Wednesday, February 1, 2023
ஐரோப்பியர காலம் - ஆசிரியர் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.
ஐரோப்பியர காலம்
ஆசிரியர் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.
ஐரோப்பியர் காலம்
நாயக்கர் காலத்தின் பின் உள்ள பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளைக் கொண்ட காலப்பகுதி தமிழ் இலக்கிய வரலாற்றில் ஐரோப்பியர காலம் எனப்படும்.
1.அரசியல் நிலை
பதினெட்டாம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டில் நாயக்கராட்சி நிலைகுலைய, இஸ்ணமியர் பலமுறை படையெடுத்து வந்து சற்றில் நாட்டினைக் கைப்பற்றி ஆண்டு வந்தனர். அவர் இஸ்லாமியர் மதத்தினராதலும் நாட்டிலே சிறந்த அரசியலை அவர் நிறுவ முடியாதிருந்ததனாலும் பற்பல இடங்களிற் சண்டைகளும் குழப்பங்களும் இடையிடையே நிகழ்ந்து கொண்டிருந்தன. அதனால் அவர் தம் ஆட்சியை நிலைப்படுத்த முடியாதித்தது. அந்நாளில் வியாபாரஞ் செய்தற் பொருட்டு இந்தியாவில் வந்து தங்கியிருந்த பிரான்சியருக்கும் ஆங்கிலேயருக்குமிடையே பொராமையும் போட்டியும் இருந்து வந்ததனால் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்க்கச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர். இஸ்லாமியராட்சி/ குழப்பங்களுக்கும் ஏதுவாயிருந்ததை கண்ட அவர்கள் உள்நாட்டு அரசியர் விடயங்களிலும் தலையிடத் தொடங்கினர். நாளடையில் இஸ்லாமியராட்சி வலிகுன்ற ஆங்கிலேயர் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலே தமிழ் நாட்டைக் கைபற்றி ஆளத்தொடங்கினர். பிராஞ்சியரும் புதுச்சேரி, காரைக்கால் என்னுமிடங்களைக் கைப்பற்றினர், இவ்வாறு ஐரோப்பியர் ஆட்சிக்குட்பட்ட தமிழ் நாட்டில் அமைதி நிலவி (வந்ததனால் நாடு பலவழிகளிலும் முன்னேறியது. ஆங்கிலேயராட்சி 1947இல் நீங்கவே பல நூற்றாண்டுகளாக அடிமைத்தளையில் அகப்பட்டுக் கிடந்த தமிழ் நாடு சுதந்திரம் பெற்றது.
2. சமய நிலை
நாயக்கர்கள் தமிழகத்தை ஆண்ட காலத்தில் இந்நாட்டின் பழம்பெருஞ் சமயங்களான சைவமும் வைணவமும் மக்களிடையே நல்ல வளர்ச்சியைப் பெற்றிருந்தன. இஸ்லாமியர்களின் ஆட்சியால் இஸ்லாம் இங்கு பரவியது. ஐரோப்பியர்களுடைய வருகையால் கிறிஸ்தவமும் இங்கு பரவியது. ஆங்கிலேயர் மக்களைக் கிறிஸ்தவர்களாக்கத் தலைப்பட்டவர். ஆட்சியின் ஆதரவும் அவர்களுக்கு இதுந்தது. இதற்கெனவே இங்கு வந்த ஐரோப்பியப் பாதிரியார்கள் பல்லாயிரக்கணக்கான மக்களை கிறிஸ்தன் சமயத்திற்கு மாற்றினார்கள். சமயமாற்றும் நிகழ்கின்ற பொழுது இருவருக்கிடையிலும் இருந்த மொழி மாறுப்பாட்டினை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். மக்களின் அன்பைப் பெறுவதற்கு வழி, அவர்கள் மொழியைக் கற்று அவர்களோடு கலத்து வாழ்தலே என்பதை நன்கறிந்த இவர்கள் தமிழ் மக்களோடு கலந்து வாழ்ந்து தமிழ் மொழியைக் கற்று அம்மொழி வாயிலாகத் தங்கள் சமயக் கொள்கைகளை நஎட்டிற் பரப்பினார்கள். எத்தகைய இன்னல்கள் வந்துறபோதும் அவற்றிற்குச் சிறிதளவேனும் சலியாது தங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்து உழைத்து வந்தமையால் கிறிஸ்தவ சமயம் அக்காலத்தில் தமிழ் நாட்டில் வளரலாயிற்று கிறிஸ்தவக் குருமார்கள் சமயத்திற்கு செய்து வந்த தொண்டு தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிற்றென்றோ கருதக் கிடக்கிறது. நாயக்கர் காலத்தில் தமிழ் நாட்டில் கால் வைத்த இஸ்லாமியர் தங்கள் ஆட்சியை பல இடங்களிலும் பரப்பினர். மேலும் பரவுதர்கேற் வாதிகள் அவர் ஆட்சிக்குப் பின் இல்லளமையால் அது வளர்ச்சியுராதிருந்த போதிலும் அம்மதத்தை தழுவிய மக்கள் அதனை சிறப்பாக போற்றி வந்தனர். மேற்கூறிய பிறநாட்டுச் சமயங்கள் தமிழ் நாட்டிற்கு வந்து மக்களுட் பலரை தம் வசப்படுத்திய போதும் இந்து சமயம் தளர்ச்சியுறவில்லை என்றே கூறலாம்.
