Friday, February 14, 2020

கல்வியில் உளவியல்

      கல்வி உளவியல் என்பது கற்றல்-கற்பித்தல் முறையில் ஆசிரியர்கள் மாணவர்களின் நடத்தையைப் பற்றி முறையாக ஆராய்வது ஆகும்.  மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள், ஓடுதல், நடத்தல் போன்ற உடலியக்கச் செயல்கள், மனச் செயல்பாடுகளான மகிழ்ச்சி, வருத்தம், கோபம் போன்றவற்றையும் குறிக்கும்.
      இது மனதின் நனவு நிலை, நனவற்ற நிலை ஆகியவற்றைக் குறிக்கும்.  கல்வி உளவியல் மாணவர்களின் வெளிப்படையான நடத்தையும், ரகசிய நடத்தையும் குறிக்கும்.  மனிதர்கள் மற்றும் மிருகங்களின் நடத்தையும் குறிக்கும். மனிதர்கள் மற்றும் மிருகங்களின் நடத்தையும் குறிக்கும். நடத்தையை நேர்முகமாக வளர்க்கக் கூடிய அறிவியல் தான் கல்வி உளவியலாகும்.  கல்வி உளவியலானது வருவது உரைத்தல், திருத்தம் செய்தல், போன்ற நோக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். எனவே கல்வி உளவியல் என்பது கற்றல்-கற்பித்தல் போன்றவற்றை விவரிக்கின்ற உளவியலின் ஒரு பகுதியாக இருக்கிறது.

No comments:

Post a Comment