முன்பள்ளியின் கட்டமைப்பு.
முன்பள்ளியொன்றின் வெற்றியில் அதன் கட்டடம் தளபாடங்கள் சுற்றாடல் பொருட்கள் உபகரணங்கள் வகுப்பறையின் உள்ளக ஏற்பாடுகள் என்பனவூம் முக்கிய இடத்தை வகிக்கின்றன.சிறந்த முன்பள்ளி என்பதில் கற்றல் நடவடிக்கைகள் போன்றே பௌதிகக் கட்டமைப்பும் நேர்த்தியாக இருத்தல் வேண்டும்.
இடத்தை தெரிவூ செய்தல்.
குறைந்தது ஐம்பது குடும்பங்களாவது நிரந்தரமாக வாழ்கின்ற இடத்துக்கு அண்மித்ததாக இருத்தல் பொருத்தமானதுஇபாலர் பாடசாலை முறைசார் பாடசாலையின் ஒரு பகுதியாக விருத்தியடைவது மிகவூம் சிறப்பானதுஇவைத்திய வசதிகள் முதலுதவி வசதிகளை இலகுவில் பெற்றுக் கொள்ளக்கூடிய இடமாக அமைதல் பொருத்தமானதுஇபெற்றௌர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இலகுவில் போய்வரக் கூடிய இடமாக இருக்க வேண்டும்இதொழிற்சாலைகள் கல் உடைக்கும் வேலைத்தளங்கள் மரம் அரியூம் ஆலைகள் போன்ற சுற்றாடலை மாசாக்கும் காரணிகள் அற்ற இடமாகவூம் பெரும் வீதி ஆறு கால்வாய் போன்ற ஆபத்தான அம்சங்கள் அற்ற இடமாகவூம் இருப்பது பொருத்தமானது.
பாலர் பாடசாலைக்கான காணியைத் தெரிவூ செய்யூம் போது
ஆழமான பள்ளங்கள் குழிகள் அற்ற கற்பாறைகள் அற்ற கால்வாய்கள் அற்ற இடமாக இருப்பதும் நீர் வசதியூள்ள நேர்த்தியான இடமாக இருப்பதும் முக்கியமானதுஇhலர் பாடசாலைக் கட்டடத்துக்கு இயற்கை ஒளியூம் காற்றௌட்டமும் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.குடிநீர் பெறக்கூடிய வசதியூம் இருக்க வேண்டும்இபாலர் பாடசாலை அமைக்கப்பட்ட பின் எதிர்கால அபிவிருத்திக்கான இடவசதி இருப்பதும் முக்கியமானதுஇகட்டடத்தைச் சுற்றி மதில் அல்லது பூஞ்செடிகளினாலான வேலி அமைக்கப்பட்டிருப்பது சிறந்தது.முள்ளுக்கம்பி அல்லது முட்கள் உள்ள மரங்களாலான வேலி பொருத்தமற்றதுஇபாலர் பாடசாலை வளாகத்துக்கு வருவதற்கு ஒரு நுழைவாயில் இருப்பது போதுமானது.பல வழிகள் இருபப்து இடைஞ்சலாக அமையூம்இபாலர் பாடசாலைக்கு ஒரு அலுவலகம் அமைக்கப்கட வேண்டுமாயின் அதனைப் பாதையை எதிர் நோக்கியதாக கட்டிடத்தி;ன் ஓர் ஓரத்தில் அமைத்துக்கொள்வது நல்லதுஇபாலர் பாடசாலைக்காகத் தெரிவூ செய்யூம் வளாகம் கட்டிடம் விளையாட்டு இடம் உட்பட சராசரியாக ஒரு பிள்ளைக்கு 60-70 சதுர அடிகளாவது அமைந்திருப்பது பொருத்தமானது.
சிறந்த வகுப்பறைக் கட்டிடத்தின் பண்புகள்
வகுப்பறை ஒரு பிள்ளைக்கு ஏறத்தாழ இருபது சதுர அடி இடத்தைக் கொண்டிருக்க வேண்டும்இ20 பிள்ளைகளுக்கு ஒரு கழிவறையாவது இருப்பது சிறந்ததுஇகுடிநீர் பெறுவதற்கான குழாய் வசதி அல்லது சுத்தமான நீர் நிரப்பிய தொட்டி இருக்க வேண்டும்இமுதலுதவி ஏற்பாடுகள் இருக்க வேண்டும்.தேவை ஏற்பட்டால் சமையல் செய்வதற்கான ஏற்பாடும் இருக்க வேண்டும்இவகுப்பறையின் சுவர்கள் உயரம் குறைந்ததாக அமைவது சிறந்தது.சூரிய ஒளி படாத வகையில் மறைக்கப்பட்டிருத்தல் சிறந்ததுஇகூரைக்கு ஓலை வைக்கோல் போன்றவை கூடச் சிறந்தவை தான். ஆனால் பாதுகாப்புக் குறைவானது. அடிக்கடி மாற்றுவதும் சிரமமானது. அவ்வாறான கூரைகளில் கீழ் பலகையிலான மறைப்பு இட்டுப்பாதுகாப்பானதாக ஆக்கிக்கொள்ளலாம்.
வகுப்பறையின் சிறப்பான ஏற்பாடுகள.;
ஒரு மணல் மூலை இருக்கவேண்டும் மணல் களிமண் என்பவற்றால் பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளமுடியூம்; எனவே இதற்கென ஒரு தனியான இடம் இருப்பதே பொருத்தமானது பிள்ளைகளைப் சுதந்திரமாக இத்தகையசெயற்பாடுகளில் ஈடுபட வைப்பதற்கும் இது பெரிதும் உதவூம். களியினால் செய்யப்பட்ட ஆக்கங்களைக் காட்சிப்படுத்த ஓர் இடம் ஒதுக்கப்படல் சிறந்தது. ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தனித்தனியே களி போன்றவற்றை வைக்காது பொதுவாக வைத்துச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதே சிறந்தது
தண்ணீர் வைக்கும் இடம்.
செயற்பாடுகளின் பின்பு பிள்ளைகள் கைகளைச் சுத்தம் செய்து கொள்ளவூம் வேறு நீர்த் தேவைகளுக்காகவூம் நீரைப் பெறவூம் முன்பள்ளியில் வசதியிருக்க வேண்டும.; சிறிய நீர்த்தொட்டி ஒன்றை அமைத்து நீர் அள்ளி எடுப்பதற்கான ஒரு சிறிய பாத்திரத்தையூம் வைப்பதால்; பிள்ளைகள் சுயமாகவே தண்ணீர் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
புத்தக மூலை.
முன்பள்ளி வயதில் உள்ள பிள்ளைகள் எழுத்துக்களை அறிந்து புத்தகங்களை வாசித்துக் கிரகிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதில்லை படங்கள் சித்திரங்கள் ஓவியங்கள் உள்ளடங்கப்பட்ட பல்வேறு புத்தகங்களை கொண்டதாக இப்புத்தக மூலை அமைக்கப்பட வேண்டும்.6-10 மாணவர்களுக்கு ஏக காலத்தில் பயன்படுத்தக்கூடியதாக அது இருக்க வேண்டும்.அரை வட்ட அல்லது வட்ட வடிவான மேசையை இதற்காகப் பயன்படுத்தலாம்.சதுர மேசை கூட பயன்படுத்தப்படலாம்.பிள்ளைகள் உட்கார்ந்து அல்லது நின்ற நிலையில் புத்தகங்களைப் பயன்படுத்தக்கூடிய வகையில் மேசை உயரம் குறைந்ததாக இருக்க வேண்டும்.பறவைகள் மிருகங்கள் இயற்கைக் காட்சிகள் என்பவற்றை உள்ளடக்கிய படங்கள் புத்தகங்கள் இப்புத்தக மூலையில் வைக்கப்பட வேண்டும்.
புத்தாக்கங்கள் வைக்குமிடம்.
மாணவர்கள் அன்றாடம் ஈடுபடுகின்ற செயற்பாடுகளின் மூலம் பல்வேறு ஆக்கங்கள் உருவாக்கப்படும் சிறிது காலம் செல்லும்போது பெரும்தொகையான ஆக்கங்கள்திரண்டுவரும். அவற்றுள் தெரிவூ செய்த ஆக்கங்களைக் காட்சிப்படுத்தி வைப்பதற்க்குரிய ஓர் இடம் முன்பள்ளியில் இருக்கவேண்டும் ஒரே பார்வையில் ஆக்கங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கவேண்டும். அவற்றை ஆக்கியவர்களது பெயர்களையூம் ஆக்கங்களின் மீது ஒட்டி அல்லது இனைத்து விடுவது சிறந்தது.
முன்பள்ளியின் முகாமைத்துவக் கட்டமைப்பு
முன்பள்ளியின் முகாமைத்துவ கட்டமைப்பு பல விடயங்களை உள்ளடக்கியது.
முன்பள்ளி முகாமைத்துவம்.
கட்டணம் அறவிடுதல் பற்றுச்சீட்டு வழங்குதல் ஊழியர்களும் அவர்களுக்கான சம்பளங்களும் ஆசிரியைகளின் வேலைப்பகிர்வூகள் நேர அட்டவனை போன்றவை இவற்றுள் முக்கியமானவை.