ஐரோப்பியர் காலத்தில் உரை நடை இலக்கியம்
செய்யுள் நடையைப் போலவே உரைநடையையும் உணர்ச்சிபோடு கூடிய அலுபவங்களை வெளிப்படுத்துவதற்குச் சிறந்த கருவி என்பதை நம் முன்னேரகள் அறிந்திருந்தன) என்பதையும், அதனைப் பிரயோகித்துப் பல இலக்கியங்களை இயற்ரின என்பதையும் தொல்காப்பியத்திலிருந்து அறியலாம். தொல்காப்பியர் காலம் தொடக்கம் பதினேழாம் நூற்றாண்டு வரையும் உள்ள காலப்பகுதியில்| பெருவாரியாக உரைநடை இலக்கியங்கள் காணப்படாமையால், அக்காலப்பகுதிக்குரிய தமிழ் இலக்கிய வரலாறு செய்யுள் இலக்கிய வரலாறாகவே இருந்தது.
அக்காலத்தில் உரைநடை இகைகியங்கள் தோன்றவில்லை எனினும், உரைநடை சிறப்பாக வளரச்சிப்ப பெற்று வந்ததென்று அக்காலத்தில் இலக்கண இலக்கிய நூல்களுக்கெழுதிய உணரகளைக் கொண்டு அறியலாம். அவையாவும் கல்வியறிவுடையோர் படித்து இன்புறுவதற்கேற்ற உயரியநடையிலே தர்க்க முறையில் எழுருட்பட்டவை. செ.வரையர், பரிமேழைகர் முதலியோர் கையாண்ட உணரநடையை நோக்கும்
1.போது சிறந்த செய்யுள் நடையினை மட்டுமன்றி பாராட்டத்தருந்த உரைநடையினையும் தோற்றுவிக்க கூடிய ஆற்றலையுடையது தமிழ் மொழி என்பது தெரிகிறது.
பதினேழாம் நூற்றாண்டுக்கு முன் உரைநடை இலக்கியங்கள் தோன்றாமைக்கு சில காரணங்களைக் கூறலாம். அச்சியந்திரம் இல்லாத அக்காலத்தில் மக்கள் நூல்களை ஏடுகளில் எழுதியே படிந்து வேண்டியிருந்தது. நூல்களின் பிரதிகளைப் பெருக்குவதற்கு வசதிக்குறைவுகள் அக்காலத்தில் இருந்தமையால் பல நூல்களை மவனம் செய்து வைத்றிருக்க வேண்டிய அவரியம் ஏற்பட்டது. ஆகவே சொற்சுருக்கமும் பொருட் செறிவுமுள்ள செய்யுள் நடையைக் கையாள வேண்டியிருந்ததனாலயே புலவர்கள் தம் உணர்ச்சி அனுபவங்களைச் செய்யுள் நடையிலேயே அமைத்தனர். அச்சியந்திரம் வந்த காலத்தில் உரை நடை இலக்கியங்கள் பல்கத் தொடங்கின, அதனால் பதினெட்டாம் நூற்றாண்டு தொடக்கம் உரைநடை இலக்கியங்கள் வளர்ச்சி பெற்றன.
