Monday, February 24, 2020


 உலகமயமாதல்.  - எஸ்.எஸ்.ஜீவன்
1.உலகமயமாதல்
1.1.அறிமுகம்
உலகமயமாதல் என்பது தொலைத்தொடர்புஇ போக்குவரத்துஇ தகவல் தொழில்நுட்பம்இ அரசியல்இ பண்பாடுஇ ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக சமூகங்களுக்கிடையேயான அதிகரிக்கும் தொடர்பையூம் அதனால் ஏற்படுத்தப்பட்டுவரும் ஒருவரில் ஒருவர் தங்கிவாழ் நிலையையூம் உலகமயமாதல் எனலாம். உலகமய சு+ழலில் ஒரு சமூகத்தின் அரசியல்இ பொருளாதாரஇ சமூகஇ பண்பாட்டு நிலைமைகளும் நிகழ்வூகளும் மற்றைய சமூகங்களில் கூடிய விகித தாக்கத்தை ஏதுவாக்குகின்றது. உலகமயமாதல் வரலாற்றில் ஒரு தொடர் நிகழ்வூதான்இ ஆனால் இன்றைய சு+ழல் உலகமயமாதலை கோடிட்டு காட்டுவதாக அமைகின்றது. உலாக மயமாதல் இலங்கை போன்ற மூன்றாம் நாடுகளிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியூள்ளது இது கல்வித்துறையிலும் பாரிய மாற்றத்தினையூம்இ கலைத்திட்ட மாத்தினையூம் ஏற்படுத்தி வருவதனைக் காணலாம்.
உலகமயமாதல் ஆங்கிலத்தில் பரவிய "படழடியடணையவழைn" என்ற கருத்துருவாக்கத்தின் தமிழ்ப்பதம் ஆகும். தமிழில் உலகமயமாக்கம் என்ற சொல்லும் சில வேளைகளில் "படழடியடணையவழைn" க்கு ஈடாக பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் அச்சொற்களின் பொருள் வேறுபாடு கவனிக்கத்தக்கது. உலகமயமாதல் தானாக விரியூம் ஒரு செயல்பாடுஇ அல்லது அதை நோக்கிய ஒரு கருத்துப்பாடு. உலகமயமாக்கம் என்பது யாரோ அதன் பின்னால் இருந்து ஆக்குவதா பொருள் தொனிக்கின்றது. உலகமயமாதல் என்பதைப் பொருளாதாரம் தொடர்பில் பயன்படுத்தத் தொடங்கியது 1981 ஆம் ஆண்டிலேயேயாகும். தியோடோர் லெவிட் (வூhநழனழசந டுநஎவைவ) என்பவர் எழுதிய சந்தைகளின் உலகமயமாதல் (புடழடியடணையவழைn ழக ஆயசமநவள) என்னும் நூலில் உலகமயமாதல் என்பது பொருளாதாரம் தொடர்பில் பயன்படுத்தப்பட்டது. உலகம் தழுவிய சமூகவியல் ஆய்வூகளிலும்இ இது ஒரு பரந்தஇ அனைத்தும் தழுவிய தோற்றப்பாடாக (phநழெஅநழெn) உணரப்பட்டது.

1.2. உலகமயமாதல் என்பது பல கோணங்களில் இருந்து நோக்கப்படுகின்றது:
வளர்ந்து வரும் நாடுகளுக்குஇ அதிகரித்த வாழ்க்கைத் தரத்தையூம்இ வளத்தையூம் கொண்டுவருகின்றது என்பதும்இ முதலாம் உலக நாடுகளினதும்இ மூன்றாம் உலக நாடுகளினதும் நிதி வளத்தைப் பெருக்க உதவூகிறது என்பதும் ஒரு வகையான நோக்கு. இது உலகமயமாதலைப் பொருளியல் மற்றும் சமூக அடிப்படையில் ஒரு விரும்பத்தக்க விடயமாகக் கருதுகின்றது.
இன்னொரு நோக்குஇ பொருளியல்இ சமூக மற்றும் சு+ழலியல் அடிப்படையில் உலகமயமாதலை எதிர்மறையானஇ விரும்பத்தகாத ஒரு விடயமாகக் கருதுகின்றது. இதன்படிஇ உலகமயமாதல்இ வளர்ந்து வருகின்ற சமுதாயங்களின் மனித உரிமைகளை நசுக்குகிறது என்றும்இ வளத்தைக் கொண்டுவருவதாகக் கூறிக்கொண்டு கொள்ளை இலாபமீட்டுவதை அனுமதிக்கிறது என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது. இவை தவிரப் பண்பாட்டுப் பேரரசுவாத (உரடவரசயட iஅpநசயைடளைஅ) நடவடிக்கைகளினூடாகப் பண்பாட்டுக் கலப்புக்கு வழி வகுப்பதும்இ செயற்கைத் தேவைகளை ஏற்றுமது செய்வதும்இ பல சிறிய சமுதாயங்கள்இ சு+ழல்கள் மற்றும் பண்பாடுகளைச் சிதைத்து விடுவதும் இதன் எதிர்மறை விளைவூகளாக எடுத்துக் காட்டப்படுகின்றன.

1.3. உலகமயமாதலும் பண்பாடும்
உலகமயமாதல் பண்பாட்டு மாற்றத்தினை அதிகரித்ணத வருவது பிரச்சினையாகும் உலகமயமாதல் பலமான மொழிஇ பண்பாட்டுஇ அடையாளங்களை முன்னிறுத்தி சிறுபான்மை இன - மொழி - பண்பாட்டு அழிவூக்கு அல்லது சிதைவூக்கு இட்டு செல்வதாக சிலர் வாதிக்கின்றனர். இக்கூற்றில் உண்மையூண்டுஇ எனினும் ஒரு சமூகத்தின் அடிப்படைக் கூறுகளை இழக்காமல் உலகமயமாதல் உந்தும் அல்லது தருவிக்கும் அம்சங்களையூம் ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ள முடியூம். அதாவது உலகமயமாதல் இருக்கும் ஒன்றின் அழிவில் ஏற்படமால்இ இருக்கும் ஒன்றௌடு அல்லது மேலதிகமான அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஒரு உந்தலாகவூம் பார்க்கலாம்.

1.4. உலகமயமாதலும் சாதியக் கட்டமைப்பும்
உலகமயமாதல் பல முரண்பாடான விளைவூகளை உந்தக்கூடியது. ஒரு புறத்தில் மரபுவழி சாதிய-சமூக கட்டமைப்புக்களால் பிணைக்கப்பட்டஇ ஒடுக்கப்பட்டஇ சுரண்டப்பட்ட சமூகங்களைஇ குடுமங்களைஇ தனிமனிதர்களை விடுவிக்ககூடிய தொழில்இ தொடர்புஇ போக்குவரத்துஇ கல்வி வாய்ப்புக்களை உலமயமாதல் முன்வைக்கின்றது. அதேவேளை பொருள் முதலாளித்துவ சுரண்டலுக்கும்இ அடிமைத்தனத்துக்கும்இ சமூக-குடும்ப சிதைவூக்குமான காரணிகளையூம் உலகமயமாதல் கொண்டிருக்கின்றது.
1.5. அரசியல்
உலகமயமாதல்இ நாடுகளின் முக்கியத்துவத்தைக் குறைக்கின்றது. பல்வேறு பன்னாட்டு ஒப்பந்தங்கள் மூலம்இ பல நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய நிறுவனங்களான ஐரோப்பிய ஒன்றியம்இ உலக வணிக அமைப்புஇ ஜி8இ உலகக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற அமைப்புக்கள் நாடுகளின் செயற்பாடுகள் சிலவற்றைப் பதிலீடு செய்கின்றன. ஐக்கிய அமெரிக்காவின் வலிமை ஒப்பீட்டளவில் குறைந்ததற்கான காரணம் உலகமயமாதலும் அதன் வழியான வணிகப் பற்றாக்குறையூமே என்பது சில ஆய்வாளர்களுடைய கருத்து. இது ஆசியாவை நோக்கிய உலக அதிகாரப் பெயர்ச்சிக்கு வழி வகுத்துள்ளதாகவூம் கருத்து உண்டு. குறிப்பாகச் சீனா பெரிய சந்தை வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 2011 ஆம் ஆண்டின் நிலவரப்படிஇ 2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவை முந்தும் நிலையில் சீனா உள்ளது.

1.6. பண்பாடு
மாண்டரின் மொழியே உலகின் மிகப் பெரிய மொழி. 845 மில்லியன் மக்கள் இதைப் பேசுகின்றனர். இதற்கு அடுத்த நிலையில் 329 மில்லியன் மக்களுடன் எசுப்பானிய மொழி உள்ளது. மூன்றாவது இடத்தில் ஆங்கிலம் உள்ளது. ஆனாலும் உலகமயமாதலின் மொழியாக இருப்பது ஆங்கிலமே. இதனால்இ உலக அளவில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் அதிகமாக உள்ளது.
உதாரணமாக
உலகின் 35மூ கடிதங்கள்இ தந்திகள் போன்றவற்றின் மொழி ஆங்கிலமாக உள்ளது.
உலகின் 40மூ வானொலி நிகழ்ச்சிகள் ஆங்கிலத்திலேயே நடைபெறுகின்றன.
ஏறத்தாள 3இ5 பில்லியன் மக்கள் ஆங்கிலத்தில் ஓரளவூ பரிச்சயம் கொண்டவர்கள்.
இணையத்தில் ஆங்கிலமே முதன்மை மொழியாகத் திகழ்கின்றது.
பண்பாட்டு உலகமயமாதல்இ பண்பாடுகளுக்கு இடையேயான தொடர்புகளை அதிகரித்து இருக்கும் அதே வேளைஇ சமுதாயங்களின் தனித்துவங்களைக் குறைக்கிறது. உலகமயமாதல்இ தனிமனிதர்களை அவர்களது மரபுகளில் இருந்து தனிமைப்படுத்துகிறது என்றாலும்இ மேற்படி விடயத்தில் நவீனத்துவத்தின் தாக்கத்தோடு ஒப்பிடும்போது உலகமயமாதலின் தாக்கம் மிதமானதே என்றும் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். உலகமயமாதல் மூலம்இ பொழுதுபோக்கு வாய்ப்புக்களும் விரிவடைந்துள்ளன. குறிப்பாக இணையம்இ செய்மதித் தொலைக்காட்சி போன்றவற்றின் ஊடாக இது நடைபெறுகிறது.
எந்த ஒரு நேரத்திலும் 500இ000 பேர் வானூர்தியில் பறந்துகொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் பன்னாட்டுச் சுற்றுலாத்துறை 919 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியூள்ளது. இது 2009 ஆம் ஆண்டைவிட 6.5மூ கூடுதலானது. 2008 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும்இ சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் உட்பட 200 மில்லியன் புலம் பெயர்ந்தோர் இருப்பதாகஇ புலப்பெயர்வூக்கான பன்னாட்டு அமைப்பு கண்டறிந்துள்ளது. இவர்கள் வளர்ந்துவரும் நாடுகளுக்கு அனுப்பும் பணம் அக்காலப் பகுதியில் 328 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

1.7. பொருளியல்
1955 ஆம் ஆண்டுக்கும் 2007 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உற்பத்திப் பொருட்களினது பன்னாட்டு வணிகம் 100 மடங்குகளுக்கு மேலாக (95 பில்லியன் ஐ.அ.டாலர்களில் இருந்து 12 டிரிலியன் ஐ.அ.டாலர்கள் வரை) அதிகரித்து உள்ளது. உதாரணமாக 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்இ விரிவடைந்த வணிகம்இ முதலீடு என்பவை காரணமாக ஒவ்வொரு நாளும் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான பல நாட்டு நாணய வணிகம் இடம்பெற்றது.
வணிகப் போட்டிகளுக்குத் தாக்குப் பிடித்துஇ உலக வணிகச் சந்தையில் நின்று நிலைப்பதற்கு நிறுவனங்கள்இ தமது உற்பத்திகளை மேம்படுத்த வேண்டி இருப்பதுடன்இ தொழில்நுட்பங்களையூம் திறமையூடன் பயன்படுத்த வேண்டி உள்ளது.

