Wednesday, February 1, 2023


இலங்கையின் கல்விப் பிரச்சினைகளும் உலகமயமாதல்இ கோளமயமாதல் மற்றும் கல்வியில் சர்வதேச மயமாதல் காரணிகளின் தாக்கமும்.  - எஸ்.எஸ்.ஜீவன்



கோளமயமாதல்(புடழடியடணையவழைn) என்பதனை கிடென்ஸ்(1990) என்பவர் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்துகின்றார். “தொலைதூரங்களிலுள்ள இடங்களை இணைக்கின்ற உலகளாவிய சமூக உறவூ நெருக்கமடைவதனால் பல மைல் தூரத்திற்கு அப்பால் நிகழும் நிகழ்வூகள் உள்ள+ர் நிகழ்வூகளை வடிவமைக்கின்றன. இந் நடவடிக்கைகள் மறுபுறமாகவூம் இடம்பெறுகின்றன” கோளமயமாதலின் விளைவூகளால் பிரதேசமயமாதல் நிலையிலிருந்து கல்வியானது சர்வதேசமயமாதலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது உலக மாற்றங்களின் செறிவூஇ விரைவூஇ அவற்றின் விரிவூ என்பவற்றினால் நாடுகளிடையே திடீர் உட்பாய்ச்சல்களை ஏற்படுத்துகின்றன. உலக நாடுகள் உள்ளாந்தமாக தொழிநுட்பம்இ தொடர்பாடல்இ பொருளாதாரம்இ வாழ்க்கை வசதிகள்இ வாழ்க்கைப்பாணி முதலியவற்றில் எல்லைகளில்லா நிலைமைகளை அனுபவிப்பதற்கான காரணிகளின் தொகுப்பினைக் கோளமயமாதல் எனக் குறிப்பிடலாம்.

கல்வியில் சர்வதேசமயமாதல் (ஐவெநசயெவழையெடணையவழைn ழக நுனரஉயவழைn)  என்னும் செயற்பாட்டின் வீச்சுக்குள் இன்று இலங்கையூம் உள்வாங்கப்பட்டுள்ளது. நடைமுறை உலகில் கல்வியில் சர்வதேசமயமாதல் தவிர்க்க முடியாததாயினும் இது பற்றிய வாதம் பிரதிவாதங்கள் கல்வியிலாளர்களால் முன்வைக்கப்படுகின்றன.  அறிவூஇ தொழிநுட்பம் இவற்றால் ஏற்படும் புத்தாக்கம் சார்ந்த புதிய உலகப் பொருளாதார உருவாக்கமானது தற்காலத்தில் புவியியல் மற்றும் அரசியல் எல்லைகளைக் கடந்து ஒரே விதமான மானிட வாழ்க்கைப் பாணியினை நோக்கி நகர்த்துவதனை உணர முடிகின்றது.

உலகின் சமகாலக் கருத்து வினைப்பாட்டில் (னுளைஉழரசளந) 'கோளமயம்' என்பது முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. சமூகமும்இ கல்வியூம்இ பண்பாடும் பற்றிய மீள்சிந்தனைக்கு இதன் தாக்கங்கள் இட்டுச் செல்கின்றன. கோளமயத்தோடு இணைந்த எண்ணக் - கருக்களாக பின் - நவீனத்துவம்இ தொழில்நுட்ப முதலாளித்துவம் (வூநஉhழெ ஊயிவையடளைஅ) (ஐகெழசஅயவழைn ளுரிநச Hiபாறயல) உலகளாவிய பெருஞ் சந்தை புதிய வறுமைஇ கோள. வெகுசனப்பாடு (புடழடியட pழிரடயச) முதலியவை மேலெழுகின்றன. பல்வேறு பிரச்சினைகளும்இ எழுநிலைகளும் (ஐளுளுரநள) கோளமயமாக்கலால் தோன்றியூள்ளன. இந்நிலையில் அடிப்படையான கருத்தியல் சார்ந்த தௌpவின்றிஇ "கோள நோக்கில் சிந்தியூங்கள்இ பிரதேச நோக்கில் செயற்படுங்கள்" என்ற சுலோகமும்இ "பிரதேச நோக்கில் சிந்தியூங்கள்இ கோளநோக்கில் செயற்படுங்கள்" என்ற சுலோகமும் உலக முதலாளித்துவத்தின் வளர்ச்சியையூம்இ உலகை நோக்கிய சந்தையின் விரிவால் ஏற்படக்கூடிய விரிவான இலாபமீட்டலையூம்இ விஞ்ஞான பூர்வமாக விளக்கிய கோட்பாடாக அமைந்த மார்க்சியம் அறிகை நிலையில் புதிய தரிசனத்தை வழங்கிய வண்ணமுள்ளது. உதாரணமாக 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்இ விரிவடைந்த வணிகம்இ முதலீடு என்பவை காரணமாக ஒவ்வொரு நாளும் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான பல நாட்டு நாணய வணிகம் இடம்பெற்றது.

கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; என்பது தொலைத்தொடர்புஇ போக்குவரத்துஇ தகவல் தொழில்நுட்பம்இ அரசியல்இ பண்பாடுஇ ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக சமூகங்களுக்கிடையேயான அதிகரிக்கும் தொடர்பையூம் அதனால் ஏற்படுத்தப்பட்டுவரும் ஒருவரில் ஒருவர் தங்கிவாழ் நிலையையூம் கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; எனலாம். உலகமய சு+ழலில் ஒரு சமூகத்தின் அரசியல்இ பொருளாதாரஇ சமூகஇ பண்பாட்டு நிலைமைகளும் நிகழ்வூகளும் மற்றைய சமூகங்களில் கூடிய விகித தாக்கத்தை ஏதுவாக்குகின்றது. கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; வரலாற்றில் ஒரு தொடர் நிகழ்வூதான்இ ஆனால் இன்றைய சு+ழல் உலகமயமாதலை கோடிட்டு காட்டுவதாக அமைகின்றது. உலாக மயமாதல் இலங்கை போன்ற மூன்றாம் நாடுகளிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியூள்ளது இது கல்வித்துறையிலும் பாரிய மாற்றத்தினையூம்இ கலைத்திட்ட மாற்றத்தினையூம் ஏற்படுத்தி வருவதனைக் காணலாம்.

கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்;இ கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல் ஆங்கிலத்தில் "படழடியடணையவழைn" என்ற கருத்துருவாக்கத்தின் தமிழ்ப்பதம் ஆகும். தமிழில் உலகமயமாக்கம் என்ற சொல்லும் சில வேளைகளில் "படழடியடணையவழைn" க்கு ஈடாக பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் அச்சொற்களின் பொருள் வேறுபாடு கவனிக்கத்தக்கது. கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; தானாக விரியூம் ஒரு செயல்பாடுஇ அல்லது அதை நோக்கிய ஒரு கருத்துப்பாடு. உலகமயமாக்கம் என்பது யாரோ அதன் பின்னால் இருந்து ஆக்குவதா பொருள் தொனிக்கின்றது. கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; என்பதைப் பொருளாதாரம் தொடர்பில் பயன்படுத்தத் தொடங்கியது 1981 ஆம் ஆண்டிலேயேயாகும். தியோடோர் லெவிட் (வூhநழனழசந டுநஎவைவ) என்பவர் எழுதிய சந்தைகளின் கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; (புடழடியடணையவழைn ழக ஆயசமநவள) என்னும் நூலில் கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; என்பது பொருளாதாரம் தொடர்பில் பயன்படுத்தப்பட்டது. உலகம் தழுவிய சமூகவியல் ஆய்வூகளிலும்இ இது ஒரு பரந்தஇ அனைத்தும் தழுவிய தோற்றப்பாடாக (phநழெஅநழெn) உணரப்பட்டது.

16ம் நூற்றாண்டு வரை ஆசியஇ ஆபிரிக்க நாடுகளில் அந்நாடுகளின் சுதேச கல்வி முறைகளே நீடித்தன. இக்காலகட்டத்தில் பெரும்பாலும் அனைத்து நாடுகளும் தமது அண்டைய நாடுகளுடனே தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டன. புவியியல் மற்றும் இயற்கைத்தடைகளைத் தாண்டிய தொடர்பு கொள்ளலுக்கான போதிய தொழிநுட்பம் வளர்ச்சியடையாமையால் இந்நிலை காணப்பட்டதெனலாம். இக்காலகட்டத்தின் பிற்பகுதியில் ஆரம்பமான குடியேற்றவாத முயற்சிகளே பிரதேசம் தாண்டிய கோளமயமாதல் செயல்முறையின் ஆரம்பமாக அமைந்தது.