ஐரோப்பியர்கால ஆரம்பத்திலே பல உரைநடை நூல்களை எழுதிய தத்துவபோதக சுவாமிகள் . வீரமாமுனிவர் என்ற இரு கத்தோலிக்க பெரியார்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றனர். தத்துவ போதக சுவாமிகள் பதினேழாம் நூற்றண்டின் தொடக்கத்தில் இந்தாலி தேசத்திலிருந்து மதுரைக்கு வந்து தமிழ் மக்கள் விரும்பத்தக்க ஒழுக்கமும் உடையும் பூண்டு மக்களோடு கூடி வாழ்ந்து தமிழ் மொழியைக் கற்று அம்மொழி வாயிலாக கத்தோலிக்க மதப்பிரச்சாரம் செய்து உரைநடை நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அவர் எழுதிய நூல்கள் பின்வருமாறு
1. ஆத்தும நிர்ணயம்
2. கடவுள் நிர்ணயம்
3. தத்துவக் கண்ணாடி
4. இயேசு நாதர் சரித்திரம்
இலக்கண இலக்கிய அறிவிற் குறைந்தவர்களும் கற்றுணரக் கூடிய இலகுவான உரைநடையில் அவையாவும் எழுதப்பட்டுள்ளன.
இத்தாலி நாட்டிலிருந்து வந்து ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ் நாட்டிலே சமயத் தொண்டு செய்த வீரமாமுனிவர் தமிழ் மொழியையும் சுற்று தமிழின் அருமை பெருமைகளை ஐரோப்பியரும் கண்டு போற்றுதல் பொருட்டு இலத்தீன் மொழியிலே திருக்குறளை மொழி பெயர்த்து தமிழ் இலக்கண நூல் எழுதியும் தமிழின் சிறப்பினை எடுத்துக் காட்டினார். அதுமட்டுமன்றித் தமிழில்
1. வேத விளக்கம்
2. வேதியர் ஒழுக்கம்
3. வாமன் கதை
4. பரமார்த்த குகுகதை
முதலிய உரைநடை நூல்களையும் இயற்றியுள்ளார்.
வாக்கியங்களில் வடசொற்களை அதிகமாக அமைத்து ஓசை நயம் ஒன்றினையே கருறி எழுதியதால் தத்துவ போதக சுவாமிகளின் உரைநடை இயற்கை முறையில் அமையவில்லை. வீரமாமுனிவர் எழுதிய வாமன் கதை, பரமார்த்தகுரு கதை முதலியவை உரைநடை இலக்கியங்களில் காணப்பட வேண்டிய சிறப்புக்களை கொண்டுள்ளன. தமிழ் உரைநடையில் முதன் முதல் எழுத்த அங்கத இலக்கியம் பரமார்த்த குரு கதை என்றே கூறலாம். நகைச்சுவை ததும்பும் கதை ஒன்றினைக் கூறும் வாயிலாகப் பாதிரிமாரையும் அவர்கள் செய்து வந்த காரியங்களையும் அந்நூலில் ஏளனம் செய்துள்ளார். அவர் கல்வியறிவிற் குறைந்த மக்களுக்கும் பொருள் புலப்படக் கூடிய முறையில் இலகுவான சொற்களைக் கையாண்டு உரை எழுதியுள்ளார். வேதியரொஜாகத்திலிருந்து எடுக்கப்பட்ட கீழ்வரும் அவர் உரைநடைக்கு ஓர் உதாரணமாகும்.
நீ அன்போடே சொன்னதை மற்றவரும் அன்பொடே கேட்பார். நீயே வேறே நோக்கமின்றி அவன் ஆத்துமப் பிரயோசனம் என்று கண்டால், கொடியனாயினும் பொருந்திக் கேட்பான்.”-
2.கல்வியறிவுடையோரும் படித்துப் பொருள் அறியக் கூடியவாறு உரைநடை அமைய பேண்டுமென்று கூறுவதால் தக்க முறையாக இலக்கிய வழக்குச் சொற்களும் இலக்கண அமைதியும் உடையதாய் இருத்தல் கூடாது என்பது கருத்தன்று எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு பொருந்தக் கூடியதாக அதனைக் கையாளுதலே நக்கது. சாத்திர சம்பந்தமான விடயங்களைத் தெளிவுறுத்த வேண்டிய இடத்து அவற்றிற்கு பொருத்தமான சொற்களை தெரிந்து இலக்கணவரம்பு கடவாது நீர்க்க முறைப்படி கூறுதல் இன்றியமையாததாகின்றது. உணரச்சி சம்பந்தமான அலுபவத்தை புலப்படுத்த வேண்டிய இடத்துப் பேச்சுவழக்கில் உள்ள சொற்களைப் பிரயோகியாமல் விடல் முடியாது தான் எழுதுவதை சாதாரணக் கல்வியறிவுடைய மக்களும் படித்து இன்புற வேண்டும் என்ற எழுத்தாளன் பொருத்தமான நடையில் எழுதாவிடின் அவன் நோக்கம் நிறைவேற மாட்டாது. அதனால் வீரமாமுனிவரும் அக்காலத்து எழுத்து வழக்கில் இருந்த சொற்கள் பலவற்றை கையாண்டு உரைநடை இலக்கியங்கள் பலவற்றை எழுதியுள்ளார்.
இவ்வாறு தமிழ் உரைநடை பதினெட்டாம் நூற்றாண்டில் விருத்தியடைந்தற்குக் காரணமாய் இருந்தவற்றுள் குறிப்பிடத்தக்கவை இரண்டு
1. அச்சியந்திரம் 2. சமயப்பிரச்சாரம்
பாதிரிமாரும் சுந்தோலிக்கக் குருமாரும் தத்தம் சமயக் கொள்கைகளை மக்களிடையே பரப்பும் நோக்கமாகவே உரை நூல்களையும் நிருபங்களையும் எழுதி வெளியிட்டனர். அவற்றின் பிரநிகளை ஏராளமாகப் பெற்று மக்களுக்குக் கொடுத்தற் பொருட்டு தரங்கம்பாடி, அம்பலக்காடு முதலிய இடங்களில் அச்சியந்திரசாலையை அமைத்தனர். நூல்கள். நிருபங்கள். கண்டனங்கள் என்பவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்ட கத்தோலிக்கருக்கும் ஜாதர்சபையாருக்குமிடையே மூண்ட பகைமை காரணமாக எழுத்து வாதங்கள் நிகழ்த்தன. வீரமாமுவிவர் எழுதிய வேதவிளக்கத்திற்கு மறுப்பாக லூதரசபையின் எழுதிய 'திருச்சடைப்பேநகம்' என்ற கண்டன நூல் வெளிவந்தது. அந்தூனிற்கு மறுப்பாகப் “பேதகம் மறுத்தல்" . “ஐந்தர் இனத்தியல்பு" என்ற நூல்கள் இரண்டினை வீரமாமுனிவர் வெளியிட்டார். கிறிஸ்தவ மதப்பிரசாரங்கள் இந்து சமயத்தை ஓரளவிற்குத் தாக்கியமையால் அவற்றிற்கு மாராாய் "ஏகமததிராகரணம்’ முதலிய கண்டன நூல்களைச் சைவர்கள் வெளியிட்டனர். இத்தகைய மதர் கண்டன வெளியீடுகள் தமிழ் உரை நடை விருந்திற்குப் பெரிதும் பயன்பட்டன காலத்திற்கேற்ற வகையில் உரைநடையும் வரைந்து செல்வதாயிற்று
இந்தசற்றாண்டிலே தமிழ் உரைநடை ஒரு புது வழியில் வளரத்தொடங்கிய போதும் முற்காலத்து உரையாசிரியர்கள் கையாண்ட டயரிய நடையைப் பின்பற்றிப் பல உவரநூல்களை எழுதிய உரை நூலாசிரியர்கள் சிலகும் இக்காலத்தில் இருந்தனர். அவர்களுள் சிவஞான முனிவர் சிறப்பினராக குறிப்பிடத்தக்கவர். தருக்கம், சமயசாத்திரம், இலக்கியம், இலக்கண முதலிய பல துறைகளிலும் இந்நூற்றாண்டில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கிய பெரியார் அவர். காஞ்சிப்புராணம் முதலிய செய்யுள் இலக்கியங்களை இயற்றியதோடு,
1. இலக்கண விளக்கச் சூறாவளி 2. சித்தாந்த மரபு கண்டன கண்டனம்
முதலிய கண்டன நூல்களையும் தொல்காப்பிய சூத்திரவிருந்தி முதலிய ