற்றை வெளிப்படுத்தக் கூடிய தகைமை கொண்டதாக இருத்தல் வேண்டும்
5.இயலுமை
அனைத்து மாணவர்களாலும் இலக்குகள் அடையப்படத் தக்கவையாய் இருத்தல் அவசியம்
6.குறிமை
குறிப்பிட்டுத் திட்ட வட்டமாகக் கூறக்கூடியவாறு இலக்குகள் வடிவமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்
போன்ற இலக்குசாH விடயங்கள் ஒவ்வொன்றும் கலைத்திட்டம் மூலமாக திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்டு அi வஒவ்வோன்றும் பாடத்திட்டத்தின் மூலமாக வகுப்பறையிலே செயற்படுத்தக் கூடியமுறையிலே காணப்பட வேண்யது கலைத்திட் அனுகுமுறையின் முக்கிள நோக்கமாகவே காணப்படுகின்றது.
நேர்ப் போதனை முறையை அடிப்படையாகக் கொண்ட பாடதிட்டமிடல் பின்வரும் படிநிலைகளை கொண்டதாக அமைந்தது
1.போதனைக்குரிய தயார்நிலைக்கு மாணவர்களை உட்படுத்துதல் இது எதிர்பார்ப்பு இணைமானம் யூவெiஉipயவழசல ளநவ)எனப்படும்
2.போதனை அளிக்கை புதிய விடயங்களை பொருத்தமான விளைவூகளுடன் கையளித்தல்
3.பயிற்சிகளை ஆற்றுப்படுத்தல்
4.மாணவரின் வெளிப்பாடுகளை பரிசீலித்தல்
5.ஒவ்வொருவருக்குமுரிய பயிற்சிகளை வழங்குதல்
மேற்கூறிய ஒழுங்கமைப்பினைத் தழுவிய பாடக்குறிப்பு பின்வருமாறு அமையூம்
1.பாடஅலகு இலக்கமும் திகதிம் பாடத்தலைப்பு
2. பாட இலக்ககும் இணைந்த இலக்குகளும்
3.பாடத்தின் படிநிலை அளிக்கையூம் துணைச் சாதனங்களைப் பயன்படுத்துதலும்
4.பாடமுன்னேற்றத்தை வலுப்படுத்தி கொள்ளல்
5.ஆற்றுப் படுத்திய பயிற்சிகள் வழங்கல்
6.மாணவரின் விளக்கத்தினை அறிதலும் பின்னுhட்டலும்
7.சுயாதின பயிற்சிகளுக்கு இடமளித்தல்
8.பாட முடிவூ பற்றிய மதிப்பீடு.
கற்றலை மையப்படுத்தும் கலைதிட்டம் என்பது கலைத்திட்டம் பற்றிய அண்மைக்கால மேலெழுகையாக அமைகின்றது.கடந்த நுhற்றாண்டில் பிற்கூற்றிலிருந்து பல நாடுகள் தீவிரக்கலைத்திட்ட மாற்றங்களை முன்னெடுக்கத் தொடங்கியூள்ளன. 1980 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் புதிய தேசிய கலைதிட்டம் அறிமுகம் செய்யப்பட்டது 1990 ஆம் ஆண்டில் ஹொங்கொங்கில் இலக்கு முனைப்புப்பட்ட கலைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது அதே ஆண்டில் ஜ.அமெரிக்காவின் பல மாகணங்களில் புதிய கலைத்திட்டச் சட்டகம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மரபு வழிக்கலைத்திட்டத்தையூம் நவீன கலைத்திட்டத்தையூம் வேறுபடுத்தும் பண்பு கற்றல் வெளிவருகை அடிப்படையாகக் கொண்டுள்ளது மாணவர்கள் எவற்றைக் கற்க வேண்டும் என்பதும் எவற்றை அடைய வேண்டும் என்பது இங்கே குவியப்படுத்தப்படுகின்றது .
புதிய கலைத்திட்டத்தை வடிவமைக்கும் பொழுது பின்வரும் நோக்குகள் முன்னிலைப்படுத்தப்படுகிறன.
1.மாணவரின் பலவகைப்பட்ட இயல்புகளையூம் தனித்துவங்களையூம் கருத்திலே கொண்டு நெகிழ்ச்சியான முறையிலும் இசைவாக்கம் செய்யக்கூடிய வகையிலும் கலைதிட்டம் வடிவமைக்கப்படல் வேண்டும் பரந்தபண்புகள் சமநிலைப் பண்புகள் பொருத்தப்பாட்டுப் பண்புகள் முதலியவற்றையூம் உள்ளடக்கிளிருத்தல் வேண்டும் .
2.மேற்கூறியவைபற்றிய தௌpவூ கொண்டு நோக்கும் செயற்பணிகளும் வடிவமைப்படுதலே பொருத்தமான நடவடிக்கையாகும்.
3.மாணவர்களை வெறுமனே நுகர்ச்சியாளராகவூம் செயலுhக்க மற்றவர்களாகவூம் கருதாது பல துயைகளிலும் பல தளங்களிலும் வெளிப்பாடுகளைக் காட்டக் கூடியவகையில் கலைதிட்டம் வடிவமைக்கப்படல் வேண்டும்
4.கலைத்திட்டம் கற்றல் கற்பித்தல் கணிப்பீடு கணனித் தொழில் நுட்பம் மாற்றமடைந்து வரும் சமூக பொருளாதாரச் சூழல் சமூக நோக்கு முதலியவற்றுக்கிடையே நேரிய தொடர்புகளை ஏற்படுத்துதல் வடிவமைப்பிலே சிறப்பிடம் பெறவேண்டியூள்ளது.
எதிர்கால வாழ்கைக்குரிய திறன்கள் அறிவூ மனப்பாங்கு உடலியக்க ஆற்றல்கள் வெளியிட்டு ஆற்றல்கள் என்றவாறு பல்வேறு திறன்களையூம் ஆற்றல்களையூம் உள்ளடக்கியிருத்தலோடு அவற்றிடையே சமநிலையையூம் இன்றியமையாதது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிமாணங்களாக கலைத்திட்ட அகலமும் ஆழமும் குறிப்பிடப் படுகின்றன .அதாவது பல பாடங்களை மேலெழுந்தவாரியாகக் கற்பிப்பதா அல்லது ஒரு சில பாடங்களை தெரிந்தெடுத்து ஆழமாகக் கறிபிப்பதா என்பவற்றில் முரண்பாடுகள் எழலாம்
நான்காவது பரிமாணமாக அனவது நீள்முக ஒருங்கிணைப்பும் குறுக்குமுக ஒருங்கிணைப் பும் ஆகும். குறித்த ஒருவகுப்பு மட்டத்தில் குறித்த ஒரு பாடம் ஏனைய பாடங்களுடன் கொண்டுள்ள இனணப்பு குறுக்குமுக ஓருங்கிணைப்பினாற் புலப்படுத்தப்படும் .ஜந்தாவது பரிமாணமாக கலைத்திட்ட வேறுபடுத்தல் அமைகின்றது.வேறுவேறுபட்ட ஆற்றல்கள் கொண்ட மாணவர்களுக்கு எவ்வெவ் வகையில் அவர்களது தேவைகளை நிறைவேற்றுமாறு கலைதிட்டம் தொழிப்படுகின்றது.என்பதை இந்தப் பரிமாணம் குறிப்பிடுகின்றது.கலைத்திட்ட வடிவமைப்பின் அடுத்த பரிமாணமாக பொருத்தப்பாடு அமைகின்றது.தனிமனிதர் சமூகம் பொருளாதார இயல்பு தொழில்நுட்பவியல்பு எதிர்காலத் தேவைகள் பண்பாட்டு தேவைகள் அழகிய சார்ந்த தேவைகள் அரசியல் தேவைகள் முதலியவற்றுடன் கலைதிட்டம் எவ்வகையில் இயைபும் தொடர்பும் கொண்டுள்ளது என்பதை இந்தப் பரிமாணம் விளக்குகின்றது.
மாணவர்கள் தமது தனியாள் வேறுபாடுகளுக்கு ஏற்ற வகையில் வேறு வேறுபட்ட வகையில் அறிவைக்காட்சி கொண்ட மனத்திலே நிரற்டுத்திக் கொள்கிறார்கள் சிலர் உருவநிலையில் அறிவை உள்வாங்குகின்றனர்.சிலர் அருவ நிலையில் உள்வாங்குகின்றனர்.சிலர் உற்றுநோக்குபவராக உள்ளனர் சிலர் செயற்படுனராகவூள்ளனர்.இவற்றை அடிப்படையாகக் கொண்டு நான் வகையான கற்றல் நடையியல்களைக் கட்டமைப்புச் செய்யலாம் அவை.
1.கற்பனை நிலைப்பட்ட கற்போர்
2.பகுப்பாய்வூ நிலைப்பட்ட கற்போர்
3.பொதுநெறி நிலைப்பட்ட கற்போர்
4.இயக்க நிலைக் கற்போர்
1.கற்பனை நிலைப்பட்ட கற்போர்
கற்றலை மகிழ்ச்சியானதாகவூம் முக்கியமானதாகவூம் நோக்குடையதாகவூம் இவர்கள் கருதுவர்.பிறருடர் இணைந்தும் கலந்தும் கற்கும் ஆர்வமுடையவர்களாக இருப்பர்.இவர்கள் எதிபார்க்கும் வாழ்கைக்கும் கலைத்திட்டத்துக்குமிடையே விலகல் ஏற்பட வாய்ப்பு உண்டு.
2.பகுபாய்வூ நிலைப்பட்ட கற்போர்
என்ன என்ற வினாவினால் இவர்கள் ஊக்கல் பெறுவர் அருவநிலையிலே தகவல்களை உள்வாங்கி தெறிப்பு நிலையிலே உளச் செயல்முறைக்கு உள்ளாக்குவர் பாரம்பரியமான வகுப்பறையில்.இவர்கள் முழுநிறைவாகவூம் ஒழுங்கமைந்த முறையிலும் ஊக்கலுடனும் தொழிப்படுவர் .
3.பொதுநெறி நிலைப்பட்ட கற்போர்
எவ்வாறு என்ற வினாவூடன் இவர்கள் தொழிப்படுவர் தகவல்களை உள்வாங்கி வேகமாக நிரற்படுத்துவர் கோட்பாடுகளை பொது வாழ்கையூடன் பிரயோகித்து பாப்பர்.படிக்கும் பாடம் தமது வாழ்கைக்கு ஒட்டாதிருக்கும் நிலையை உணரும் பொழுது பாடசாலை மீது இவர்களுக்கு விரக்தி தோன்றும்
4.இயக்க நிலைக் கற்போர்
தகவல்களை சரியாக உள்வாங்கி செயன்முறைகளை தழுவி மனத்திலே நிரற்படுத்திக் கொள்வர்.தமக்கே உரிய தொழிப்பாடுகளினால் பிறர் மீது செல்வாக்கினை ஏற்படுத்துவர்.கற்றற் செயன்முறைகள் ஆழ்ந்த கவனிப்பு உரியவை. இந்தச் செயன்முறையில் ஜந்து மாறிகள் சிறப்பார்ந்த கவனம் ஈர்ப்பைப் பெறுகின்றன.
அவை.
1.நோக்குகளும் இலக்குகளும்
2.கற்பித்தற் பொருட்களும் செயற்பாடுகளும்
3.நேரமும் இடைவெளியூம்
4.அளிக்கை முறை
5.மதிப்பீடும் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது என்பது பற்றியது.
இவற்றை அடிப்படையாக கொண்டு சொறின்சனும் அவரோடு இணைந்து ஆய்வாளர்களும் ஜந்து விதமான கற்பித்தல் நடையியல்களை விளக்கியூள்ளனர்.