பிள்ளைகளின் நடவடிக்கைகளை ஒழுங்கமைத்தல்
முன்பள்ளியின் நோக்கங்கள் நிறைவேற்றப்படும் வகையிலும் பிள்ளைகளின் உடல் உள விருத்தி மட்டத்துக்குப் பொருத்தமான வகையிலும் திறன் மற்றும் எண்ணக்கரு விருத்தி நிகழும் வகையிலும் வேலைத்திட்டங்கள் ஒழுங்கமைக்கப்படல் வேண்டு;ம.;
ஒரு முன்பள்ளியின் குறைந்த பட்ச அன்றாட நடவடிக்கைகள.;
சமய அனுஷ்டானம்இகுசலம் விசாரித்தல். பிள்ளைகளிடம் தகவல்கள்கேட்டல்இஉடலைத் தயார் படுத்தும் உடற்பயிற்சிஇதேனீர் உணவூவேளைஇபாட்டுப்பாடுதல் கதை கூறல்இவாரத்திற்க்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் சுதந்திர ஆக்கச்செயற்பாடுகளில் ஈடுபடுதல்இவகுப்பறையை ஒழுங்குபடுத்தல் சுத்தம் செய்தல் பொருட்களை உரிய இடங்களில் வைத்தல்இஆசிரியருக்கு வாழ்த்துக்கூறல்இசமய நிகழ்வூ(பாடசாலை வேளையின் நிறைவூ)இபாடசாலையை விட்டுச்செல்லல்.
• அறிக்கையிடல்.
முன்பள்ளியின் ஒவ்வொரு நிகழ்வையூம் ஒவ்வொரு பிள்ளையினதும் முன்னேற்றத்தையூம் நடத்தைக் கோலங்களையூம் விருத்திக்கோலங்களையூம் இயன்றளவூக்கு அறிக்கையிடல் மூலம் பல நன்மைகளை அடையலாம.; பிள்ளைகள் பற்றிய தரவூகள் தகவல்கள் முக்கிய நிகழ்வூளை அறிக்கையிட வேண்டுமென்று பொதுவாகக் கூறப்படுகிறது.
1.அடிப்படைத்தகவல்கள்-பெயர் முகவரி பிறந்த திகதி வயது.
2.வீட்டுப்பின்னணி-பெற்றௌர் விபரம் சகோதர சகோதரிகளின் விபரம் தொழில் வயது பொருளாதார நிலமை வீட்டையடையூம் வழி.
3.உடல் விருத்தி-உயரம் நிறை விசேட இயல்புகள் விசேட தேவைகள.;
4.சமூக விருத்தி-ஏனையோருடன் பழகும் போதுள்ள நிலமை தனிமையை விரும்புதல் தலைமைத்துவத்தை ஏற்றல் முன்வருதல் கூட்டுச்சேருதல் ஏனைய பிள்ளைகளுக்கு தொந்தரவூ செய்தல் உதவி செய்தல் விசேட ஆற்றலகள் N;பான்றவை.
5.நடத்தை இயல்பு-மலர்சி முன் கோபம் ஏனைய பிள்ளைகளிடையே உள்ள வரவேற்பு பயம் விருப்பு வெறுப்புக்கள் போன்றவை.
கல்வியியலாளன்
எஸ்.எஸ்.ஜீவன்
B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ), SLTS(2)
உசாத்துணை நூல்கள்.
1.அனுஸ்யா.சஇ(2007)இஆரம்பக்கல்வி ஆசிரியர்களும் அவர்களுக்கான தேர்ச்சித் தேவை களும்இ அகவிழி.
2.அருள்மொழிஇசெ.(2010)இ.பிள்ளைவளர்ச்சியூம்கற்றலும்இராஜாபுத்தகநிலையம்இமட்டக்களப்புஇ.பக்கம்(997).
3.இராஜேஸ்வரன்இப.திருவாசகன்இந.(2003)இகல்வியியலாளன்இகல்வியியல்வெளியீட்டு நிலையம்இயாழ்ப்பாணம்இபக்கம்(52-59).43.ஜெயநந்தினிஇஎ.(2009-2010)இகல்விஇகல்விமாணிச்சங்கம்கல்விபிள்ளைநலத்துறைகிழக்குபல்கலைக்கழகம்இவந்தாறுமூலைஇபக்கம்(19-24).
4.ஜெயராசாஇசபா.(2005)இகுழந்தைஉளவியலும்கல்வியூம்இபூபாலசிங்கம்இகொழும்புஇபக்கம்(103-109).
5.கருணாநிதி.மாஇ(2008)இவகுப்பறைமுகாமைத்துவமும்ஒழுக்காற்றுப் பிரச்சினைகளும்இஅகவிழி.
6.கோணேஸ்வரன்இஆர.;(2008)இகற்றலைப்பாதிக்கும் காரணிகள்இஅகவிழிஇபக்கம்(7).
7சத்தார்இஎம்.பிர்தௌஸ்இ(2009)இநிலைமாற்று முகவர்இஅன்னை வெளியீட்டகம்.
8.சின்னத்தம்பிஇக (2007)இகல்வி ஆய்வில்இவளர்மதிஇகுடைக்காடுஇஅச்சுவேலி.
9.சந்திரசேகரம்இசோ.(2006)இமுன்பள்ளிக்கல்வியின் முக்கியத்துவம்இஅகவிழிஇபக்கம்(13)
10சிவநடேஸ்.செஇ(2006)இபாடசாலை அபிவிருத்திஇகல்விச் சங்கம்இகிழக்குப் பல்கலைக்கழகம்.
No comments:
Post a Comment