அளவூ மீறிய விரைவான வளர்ச்சியினால் சில வெளிப்படையான பிரச்சினைகள் இருந்தாலும்இ பல நாடுகளை வறுமையில் இருந்து மீட்பதற்கு உலகமயமாதல் ஒரு நேர்நிலை ஆற்றலாக விளங்குவதாக முன்னாள் ஐக்கிய நாடுகளின் உலகமயமாதல் தொடர்பான ஆலோசகரான ஜகதீசு பகவதி என்பார் குறிப்பிடுகிறார். அவருடைய கூற்றுப்படிஇ உலகமயமாதல்இ விரைவான பொருளாதார வளர்ச்சியூடன் கூடிய பொருளியல் சுழற்சியை உருவாக்குகிறது.
உலகமயமாதலின் நன்மைகளும்இ தீய விளைவூகளும் நாடுகளிடையேயூம் பிரதேசங்களிடையேயூம் சமமாகப் பகிரப்படுவதில்லை.

1.8. மூளைசாலிகள் வெளியேற்றம்
மூளைசாலிகள் வெளியேற்றம் நாட்டின் பெரும் பிரச்சினையாகவே அமைகி;ன்றது. செல்வந்த நாடுகளில் உள்ள வாய்ப்புக்கள் வறிய நாடுகளில் உள்ள திறன் பெற்ற தொழிலாளர்களைக் கவருவதனால் மூளைசாலிகள் வெளியேற்றம் ஏற்படுகின்றது. எடுத்துக் காட்டாகஇ பல்வேறு வறிய நாடுகளிலிருந்து பயிற்சி பெற்ற தாதிகள் வேலைக்காக ஐக்கிய அமெரிக்காவூக்கு வருகின்றனர். இதனால்இ புதிய வெளிநாட்டுத் திறனாளர்களைப் பெறுவதற்கு ஆப்பிரிக்காவூக்கு மட்டும் ஆண்டு தோறும் 4.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவூ ஏற்படுகிறது. இது போலவே மூளைசாலிகள் வெளியேற்றத்தின் மூலம் இந்தியாவூக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது. இலங்கை போன்ற நாடுகளிலே மூளைசாலிகள் குறைவாகவே காணப்படுகின்ற போதுதிலும் அதில் பலர் அபிவிருத்தி அடைந்த நாட்டிற்குச் செல்கின்றார்கள். அதனால் கல்விதுறைகளும் அதற்கூடாக விஞ்ஞானிகள்இ மெய்யியலாளர்கள்இ கல்வியிலாளர்கள்இ கண்டுபிடிப்பாளர்கள்இ உளவியலாளர்கள்இ போன்றௌர்களை வளர்த்தெடுக்க முடியாமல் போய்விடுகின்றது.

1.9. நுகர்வூ
தொலைக்காட்சிப் பெட்டிகள்இ வானொலிப் பெட்டிகள்இ ஈருருளிகள்இ புடவை வகைகள் போன்றவற்றை ஐக்கிய அமெரிக்காஇ ஐரோப்பாஇ சப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் "ஆசியான் புலிகள்" எனப்பட்ட நாடுகளின் பொருளாதாரம் விரிவடைந்தது. அக்டோபர் 2011 ஆம் ஆண்டில் சீனாவின் ஏற்றுமதியின் பெறுமானம் 157.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அதே ஆண்டில்இ சீனாவின்இ பொருட்களினதும் சேவைகளினதும் ஏற்றுமதி அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 39.7மூ ஆக இருந்தது. சீனாவூடனான வணிகத்தில் ஐக்கிய அமெரிக்காவூக்கான வணிகப் பற்றாக்குறையினால்இ 2001 ஆம் ஆண்டுக்கும் 2008 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் 2.4 மில்லியன் பணி இழப்பு ஏற்பட்டதாக பொருளாதாரக் கொள்கைகள் நிறுவனத்தின் ஆய்வூ ஒன்று காட்டுகிறது. 2000க்கும் 2007க்கும் இடையில் அமெரிக்கா மொத்தம் 3.2 மில்லியன் உற்பத்தித்துறைப் பணி வாய்ப்புக்களை இழந்துள்ளது. சீனாவின் பொருளாதார வெற்றிகளினால்இ மேற்கு நாடுகளிலும்இ வளர்ந்துவரும் நாடுகளிலும் வேலை இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. சீன உற்பத்திப் பொருட்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டதால்இ தென்னாப்பிரிக்காவில் ஏறத்தாழ 300இ000நெசவாலைத் தொழிலாளர் வேலை இழந்துள்ளனர்.