அவை.
1.ஆசிரியரை மத்தியாகக் கொண்ட கற்பித்தல் நடையியல்
2.தன்னெறிப்பட்ட போதனா நடையியல்
3.விசாரணை முறைக்கு கற்பித்தல் நடையியல்
4.கூட்டுறவூக் கற்றல் நடையியல்
5.மாணவரை மத்தியாகக் கொண்ட நடையயியல்
இவை ஒவ்வொரு செயற்பாடுகளும் கலைத்திட்டத்தின் மூலமாக நடைமுறைப்படுத்தப் படக்கூடிய வகையிலே இயங்கு நிலையினைப் பெறவேண்டும்.இவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொண்டு கலைத்திட்டமுறை ஓழுங்குபடுத்தப்பட்ட பின் அவைவ முப்பறையிலே விசேட நோக்கங்களாக கொண்டு அவற்றை அடையூம் நோக்குடன் ஆசிரியHகள் கற்பித்தலை குறிப்பிட்ட பாடவேளைக்குள் திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும்.
1.ஆசிரியரை மத்தியாகக் கொண்ட நடையியல்
மேற்குறித்த அனைத்து மாறிகள் தொடர்பான அனைத்துதீர்மானங்களையூம் ஆசிரியரே மேற்கொள்வார் இது மரபுவழிப்பட்டதும் சாதாரணமாக நடைமுறை இருப்பையூம் கொண்டது.அதிக அளவூ மாணவர்களுக்கு அறிவைக் கையளிப்புச் செய்யக்கூடிய வினைத்திறன் கொண்;ட நடையியலாக இதுவூள்ளது.இன்றைய தொழில் நுட்பவியற் சமூகத்தில் வினா எழுப்பப்படும் அணுகுமுறையாக இது அமைந்துள்ளது.
2.தன்னெறிப்பட்ட போதனா நடையியல்
கணணியூடன் அல்லது நிரலித்த அமைப்புடன் மாணவர் தொழிற்படுவர் ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து தீர்மானங்களை மேற்கொள்வர்.மாறிகள் மீது மாணவர்கள் ஒப்hPட்டளவிலே கூடுதலான கட்டுபாட்டினைக் கொண்டிருப்பார்.
3.விசாரணை முறைக்கற்பித்தல்
மாணவருடன் தனியாகவோ குழுவாகவோ இணைந்து பங்குபற்றிக் கற்பித்தல் முன்னெடுக்கப்படும்.சிந்திப்பதற்கு பிரச்சினைவிடுவித்தலுக்குரிய கருத்துக்களை ஆசிரியர் வழங்குவர்.விசாரணையை முன்னெடுப்பதற்குரிய தௌpவூ மாணவர்க்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
4.கூட்டுறவூக் கற்றல் நடையியல்
விசாரணை நிலைக்கற்பித்தலின் விரிவடைந்த வடிவமாக இது அமைகின்றது சிறுசிறு குழுக்களாக மாணவர் தொழிப்பட்டு சமூகத்திறன்களையூம் தற்கணிப்பையூம் மேம்படுத்திக் கொள்வர் .
5.மாணவரை மத்தியாகக் கொண்ட நடையியல்
மாணவரை நடுநாயகப்படுத்தல் ஒவ்வோர் ஆசிரியரதும் உன்னதமான நோக்கமாகும் மாணவர் வாழ்நாள் முழுவதும் கற்போராக மாறுவதற்கு இந்த அணுகுமுறையே துணையாக விருக்கும்.ஒவ்வொரு மாணவரதும் கற்றல் இயல்பு பற்றியூம் அடைவூகள் பற்றியூம் நம்பகரமான தகவல்கள் திரட்டப்படும்.
கண்டுபிடிப்புக் கற்றுலுக்குரிய பாடத் திட்டமிடல் எவ்வாறு அமைக்கப்படல் வேண்டும் என்பதை நோக்கலாம் கண்டுபிடிப்புக் கற்றலுக்கான பாடத்திட்டம் பின் வரும் படிநிலைகளைக் கொண்டது .
1.பிரச்சினையை இனங்காணல்
2.கருதுகோளை உருவாக்குதல்
3.தரவூகளைச் சேர்த்தல்
4.தரவூகளைப் பகுப்பாய்வூ செய்தலும் முடிவூகளுக்கு வருதலும்
விஞ்ஞா பாடங்களை கற்று கொடுப்பதற்குக் கண்டு பிடிப்புக் கற்றல் முறை மிகவூம் பொருத்தமானதாக அமையூம்.ஒவ்வொரு வகையான கற்றல் முறைமைக்கும் ஏற்றவாறு பாடத்திட்டமிடல் வேறுபடும் என்பதை ஆசிரியர் மனங்கொள்ளல் வேண்டும் இதற்கு அடுத்ததாக கூட்டுறவூக் கற்றலுக்குரிய பாடத்திட்டமிடலின் படிநிலைகளை நோக்கலாம்
1.இலக்குனளை தீர்மானித்தல்
2.மாணவர்கள் கூட்டாகவூம் குழுவாகவூ செயற்படுவதற்குரிய பொருட்களைத்
தெரிவூ செய்தல்
3.பாடம் தொடங்குவதற்கு முன்னோடியாக பாடத்தின்பிரதான
எண்ணக்கருக்களை விளக்குதல்
4.குழு நிலையிலும் கூட்டுறவூ நிலையிலும் மாணவர்கள் செயற்படு
மாற்றைப் படிநிலைகளாக விளக்குதல் நேர அளவீடுகளை வரையறுத்துக் கூறல்
5.பெறப்பட்ட முடிவூகளை மதிப்பீடு செய்தல் மிளாய்வூ செய்தல்
பின்னுhட்டல் வழங்குதல்
அழகியல் பாடங்களை திட்டமிடுகின்ற போது அதற்கேற்ற பாடதிட்டதினைக் கொண்டு அதன் செயற்பாடுகளைத் திட்டமிட வேண்டும்.அழகியல் பாடங்கள் மாணவHகளின் உடல்-உள-சமுகவிருதிதியோடு தொடHபடையதாகவே காணப்படுகின்றது. இவை இணப்பாட விதானச் செயற்பாடுகளோடு இணைந்தவாறே அழகியல் பாட கலைத்திட்ட திட்டமிடல் காணப்பவேண்டியது அவசியமான ஒன்றாகும். குலை கலாசாரப் பண்புகளை மாணவHகளுக்கு வளHக்கக்கூடிய வகையிலையே இப்பாட கலைத்திட்ட திட்டமிடல் இருக்க வேண்டும். மாணவHகளின் பழக்க வழக்க பண்புரீதியான அடைவூமட்டங்களை வெளிப்படுத்த வளHக்க கூடியவகையிலும் ழெகியல் பாடத்திட்டங்களும் அதற்கான செயற்பாடுகளும் அமைய வேண்டும். ஆதன் செயற்பாடுகளாக
1.கரு களம் வெளிப்பாட்டு வரையறைச் செயற்பாடுகள்.
2.பாத்திரமேற்றல் வகிபங்கு
3.கிரகிப்பு ஒழுங்குகள்
4.தனி-குழுவாக சேHந்து செயற்படுதல்.
5.நெறிப்படுத்தலை அவதானித்தல்.
6.தெரிவூ செய்தலும் - அதனை விளக்குதலும் முக்கியம் பெறுகின்றது.
தொழில் பாடங்களுக்கான கலைதிட்ட ஒழுங்குகளிலே அதன் பாடதிட்டம் அதற்கான செயற்பாட்டுத் திட்டமிடல் முக்கியமானதபகும். தொழில் விருத்தியினை மையமாகக் கொண்டதாக இது அமையவேண்டியது கட்டாயம்.
மாணவHகளின் உடல்விருத்தி – தொழினுட்ப விருத்தியினை மேம்படுத்தும் வளHக்கும் முறையிலே இப்பாடதிற்கான கலைத்திட்ட சேHமானம் காணப்பட வேண்டும். தோழில் பற்றிய அறிவூ –தொழில் அனுபவங்கள் - தொழில் நுட்பங்கள் -தொழில் விருத்தி போன்ற விடங்கள் கலைத்திட்ட பாடதிட்ட செயல்முறையி;ல் செல்வாக்குச் செலுத்துகின்றது. இவற்றின் செல்வாக்கு சிறந்த விளைதிறன் -வினைத்திறன் விருத்திக்கு வித்திடுகின்றது. தொழில் பாடங்களுக்கான கலைதிட்ட பாடத்திட்ட – செயற்பாட்டடுத் திட்டமிடல் ஒழுங்குகளில் ..
தொழில் வழிகாட்டல் ஆலோசனைகள்
தொழிலை இனம்காணல்
தொழில் கருவிகளின் இணைப்பு-பயன்படு தன்மைகள்.
தொழில் நுட்பங்கள்.
தோமில் செய்யூம் மனப்பாங்கு விருத்தி போன்றன முக்கியமாக திட்டமிடப்பட வேண்டும்
ஆசிரியரின் பாடத்திட்டமிடற் செயற்பாடுகளை அடியொற்றியதாகவே வகுப்பறை நடத்தைகள் அமையூம் என்பதை மனங் கொள்ளல் வேண்டும் மாணவரின் அறிவூத்தளத்துக்கு ஏற்றவாறு பாடத்திட்டமிடல் அமைக்கப்பட வேண்டும் என்பது கல்வியியலில் வலியூறுத்தப்படும் ஒர் அடிப்படைக் கருத்தாக பாடத் திட்டமிடலில் மாணவரின் பன்முகப்பாடுகள் கருத்துhன்றி நேக்கப்படவேண்டியூள்ள .மேலும் பாடத்திட்டமிடல் என்பது சார்பு நிலை கொண்டது அதாவது குற்ப்பிட்ட ஒரு திட்டமிடும் முறைதான் சரியானது என்ற வாதிட முடியாது
பாடதிதிட்டதில் உள்ள பல விடங்களை மாணவHகளுக்கு விளக்குவதாக – கற்றுக்கொடுப்பதாக கற்பித்தல் அமைகின்றது. தேசிய குறிக்கொளை அடைவதற்கு முதலில் வகுப்பறையில் பல ஆயிரக்கணக்கான சிசேட குறிக்கோள்கள் அடையப்பட வேண்டும். 40 நிமிட பாடவேளைக்குள் வகுப்பறைக் குறிக்கோள்கள் அடையப்பட வேண்டிய முறையில் பாடதிட்டத்தோடு அதன் செயற்பாடுகளும் வடிவமைக்கப்பட வேண்டும் அவை வகுப்பறையில் செயற்படுத்தக் கூடியதாக அமையவேண்டும். குற்பித்தல் பல முறைகளைப் பயன்படுத்தி கணிதம்-தமிழ்-விஞ்ஞானம்-புவியியல்-அழகியல் பாடங்கள்-தொழில் பாடங்கள் போன்ற பாடங்களுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டத்தில் உள்ள அலகுகளுக்கு ஏற்ற வகையில் அதன் செயற்பாடுகளும் திட்டமிட்ப்பட வேண்டியது மிகவூம் அவசியமானதாகும்.
கல்வியியலாளன் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ),
உசாத்துணை நுhல்கள்.
1. கனகலிங்கம்.க.முஇ2005இகல்வியூம் கலைத்திட்ட அமுலாக்கமும்இஅகவிழிஇவிழி -02இபாHவை 16இபக்கம்.29-32
2. ஜெயராசா.சபாஇ2005இகலைத்திட்டமும் முழுமைநிலைத்தர மேம்பாடுஇ அகவிழிஇ விழி -02இபாHவை 16.
3. ஜெயராசா.சபாஇ2005இகலைத்திட்டம்இ அகவிழிஇ கொழும்பு.
No comments:
Post a Comment