Sunday, February 16, 2020



உயர் பெறுபேறுகளைக் காட்டும் பாடசாலை. 
- எஸ்.எஸ்.ஜீவன்

உலகிலையே சிறந்த பாடசாலை எனக் கொள்ளப்படுவதற்கான காரணம் எதுவென்றால் அந்தப் பாடசாலையில் உயர் பெபேறுகளே ஆகும். இதனால்தான் சிறந்த பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துக் கொள்வதற்கு பெற்றௌர் இன்று அதிக பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சிறந்த விளைதிறனுள்ள பாடசாலையை எவ்வாறு இனங்காண்பது? அதன் இயல்புகள் பண்புகள் என்ன என்பதை அறிய வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. அதிகமான பாடசாலைகள் அறிக்கையளிப்பு நிலையங்களாக செயற்படுவதுடன் பண்பாட்டு அம்சங்களை பரிமாற்றம் செய்யூம் நிறுவனங்களாகவூம் உள்ளன.

உயர்ந்த அடைவினை உடைய பாடசாலையிலே பண்பாட்டு அம்சங்களும் உயர்வாகவே காணப்பம். பழக்கவழக்கங்கள்இ நம்பிக்கைகள்இ சமய விழுமியங்கள்இ அறக்கருத்துகள்இ ஆற்றல்கள்இ பண்பாட்டு வடிவங்கள்இ திறன்கள்இ நல்ல மனப்பாங்குகள் யாவூம் உருவாக்கப்படும் களமாகவூம் பாடசாலைகள் விளங்குகின்றன. இதனால் பாடசாலைகளை 'சமூக நிறுவனங்கள்' என்று அழைக்கின்றனர். எனவேதான் சமூகத்திற்குத் தேவையான பெறுமதியான ஆற்றலுள்ள பிரஜைகளை உருவாக்கும் பணியிலும் உயர்ந்த அடைவினை உடைய பாடசாலைகள் கண்ணும் கருத்துமாக ஈடுபடுவருவதனைக் காணலாம்.

ஒரு உயர்ந்த பாடசாலையானது சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லோரும் மதிக்கின்ற விரும்புகின்ற பாடசாலையாக உருவாக்கப்பட வேண்டியது அவசியம். ஒரு பாடசாலையை சிறந்த முறையில் நடத்துவதற்கு சிறந்த முகாமைத்துவம் அவசியம். 'இயல் அளவை அதிகரிப்பது’ முகாமைத்துவம் என்றும்இ 'செய்யூம் தொழிலை மேலும் சிறப்பாக ஆற்ற உதவூவது' முகாமைத்துவம் என்றும் அழைக்கப்படுகிறது. சாதுரியமாக மனிதர்களை ஆழுதல் முகாமைத்துவம் எனப்படுகின்றது. டொனால்ட் கிளப் என்ற அறிஞர் முகாமைத்துவம்பற்றி இவ்வாறு கூறுகின்றார்: 'நோக்கத்தை அடைவதற்காக மனிதரை குழுவாக இயக்கும் செயல்முறை முகாமைத்துவமாகும்' என்று கூறுகின்றார் அவர். முகாமைத்துவத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது வினைத்திறன்இ விளைதிறன் என்ற இரண்டு எண்ணக்கருக்களாகும் இவை முகாமைத்துவத்தில் பின்னிப் பிணைந்ததாக காணப்படுகின்றன. கல்வி அல்லது வேறு ஏதாயினும் அமைப்புக்களின் குறிப்பிட்ட காரியத்தையோ அல்லது நோக்கத்தையோ நிறைவேற்றிக் கொள்வதற்கு அதன் செயற்பாடுகளை வினைத்திறன்இ விளைதிறன் வாய்ந்ததாக இயக்குதல் அவசியமாகும்.

உயர்த அடைவினை உடைய பாடசாலையிலே உயர்வான வினைத்திறன் கானப்படும். வினைத்திறன் என்பது (நுககiஉநைnஉல) குறைந்த விரயத்துடன் கிடைக்கத்தக்க வளங்களை உச்சமாகப் பயன்படுத்தல் ஆகும். அதாவது மனிதவளம்இ பௌதிகவளம்இ நிதிவளம்இ காலவளம் போன்ற சகல வளங்களையூம் அழிவூகள் வீண்விரயங்களின்றி சரியான செயலுக்கு சரியாகப் பயன்படுத்தி அவற்றினைக் கொண்டு உச்சப் பயனைப் பெற்றுக் கொள்வது வினைத்திறனாகும். இக்கருத்தின்படி வளங்களை சரியாக சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பது வலியூறுத்தப்படுகிறது.

அடுத்து உயர்த அடைவினை உடைய பாடசாலையிலே உயர்வான விளைதிறன் கானப்படும்.  விளைதிறன் பற்றி நோக்கும் போது இவ்வாறு குறிப்பிடலாம். விளைதிறன் (நுககநஉவiஎநநௌள) என்பது செயற்படுதிறன் பயனுறுதி எனவூம் அழைக்கப்படும். தீர்மானிக்கப்பட்ட குறிக்கோளை அடைந்து கொள்வதுடன் தொடர்புடைய அம்சமே விளைதிறனாகும். அதாவது ஏற்கனவே சரியாக தீர்மானித்துக் கொண்ட நோக்கங்களை உயர்மட்டத்தில் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்வதாகும். குறித்த காலப்பகுதிக்குள் எதிர்பார்த்த நோக்கத்தை வெற்றிகரமாக அடைவதும் விளைதிறனாகும்.  சிறந்த முகாமைத்துவமுள்ள இடத்தில் வினைத்திறனும் விளைதிறனும் உயர்ந்த அளவில் இருக்கும். முகாமைத்துவம் பிழைத்தால் பாடசாலை சீர்குலையூம். அதிபரின் சர்வாதிகாரமான தலைமைத்துவம் காரணமாக பாடசாலை நிர்வாகம் சீர்குலைந்து மோசமான பெறுபேறுகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். மேலும் பாடசலையிலுள்ள குறைபாடுகளை ஒரு ஆசிரியர் சுட்டிக்காட்டி அவற்றைத் திருத்த முற்படும் போதுஇ அந்த ஆசிரிரை அதிபர் சர்வாதிகாரமான முறையில் இடமாற்றுவது பிழையான முகாமைத்துவமாகும். என்வே விளைதிறன் வினைத்திறன் இரண்டையூம் உயர்ந்த மட்டத்தில் பேண வேண்டும். ஒரு சிறந்த விளைதிறனான பாடசாலை ஒன்றினை அடையாளம் காண்பதற்கு சில அடிப்படை நியதிகளை கல்வியியலாளரான விக்டேரியாபேக்கர்ஸ் என்பவர் இவ்வாறு வரையறுத்திருக்கின்றார்.
மாணர்களின் வரவூ மட்டம் உயர்மட்டத்தில் காணப்படும். மாணவர் பாடசாலையிலிருந்து இடைவிலகுவது குறைவாகக் காணப்படும். உயர்மட்டப் பரீட்சைப் பெறுபேறுகள் காணப்படும்.
ஆசிரியர் விடுமுறை செல்வது குறைவாக இருக்கும். பாடசாலையானது சமூகத்துடன் நல்ல தொடர்பைக் கொண்டிருக்கும். செயற்திறனுடைய பாடசாலையில் அபிவிருத்திச் சங்கம் காணப்படும். கட்டடங்களையூம் சுற்றுப்புறச் சு+ழலையூம் அழகாக வைத்திருத்தல். கற்றல் உபகரணங்கள் காணப்படும். சிறந்த நூலகம் காணப்படும்.

ஒரு பாடசாலை உயர் பெறுபேறுகளைக் காட்டுவதற்கான காரணிகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1. சிறந்த வினைத்திறன்  காணப்படும்
2. சிறந்த விளைதிறன்  காணப்படும்
3. அதிபரின் சிறந்த தலைமைத்துவம் காணப்படும்
4.. ஆற்றல் மிக்க ஆசிரியர் குழாம் அமைந்திருக்கும்.
5. பெற்றௌர்களினதும் சமூகத்தினதும் ஈடுபாடு சிறப்பாக அமைந்திருக்கும்.
6. வகுப்பறைகளை  மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படும்
7. மாணவர் நடத்தைகளில் அதிக கவனம் செலுத்துதல்
8. கல்வி அலுவலக ஒத்துழைப்பு சிறப்பாக அமைதல்
9. பாடசாலையில் கூடுதலான கற்றல் காலம் 
10. பரீட்சைப்பெறுபேறுகள் உயர்ந்திருத்தல்
11. இணைப்பாடவிதான செயற்பாடுகள்இ அடைவூகள் உயர்ந்த நிலையில் இருத்தல்:
12. பாடசாலையின் பௌதீகவளங்களும் வளப் பயன்பாடுகளும் காணப்படுதல்:
13. மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் உயர்ந்த அடைவூகள்இ திறமைகள் பாராட்டப்படல்:
14. ஆசிரியர்களின் உடன்பாடான மனப்பாங்குகள்.
15. இடைவிலகல் குறைந்து காணப்படல்
16. நன்னடத்தையூம் நல்லொழுக்கமும்
17. ஆசிரியர்கள் விடுமுறை பெறுவது குறைவாகக் காணப்படும்
18. கற்றல் மேம்பாடும் அதற்கான மதிப்பீடும் உரியவாறு முன்னெடுக்கப்பம்.

1. சிறந்த வினைத்திறன் (நுககiஉநைnஉல) காணப்படும் :

உயர்த அடைவினை உடைய பாடசாலையிலே உயர்வான வினைத்திறன் கானப்படும். வினைத்திறன் என்பது (நுககiஉநைnஉல) குறைந்த விரயத்துடன் கிடைக்கத்தக்க வளங்களை உச்சமாகப் பயன்படுத்தல் ஆகும். அதாவது மனிதவளம்இ பௌதிகவளம்இ நிதிவளம்இ காலவளம் போன்ற சகல வளங்களையூம் அழிவூகள் வீண்விரயங்களின்றி சரியான செயலுக்கு சரியாகப் பயன்படுத்தி அவற்றினைக் கொண்டு உச்சப் பயனைப் பெற்றுக் கொள்வது வினைத்திறனாகும். இக்கருத்தின்படி வளங்களை சரியாக சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பது வலியூறுத்தப்படுகிறது. உதாரணமாக உயர் அடைவைக் காட்டும் பாடசாலையிலே பாடகாலையிலே உள்ள வளங்களைக் கொண்டு க.பொ.த சாதரணதரம்இ உயர்தர செயற்பாடுகளும்இ விசேட செயற்திட்ட நடைமுறைகளும் முன்னெடுக்கப்படுவதனைக் குறிப்பிடலாம்.

2. சிறந்த விளைதிறன் (நுககநஉவiஎநநௌள) காணப்படும் :

உயர்த அடைவினை உடைய பாடசாலையிலே உயர்வான விளைதிறன் கானப்படும் மாறாக தாழ்அடைவினை உடைய பாடசாலைகளிலே குறைவான விளைதிறனே காணப்படும்.  விளைதிறன் பற்றி நோக்கும் போது இவ்வாறு குறிப்பிடலாம். விளைதிறன் (நுககநஉவiஎநநௌள) என்பது செயற்படுதிறன் பயனுறுதி எனவூம் அழைக்கப்படும். இது அடைவூகளுடன் தொடர்புடையது. தீர்மானிக்கப்பட்ட குறிக்கோளை அடைந்து கொள்வதுடன் தொடர்புடைய அம்சமே விளைதிறனாகும். உதாரணமாக சிறந்த முகாமைத்துவமுள்ள இடத்தில் வினைத்திறனும் விளைதிறனும் உயர்ந்த அளவில் இருக்கும். முகாமைத்துவம் பிழைத்தால் பாடசாலை சீர்குலையூம். எனவேதான் விளைதிறன் வினைத்திறன் இரண்டையூம் உயர்ந்த மட்டத்தில் பேண வேண்டும். 

3. அதிபரின் சிறந்த தலைமைத்துவம் காணப்படும்

ஒரு பாடசாலையை வினைத்திறனாகவூம் விளைதிறனாகவூம் மாற்றுவதற்கு சிறந்த முகாமைத்துவம் அவசியம். சிறந்த முகாமைத்துவம் இருக்க வேண்டுமானால் நல்ல தலைமைத்துவம் அவசியம். சிறந்த தலைமைத்துவமுள்ள அதிபரானவர் ஆசிரியர்இ மாணவர்இ பெற்றௌர்இ ஆகியோர்களை ஊக்கப்படுத்துதல்இவேலைகளைப் பகிர்ந்து ஒப்படைத்தல் இவளங்களைப் பெறுதல் இபராமரித்தல் திட்டமிடல் நெறிப்படடுத்தல் போன்ற விடயங்களில் ஈடுபடுவர்.

4.. ஆற்றல் மிக்க ஆசிரியர் குழாம் அமைந்திருக்கும் :

பாடசாலையிலே உயர்அடைவினைப் பெறுவதாயின் ஆசிரியர்கள் உயர்ந்த கல்வி தொழில் தகுதிகளைக் கொண்டிருப்பதுடன் வகுப்பறை முகாமை கலைத்திட்ட முகாமைத்துவம் போண்றவற்றில் சிறப்பாகத் தொழிற்படுவர். அத்துடன் ஆக்கத்திறன் விருத்தியூடன் பல்வேறு கற்றல் நுட்பங்களை பிரயோகித்துக் கற்பிக்கக் கூடியவராகவூம் இருப்பர். மாணவர் நலனைக் கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் உற்சாகமாவூம் அர்ப்பணிப்புடனும் கூட்டாகவூம் பணியாற்றும் தன்மை கொண்டாவராகக் காணப்படுவர்.

5. பெற்றௌர்களினதும் சமூகத்தினதும் ஈடுபாடு சிறப்பாக அமைந்திருக்கும் : 

பாடசாலைக்கும் சமூகத்திற்கும் நல்ல தொடர்பு இருத்தல் வேண்டும். சமூகத்துடன் நெருங்கிய தொடர்பை பாடசாலை வைத்திருக்க வேண்டும். பெற்றௌரும் நலன் விரும்பிகளும் இப்பாடசாலையூடன் நல்ல தொடர்பை வைத்திருக்க வேண்டும். பாடசாலை அபிவிருத்திச் சங்கம்இ பெற்றார் ஆசிரியர் சங்கம் என்பவற்றினூடாக பாடசாலைக்கும் சமூகத்திற்குமிடையே தொடர்பு அதிகரிக்கும் போதுஇ பெற்றௌர் தங்கள் பிள்ளைகளின் நலன் கருதி பாடசாலைக்கு முழு நேரமாக உழைக்க முன்வருவார்கள். அத்துடன் இவர்கள் பௌதிக வளங்களையூம்இ மனிதவளங்களையூம் வழங்குதல் இஅதிபரையூம் ஆசிரியரையூம் ஊக்கப்படுத்தல்இ மற்றும் நிதிசார்ந்த ஒத்துழைப்புக்களை வழங்குதல் என்பன பாடசாலை மீது சமூகத்தின் ஈடுபாட்டை காட்டும்.

6. வகுப்பறைகளை  மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படும் :

பல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும்  நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம்இ வகுப்பறையை சுமுகமான முறையிலும்இ மாணவர்களின்  தேவையற்ற  நடத்தைகளைக் கட்டுப் படுத்தும் வகையிலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு அணுகுமுறையே வகுப்பறை முகாமைத்துவமாகும். வகுப்பறையானது நன்கு கட்டமைக்கப்பட்ட கற்றல் கவிநிலையை ஏற்படுத்து வதாகவூம்இ தீய நடத்தைகளைக்  கட்டுப்படுத்திஇ கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக் கக்கூடியதாகவூம் இருக்க வேண்டும். இவற்றை அடைவதற்கேற்ற தௌpவாக வரையறை செய்யப்பட்ட சட்ட விதிகளைக் கொண்டதாகவூம் இருத்தல் வேண்டும்.

வகுப்பறைகளை  மேம்படுத்துவதில் கவனிக்கவேண்டிய விடயங்கள்:
1. வகுப்பறைகளின் பௌதிக நிலை :
பின்வரும் பௌதிகவளங்கள் தொடர்பாக வகுப்பு ஆசிரியர் கவனத்தில் கொள்ள வேண்டும்:

• தளபாடங்கள் :                                                                                                 
  இவை பயன்படுத்தமுடியாத வகையில் உடைந்திருக்கின்றனவா அல்லது மாணவர்களின் தொகைக்கு  பற்றாக்குறையாக உள்ளனவா அல்லது மாணவர்களின் வயதுஇ உயரம் என்பவற்றிகேற்ப பொருத்தமற்றவையாக உள்ளனவா என்பதில் கவனத்தைச் செலுத்தி இவற்றை மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடுகளை வகுப்பு ஆசிரியரே மேற்கொள்ளுதல் வேண்டும்.

• போதிய வெளிச்சம்இ காற்றௌட்ட வசதிகள்இ மழைநேரங்களில் ஏற்படும் நீர்க்கசிவூகள் அல்லது தூறல்இ மற்றும் வகுப்பறைச் சு+ழலை மாசுபடுத்தும் புற ஒலிகளின் தலையீடுகள் என்பன இருக்குமாயின் அவற்றைக் கவனித்துஇ இது தொடர்பாக அதிபர்இ மற்றும் பெற்றௌர்களுடனான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவற்றிற்கான தீர்வூகளைக் காண நடவடிக்கை எடுத்தல்.

• மாணவர்களின் சித்திரவேலைப்பாடு கொண்ட ஓவியங்களைச் சுவர்களில் காட்சிப்படுத்தி அழகுபடுத்துவது ஒவ்வொரு மாணவரையூம் அங்கீகரிப் பதுடன் அவர்களை ஊக்குவிப்ப தாகவூம்  அமையூம்.  இவற்றின் ஊடாக ஒரு வகுப்பின் தரத்தைக் கண்காணிக்கமுடியூம்.

7. மாணவர் நடத்தைகளில் அதிக கவனம் செலுத்துதல் :

•தனிநபர்களை இனங்காணல் :                                                                                 மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகச் செயற்படும் பொழுதோ அல்லது தனியாக இருக்கும் பொழுதோ அவர்களுடைய நடத்தைகளை அவதானிக்க வேண்டும்.

• குழுவை இனங்காணல்:                                                                                            மாணவர்கள் குழுக்களாக இயங்கும் பொழுது அவர்களுடைய நடத்தைகள்இ மற்றவர்களுடன் பழகும் தன்மை பயன்படுத்தப்படும் பேச்சு மொழிகள் என்பவற்றை அவதானித்து வரவேண்டும். அதேவேளை ஒவ்வொருவரினதும்  நண்பர்கள் தொடர்பான விழிப்புணர்வையூம் ஆசிரியர்கள் மேற்கொண்டு அதற்கேற்ப உரிய வழிகாட்டல்களைச்  செய்ய வேண்டும்.

• பெற்றௌருடன் உரையாடல்:                                         
  வகுப்பு ஆசிரியருக்கும்இ வகுப்பறையில் உள்ள பிள்ளைகளின்     பெற்றௌர்களுக்கும் இடையில் நல்லுறவூ பேணப்படுதல் வேண்டும். பிள்ளைகள் தொடர்பான முன்னேற்றம்இ அவர்களது நடத்தைகள்இ பழக்கவழக்கங்கள்இ பேசும் மொழி தொடர்பான கலந்துரையாடல்களை பெற்றௌர்களுடன் மேற்கொள்ளவேண்டும். மேலும் சிறப்பான உறவூ முறையை வளர்க்க வேண்டு மானால் வகுப்பு ஆசிரியர் தனது மாணவர்களின் வீட்டிற்குச் சென்று பெற்றௌருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன்இ வீட்டுச் சு+ழலையூம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறான நல்லுறவைப் பேணுவதன் மூலம் பின்வரும் அனுகூலங்களை ஆசிரியர் அடைந்து கொள்வர்.
1. ஆசிரியர் மீது பிள்ளைகள் அதிக அன்பும்இ மரியாதையையூம் கொண்டிருப்பர்
2. ஆசிரியர் மீது அதீதமான பற்று ஏற்படுவதால்இ அவர் கற்பிக்கும் பாடத்தின் மீதும் விருப்பம் ஏற்படுவதால் குறித்த பாடத்தின் மீது சிறந்த அடைவூ மட்டத்தை அடைந்து கொள்வர்.
3. குடும்பச் சு+ழலை அறிந்து கொள்வதால்இ ஒவ்வொரு பிள்ளையினதும் தேவைகளை ஆசிரியர் இனங்காண்பதால்இ அந்த மாணவர்களின் தேவைகள் நிறைவூ செய்வதற்கும்இ அவர்கள் மீது சிறப்பான அக்கறையைக் காட்டவூம் வாய்ப்புக்கள் ஏற்படும்
4. இவ்வாறான அணுகு முறைகளினால்இ வகுப்பறையின் அமைதிஇ நிறைந்த கவிநிலைஇ மாணவர்களின் ஒழுக்கம் என்பன சிறப்பாகப் பேணப்படும்.

• வகுப்பில் கல்வி கற்பிக்கும் ஏனைய அணி ஆசிரியர்களுடன் கலந்துரையாடுதல்:
      இவ்வாறான கலந்துரையாடல் பிள்ளை மையமாக இருப்பதால் பிள்ளைகளின் குறைபாடுகள்இ நிறைவூகள்இ அவர்களது தேவைகள் பற்றிய மதிப்பீடுகள் மேற் கொள்ளப்படும். இதனால் குறித்த வகுப்பில் உள்ள எல்லா மாணவர்கள் மீதும் ஆசிரியர்களின் கவனம் ஈரக்கப்படும். இதனால் ஒட்டு மொத்தமாக அனைத்து மாணவர்களும் உயர்ந்த விழுமியங்களைப் பெற்றுக் கொள்வதுடன் கல்வியில் உயர்ந்த அடைவூ மட்டத்தையூம் அடைந்து கொள்வர். இது பாடசாலைகளில் நடைமுறையில் உள்ள தரவட்டம் போன்று வகுப்புத் தரவட்டமாக இருப்பதால் அந்த வகுப்பின் தரமும் உயரும்.

• நிபுணத்துவ ஆசிரியர் உதவிகள் பெறல்:                       
 தேவை ஏற்படும் இடத்து சில துறை சார்ந்த நிபுணத்துவ ஆற்றல் கொண்ட ஆசிரியர்களையோ அல்லது பாடசாலைக்கு வெளியில் இருந்து வளவாளர் களையோ அதிபரின் உதவியூடன் ஒழுங்கு செய்து வகுப்பில் விசேட செயலமர்வூகளை நடத்துதல். இது ஒரு மாற்றத்திற்கான வழியாகவூம் இருக்கும்.

8. கல்வி அலுவலக ஒத்துழைப்பு சிறப்பாக அமைதல் :

கல்விப் பணிமனைகளின் உதவிகள் பாசாலையின் உயர்வூக்கு வித்திடுகின்றது. கற்றல் கற்பித்தலை விருத்தி செய்தல்இ கற்றல் கலைத் திட்ட சாதனங்களை வழங்குதல் மற்றும் அதிபர் ஆசிரியரை மதிப்பிடுதல் என்பன கல்வி அலுவலக ஒத்துழைப்பாகும். 

9. பாடசாலையில் கூடுதலான கற்றல் காலம் :

பாடசாலையில் திட்டமிட்ட நேர அட்டவணைக்கேற்ப உரியவேளையில் உரியபாடம் கற்பிக்கப்படுவதுடன் மாணவர்களும் ஆர்வத்துடன் கற்பர். மேலும் கூடுதலான நேரம் கற்பிப்பதுடன் மேலதிக மதிப்பீட்டு முறைகளும் இடம்பெறும்.

10. பரீட்சைப்பெறுபேறுகள் உயர்ந்திருத்தல் :

மாணவர் உயர்ந்த தலைமைத்துவத் திறன்களை கொண்டிருப்பதுடன் சிறப்பாக சமய விழுமியப் பண்புகளை பின்பற்றக் கூடியவராவூம் இருப்பர். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைஇ க.பொ. த.(சாஃ) க.பொ.த (உஃத) போன்ற பரீட்சைப் பெறுபேறு உயர்வாகக் காணப்படுதல். சமூகத்திறன் ஒழுக்க விழுமியச் செயற்பாடுகள் உயர்ந்தநிலையில் காணப்படும்.

11. இணைப்பாடவிதான செயற்பாடுகள்இ அடைவூகள் உயர்ந்த நிலையில் இருத்தல் :

விளையாட்டுஇ ஆக்கச் செயற்பாடுஇ தமிழ்த்தினப் போட்டிஇ ஆங்கில தினப்போட்டிஇ சிங்கள தினப்போட்டிஇ சித்திரப்போட்டிஇ மாணவர் தினம் போன்ற எல்லா விடயங்களிலும் இப்பாடசாலை மாணவர்களும்இ ஆசிரியர்களும் உற்சாகத்துடன் ஈடுபடுவர். மேலும் இவ்விடயங்களில் இடம்பெறும் கோட்டம்இ வலயம்இ மாவட்டம்இ மாகாணம் தேசியமட்டங்களில் இடம்பெறும் போட்டிகளில் பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்வதுடன் அவற்றில் வெற்றிபெறக் கூடியவர்களாகவூம் சாதனை நிகழ்த்தக்கூடியவர்களாகவூம் இருப்பர்

12. பாடசாலையின் பௌதீகவளங்களும் வளப் பயன்பாடுகளும் காணப்படுதல் :

பாடசாலைக்குத் தேவையான வளங்கள் பாடசாலை நிர்வாகம்இ பாடசாலை அபிவிருத்திச் சங்கம்இ பழைய மாணவர் சங்கம்இ நலன் விரும்பிகள் ஆகியவற்றினூடாகப் பெற்றுக் கொள்ளப்படும். இது -அரசின் மூலமாகவோ அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலமாகவோ பெறப்படலாம். பாடசாலையின் தரத்திற்கேற்ப வளங்கள் பெறப்படும். விஞ்ஞான கூடம் மணையியல் கூடம்இ கணனி செயற்பாட்டறைஇ ஒலி ஒளி அறைஇ கற்பித்தல் துணைச்சாதனங்கள் போண்ற கட்டடங்களும் காணப்படும். அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் கிடைத்தல்.

13. மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் உயர்ந்த அடைவூகள்இ திறமைகள் பாராட்டப்படல் :

மாணவர்களின் கல்விசார் வெற்றிகளை இனங்கண்டு ஊக்கப்படுத்தல் அதாவது திறமை காட்டும் மாணவர்களும் ஆசிரியர்களும் வைபவங்கள் விழாக்கள் ஆகியவற்றின் மூலம் பாராட்டப்படுவர். வெற்றியீட்டிய மாணவர்கள் பாராட்டப்படுவர். அத்துடன் இவர்களுக்கு கற்பித்தஇ பயிற்சியளித்தஇ ஆசிரியர்களும் பாராட்டப்படுவர். பாடசாலைக்கு புகழைத் தேடித் தந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சிகளும் நடைபெறும். பரிசளிப்பு விழாக்கள்இ ஆண்டு இறுதி விழாக்கள் என்பன இப்பாடசாலைகளில் ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம்.

14. ஆசிரியர்களின் உடன்பாடான மனப்பாங்குகள் :

ஆசிரியர்கள் தங்கள் தொழில்மீது நம்பிக்கையையூம் விசுவாசத்தையூம் கொண்டிருப்பதுடன் அர்ப்பணிப்புடனும் ஒத்துழைப்புடனும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் ஊக்குவிப்புடனும் செயற்படுவர்.

15. இடைவிலகல் குறைந்து காணப்படல் :

மாணவர்கள் இடைவிலகும் தன்மை குறைந்திருக்கும். இப்பாடசாலையில் கற்பதற்குச் சேர்ந்த மாணவர்கள் வேறு பாடசாலைக்குச் விலகிச் செல்வதைக் கூட தவிர்த்து இப்பாடசாலையிலேயே கல்வி நடவடிக்கைகள் தொடர்வதைக் காணலாம்.

16. நன்னடத்தையூம் நல்லொழுக்கமும் :

பாடசாலையின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதுடன் பாடசாலையின் அகச்சு+ழல்இ வெளிப்புறச்சு+ழல்இ சுத்தம் திருப்தியாகவூம் காணப்படும். வகுப்பறைகள் நவீனமுறையில் அமைக்கப்பட்டிருப்பதோடு வகுப்பறைச் சு+ழலும் வெளிச்சு+ழழும் அழகுபட்டிருத்தல். அத்துடன் மாணவர் உரிய வேளைக்குப் பாடசாலைக்கு வருதல்இ செல்லல் போன்ற செயற்பாடுகள் திட்டமிட்ட முறையில் நடைபெறும். பாடசாலையை விளைதிறனாக மாற்றிமைப்பதில் அதிபரின் பங்கு மிக அவசியம். அதிபர் சிறந்த ஆளுமை மிக்கவராக இருக்க வேண்டும். அதே போல் விளைதிறன் மிக்க ஆசிரியர்கள் பாடசாலை ஆரம்பிக்கும் முன் பாடசாலைக்கு வருவார். எனவே பாடசாலையை விளைதிறன் உடையதாக மாற்றியமைப்பதில் மிக முக்கியமானவர்கள் அதிபரும் ஆசிரியருமாவார்கள்.

17. ஆசிரியர்கள் விடுமுறை பெறுவது குறைவாகக் காணப்படும் :

பாடசாலையானது சமூகத்துடன் நல்ல தொடர்பைக் கொண்டிருப்பதால் ஆசிரியர்களும் பாடசாலையின் பல வேலைகளிலே ஈடுபடுவர். இதனால் ஆசிரியர் விடுமுறை குறையலாம். செயற்திறனுடைய பாடசாலையில் அபிவிருத்திச் சங்கம் காணப்படும் ஆசிரியருக்கான ஏனைய வசிகளை செற்து கொடுப்பதனையூம் குறிப்பிடலாம். 

18. கற்றல் மேம்பாடும் அதற்கான மதிப்பீடும் உரியவாறு முன்னெடுக்கப்பம்:
கற்றல் மேம்பாடு.                                     

வகுப்பறையின் பிரதானமான குறிக்கோளாக அமைவது மாணவர்களின் கற்றலை மேம்பாடடையச் செய்தலே.  அந்த வகையில் மேலே குறிப்பிட்ட விடயங்களுடன் கற்றல் மேம்பாட்டிலான கவனம் ஒவ்வொரு ஆசிரியரினாலும் எடுக்கப்பட வேண்டும். கற்பித்தல் செயற்பாடு திட்டமிடப்பட்ட முறையிலான ஒழுங்குஇ இலகுவாக மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையிலான எளிமைஇ புதியவிடயங்களைக் கொண்ட உள்ளடக்கம்இ மாணவர் மகிழ்ச்சியூடன் கற்றல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய தன்மை என்பவற்றைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அதேவேளை மாணவர்களின் வயது மற்றும் வகுப்புக்குப் பொருத்தமானதாகவூம் அமையூமானால் வகுப்பறை முகாமைத்துவம் என்பது மகிழ்ச்சிகரமான சு+ழலில் காணப்படும்.

ஒவ்வொரு மாணவரினதும் கற்றல் அடைவ மட்டத்தை உயர்த்துவதில் பின்வரும் நடைமுறைகள் ஆசிரியர்களினால் பின்பற்றப்படவேண்டும்:
1. கற்றல் இடர்ப்பாடு இனங்காணல்.(டுநயசniபெ னுகைகiஉரடவநைள) 
ஒரு பிள்ளை கற்றலின்போது எய்த வேண்டிய தேர்ச்சியை எய்த இயலாமல் தத்தளிக்கும் நிலையே கற்றல் இடர்ப்பாடு ஆகும். இதற்கான காரணங்களாகப் பின்வருவன இனங்காணப்பட்டுள்ளன:

• மாணவர் தம் கற்றலில் முழுமையான ஈடுபாடு காட்டாமை
• பிள்ளைகள் சுயமாகவூம்இ சுதந்திரமாகவூம் கற்பதற்கான சு+ழலின்மை
• மாணவரின் உடல்இ உள நல நிலைமைகள்
• சமூகஇ குடும்பப் பின்னணி
• ஆசிரியரின் பொருத்தமற்ற கற்பித்தல் முறை
• பொருத்தமற்ற சகபாடிகளின் (Pநயச புசழரி)சேர்க்கை

2. கற்றல் சு+ழலை மாற்றுதல்:
மாணவர்களிடையே ஏற்படும் கற்றல் இடர்ப்பாடுகளை நீக்குவதற்கு ஒரு  ஆசிரியர் வகுப்பறைச் சு+ழலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.  அத்துடன் கற்றல் கற்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய இடர்ப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒழுங்கு முறைகளைக் கையாள வேண்டும்.

3. கற்றல் குழக்களை உருவாக்கல்:
வகுப்பில் கற்றலுக்கான சு+ழலை ஏற்படுத்தவேண்டுமாயின் மாணவர் குழுக்களுக் கிடையே ஒத்த தன்மையை ஏற்படுத்தவேண்டும். வெவ்வேறு சிந்தனைஇ  இலக்குஇ மாறுபட்ட குடும்பச் சு+ழல் போன்றவற்றிலிருந்து வரும் பிள்ளைகளுக்கிடையே ஒருங்கிசைவை ஏற்படுத்தும்  வகையில் அவர்களைக் குழுக்களாக்கி கற்பதற்கான குழு ஒருமைப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழுவூக்கும் ஒவ்வொரு வகையான கற்றல் செயற்பாட்டை வழங்கவேண்டும். அவற்றை பின்னர் குழு ரீதியாக முன்னளிக்கைப்படுத்த வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு தடவை குழு உறுப்பினர்களை மாற்றி புதிய ஒரு கற்றல் குழுவை உருவாக்கவேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாகக் கற்றல் குழுக்கள் உருவாக்கப்படும் பொழுது ஒவ்வொருவரிடமும் தாமாகவே கற்க வேண்டும் என்ற உந்து சக்தி உருவாக்கப்படும்.

4. கற்றலை மேம்படுத்தவதற்கான வாசிப்புத் திறன் விருத்தியில் கவனம் செலுத்துதல்:   
மாணவர்களிடையே வாசிப்புத் திறன்களை விருத்தி செய்வதற்காகப் பின்வரும் செயல் திட்டங்களை வகுப்பறை மட்டத்தில் நடைமுறைப்படுத்துதல்:

• வகுப்பறை நூலகங்கள் அல்லது புத்தகப் பெட்டி நூலக முறைமைகளை அறிமுகம் செய்து அவற்றில் வாசிப்புத் துணை நூல்களைக் காட்சிப்படுத் துதல். இதனால் நூல்கள் தொடர்பான பரிச்சயத்தையூம் இந்நூல்களின் மீதான விருப்பத் தையூம்  மாணவர்களிடையே ஏற்படுத்தலாம்.
• மாணவர்களிடையே வாசிப்புத் திறன் போட்டிகள் எழுத்தாக்கத்திறன் போட்டிகள்இ கையெழுத்துச் சஞ்சிகை ஆக்கங்கள் என்பவற்றை ஒழுங்கு செய்தல்.
• வகுப்பறை மட்டத்தில் மாணவர்களுக்குப் பொருத்தமான நூல்களைக் கொண்ட  கண்காட்சிகளை ஒழுங்கு செய்தல்.
• ஆகக் குறைந்தது இருபத்தைந்து நூல்களையாவது வாசித்து முடித்த ஒவ்வொரு மாணவருக்கும் பரிசுகள் வழங்குதல்.
• வாசிப்பு முகாம்களை ஒழுங்கு செய்தல். ஒரே நேரத்தில் பல வகையான செயற்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கேற்ற முறையில் எளிமையான வாசிப்புத் துணை நூல்களையூம்இ அவற்றிற்கான  செயற்பாடு களையூம்இ மதிப்பீட்டு வினாக்களையூம் தயாரித்து வாசிப்பு முகாமை ஒழுங்கு செய்தல். இவ்வாறான செயற்பாடுகளில் மாணவர்கள் மிகவூம் விருப்பத்துடன் ஈடுபடுவார்கள்.

5. மாணவர் செயற்பாடுகளை ஊக்குவித்தல்:

 ஒரேவகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் எல்லோரும் ஒரே தரத்தில் உள்ளவர்கள் என்ற எடுகோளுடனேயே வகுப்பு ஆசிரியர் தனது கற்பித்தல் செயற்பாட்டை ஆரம்பிக்க வேண்டும். பழைமைமுறையான ஆசிரியர் மையக் கல்வியில் இருந்து மாணவர் மையக் கல்விக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். இதனால் மாணவர்களுக்கான சமமான வாய்ப்புஇ ஊக்குவிப்புஇ வினைத் திறன் மிக்க செயற்பாடுகள்இ தன்னம்பிக்கை வளர்தல்இ குழுச்செயற்பாட்டில் ஆர்வம் ஏற்படுதல் என்பன வளர்த்தெடுக்கப்படும்.

6. மாதிரி வினாவூக்கான விடை எழுதுவதற்கான பயிற்சிகளை வழங்குதல்: 
  ஒவ்வொரு பாடத்திலும் குறித்த அலகு அல்லது தேர்ச்சிகள் முடிவடைந்ததும் மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல். இது மீள் வலியூறுத்தலாகவூம் அடையூம். இதில் பின்வரும் இலகு முறைகளை ஆசிரியர் கையாளலாம்.
• குறித்த அலகு அல்லது தேர்ச்சி தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக மாதிரி வினாத்தாளை அமைத்தல். இதில் எளிமையான வினாக்களில் இருந்து சிக்கலான அல்லது கடினமான வினாக்களைக் கொண்டதாக அமைத்தல்.
• மாணவர்களை ஐந்து பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவினரிடமும்இ பாடநூலையூம் அதில் உள்ள தேர்ச்சிகள் தொடர்பான வேறு நூல்கள் அல்லது இணையத்தில் இருந்து பெறப்பட்ட தகவல் பத்திரங்களையூம் வழங்குதல். அவற்றில் இருந்து வினாக்களை மாணவர்கள் மூலமே தெரிந்தெடுக்க வைத்து அவற்றிற்கான விடைகளையூம் அவர்களைக் கொண்டே எழுத வைத்தல். இந்தப் பணியில் ஒவ்வொரு குழுவூம் ஈடுபடுவதற்கான வழிப் படுத்தல்களை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு குழுவையூம் தாம் தயாரித்த வினாக்களையூம் அவற்றிற்கான விடைகளையூம் பல்லூடக எறியியன் (அரடவiஅநனயை pசழதநஉவழச) ஊடாக அளிக்கைப் படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அல்லது டிமை தாளில் (னுநஅல ளுhநநவ) எழுதிக் காட்சிப் படுத்தி அளிக்கைப்படுத்த வைக்க வேண்டும்.

மதிப்பீடு: (நுஎயடரயவழைn) 
   
கற்றலையூம் கற்பித்தலையூம் முன்னேற்றுவதற்கு உதவூம் வகையில் மாணவர்களின் அறிவூ மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல். ஒரு வகுப்பறையில் மேற்கொள்ளப்படும் மதிப்பீடு அளவூ சார் மதிப்பீடாகவோ அல்லது பண்பு சார் மதிப்பீடாகவோ இருக்கலாம். இவ்வாறான மதிப்பீடுகள் ஒரு மாணவனின் அடைவூ மட்டத்தை உயர்த்த உதவூதுடன் பாடத் தேர்ச்சி தொடர்பான  தௌpவையூம் நம்பிக்கையையூம் ஏற்படுத்தும். மதிப்பீடு என்பது மாணவர்களை ஊக்குவித்து முன்னேற்றமடைய வைக்கவேண்டுமே ஒழிய அவர்களைப் பலவீனப்படுத்துவதாகவோ அல்லது நம்பிக்கை இழக்கவைப்பதாகவோ இருக்கக்கூடாது.

1. சுய மதிப்பீட்டுத்திறன் (ளுநடக யூளளநளளஅநவெ)      
ஒவ்வொரு மாணவரும் தமது கற்றல்  திறனையூம்இ தான் எங்கே நிற்கின்றேன் என்பதையூம் தாமே மதிப்பிட்டுக் கொள்ளுதலே சுயமதிப்பீடாகும். இவ்வாறான சுய மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்களையூம்இ ஆலோசனை களையூம் வகுப்பு ஆசிரியர் வழங்கவேண்டும். இவ்வாறான சுய மதிப்பீடுகள் அடுத்த கட்டத்தில் தான் என்ன செய்யவேண்டும் என்ற சரியான தீர்மானத்தை எடுப்பதற்கும் உதவூம்.

2. உடனடியான பின்னூட்டல் (ஐஅஅநனயைவந குநநனடியஉம):       
கற்றலையூம் கற்பித்தலையூம் மேலும் முன்னேற்றமடையச் செய்வதற்கு உதவக் கூடிய ஒரு முக்கியமான செயற்பாடாக அமைவது பின்னூட்டலாகும். அதுவூம் எப்பொழுதும் பின்னூட்டல்கள் உடனடியாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். காலம் தாழ்த்திய பின்னூட்டல்கள் பயனற்றதாகவே போய்விடும். இவ்வாறு பின்னூட்டல் களை மேற்கொள் வதன் மூலம் தமது தவறுகளைத் தாமே திருத்திக் கொள்வதற்கும் சரியானவற்றைச் சரியாகவூம் சரியான நேரத்திலும் செய்வதற்கும் உதவூம். அதேவேளை அடைவூ மட்டத்தை உயர்த்திக் கொள்ளவூம் முடியூம். மிக இலகுவானஇ வினாக்களை மாணவர் களிடம் வினாவூதல் என்பதும் மிக எளிமையான பின்னூட்டலாக அமையூம்.

   எனவே வகுப்பறை மேம்பாடு அல்லது வகுப்பறை முகாமைத்துவம் என்பது வகுப்பறையை சிறந்த கவர்ச்சிகரமான கவிநிலையைக் கொண்டதாகப் பேணிக் கொள்வது  மட்டுமல்லாதுஇ பிள்ளைகளின் அறிவூஇ திறன்இ மனப்பாங்கு என்பவற்றை  முழுமையாக அடைந்துகொள்ளும் வகையில் ஆளுமை விருத்தியில் ஒரு ஆசிரியர் கவனம் எடுத்து பல்வேறு  நுட்பங்களைக் கொண்டதாக வகுப்பறை முகாமைத்து வத்தை மேம்படுத்த வேண்டும். அப்பொழுதுதான்இ வினைத்திறன் மிக்க வகுப்பறை மேம்பாடு என்பது வெளிப்படையாகத் தெரியவரும். இதனூடாகவே பிள்ளைகளின்  விளைதிறன் மிக்க ஆளுமை விருத்தியூம் வெளித்தோன்றும்.





கல்வியியலாளன் 

எஸ்.எஸ்.ஜீவன் 

B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ), SLTS(2)

No comments:

Post a Comment