பிரான்ஸ்இ ஸ்பெயின்இ போர்த்துக்கல் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் ஆசியஇ ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளைக் கைப்பற்றி தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்தன. இச்செயற்பாடுகளுக்கு ஆதரவான மனித வள உருவாக்கம்இ கலாசார மாற்றம் என்பவற்றை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன. இதற்கான ஆயூதமாகச் சமயத்தினையூம் கல்வியினையூம் பயன்படுத்தின. குடியேற்ற நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தமையாலும் குடியேற்றவாதக் கல்விக் கொள்கைகள் விரிவடைந்தமையாலும் குடியேற்ற நாடுகளின் சுதேச கல்வி முறைகள் நலிவடைந்தன. இக்காலகட்டத்தில் உலக நாடுகள் அனைத்திலும் ஏறத்தாழ ஒரே வகையான கல்வி முறையானது மறைமுகமாக ஆரம்பமானதெனலாம். இரண்டாம் உலகப்போர் வரை இந்நிலை தொடர்ந்து விரிவடைந்தது. இக்கால கட்டத்திலே சுதேச கல்வி முறைகள் நலிவடைந்ததுடன் சுதந்திரத்திற்கான மக்கள் போராட்டங்களும் குடியேற்ற நாடுகளில் முகிழ்த்தன.
குடியேற்றவாதக் கல்வி முறை காரணமாக குடியேற்ற நாடுகளில் பின்வரும் விளைவூகள் ஏற்பட்டன.
பாரம்பரியமாக இருந்து வந்த முறைசார் கல்வி முறைகள் சிதைவடைந்தன.
தற்போதைய கல்வி முறைக்கு அடிப்படையான முறைசார் கல்வி முறை வியாபித்தமை.
அரச உத்தியோகத்தர்களை உருவாக்கும் பொறிமுறை கல்வியினூடாக முன்னெடுக்கப்பட்டமை.
குடியேற்றப் பேரரசுக்கு விசுவாசமான புத்திஜீவிகளது உருவாக்கம்.
ஐரோப்பிய மொழிகள்(ஆங்கிலம்) கல்வியில் முக்கியம் பெற்றமை.
ஜரோப்பிய சமயங்கள் ஆதிக்கம் பெற்றமை.
மேற்கைத் தேசத்து கல்விச் சிந்தனைகளும்இ தத்துவங்களும் குடியேற்ற நாடுகளின் கல்வியில் உட்புகுந்தன.
மேற்கத்தைய நாடுகளில் மீத்திறன் மிக்க மாணவர்கள் கல்வி பெறும் வாய்ப்பு
மேற்கத்தைய கலாசாரப் பண்புகள் கொண்ட சமூகம் உருவானமை. (மேற்கத்தைய கலாசாரம் ஏனையவர்களிடமும் ஆரம்பித்தமை)
இரண்டாம் உலகப் போரின் பின்னர் குடியேற்ற நாடுகள் பல சுதந்திரப் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றியூம் கண்டன. சுதந்திரத்தின் பின்னர் இந்நாடுகள் பல மீண்டும் சுதேச கல்வி முறைக்கு மீளவூம் பாரம்பரிய கலாசாரங்களை வளர்த்தெடுக்கவூம் முயன்றன. எனினும் குடியேற்றவாத கால மேம்பட்ட வகுப்பினரது எதிர்ப்புக்களுக்கு சுதேச அரசுகள் முகங்கொடுக்க வேண்டியிருந்தது. (இந்நிலை இன்று வரை தொடர்கின்றது) இந்தக்கள நிலையானது கோளமயமாதல் காரணமாக இன்றைய சர்வதேசமயமாதலுக்கான பலமான அத்திவாரத்தினை வழங்கியதெனலாம். (நவ காலத்துவப் பண்புகள் பலமடைந்தன)
வளர்ந்து வரும் நாடுகளுக்குஇ அதிகரித்த வாழ்க்கைத் தரத்தையூம்இ வளத்தையூம் கொண்டுவருகின்றது என்பதும்இ முதலாம் உலக நாடுகளினதும்இ மூன்றாம் உலக நாடுகளினதும் நிதி வளத்தைப் பெருக்க உதவூகிறது என்பதும் ஒரு வகையான நோக்கு. இது உலகமயமாதலைப் பொருளியல் மற்றும் சமூக அடிப்படையில் ஒரு விரும்பத்தக்க விடயமாகக் கருதுகின்றது. பிரதேச வாரியான ஒத்துழைப்பு அமைப்புக்கள் பல உருவாக்கப்பட்டமை.
Nயூவூழு – வட அத்திலாந்திக் ஒப்பந்தம்
நுஊ – ஐரோப்பிய பொதுச் சமூகம்
யேஅ – அணிசேரா நாடுகளின் அமையம்
யூளுஐயூN – தென்கிழக்காசிய நாடுகள் அமையம்
ளுயூசுஊ – தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்புக்கான அமையம். முதலான அமைப்புக்கள் மூலம் ஏற்கனவே நிலவிய கல்விஇ பொருளாதாரஇ சமூகக் கட்டுமானங்கள் வலுவூ+ட்டப்பட்டன. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரதேசமயமாதல் நிலையிலிருந்து கோளமயமாதலுக்கான வாசல் திறக்கப்படுகின்றது.

இன்னொரு நோக்குஇ பொருளியல்இ சமூக மற்றும் சு+ழலியல் அடிப்படையில் உலகமயமாதலை எதிர்மறையானஇ விரும்பத்தகாத ஒரு விடயமாகக் கருதுகின்றது. இதன்படிஇ கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்;இ வளர்ந்து வருகின்ற சமுதாயங்களின் மனித உரிமைகளை நசுக்குகிறது என்றும்இ வளத்தைக் கொண்டுவருவதாகக் கூறிக்கொண்டு கொள்ளை இலாபமீட்டுவதை அனுமதிக்கிறது என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது. இவை தவிரப் பண்பாட்டுப் பேரரசுவாத (உரடவரசயட iஅpநசயைடளைஅ) நடவடிக்கைகளினூடாகப் பண்பாட்டுக் கலப்புக்கு வழி வகுப்பதும்இ செயற்கைத் தேவைகளை ஏற்றுமது செய்வதும்இ பல சிறிய சமுதாயங்கள்இ சு+ழல்கள் மற்றும் பண்பாடுகளைச் சிதைத்து விடுவதும் இதன் எதிர்மறை விளைவூகளாக எடுத்துக் காட்டப்படுகின்றன.
இலங்கை போன்ற மூன்றாம் நாடுகளிலே கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல் பின்வரும் பாதகமான விளைவூகள் ஏற்படுமென கோளமயமாக்கலுக்கான எதிர்க்கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
நாடுகளின் இறைமைஇ அடையாளம் பற்றிய கரிசனை
கலாசார தனித்துவம் சிதைவடைதல் - உலகளாவிய ஒரே கலாசாரப் பரவல்
உள்ள+ர் வளங்கள் முக்கியத்துவமிழத்தல்ஃசமநிலையிழத்தல்.
கலாசாரங்களின் புதிய கலப்பு நிலை
தொழிநுட்பம்இ தகவல் தொழிநுட்பம் என்பவற்றில் மேல்நிலை பெற்றுள்ள நாடுகளின் மறைமுகமான மேலாதிக்கம் ஏனைய நாடுகளின் பொருளாதாரஇ அரசியல் சமநிலைகளில் தளம்பலை ஏற்படுத்தும்.
மக்களின் வாழ்க்கை முறை நிச்சயமற்ற நிலைக்குள் தள்ளப்படும்.
சுதேச நலன்கள் பாதிக்கப்படும்.
புதிய கல்வித் தொழிநுட்பத்தினை வேகமாகப் பின்பற்ற வாய்ப்பற்ற மக்கள் குழாம் உருவாகி ஏனையவர்களால் சுரண்டலுக்குள்ளாக நேரிடும்.


கல்வியானது கோளமயமாக்கலிலிருந்து கல்வி சர்வதேசமயமாதல்  கோளமயமாக்குதலின் விளைவூகளும் விசையூம் கல்வியில் சர்வதேசமயமாக்கலினைச் சாதகமாக்கியூள்ளதெனலாம். கோளமயமாதலின் அனுகூலமான விளைவூகள் நோக்கி இன்று உலக நாடுகளனைத்தும் விரும்பியோ விரு;பாமலோ கல்வியின் சர்வதேசமயமாக்கல் வீச்சுக்குள் தம்மை உட்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியூள்ளது. ‘கோளமயமாக்கலின் திறன்கள்’ சாதகமற்ற நிலையிலுள்ளவர்களுக்கு கல்வியைச் சர்வதேசமயமாக்கும் நடைமுறைகள் பயனுடையதாக அமையூம் எனவூம் இது நவீன கல்வியைச் சனநாயகப்படுத்த உதவூம் எனவூம் இதனை முன்வைப்போர் வாதிடுகின்றனர்” – (கிடென்ஸ் 2000)

இதனை எதிர்த்து வாதிடுவோர் எதிர்மறையான விளைவூகளையே தரும் என வாதிடுகின்றனர். எனினும் சர்வதேசமயமாக்கலால் உள்ளுர் கல்வி முறை செழுமையடையூம் என்னும் கருத்து வலுப் பெற்றே வருகின்றது. “கல்வியின் சர்வதேசமயமாக்கல் என்பது இரண்டாம் நிலைக்கல்விக்கு அப்பாலுள்ள கல்வியின் நோக்கத்திலம் செயற்பாட்டிலும்இ கல்வி வழங்குவதிலும் சர்வதேச மற்றும் பல்கலாசார அல்லது பூகோள பipமாணத்தினை ஒருங்கிணைக்கும் செயற்பாடாகும்” என நைட்(2004) என்பவர் குறிப்பிடுகின்றார்.

“கல்வியில் கோளமயமாக்கல் காரணமாக ஏற்பட்ட மாற்றங்கள் கல்வியின் கட்டமைப்புஇ நிதி மூலங்கள்இ கலைத்திட்டம்இ நிர்வாகம் என்பவற்றில் முனைப்பான சீர்திருத்தங்களை ஏற்படுத்தியூள்ளது” (கார்னோஸ் 2000இ யூனெஸ்கோ 2000) வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் கல்வி மீதான முதலீட்டிற்கான குறைபாடுகளால் கல்வியில் சர்வதேசமயமாக்கல் நடைமுறைகள் இந்நாடுகளில் இலகுவாக உட்புகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. உள்நாட்டு அரசியல்இ சமூகஇ பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொள்ளாது கல்வியின் விரைந்த  சர்வதேசமயமாதல் வீச்சுக்குள் இழுபட்டு கல்வியை இறக்குமதி செய்யூம் அல்லது கடன் வாங்கும் நிலைக்கு வளர்முக நாடுகள் பலவூம் தள்ளப்பட்டுள்ளன.

ஆசிய நாடுகள் சில (சீனாஇ இந்தியாஇ இலங்கை மலேசியா) இதில் நன்மைகளைப் பெற்று வருகின்ற போதிலும் இலங்கையானது ஓர் நிச்சயமற்ற தளம்பல் நிலைமையினையே அனுபவித்து வருவதாக தோன்றுகின்றது. நாடுகளுக்கிடையேயான முகவர் நிறுவனங்கள்இ நன்கொடை வழங்கும் அமைப்புக்கள்இ கூட்டுத்தாபனங்கள்(யூனெஸ்கோஇ உலக வங்கி முதலியன) கோளமயமாதல் யெல்முறைகளையூம் கல்வி சர்வதேசமயப்படுத்தப்படுதலையூம் அங்கத்துவ நாடுகளிடையே வலியூறுத்தி வருவதனையூம் உதவி பெறும் வறிய மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் உதவிக்கான நிபந்தனையாக இக் கொள்கைகளை விதிப்பதனையூம் காண முடிகின்றது. சர்வதேசமயப்படுத்தல் வழி நடைமுறைப்படுத்தப்படாத பாடசாலைகளுக்கான உதவிகளை உலக அமைப்புக்கள் இடைநிறுத்தியூள்ளன.  இது தவிர இலங்கை போன்ற நாடுகளில் எதுவித இறுக்கமான கட்டுப்பாடுகளுமின்றி சர்வதேசப் பாடசாலைகள் ஸ்தாபிக்கப்படுகின்றன. கொள்கை வேறுபாடுகளின்றி இலங்கையில் ஆட்சியமைக்கும் கட்சிகளின்  அரசுகள் இந் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வருகின்றன.
சர்வதேசக் கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் உலகளாவிய ரீதியில் இச் செயற்பாடுகளை விரிவூபடுத்தி வருகின்றன. இதன் காரணமாக வளர்முக நாடுகள் தமது சுதேசக் கல்வி முறையிலும் கலைத்திட்டங்களிலும் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அனைவர்க்கும் கல்விஇ தரமான சமூக உருவாக்கத்திற்கான கல்விஇ விழுமியம் சார் கல்விஇ கல்வியில் சமவாய்ப்பு என்னும் அடிப்படை நியமங்களுக்கப்பால் கல்வியைச் சர்வதேசமயப்படுத்தல் என்னும் சவால் மிகுந்த செயற்பாடுகளையூம் முன்னெடுக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசுசாரா உயர்கல்வி மானியங்கள் ஆணைக்குழவினை அமைக்கும் நிலையூம் இலங்கையில் ஏற்பட்டுள்ளது. கல்வியில் இருமைத்தன்மையானது இலங்கையில் இதனால் புதிய வடிவம் பெற்றுவருகின்றது. அரச பல்கலைக்கழகங்களிலான நாட்டம் குறைவடைந்து வருவதனால் உயர் கல்விக் கட்டமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவையூம் ஏற்பட்டுள்ளது. எல்லைகளற்ற கல்வி விரிவாக்கம் இலங்கையிலும் காலூன்றியூள்ளமையால் நிதி வெளிப்பாய்ச்சல்இ மூளைசாலிகள் வெளியேற்றம் என்பன தீவிரமடைந்து வருகின்றன. இதன் காரணமாகச் சில உடனடி நன்மைகள் ஏற்பட்ட போதிலும் எதிர்காலத் தீர்க்க தரிசனமற்ற பல பாதகமான விளைவூகளும் ஏற்படாம் எனக் கல்வியிலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இலங்கை போன்ற மூன்றாம் நாடுகளிலே கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்;இசர்வதேசமயமாதல் பண்பாட்டு மாற்றத்தினை அதிகரித்து வருவது பிரச்சினையாகும்
கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; பலமான மொழிஇ பண்பாட்டுஇ அடையாளங்களை முன்னிறுத்தி சிறுபான்மை இன - மொழி - பண்பாட்டு அழிவூக்கு அல்லது சிதைவூக்கு இட்டு செல்வதாக சிலர் வாதிக்கின்றனர். இக்கூற்றில் உண்மையூண்டுஇ எனினும் ஒரு சமூகத்தின் அடிப்படைக் கூறுகளை இழக்காமல் கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; உந்தும் அல்லது தருவிக்கும் அம்சங்களையூம் ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ள முடியூம். அதாவது கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; இருக்கும் ஒன்றின் அழிவில் ஏற்படமால்இ இருக்கும் ஒன்றௌடு அல்லது மேலதிகமான அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஒரு உந்தலாகவூம் பார்க்கலாம். இலங்கையிலே தமிழ்இசிங்களம்இ ஆங்கில மொழிப்பாவனை முக்கியம் பெறுவதோடு தமிழர்இ சிங்களவர்இ கிறிஸ்தவர்இ முஸ்லிங்கள்இ பறங்கியர் போன்ற பல்லின சமூகம் வாழும்நாடாகையால் அவர்களின் பண்பாட்டு தாக்கங்களுக்கு ஏற்ற வகையில் கலைத்திட்டம் அமைக்கப்பட்டாலும் சர்வதேசஇ கோளமயமாதலினால் அவற்றுக்கிடையிலே சிதறல் நிலையே காணப்படுகின்றது.

இலங்கையிலே மூளைசாலிகள் வெளியேற்றம் நாட்டின் பெரும் பிரச்சினையாகவே அமைகி;ன்றது.
செல்வந்த நாடுகளில் உள்ள வாய்ப்புக்கள் வறிய நாடுகளில் உள்ள திறன் பெற்ற தொழிலாளர்களைக் கவருவதனால் மூளைசாலிகள் வெளியேற்றம் ஏற்படுகின்றது. எடுத்துக் காட்டாகஇ பல்வேறு வறிய நாடுகளிலிருந்து பயிற்சி பெற்ற தாதிகள் வேலைக்காக ஐக்கிய அமெரிக்காவூக்கு வருகின்றனர். இதனால்இ புதிய வெளிநாட்டுத் திறனாளர்களைப் பெறுவதற்கு ஆப்பிரிக்காவூக்கு மட்டும் ஆண்டு தோறும் 4.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவூ ஏற்படுகிறது. இது போலவே மூளைசாலிகள் வெளியேற்றத்தின் மூலம் இந்தியாவூக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது. இலங்கை போன்ற நாடுகளிலே மூளைசாலிகள் குறைவாகவே காணப்படுகின்ற போதுதிலும் அதில் பலர் அபிவிருத்தி அடைந்த நாட்டிற்குச் செல்கின்றார்கள். அதனால் கல்விதுறைகளும் அதற்கூடாக விஞ்ஞானிகள்இ மெய்யியலாளர்கள்இ கல்வியிலாளர்கள்இ கண்டுபிடிப்பாளர்கள்இ உளவியலாளர்கள்இ போன்றௌர்களை வளர்த்தெடுக்க முடியாமல் போய்விடுகின்றது. இலங்கையிலே மருத்துவம்இ பொறியியல்இ தொழிநுட்பம்இ விஞ்ஞானம் துறைக்கான மூளைசாலிகள் வெளிநா சென்று படித்துவிட்டு அந்த நாட்டிலையே வாழ்வதனைக் காணலாம்.

உலக நாடுகளைப் போலவே இலங்கையிலும் அரசுப்பள்ளிக்கும் தனியார் ஆங்கிலப் பள்ளிக்கும் இடையேயான வேறுபாடு மிக அதிகமாக விரிவடைந்து வருகின்றது.
உலகமயமாக்கலுக்கும் கல்விக்குமிடையே நெருங்கிய தொடர்புண்டு. அரசுப்பள்ளிக்கும் தனியார் ஆங்கிலப் பள்ளிக்கும் இடையேயான வேறுபாடு மிக அதிகமாக விரிவடைந்து கூர்மையடைந்தது 1990க்குப் பிறகான இக்காலகட்டத்தில்தான். நடுத்தர வர்க்கம் தனியார் ஆங்கிலப் பள்ளிகளை நோக்கிய மிகப்பெரிய படையெடுப்பை நிகழ்த்தியதும் இக்காலகட்டத்தில்தான். தனியார் ஆங்கிலப் பள்ளியை நோக்கிய படையெடுப்பிற்கு மிக முக்கியக் காரணம் அங்கு பயிற்றுவிக்கும் மொழியாக ஆங்கிலம் இருப்பதேயாகும். இதைப்பற்றி பேரா.கிருஷ்ணகுமார் தனது முரண்பாடுகளிலிருந்து கற்றல் என்னும் நூலில் “ தனியார் ஆங்கிலப் பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவூஇ அவர்களை மேற்கு நாடுகளோடும் குறிப்பாக அமெரிக்காவோடு மிக இணக்கமான பண்பாட்டு உணர்வை ஏற்படுத்துகிறது. அதன் பொருட்டு அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் உலகப் பொருளாதார மயத்திலும் இணக்கமான உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. ஆங்கிலம் மின்னணுத் தொடர்பியலில் ஆதிக்கம் செலுத்தும் மொழியாக விளங்குவதால் சமூகத்தில் சிறந்த பொருளீட்டும் வாய்ப்பாக ஆங்கில மொழியறிவூ பயன்படுகிறது. அதன் மூலம் பயனடைவோர் ‘உலகே ஒரு கிராமம்’ எனும் சித்தரிப்பில் மிக ஆவலாக உள்ளனர்”

கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் கல்வித்துறையில் பெண்கல்வி தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டுக்  கொண்N;ட வருகின்றது.
இலங்கைஇ இந்தியா போன்ற அண்டைய மூன்றாம் உலக நாடுகளிலே சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாகியூம் பாலின சமத்துவம்இ சமநீதி மற்றும் சமன்நிலை என்று பார்க்கும்போது பெண்கள் இன்றளவூம் கல்விஇ சுகாதாரம்இ அரசியல் போன்ற அடிப்படை உரிமைகளுக்கும்இ பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் எதிராக போராட வேண்டிய நிலையிலேயே உள்ளதை அழுத்தமாகப் பதிவூ செய்கிறார். வரலாறு நெடுகிலும் எல்லாக் கலாச்சாரங்களிலுமே பெண்களின் உணர்வூகளும் உரிமைகளும் ஆணாதிக்க சமூகத்தின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அங்கீகரிக்கப்படுவதையூம்இ சாதி அல்லது இனத்தின் தூய்மையையூம் குடும்பம் என்ற அமைப்பின் கௌரவத்தைத் தாங்கிப் பிடிப்பவர்களாகவே பெண்களை இச்சமூகம் வளர்த்தெடுப்பதையூம் குறிப்பிடுகிறார். மேலும் மீண்டும் மீண்டும் பெண்களின் உடலை மையப்படுத்திய அரசியலை மையப்படுத்துவதன் மூலமாக பெண்களை அதிகாரம் அற்றவர்களாகவூம்இ ஆளுகைக்கு உட்பட்டவர்களாகவூம் வைத்துள்ளதோடு அதைப் பண்பாடுஇ கலாச்சாரம்இ சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்களின் மூலமாக நம்ப வைத்துள்ளதையூம் பதிவூ செய்கிறார். பெண்களுக்கு கல்வி உள்ளிட்ட அனைத்து பெண்கள் மேம்பாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களும்இ யூக்திகளும் கூட ஆணாதிக்கச் சமூக நலன்களுக்கு கேடில்லாமல் நிர்ணயிக்கப்பட்ட சமூக விதிகளை மீறாமல் பார்த்துக் கொள்ளும்படியான வகையிலேயே உருவாக்கப்படும் சு+ழ்ச்சிகளையூம் கொண்டதாகவே நகர்ந்து செல்கின்றது.
இவ்வாறு சமூகப் பாலின பாகுபாடுகளின் காரணமாக சமூக மற்றும் குடும்ப வளங்களின் மீதான பெண்களின் கட்டுப்பாடுஇ பயன்பாடுஇ பங்கேற்பு மற்றும் முடிவெடுத்தல் போன்றவைகள் தொடர்பான உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில் கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; பெண்களின் நிலைமையை மேலும் நலிவடையச் செய்துள்ளது. இச்சு+ழலில் வளங்கள் மற்றும் சொத்துரிமையற்ற தொழில்நுட்பங்களை கற்றறியாத பெண்களின் மீது கோளமயமாதல் மற்றும் சர்வதேசமயமாதல்; வறுமையின் சுமையை அதிகப்படுத்தியூள்ளது எனக்கூறமுடியூம்.
பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெரும்பாலான தொழில்கள் போராடி சம்பளத்தை அதிகரிக்க முடியாத தொழில்களாகவூம்இ ஆற்றல் மிக்க தொழிற்சங்கபலத்தைக் கொண்டிராத தொழில்களாகவூம் காணப்படுகின்றன. இதற்கு உதாரணமாக இலங்கையின் முன்பள்ளி ஆசிரியர் தொழிலைக் குறிப்பிடலாம். இது பெண்களுக் (வூசயனவைழையெட னழஅநளவiஉ சுழடந) இணைந்தது. முற்று முழுதாகப் பெண்களால் மட்டுமே இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கை வேதனம் மிகவூம் குறைந்த தொழிலாக இது விளங்குகின்றது.
வர்க்க நிலைப்பட்ட சுரண்டலுடன் பால் நிலைப்பட்ட சுரண்டலும் இணைந்து செல்வதைக் காண முடியூம்இ பொருள்களை மீள் உற்பத்தி செய்வதிலே மேற்கொள்ளப்படும் சிக்கன நடவடிக்கைகள் (ஊழளவ நுககநஉவiஎநநௌள) போன்று மனிதவளத்தை மீள் உற்பத்தி செய்யூம் சிக்கன நடவடிக்கையில் பெண்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். அதே வேளை இல்லத்துக்கு வெளியில் குறைந்த வேதனத்துக்குத் தொழில் புரியூம் நிலை சமாந்தரமான இரண்டு வகையான சுரண்டலுக்குப் பெண்களை உள்ளாக்கிவிடுகின்றது. கோளமயமாக்கலால் வறுமைக் கோட்டின் கீழ்வாழும் பெண்களே அதிக தாக்கத்துக்கு உள்ளாகின்றனர். வறிய பெண்கள் கல்விச் செயல்முறையில் இருந்து இலகுவாக வெளிவீசப்பட்டு விடுகின்றனர். உலகமயமாக்கல் விரிவூக்கு முற்பட்ட இலங்கையின் பாரம்பரியமான கல்வியில் நிலவூடமைப் பொருளாதாரப் பண்புகளும்இ காலனித்துவப் பண்புகளும் கலந்த செயல்வடிவத்தைக் கொண்டிருந்தது.

போதைப்பொருள்இ சட்டத்துக்குப் புறம்பான பொருட்கள் வணிகம் கல்வித்துறையிலும் வளர்ச்சியை பாதிக்கலாயிற்று.
2010 ஆம் ஆண்டில்இ உலக போதைப்பொருள் வணிகம்இ ஆண்டொன்றுக்கு 320 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் பெற்றதாக போதைப்பொருள்களுக்கும்இ குற்றச் செயல்களுக்குமான ஐக்கிய நாடுகள் அலுவலகம் அறிவித்துள்ளது. அத்தோடு உலக அளவில் 50 மில்லியன்களுக்கு மேற்பட்டோர் ஒழுங்காக எரோயின்இ கொக்கெயின்இ செயற்கைப் போதைப்பொருள்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டுள்ளது. சட்டத்துக்குப் புறம்பான கடத்தல் தொழிலுடன் தொடர்புடைய வணிகங்களில் போதைப்பொருள் வணிகத்துக்கு அடுத்தபடியாக உள்ளது அழியூம் நிலையில் உள்ள உயிரினங்கள் தொடர்பான வணிகம் ஆகும். சில நாடுகளின் மரபுவழி மருத்துவத்தில் பல்வேறு தாவரங்கள்இ விலங்குகள் போன்றவற்றின் பல்வேறு பகுதிகள் பயன்படுகின்றன. இவற்றுள்இ அழியூம் நிலையில் உள்ள விலங்குகளான கடற் குதிரைகள்இ காண்டாமிருகங்கள்இ புலிகள் போன்றவற்றின் உடற் பாகங்களும் அடங்கும். இதனால்இ சட்டத்துக்குப் புறம்பாக இவ்விலங்குகளை வேட்டையாடுவதுஇ அவற்றின் பகுதிகளைக் கள்ளச் சந்தையில் விற்பது என்பது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.இலங்கையிலே அன்மையில் இவ்வாறான வனிகச்செயல்கள் இடம்பெற்றே வருகின்றது.
கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் கல்வித்துறையிலும் சரிஇ ஏனைய துறையிலும் சரி உறைந்து இறுகிய ஒருதலைப்பட்சமான வார்ப்புச் சிந்தனைகளை வளர்தல்இ போட்டியால் முன்னேறலாம் என்ற நம்பிக்கையை தனியார் நிறுவனங்களில் சேர்ந்து மாதாந்த ஊதியம் பெறும் கவர்ச்சியை ஊட்டுதல்இ தாம் தொழிற்படும் நிறுவனங்கள் எதிர் மானிடப் பண்புகளைக் கொண்டிருந்தாலும் அவற்றுக்கு விசுவாகமாக இணங்கித் தொழிற்படுதல்இ சமூக நிரலமைப்பை ஏற்று இசைந்து செல்லல்இ மத்தியதர வகுப்பினருக்குரிய உளப்பாங்குகளைக் கட்டியெழுப்புதல்இ தீவிர மாற்றங்களை விரும்பாத சமநிலையில் இருக்க விரும்புதல்இ அநீதிகளை எடுத்துரைக்காது அடங்கிவாழ முனைதல்இ மௌனப் பண்பாட்டைப் பராமரித்தல் உன்னதமானது என்ற உளப்பாங்கைப் பராமரித்தல்இ ஒடுங்கிய சுயஇலாபங்களை நோக்கிய ஊக்கல் முனைப்புடன் தொழிற்படுதல்இ ஆக்கச் சிந்தனைகளுக்கு வளமூட்டாது பொறி முறையாகச் சிந்திக்குச் செயல்முறைகளுக்கு வலிவூ+ட்டுதல் முதலியவை காலனித்துவ நவகாலணித்துவ கல்வி முறைமையின் பண்புகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.

கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் கல்வித்துறையில் பள்ளிக் கூட முகாமைத்துவக் கட்டமைப்பில் நிலமானியப் பண்புகள் இன்றும் தொடர்ந்த வண்ணமுள்ளன. எடுத்துக்காட்டாக ஒரு கிராமத்துப் பாடசாலையின் அதிபர் அந்தக் கிராமத்து மேட்டுக்குடியினரைப் பிரதிபலிப்பவராக இருக்கும் பொழுதுதான் முகாமைத்துவத்தை இசைவூபட முன்னெடுக்க முடிகின்றது. ஆண்களும் பெண்களும் கலந்துகற்கும் கல்லூரிகளுக்கு ஆண்களே அதிபர்களாக இருப்பதற்கு பொருத்தமானவர்கள் என்று கருதப்படுதல் பெண்கள் ஆற்றல் குறைந்தவர்கள் என்ற நிலப்பிரபுத்துவப் பெறுமானங்களின் மீள வலியூறுத்தலாக அமைகின்றது.
              நிலப்பிரபுத்துவக் கல்விமுறைமையின் இன்னொரு பரிமாணமாக அமைவது "ஒருபக்கத் தொடர்பாடல்" ஆகும். காலனித்துவ மற்றும் நவகாலனித்துவக் கல்வி முறை இந்த செயற்பாட்டினை மேலும் மீளவலியூறுத்தியது. அதாவது மாணவரிடமிருந்து முகிழ்த்தெழும் தொடர்பாடலுக்கு இங்கு முக்கியத்துவம் தரப்படுதல் இல்லை. மாணவர் அறிவின் நுகர்ச்சியாளராக இருப்பார்களேயன்றி அறிவின் உற்பத்திச் செயற்பாட்டிலே பங்கெடுக்காத நிலை ஒருவகையிலே ஒடுக்குமுறைக்குச் சாதகமாக அமைந்து விடுகின்றது.

கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் கல்வித்துறையிலே அறிவூக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் கல்விகற்றவர்இ கற்காதவர் எனும் ஏற்றத்தாழ்வூகளும் இலங்கை போன் நாகளிலே ஏற்பட்க்கொண்டு வருகின்றது.  கோளமயமாக்கற் சு+ழலில் அறிவூ என்பது ஒரு பண்டமாக (ஊழஅஅழனவைல) மாற்றப்பட்டுள்ளது. அறிவூச் செயற்பாட்டில் ஈடுபடும்நிலையங்கள் பண்ட உற்பத்தி செய்யூம் "வேலைத்தலங்களாக" நிலை மாற்றம் பெறுகின்றன. வேலை நிலையங்களுக்குரிய இலாப மீட்டும் செயற். பாடுகள் அடிப்படை மனிதப் பண்புகளையூம்இ கூட்டுறவூ மனப்பாங்கையூம் எளிதில் நிராகரித்து சுயநலப் போக்குகளைத் தூண்டி விடுகின்றன. கோளமயமாக்கலின் விசைகள் கட்டணம் செலுத்திக் கற்கும் நடவடிக்கைகள் மீது அதீத ஊக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
வேலையை அடிப்படையாகக் கொண்ட கற்றல் (றுழசம டீயளநன டுநயசniபெ) என்ற எண்ணக் கரு ஒருபுறம் செயல் அனுபவங்களை உள்ளடக்கிய கற்றலையூம்இ மறுபுறம் வேலை உலகை நோக்கிய பெறுமானங்களை வலியூறுத்தும் கற்றலையூம் குறிப்பிடுகின்றது. நவீனசந்தைப் பொருளாதாரச் செயற்பாடு கல்வியை நலன்புரி (றநடகயசந) நடவடிக்கை என்ற மரபு வழிநிலையிலிருந்து மாற்றி சந்தையின் தேவைகளுக்குரிய கல்வியாக செயற்பட வைக்கின்றது. கல்வி வழங்குனரும் கல்வி பெறுனரும் சந்தைத் தேவைகளின் அடிப்படையாகவே தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். கட்டமைப்பு இசைவாக்கல் (ளுவசரஉவரசயட யனதரளவஅநவெள) என்ற பொருளாதார நடவடிக்கைகள் அணுகுமுறைகள் கல்விக்கென அரசு வழங்கும் நிதியை வெட்டிக் குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இதன்காரணமாக வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோரும் பிரதிகூலம் எய்தியவர்களும் கல்வி நிராகரிப்புக்கு உள்ளாகும் நிலை பெருக்கமடையத் தொடங்கியூள்ளது. பொருளாதார நிலையில் அனுகூலம் பெற்றவர்களே கல்வி நிலையிலும் மேம்பாடு பெறுதல் மேலும் மேலும் வலுவூ+ட்டப்பெற்று வருகின்றது. குறைந்த உற்பத்திச் செலவூஇ குறைந்த விலையில் ஆற்றலுள்ளவர்களை வேலைக்கு அமர்த்துதல்இ சந்தையை உலகளாவிய நிலைக்கு விரிவாக்குதல் போன்ற செயற்பாடுகளைக் கொண்ட கோளமயமாக்கல் இன்றைய நிலையில் தமக்கு அனுகூலங்களை ஏற்படுத்தும் கல்வி விசையாகவூம் (நுனரஉயவழையெட குழசஉந) விரிவடைந்துள்ளது. கைத் தொழிற்சாலை மனிதரைப்பற்றி என்ன புலக் காட்சி கொள்ளுகின்றதோ அத்தகைய ஒருபுலக்காட்சியை கல்வி நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. கல்விநிலையங்கள் தொழிற்சாலைகள் என்ற அணுகுமுறைகளுக்குள் கொண்டுவரப்படுகின்றன.

கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் பல்கலைக்கழகக் கற்கை நெறிகளிலும்இ பாடத்திட்ட ஆக்கங்களிலும் கம்பனிகளினது நேரடியான தலையீடு வலுப்பெறத் தொடங்கியூள்ளது. தமக்குத் தேவைப்படும் தொழில்களுக்குரிய ஆற்றல் மிக்கோரை உருவாக்குவதற்கு கம்பனிகள் பல்கலைக்கழகங்களைக் கருவிகளாகப் பயன்படுத்தத் தொடங்கியூள்ளன. அனைத்துப் பட்டதாரிகளுக்கும் கம்பனிகள் பற்றிய நேர்க்காட்சிகளை உருவாக் கும் வகையில் கலைத்திட்டம் நெறிப்படுத்தப்படுகின்றது. புதிய பண்டங்களை உருவாக்குவதற்குரிய ஆராய்ச்சிகள்இ புதிய பொறிகளை வடிவமைப்பதற்குரிய ஆராய்ச்சிகள்இ நுகர்ச்சியாளரைச் சென்றடைவதற்குரிய புதிய அணுகுமுறைகள் பற்றிய ஆராய்ச்சிகள் முதலியவற்றை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழகங்கள் தூண்டிவிடவூம்இ உற்சாகமளிக்கவூம் படுகின்றன. உலக சந்தையின் விரிவாக்கத்தின் நேர்க்காட்சிகளை வளர்க்கும் நடவடிக்கைகளுள் ஒன்றாக "கோளமய வியாபார எழுத்தறிவூ" (புடழடியட டீரளiநௌள டவைநசயஉல) என்ற கல்விச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் இலங்கைக் கல்வித்துறையிலே தகவலும் தொடர்பாடலும் தொடர்பான தொழில்நுட்பவியல் (ஐஊவூ) முக்கியத்துவத்தால் சிதறல் ஏற்ப்பட்டு கல்வியின் வர்த்தகமயமாக்கப்பட்ட பண்பை புலப்படுத்துகின்றது. தகவல் சமூகத்தில் எவ்வாறு கற்றுக்கொள்ளல் என்ற விடயம் தொடர்பாக ஆய்வூகளை மேற்கொண்டவர்கள் தகவலும் தொடர்பாடலும் தொடர்பான தொழில்நுட்பவியல் (ஐஊவூ) என்ற இயலை உருவாக்கியூள்ளனர். கற்கும் தொடர்பாடல் இயல்புகளை மாற்றுதல்இ கற்றலுக்கான பல புதிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருதல் முதலியவை இந்த மயப்படுத்தலில் மேற்கொள்ளப்பட்ட புரட்சியாக தகவலும் தொடர்பாடலும் தொடர்பான நுட்பவியல் (ஐஊவூ) கருதப்படுகின்றது. நன்கு வழிப்படுத்தப்பட்ட முறையிலே தனியாள் ஒருவர் கற்றல் (Pரசஉhயளiபெ ருnவைள ழக டுநயசniபெ) என்று கூறப்படுகின்றது. (இந்தச் சொற்றொடரே கல்வியின் வர்த்தகமயமாக்கப்பட்ட பண்பை புலப்படுத்துகின்றது)
மேற்கூறிய கற்பித்தல் நடவடிக்கை கல்விக்கான செலவைக் கட்டுப்படுத்தும் உபாயமாகின்றது. கோளமயமாக்கலின் நேரடியான தாக்கம் கல்விக்கான ஆசிரியர் செலவூகளைக் குறைத்து கல்வி நிறுவனங்களின் இலாபமீட்டலை அதிகரித்தலுமாகும். தகவலும் தொடர்பாடலும் தொடர்பான நுட்பவியல் ஓர் ஆசிரியர் முன்னரிலும் கூடுதலான எண்ணிக்கை கொண்டவர்களான மாணவர்களுக்குக் கற்பிக்கக் கூடிய ஏற்பாட்டைச் செய்கின்றது. இந்த அனுகூலம் ஆசிரியர்களுக்குச் சென்றடையவில்லை. ஆசிரியர்களுக்குரிய கொடுப்பனவூகள் இந்நிலையில் சமாந்தரமாக அதிகரிக்கவில்லை இந்த நுட்பவியல் (ஐஊவூ) ஆள்புல எல்லைகளையூம் கடந்த வகையில்இ உலகளாவிய முறையில் கல்வியை முன்னெடுத்துச் செல்கின்றது. இணையத்தளங்களுக்குக் கட்டணம் செலுத்தி அறிவை நுகர்ந்து கொள்ளும் முறை வளர்ச்சியடைந்து செல்லல் கல்வியை நுகர்வோருக்குரிய செலவூகளை அதிகரிக்கச் செய்கின்றது. அனுகூலம் மிக்கோருக்கே தரமான கல்வி என்ற நடைமுறை மேலும் வலிமையாக்கப்படுகின்றது. கடன் அட்டைகளைச் செலுத்தியே இணையத்தளங்களில் அறிவை நுகர வேண்டியூள்ளது.

கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் இலங்கைக் கல்வித்துறையோ இணைந்து பொருளாதாரப் பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன. கோளமயமாக்கற் செயற்பாடுகளும்இ நவீன சந்தைப் பொருளாதாரமும் ஆபத்து (சுளைம) என்ற பாரம்பரியமான எண்ணக்கருவில் மாற்றங்களை ஏற்படுத்தியூள்ளன. முதலாளிகளுக் கிடைக்கும் இலாபம் ஆபத்தைத் தாங்குவதற்கான வெகுமதி என்பது பாரம்பரியமான பொருளாதார நிபுணர்களின் கருத்து. இன்று 'ஆபத்து' என்பது இலகுவாக நுகர்ச்சியாளர் மீது சுமத்திவிடப்படும் செயற்பாடாக மாறியூள்ளது. சந்தைப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சிந்தனையாளர்கள் கல்விஇ மருத்துவம் என்ற மானிட சேவைத் துறைகளிலும் தீவிரமாக வலியூறுத்தத் தொடங்கியூள்ளனர். வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் வறுமைக்குரிய சுரண்டற் காரணிகள் மூடி மறைக்கும் அறிகைச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒடுக்கு முறைக்கும் வறுமைக்கும் உட்பட்டவர்கள் சோம்பேறித்தனம் (டுயணுல) உடையவர்கள்இ வேலை செய்யக் கூச்சப்படுபவர்கள் (றுழசம ளுhல) என்ற வாறான பெயர்சு+ட்டலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை மேற்கூறிய கருத்தை வலியூறுத்துகின்றது.

கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் இலங்கைக் கல்வித்துறையிலே இலங்கையின் கிராமப்புறத்து வறிய மாணவர்கள் இந்த வீச்சினுள் கூடுதலாக ஆகப்பட்டுக் கொள்கின்றனர். பாடசாலை பற்றிய பாரம்பரியமான எண்ணக்கருவில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. பாடசாலைகளையூம் தொழில் துறைகளையூம் நெருங்கிய இணக்கத். துக்குக் கொண்டுவருதல்இ வேலை உலகினுக்குப் பொருந்தக் கூடியதாகக் கல்வியைத் திறந்துவிடுதல்இ பாடசாலைகளுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்குமிடையேயூள்ள கூட்டிணைப்பை வளர்த்தெடுத்தல் என்றவாறு ஐரோப்பிய ஆணையம் முன்வைத்த (நுரசழிநயn ஊழஅஅளைளழைn (1995) வூநயஉhiபெ யூனெ டுநயசniபெ டீசரளளநடளஇ நுரசழிநயn ஊழஅஅளைளழைn) கோளமயமாக்கலின் விசைகளால் உலகம் தழுவிய கருத்துக்களாக இவை மாற்றப்படுகின்றன. "வீடும் (Hழஅந ளுஉhழழட டுiமௌ) துடு இன்று கம்பனியூம் பாடசாலையூம் என்ற இணைப்பாக (ஊழஅpயலெ ளுஉhழழட டுiமௌ) மாற்றப்பட்டுள்ளது. கம்பனிகளோடு கூடுதலான தொடர்புகளை வைத்திருக்கும் பாடசாலைகளே மேம்பட்ட செயற்பாடுகளைக் கொண்டவை என்ற படிமம் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள பெரும் பாடசாலைகள் ஏற்கனவே இந்நடவடிக்கைகளில் இறங்கிச் செயற்படத் தொடங்கிவிட்டன.
கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் இலங்கைக் கல்வித்துறையிலே கோளமயமாக்கலின் அழுத்தங்கள் கல்வி என்ற நிலையிலிருந்து பயிற்சி என்பதை (வூசiniபெ) நோக்கித் திரும்பியூள்ளது. தொழில்களை மத்தியாகக் கொண்ட கற்கை நெறிகள் பட்டப்படிப்பு மட்டத்தில் மட்டுமன்றி பட்டப்பின்படிப்பு மட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. அறிவூச் சமூகம் (முழெறடநனபந ளுழஉநைவல) என்ற நவீன தொடர் குறித்த தொழிலுக்குரிய பயிற்சியைப் பெற்ற சமூகமாகவே கருதப்படுகின்றது. தொடர் கல்வி என்பது தொடர் தொழிலுக்குரிய கல்வியாக மாற்றப்பட்டு வருகின்றது. மாணவர் என்ற பழைய எண்ணக்கரு கைவிடப்பட்டு துணை வேண்டுனர் (ஊடநைவெள) என்ற புதிய எண்ணக்கரு முன்மொழியப்படுகின்றது. கற்றல் என்பது தனிநபர் ஒருவரின் நுகர்ச்சிச் செயற்பாடு என வலியூறுத்தப்படுகின்றது. கற்றல் சந்தை கற்கும் சமூகத்தின் குறியீடாக ஆக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் மயப்பட்ட கற்றலே யதார்த்தமான கற்றல் என்ற மாற்றத்துக்கு (ஊநசவகைiஉயவநன டுநயசniபெ டீநஉழஅநள சுநயட டுநயசniபெ)
அறிவதற்குக் கற்றல்இ அறிவூக்குக் கற்றல்இ மனநிறைவூக்குக் கற்றல்இ என்பவை புறந்தள்ளப்படுகின்றன. கற்கும் அறிவின் ஆழம் முக்கியமல்ல சான்றிதளே முக்கியம் என்பது வலியூறுத்தப்படுகின்றது சான்றிதழ் பித்து (ஊநசவகைiஉயவந ஆயnயை) வேலை வழங்கும் தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை மானிடப்பண்பு பாடங்கள் மற்றும் கலைப்பாடங்களைக் கற்றுப் பட்டம் பெற்றவர்கள் வேண்டப்படாதவர்களாகக் கணிக்கப்படுகின்றனர். உயர்கல்விக்கான கொள்கைத் திட்டங்களை உருவாக்கும் பொழுது தனியார் உற்பத்தி நிறுவனங்களைச் சார்ந்தவர்களின் மதியூரை. களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.
உயர்கல்விஇ தொழில்நுட்பக் கல்விஇ தொழில் சார்கல்விஇ வாண்மைக்கல்வி முதலியவை வயது வேறுபாடின்றிஇ சமூக அந்தஸ்து வேறுபாடின்றி அனைவருக்கும் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் சமூகத்தின் தாழ்மட்டங்களில் உள்ளவர்கள் இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி கற்று மேலுயர முடியூம் என்று கூறப்படுவதிலே ஒரு பெரிய பெய்ம்மை உட்பொதிந்துள்ளது. உயர் பட்டங்கள்இ சான்றிதழ்கள் முதலியவற்றைப் பெற்றுக்கொள்வதற்குக் கல்விச் சந்தையிலே அதிக பணத்தைச் செலவூ செய்ய வேண்டியூள்ளது. இந்நிலையில் சான்றிதழ்களும் பட்டங்களும் பெறுதல் சாமானியர்களுக்கு நடைமுறையில் எட்டாதவையாகவே அமைகின்றன. பண வசதியூடையோரே இந்தப் பன்முகப்பட்ட அனுகூலங்களை அனுபவிக்கும் வளமான நிலையில் உள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டவேண்டியூள்ளது.
உற்பத்தி நிறுவனங்களின் வேகத்துக்குக் கல்வி நிறுவனங்கள் ஈடுகொடுக்க முடியாத நிலையில் உள்ளன என்ற குற்றச்சாட்டும் நிறுவனங்களால் முன்வைக்கப்படுகின்றது. இதன் பொருட்டு கற்பிப்போரின் வினைத்திறன்களை அதிகரிப்பதற்கான திட்டம்இ (ளுவயகக னநஎநடழிஅநவெ Pசழபசயஅஅந) பட்டப்படிப்பின் பொருத்தப்பாட்டையூம் தரத்தையூம் முன்னேற்றுவதற்கான திட்டம்இ தர உறுதிப்பாட்டுத் திட்டங்கள் முதலிய பல திட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் கூட்டுமொத்தமான பௌதிக வளங்கள்இ மனிதவளம்இ வருமான பங்கிட்டில் சமத்துவம்இ சுரண்டல் அற்ற சமூகத்தின் உருவாக்கம்இ யாதார்த்த நிலையில் தேசிய இனங்களின் முழுமையான பங்குபற்றல்இ முதலியவற்றைப் பரந்த நோக்கில்இ அணுகாது கம்பனிகளுக்கு உடனடியான அனுகூலங்களை ஏற்படுத்தக் கூடிய நோக்கங்களே உயர்கல்வியில் இலங்கையிலே அமுலாக்கம் செய்யப்படுகின்றன.

கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் இலங்கைக் கல்வித்துறையிலே பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கலைத்திட்டங்களில் மேலைத்தேய கலாசாரத்தின் செல்வாக்கு படிப்படியாக ஊட்டப்பட்டுவருகின்றது. உதாரணமாக பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொடர்தொழில் ஆற்றுப்படுத்தற் சேவையில் (ஊயசநநச புரனையnஉந) பெரிய கம்பனிகளில் நுழைவூ உன்னதங்கள் பற்றி விளக்கப்படுகின்றதேயன்றிஇ இலங்கையின் மூலவளங்களின் பயன்பாட்டை முன்னெடுக்கும் தொழில்கள் பற்றியூம்இ சமூக நன்மைகளை முன்னெடுக்கும் தொழில்கள் பற்றியூம் விளக்குதல் வறிதாகவூள்ளது. ஆங்கில அறிவூக்கும் தகவல் தொழில்நுட்ப அறிவூக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம்இ இலங்கையின் வளம்சார் தொழில்களுக்கும் சமூக நீதிக்குமுள்ள தொடர்புகளுக்கு வழங்கப்படுவதில்லை.
இலங்கைப் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சீர்மியம் (ஊழரளெநடடiபெ) முற்றுமுழுதாக மேலைத்தேய புலக்காட்சியினூடாக வளர்க்கப்படும் நிலையே காணப்படுகின்றது. தியானமும் ஆசனங்களும் கூட மேலைத்தேய நூல்களினுடான புலக்காட்சி வழியாகவே முன்னெடுக்கப்படுகின்றன. சீர்மியமேலைத் தேய அணுகுமுறைகளின் ஊடுருவல் ஏற்கனவே ஆய்வாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (ஐவெநசஎநவெழைn) புதிய சிந்தனைகளைஇ புத்தாக்கம் தரும் கருத்துக்களைஇ முன்வைக்கும் ஒருபட்டதாரி மாணவன் சிறப்புச் சித்தியினை (ஊடயளள) பெறாது வெளிவீசப்படுவதற்குரிய சந்தர்ப்பங்களே அதிகமாகக் காணப்படுகின்றன. அதே வேளை மேலதிக தேடல்களை மேற்கொள்ளாது வழங்கிய பாடக் குறிப்புக்களை அப்படியே மீள ஒப்புவிக்கும் திறன் கொண்டவர்கள் சிறப்புச் சித்திகளை ஈட்டி அவர்களே அறிவூ வழங்கலை முன்னெடுக்கும் வாரிசுகளாக நியமிக்கப்படுகின்றனர். இந்த இறுகிய கட்டமைப்பை பல்தேசிய கம்பனிகளும் உள்ளுர்க் கம்பனிகளும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியூள்ளன. பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் பொழுது அவர்கள் பரீட்சைகளிலே உயர்ந்த புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் நிரந்தர நியமனங்களை வழங்காது ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே வேலையில் அமர்த்தப்படுகின்றனர். தொழிற்பாடுகளில் வினைத்திறன் காட்டப்படாதவிடத்து அவர்களின் சான்றிதழினைக் கருத்திற் கொள்ளாது வெளியேற்றப்படுகின்றனர். இது "அமர்த்துதலும் துரத்துதலும்" என்ற தொடரால் கோளமயப் பொருளாதாரத்திலே கூறப்படுகின்றது.
கோளமயமாக்கலின் நேர்விளைவூகளாக இன்று இலங்கையில் சர்வதேச பல்கலைக்கழகங்களின் கிளைகளும் இணைப்பு நிறுவனங்களும் திறக்கப்படுகின்றன. இவற்றுக்குச் சமாந்தரமாக சர்வதேசப் பாடசாலைகளைத் திறத்தலும் அதிகரிக்கத் தொடங்கியூள்ளது. கோளமயமாக்கற் செயற்பாடுகள் 1978 ஆம் ஆண்டில் இலங்கையில் உருவாக்கப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கைகளுடன் விரிவாக்கம் பெறலாயின. இவற்றௌடு இணைந்த வகையில் ஆங்கிலமொழி மூலக்கல்வி காலனித்துவ ஆட்சிக்கால நிலையில் பெறப்பட்ட அந்தஸ்தை மீண்டும் ஈட்டத் தொடங்கியூள்ளது.
சர்வதேசப் பாடசாலைகளிலே கற்பதும்இ சர்வதேச இணைப்புப் பல்கலைக்கழகங்களிலே கற்பதும் சமூக உயர் அந்தஸ்தின் சின்னங்களாக மாறியூள்ளன. சர்வதேசப் பாடசாலைகள் இலண்டன் பரீட்சைகளுக்குரிய கலைத் திட்டத்தை உள்ளடக்கிச் செயற்படுவதனால்இ இந்தநாடு பற்றிய பரவலான அறிவைப் பெற முடியாத அன்னியமாதல் நிலைக்கு மாணவர்கள் மாற்றப்படுகின்றார்கள். இம்மாணவர்களே எதிர்காலத்தில் இலங்கையின் தலைமைத்துவப் பொறுப்புக்களைக் கூடுதலாகப் பெறும் வாய்ப்பைக் கொண்டுள்ளமையூம் குறிப்பிடத்தக்கது.
சர்தேசப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் செல்வாக்கு இலங்கையின் தேசிய கலைத்திட்டத்திலும் ஊடுருவத் தொடங்கியூள்ளது. வசதிமிக்க தேசிய பாடசாலைகள் ஏற்கனவே ஆங்கில மொழி ஊடகக் கற்கை நெறிகளை ஆரம்பித்துவிட்டன. ஆங்கிலமொழி மூலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வெளிநாடுகளிலே பயிற்சியூம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பும் மேட்டுக் குடியினருக்கே அனுகூலமாகவூள்ளது. அவர்களே ஆங்கில மொழிமூலத் தூண்டல்களைத் தமது இல்லங்களிலே வழங்கக்கூடிய நிலையில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் இலங்கைக் கல்வித்துறையிலே தமிழ்இ சிங்களம்இ முதலிய தாய்மொழிகளிலே கற்கும் மாணவர்களிடத்துத் தாழ்வூச்சிக்கலை ஏற்படுத்தத் தொடங்கியூள்ளது. தாய்மொழி வழிக்கல்வி கற்றௌரின் உத்தியோக வாய்ப்புக்கள் ஒடுக்கப்படுதல் அவர்களிடத்து உளவியல் தாக்கங்களை மேலும் அதிகரிக்கச் செய்துவருகின்றது. தாய்மொழி கல்வியை விருத்தி செய்த இலங்கையின் பல்கலைக்கழகங்கள் இப்பொழுது ஆங்கில மொழி வழிக்கல்விக்குப் படிப்படியாக மாறத் தொடங்கியூள்ளன. எமது நாட்டில் தாய் மொழிவழிக் கல்வியை அமுல் நடத்தியமையில் விடப்பட்ட பாரியதவறுகளும் இச்சந்தர்ப்பத்திலே சுட்டிக்காட்டப்பட வேண்டியூள்ளது. சிங்களம் தமிழ் முதலாம் தாய்மொழிவழிக் கல்வியை இலங்கையில் வளர்த்தெடுத்தவேளை இரண்டாம் மொழியாகிய ஆங்கிலத்தை வினைத்திறனுடன் வளர்த்தெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையினால் ஆங்கில மொழியறிவூ வீழ்ச்சியடையத் தொடங்கியதுடன்இ ஆங்கில மொழி வாயிலாகப் பெறப்படத்தக்க அறிவூச் சுரங்கத்தை அணுக முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர். இதனால் அவர்கள் "காலாவதியானவர்கள்" என்ற நிலைக்கு வந்துள்ளனர்.

உலகமயமாக்கலின் ஊடுருவல் இலங்கையின் பாலர்கல்வித்திட்டங்களில் இருந்து பல்கலைக்கழகப் பட்டமேற்படிப்புவரை பல நிலைகளில் வியாபித்துப் பரந்து வருகின்றது. பாலர் பாடசாலைகளில் தாய் மொழி வாயிலான இசையூம் அசைவூம் தொழிற்பாட்டுக்குப் பதிலாக ஆங்கில மொழிமூல பாலர் ஒத்திசைப் பாடலைக் கற்பிப்பதும்இ மேலைத்தேய ஆடைநியமங்களுக்கு ஏற்ற ஆடைகளை அணிந்து ஆடுதலும் மேலான செயற்பாடுகளாக முன்னெடுக்கப்படுகின்றன. தேசிய அடையாளங்களும் பண்பாட்டு அடையாளங்களும் படிப்படியாகக் கைவிடப்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியூம் வளர்ச்சியூம் இடைநிலை மற்றும் உயர்நிலை மட்டங்களுக்கு நீண்டு செல்கின்றன. தேசிய அடையாளங்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள அறநெறிப் பாடசாலைகளுக்குச் செல்ல கவர்ச்சியற்ற நிலையென்ற தோற்றப்பாடு மேலெழுந்துள்ளது. அவ்வாறே தேசிய மொழி மூலக்கற்றல் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கவர்ச்சிகுன்றிய செயற்பாடாக இருப்பதுடன் கற்கும் மாணவரிடத்து உளவியல் நிலைப்பட்ட மனப்பாதிப்புக்களையூம் ஏற்படுத்தி விடுகின்றது.
கோளமயமாக்கலின் உளவியல் நெருக்கிடுகள் தனித்து ஆராயத்தக்கவை. தொழில்நுட்ப ஆற்றலில் மேலெழுந்த நாட்டினர் தொடர்பான உயர்நிலை (ளுரிநசழைசவைல) மனோபாவம் வளர்ச்சியடைந்து வருகின்றது. தொழில்நுட்ப ஆற்றலில் மேலுயர்ந்ததோரே மேலும் முன்னேறிச் செல்வதற்குரிய வாய்ப்புக்கள் அதிகமாகவூம் பரந்த அளவிலும் காணப்படுவதனால் உயர்நிலை மனோபாவம் தொடர்ந்து மீள வலியூறுத்தப்படும் வாய்ப்புக்களே அதிகமாகக் காணப்படுகின்றன.
தொழில்நுட்ப அறிவிலும்இ பிரயோகத்திலும் பின்தங்கிய நாடுகள் பெருநிலைப்போட்டியை எதிர்கொள்ள முடியாதநிலை தோன்றியூள்ளது. அதிநுட்பம் வாய்ந்த தொழில்நுட்ப அறிவூ ஏகபோக உரிமையாக இருப்பதனால் மூன்றாம் உலகநாட்டு மக்களிடத்து தாழ்வூ உணர்ச்சி. யையூம் தாழ்வூச் சிக்கலையூம் ஏற்படுத்தி வருகின்றது. இது ஒரு வகையிலே ஒடுக்கு முறைக்கு உட்பட்ட கறுப்பு இனமக்களிடத்திலே தோன்றிய தாழ்வூச்சிக்கலுடன் ஒப்பிட்டு ஆராயத்தக்கது. கறுப்பின மக்களின் பொருளாதாரம் பின்தங்கிய நிலையிலே காணப்பட்டமைஇ தொழில்நுட்ப அறிவிலே அவர்கள் வெகுவாகப் பின்தங்கியிருந்தமை போன்ற காரணிகளுடன்இ ஒப்பு நோக்கி ஆராயூம் பொழுது சுரண்டலின் பரிமாணங்களை மேலும் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
உலக சந்தைக்கு விடப்படும் பொருள்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு நடிகர்கள் நடிகைகள்இ விளையாட்டு வீரர்கள் முதலியோர் தெரிவூ செய்யப்படுவதுடன்இ குறித்த பல்தேசிய நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு மட்டுமே பங்குபற்றல் வேண்டும் என்ற தனியூரிமைப் பணிப்புக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள். இவ்வகையான வீரத்துவம் (Hநசழளைஅ) பெரும் விஞ்ஞானிகளுக்கோ கண்டுபிடிப்பாளர். களுக்கோ வழங்கப்படுவதில்லை. இவற்றினால் பாடசாலை மாணவர்களின் சிந்தனையூம்இ காட்டுருவாக்கமும் (ஆழனநடடiபெ) அறிஞர்களையூம்இ விஞ்ஞானிகளையூம் நோக்கித் திருப்பப்படுவதற்குரிய வாய்ப்புக்கள் இழக்கப்படுகின்றன.
அறிகை இடர்ப்பாடுஇ நடத்தை இடர்ப்பாடு முதலாம் உளவியல் நிலைத் தாக்கங்களைப் பாடசாலை மாணவர்கள் அனுபவிக்கத் தொடங்கியூள்ளனர். உள்ளுர் உணவூ வகைகள்இ உடை அணியூம் முறைமை தொழில்நுட்பம் முதலியவை தாழ்ந்தவை என்ற பண்பாட்டுத் தாழ்வூ மனப்பாங்கும். (ஊரடவரசயட ஐகெநசழைசவைல) மாணவரிடத்தே வளர்ந்து ஓங்கும் சாத்தியக் கூறுகள் அதிகரித்து வருகின்றன. தமது பண்பாடு தொடர்பான தாழ்ந்த மனப் படிமங்கள் மாணவர்களிடத்தே வளர்ச்சியடைகின்றன. தம்மிடம் ஏதோ குறைபாடு உள்ளது என்ற தாக்கங்கள் மேலெழுகின்றன. இதன் உச்சநிலை உளவியல் வளர்ச்சியாக தனிநபர் (Pநசளழயெட வூசயபநனல) உலக நுகர்ச்சிச் சந்தையில் மென்பானங்கள்இ ஆடைஅணிகலன்கள்இ அழகு சாதனப் பொருட்கள்இ தனிநபருக்குரிய போக்குவரத்து ஊர்திகள்இ வீட்டுப்பாவனைச் சாதனங்கள் பொழுது போக்குச் சாதனங்கள்இ முதலிய பொருட்களே மேலோங்கிய நிலையிற் காணப்படுகின்றன இவை உற்பத்தியை நோக்கித்திசை திருப்பாத செயலூக்கம் குன்றிய நுகர்ச்சியாளராக (Pயளளiஎந ஊழளெரஅநசள) மாற்றிவிடுதல் குறிப்பிடத்தக்கது. இதனை வேறு விதமாகக் கூறுவதானால்இ நுகர்வோர் 'ஊனமுற்ற' நுகர்ச்சியாளராகவே மாற்றப்படுகின்றார்கள்.
கோளமயமாக்கலின் இன்னொரு செயற்பாடுஇ பாரம்பரியமான பொருட்களைக் கொள்வனவூ செய்யாதுஇ சந்தைக்கு விடப்படும் புதிய பொருட்களை வாங்குகின்ற "புதிய நுகர்ச்சியாளரை" உருவாக்குதலாகும். பெருந்தொகைப் பணத்தை உள்ளிடாகக் கொண்ட நவீன தொடர்பாடல் உபாயங்களைப் பயன்படுத்தி இந்தப் புதிய நுகர்ச்சியாளர் உருவாக்கப்படுகின்றார்கள். நுகர்ச்சியாளர் உருவாதல் இல்லை - உருவாக்கப்படுதல் என்ற நிலைக்கு மாற்றப்படுகின்றார்கள். நுகர்ச்சி என்பது மனிதரின் தேவைகளுக்கும் முன்னேற்றத்துக்கும் என்ற நிலை மாற்றப்பட்டு "நுகர்ச்சி நுகர்ச்சிக்காக" என்ற ஒடுங்கிய பாதையினுரடாகச் செல்கின்ற அவலமான நிலை ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. நுகர்ச்சியாளர் "பகுத்தறிவூடன் தொழிற்படுகின்றனர்" என்பது தலைகீழாக மாற்றப்பட்டு பதகளிப்புடன் (யூnஒநைவல) தொழிற்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பதகளிப்புக்கு உள்ளான நுகர்ச்சியாளரை ஒன்றிணைப்பதற்காக அதி உயர் சந்தைகள்இ நுகர்வோர் நகரங்கள்இ முதலிய விற்பனை நிறுவன அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நவீன விற்பனை நிறுவனங்களுக்குள் செல்வோரின் உளவியல் பதகளிப்பு மேலும் தூண்டப்படும் நிலையே காணப்படுகின்றது.
பாடசாலைகளுக்குக் கற்கவரும் மாணவரும் மேற்கூறிய நுகர்ச்சிப் பின்னணியில் உருவாக்கம் பெற்றவர்களாகவே காணப்படுகின்றார்கள். ஆசிரியர் வழங்குவதை வாங்கும் நிலையில் இருக்கும் செயலூக்கம் குன்றிய (Pயளளiஎந) நிலையில் அவர்களது இயல்புகள் அமைந்திருத்தல் வியப்பானதன்று. அறிவை நுகர்ச்சிப் பொருளாகக் கருதும் மாணவர்கள்இ அதன் தெறித்தல் நிலை பலத்தையூம்இ பிரயோகத்தையூம்இ விளைவை ஏற்படுத்தும் பரிமாணங்களையூம் அறியத் தவறிவிடுகின்றனர். இது ஆற்றலின் வறுமைக்கு இட்டுச் செல்கின்றது.
அறிவை ஏற்றத்தாழ்வான முறையிலே கையளிப்பதற்கு கோளமயமாக்கல் வழியமைக்கின்றது. விற்பனைப்பண்டமாக கல்வி மாற்றப்பட்டுள்ளமை மேற்கூறிய செயற்பாட்டைத் துரிதப்படுத்துகின்றது. இந்நிலையில் பொருளாதார இருப்புஇ சமூக அந்தஸ்துஇ அரசியல்வலுஇ கல்வி வழங்கல் ஆகியவற்றுக்கிடையேயூள்ள தொடர்புகள் மேலும் வலுவடைகின்றன. இந்தப் பரிமாணங்களுக்கு ஏற்றவாறு ஒருவரது வாழ்க்கைக் கோலங்களும் உருவாக்கப்படுகின்றன.

கோளமயமாக்கலின் கல்வி சார்ந்த நன்மைகளை சிலர் சிலாகித்துப் பேசுதல் உண்டு. கல்விச் செயற்பாட்டிலும்இ அணுகுமுறைகளிலும் காணப்படும் சோம்பலை உருவாக்கும் நடவடிக்கைகள் உடைத்தெறியப்படுகின்றது. தரமேம்பாட்டுக்குக் கூடிய அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. கற்றல் கற்பித்தலிலே வினைத்திறன் முன்னெடுக்கப்படுகின்றது. புதிய கற்பித்தற் சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. புதிய மதிப்பீட்டு உபாயங்கள் முன்வைக்கப்படுகின்றன. இணையத்தளங்கள் வாயிலாக புதிய அறிவூ உடனுக்குடன் கையளிக்கப்படுகின்றது. உலகம் என்ற பெரும்பொருள் "கோளமயக் கிராமம்" என்றவாறு சுருக்கப்படுகின்றது. மருத்துவத்துறையின் புதிய கண்டுபிடிப்புக்கள் மனிதவாழ்க்கை நீட்சியை முன்னெடுக்கின்றன. தொடர்பாடலின் வளர்ச்சி வீட்டின் உட்புற அறைகளுக்குள் உலகைக் கொண்டுவந்து விடுகின்றது. தர உயர்ச்சி கொண்ட சான்றிதழ்களை உருவாக்கும் நடவடிக்கைகளைக் கல்விநிலையங்கள் முன்னெடுக்கின்றன. படித்தவர்கள் தமது நாட்டின் ஆள்புல எல்லைகளைக் கடந்து உலகத் தொழிற் சந்தைக்குள் நுழைய முடியூம்இ என்றவாறு விதந்தும் புகழ்ந்தும் பேசலாம். இந்த அனுகூலங்களை சமூகத்தின் மேட்டுக்குடியினரே அனுபவிக்கக்கூடியதாக இருக்கும் அவலத்தை அவர்கள் சுட்டிக்காட்டுதல் இல்லை.
கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் இலங்கைக் கல்வித்துறையிலே புதிய செல்நெறிகளும்இ புதிய கல்விக்கான அடித்தளமும் உருக்கம் பெற்றது என்பதை யாரும் மறுக்கமுடியாது. புநநெசயட நுனரஉயவழைn ஆழனநசnணையவழைn Pசழதநஉவ (புநுஆ ) என்ற பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் திட்டமானது இலங்கைச் சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களுடன் இணைந்ததாக  பொதுக்கல்வியின் பாடவிதானங்களை நவீனமயப்படுத்துவதுடன் பல்வகைப்படுத்தும். பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படும் ஆங்கிலம் மற்றும் கணிதம் போன்ற மூலோபாய பாடங்களுக்கு பெருமளவூ முக்கியத்துவம் கொடுக்கப்படும். க.பொ.த உயர்தரத்தில் தெரிவூகளை இந்தத் திட்டம் விரிவாக்கும். அந்தவகையில் மாணவர்கள் கலைஇ முகாமைத்துவம்இ விஞ்ஞானம்இ தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்விப் பிரிவூகளில் இருந்து தமக்குப் பொருத்தமான பாடங்களை தேர்ந்தெடுக்கும் நெகிழ்வூத் தன்மையைக் கொண்டிருப்பர். ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான பாடவிதானங்கள் டிஜிட்டல் முறையில் கணனிகளுடாக பயன்படுத்தக்கூடியதாக விருத்திசெய்யப்படும். அதிகமாக பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த பாடசாலைகளைச் சேர்ந்த சிறுவர்கள் மீதே கவனம் குவிக்கப்படும்.
' கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான சு+ழலை வியாபிப்பதில் இலங்கை சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இருந்தபோதிலும் அதிக அல்லது நடுத்தர வருமானம் உடைய நாடு என்ற ஸ்தானத்தை எட்டுவதற்கு ஒட்டுமொத்த ரீதியான கற்றல் வெளிப்பாடுகளை மேலும் முன்னேற்றவேண்டும். உயர் தரத்திலான பொதுக் கல்வி கட்டமைப்பானது 21ம் நூற்றாண்டின் தொழில் தேவைகளுக்கான கேள்வியை சந்திப்பதற்கு ஏற்ற வகையில் மாணவர்களை உருவாக்கும் என்பதில் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ' இந்த திட்டமானது (தரம் 1-5 வரையான) முன்பள்ளி மற்றும் (தரம் 6-13 வரையான) இரண்டாம் நிலைக்கல்வியைத் தொடரும் பாடசாலை மாணவர்களுக்கு பயன்தருவதாக அமையூம். தொழில்நுட்பக் கல்வி தொழிற்பயிற்சி நிறுவனங்கள் பாடசாலைகளிலுள்ள முகாமைத்துவ பணியாளர்களும் இந்த திட்டத்தினால் பயன்பெறுவர்.
கல்வித் துறையில் இலங்கையின் நீண்டகால பங்காளராக உலகவங்கி திகழ்கின்றது. உலக வங்கியினால் ஆதரவளிக்கப்படும் பாடசாலை கல்விக் கட்டமைப்பை மாற்றியமைக்கும்  வூசயளெகழசஅiபெ ளுஉhழழட நுனரஉயவழைn ளுலளவநஅ Pசழதநஉவ (வூளுநுP)திட்டமானது தரம் 1-11 ( வயது 6-16) வரையூள்ள மாணவர்கள் கல்வியை இடைவிடாது தொடரும் விகிதத்தை 87 சதவிகிதத்திற்கு அதிகமாக அதிகரிக்க உதவியூள்ளது. கற்றல் பெறுபேறுகள் தொடர்பான சுழற்சிமுறை ஒழுங்குகிற்கமைவான தேசிய மதிப்பீட்டு பொறிமுறையை அறிமுகம்செய்துள்ளது. அனைத்துவலயங்களிலும் உள்ள பாடசாலைகளின் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பதற்காக பாடசாலையை அடிப்படையாகக்கொண்ட முகாமைத்துவத்தை ஆரம்பித்துள்ளது. இதற்கு மேலதீகமாக  கல்வி நிர்வாகத்தின் பரவாலக்கப்பட்ட படிநிலைகளின் திறன்களை வலுவாக்குவதற்கு கல்விக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் திட்டமானது துணைபுரிந்துள்ளது.

'பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் திட்டமானது நடுத்தரவருமானம் மற்றும் உயர் வருமானமுள்ள கல்விக் கட்டமைப்புக்களை உடையதான சர்வதேச தராதரத்திற்கு ஏற்புடையதாக முன்பள்ளி மற்றும் இரண்டாம் நிலைக்கல்விக் கட்டமைப்பை அரசாங்கம் நவீனமயப்படுத்துவதற்கு துணையாக அமையூம்.' என உலக வங்கியின் முன்னணி பொருளியலாளரும் செயலணித் தலைவருமான ஹர்ஸ அடுஷரூபனே தெரிவித்தார். '  பொதுக் கல்வி நவீன மயப்படுத்தல் திட்டத்தினால் ஆதரவளிக்கப்படும் முக்கிய முன்னுரிமைக்குரிய விடயங்கள் மற்றும் ஒட்டுமொத்த பொதுக் கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தல் ஆகியன  கற்றல் வெளிப்பாடுகளின் முன்னேற்றத்திற்கும்  மாணவர்களின் மத்தியில் உயர் சமூக உணர்வூபூர்வ திறன் வெளிப்பாடுகளுக்கும் வழிகோலும். ஆகவேதான்  கோளமயமாதல்இ சர்வதேச மயமாதலினால் கல்வித்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியதோடு பல பிரச்சினைகளையூம் உருவாக்கிக் கொண்டே உள்ளது. அத்தோடு கல்வி இன்று பல்பரிமாக மாற்றம் அடைந்துள்ளது. உலகமயமாதல் தொடக்கம் கோளமயமாதல் ஏற்பட்டு அதற்ஊடாகவே சர்வதேச மயமாதல் இம்பெற்று பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியூள்ளது.





          உசாத்துனைகள் நூல்கள்

1.கருணாநிதி.மாஇ 2008இ“கல்விச் சமூகவியல்இ குமரன் புத்தக இல்லம்இ கொழும்பு.
(பக்கம் 34- 89)
2.சுமதி.மஇ2012இ “ கல்வியியல் கட்டுரைகள்” சஐ;ஐ_ வெளியீட்டகம்.
3.ஊழடநஇ ஆ. (நன) (2000) நுனரஉயவழைnஇ ஞரயடவைல யனெ Hரஅயn சுiபாவளஇ டுழனெழn: சுழரவடநனபந குயடஅநச.
4.புனைனநசள (1998) வூhந வூhசைன றயலஇ Pடைவைல Pசநளள: ஊயஅடிசனைபந
5.துயசஎளைஇP (2001) வூhந யபந ழக டநயசniபெஇ டுழனெழn: முழபயn Pயபந.
6.டுலழவயசனஇ (1984) வூhந pழளவஅழனநசn உழனெவைழைnஇ ஆயnஉhநளவநச ருniஎநசளவைல Pசநளள: ஆயnஉhநளவநச.

No comments:

Post a Comment