போதைப்பொருள்இ சட்டத்துக்குப் புறம்பான பொருட்கள் வணிகம்
2010 ஆம் ஆண்டில்இ உலக போதைப்பொருள் வணிகம்இ ஆண்டொன்றுக்கு 320 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் பெற்றதாக போதைப்பொருள்களுக்கும்இ குற்றச் செயல்களுக்குமான ஐக்கிய நாடுகள் அலுவலகம் அறிவித்துள்ளது. அத்தோடு உலக அளவில் 50 மில்லியன்களுக்கு மேற்பட்டோர் ஒழுங்காக எரோயின்இ கொக்கெயின்இ செயற்கைப் போதைப்பொருள்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டுள்ளது.ஜ8ஸ சட்டத்துக்குப் புறம்பான கடத்தல் தொழிலுடன் தொடர்புடைய வணிகங்களில் போதைப்பொருள் வணிகத்துக்கு அடுத்தபடியாக உள்ளது அழியூம் நிலையில் உள்ள உயிரினங்கள் தொடர்பான வணிகம் ஆகும். சில நாடுகளின் மரபுவழி மருத்துவத்தில் பல்வேறு தாவரங்கள்இ விலங்குகள் போன்றவற்றின் பல்வேறு பகுதிகள் பயன்படுகின்றன. இவற்றுள்இ அழியூம் நிலையில் உள்ள விலங்குகளான கடற் குதிரைகள்இ காண்டாமிருகங்கள்இ புலிகள் போன்றவற்றின் உடற் பாகங்களும் அடங்கும். இதனால்இ சட்டத்துக்குப் புறம்பாக இவ்விலங்குகளை வேட்டையாடுவதுஇ அவற்றின் பகுதிகளைக் கள்ளச் சந்தையில் விற்பது என்பது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.


2.உலகமயமாதலும் கல்வியூம்
உலகமயமாக்கலுக்கும் கல்விக்குமிடையே நெருங்கிய தொடர்புண்டு. அரசுப்பள்ளிக்கும் தனியார் ஆங்கிலப் பள்ளிக்கும் இடையேயான வேறுபாடு மிக அதிகமாக விரிவடைந்து கூர்மையடைந்தது 1990க்குப் பிறகான இக்காலகட்டத்தில்தான். நடுத்தர வர்க்கம் தனியார் ஆங்கிலப் பள்ளிகளை நோக்கிய மிகப்பெரிய படையெடுப்பை நிகழ்த்தியதும் இக்காலகட்டத்தில்தான். தனியார் ஆங்கிலப் பள்ளியை நோக்கிய படையெடுப்பிற்கு மிக முக்கியக் காரணம் அங்கு பயிற்றுவிக்கும் மொழியாக ஆங்கிலம் இருப்பதேயாகும். இதைப்பற்றி பேரா.கிருஷ்ணகுமார் தனது முரண்பாடுகளிலிருந்து கற்றல் என்னும் நூலில் “ தனியார் ஆங்கிலப் பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவூஇ அவர்களை மேற்கு நாடுகளோடும் குறிப்பாக அமெரிக்காவோடு மிக இணக்கமான பண்பாட்டு உணர்வை ஏற்படுத்துகிறது. அதன் பொருட்டு அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் உலகப் பொருளாதார மயத்திலும் இணக்கமான உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. ஆங்கிலம் மின்னணுத் தொடர்பியலில் ஆதிக்கம் செலுத்தும் மொழியாக விளங்குவதால் சமூகத்தில் சிறந்த பொருளீட்டும் வாய்ப்பாக ஆங்கில மொழியறிவூ பயன்படுகிறது. அதன் மூலம் பயனடைவோர் ‘உலகே ஒரு கிராமம்’ எனும் சித்தரிப்பில் மிக ஆவலாக உள்ளனர்”

கல்வி அமைப்பில் தனியார்மயமாதலின் தாக்கம்
உயர்நிலைஇ மேனிலைஇ கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பொது துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது இந்த நிலையில் மாநில வளங்களின் போதாமையால் கல்வி அமைப்பு விரிவடைய மக்களின் மீதான ஜனநாயக அவாவை சந்திப்பது மிகவூம் கடுமையாக உள்ளதுஇ ஏனென்றால் கல்வி துறையில் உள்ள நிதி பற்றாக்குறை மற்ற துறைகளில் உள்ள வாய்ப்புகளின் பற்றாக்குறையோடு போட்டி போடுகிறது. எனவேஇ கல்வியை தனியார்துறையில் இணைத்தால் கல்விக்கான நிதி சுமையை மாநிலத்தோடு தனியார் துறையூம் பங்கெடுத்துக்கொள்ளும் என்பதை உணர வேண்டும்.
இரண்டாவதாகஇ உலகம் முழுவதிலும் அறிவின் எல்லைகள் விரைவான வேகத்தில் விரிவடைகிறதுஇ பொருளாதார வளர்ச்சியில்லாதவர்கள் அறிவின் பெருக்கத்தை வேகத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும். இன்றைய அறிவின் பெருக்கம் இரண்டு வகையில் பிரிக்கப்படுகிறது ஒன்றுஇ பொருளாதார அளவில் வசதி படைத்தவர்கள்இ வேகமாய் நகர்ந்து அறிவை திறம்பட பயன்படுத்தி கொள்கின்றனர்இ மற்றொன்று பொருளாதார வசதி இல்லாமல்இ நிதானமாய் நகர்வோரால் இது முடிவதில்லை என்பதை உலக வங்கி வலியூறுத்துகிறது. எனவேஇ வளர்ச்சியின் செயல்முறைகளில் கல்வி அல்லது அறிவின் தொழில் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.
இப்படி இருப்பதால்இ கல்வியை ஒரு சமூகசேவையாக இனி பார்க்க முடியாதுஇ இது பொருளாதார உள்ளீட்டின் அவசியமாக கருதப்படுகறது. கல்வியில் முதலீடு செய்வது என்பது மனிதவள மேம்பாட்டுக்கு பங்களிக்கும் காரணியாக உள்ளது. எனவேஇ மனிதவள மேம்பாட்டின் சார்பாக இந்த முயற்சிகள்இ அறிவின் தொழிலில் தனியார் துறைகளைஇ பெரிய பயனாளிகளாக்க எதிர்பார்க்கின்றன.

வாழ்நாள் முழுவதும் கற்றலின் காரணிகள்
வாழ்நாள் கற்றல் (பேச்சு வழக்கில்) என்பது நடந்துகொண்டிருக்கிறஇ தன்னார்வஇ சுயஉந்துதல்இ சுயதொழில்துறையின் அறிவின் நோக்கமாய் உள்ளது. இது சமூக உள்ளடக்கம்இ நல்ல குடிமகனின் சுய வளர்ச்சியை மட்டும் அதிகரிக்காமல் சுய நிலைத்தன்மைஇ போட்டி மனப்பான்மைஇ வேலை வாய்ப்பையூம் அதிகரிக்கிறது. பரவலாக இந்த வார்த்தையின் விளக்கம் பல்வேறு சு+ழல்களில் அடிக்கடி தௌpவில்லாமல் பயன்படுத்தப் படுகிறதுஇ வாழ்நாள் கற்றல் என்பது சுயஇயக்க கற்றலின் அனுகுமுறையை பயன்படுத்தி விளக்கபடுவது ஆகும்.

வாழ்நாள் கற்றலின் தேவையூம் முக்கியத்துவமும்
வீட்டுக் கல்வி கற்பதற்காக கற்றல் அல்லது முறைசாரா கற்றல் வடிவங்களை வளர்க்க இது ஈடுபடுகிறது. வால்டார்ப் கல்விஇ தனக்கான கற்றலை நேசிக்க குழந்தைகளுக்கு கற்பிக்கின்றது. வயது வந்தோர் கல்வி என்பது முறையான தகுதியை கையகப்படுத்துதல் அல்லது வாழ்க்கையின் பிற்காலத்திய ஓய்வூக்கான திறன்கள் ஆகும். தொடர்கல்வி அடிக்கடி நீடிப்பை விளக்கும் அல்லது உயர்கல்வி நிறுவனங்கள் மூலம் கடனில்லா பாடங்களை அளிக்கும். அறிவின் சேவை என்பது தொழில் சார்ந்த வளர்ச்சியையூம்இ வேலையில் பயிற்ச்சியையூம்இ உள்ளடக்கியதாகும். சுய கற்றலின் சு+ழல்கள் இணைய விண்ணப்பம் அடங்கிய கருவிகளை பயன்படுத்துகிறது.

இணையவழி கல்வியின் கருத்து
அதிகமாகஇ கல்லூரிகளுக்கும்இ பல்கலைக்கழகங்களுக்கும் சுதந்திரமான தனியாள் கற்றலுக்கு தேவையான இணையவழிக் கல்வி கிடைக்கிறது. இந்தியாவில் கல்வித்துறை என்பது வெகுவாக வகுப்பறைகளோடு பிணைக்கப்படுவதில்லை. புதிய தொடக்கமான உயர் இணையம்இ கைப்பேசி ஊடுருவல்இ இணையவழி கற்றலுக்கான இடம். இவை அனைத்தும் இந்தியாவில் இணையவழி கற்றல்இ பள்ளிகளில் சமநிலைஇ கல்லூரி சார்ந்த பாடங்கள் அதனோடு மத்திய நிலை தொழில்முறை பாடங்களின் மேல் கவனம் செலுத்துகிறது.

இணையவழி கல்வியின் தேவையூம்இ முக்கியத்துவமும்
இணையவழிக் கற்றல் என்பது மாணவர்களுக்கு சரியான பாடங்களிலும்இ உள்ளடக்கங்களிலும்இ கவனம் செலுத்த உதவூம் நோக்கமாய் இருக்க வேண்டும். மாறாக பல்வேறு ஊடகங்களில் கடல் போல கிடக்கும் பாடப்பொருள்களில் கண்மூடித்தனமாய் நீந்துவதாக உள்ளது. இதனோடுஇ வசதி சார்ந்த பயிற்சியையூம் இணையவழிக் கற்றல் நோக்குகிறது. ஏனென்றால்இ இணைய வழித்திறன்களில் மாணவர்கள் பாடங்களை எந்நேரமும்இ எவ்விடத்திலும் அணுகிக் கொள்ளும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எதிர்கால கல்வி இணையவழி பாடத்தையே சார்ந்திருக்கபோகிறது. பல நிறுவனங்களில் இணைய வழிப்பாடம் இலவசமாகவூம் அளிக்கப்படுகிறது.

தனியார்மயம்இ தாராளமயம் கொள்கை
“உலக நாடுகளை ஒரு கூரையின் கீழ் இணைத்து சந்தைப் பொருளாதாரத்தின் மூலமாக தனியார் மயம்இ தாராளமயம் என்று பல கொள்கை ரீதியான யூக்திகளைப் பயன்படுத்தி வல்லரசு என்று தங்களைப் பறை சாற்றிக் கொள்ளும் பணக்கார ஏகாதிபத்திய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளின் வளங்களைச் சுரண்டுதலேயன்றி வேறொன்றும் அல்ல” என்று கூறுவதோடு தொடங்குகிறது. மேலும் நுகர்வூ கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கைச் சு+ழலில் எதையூம் பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்ற எண்ணத்தை உலகமயமாதல் மக்களிடையே மேலோங்கச் செய்துள்ளதென்றும்இ சுதந்திரம்இ சனநாயகம்இ மற்றும் மனித உரிமை போன்ற சமூக மாண்புகள் உலகமயமாதல் என்ற ஒற்றைச் சொல்லால் சந்தையின் நலன் கருதி தூக்கியெறியப்படுகின்றன என்றும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். மேலும்சுரண்டலை பிரதான குணாம்சமாகக் கொண்ட உலகமயமாதல் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவூம்இ விவசாயிகளை நிலமற்றவர்களாகவூம்இ கைவினைஞர்களை தொழிலற்றவர்களாகவூம் அழிவை நோக்கி நகர்த்திக் கொண்டிருப்பதையூம் காணக்கூடியதாகவே உள்ளது.

No comments:

Post a Comment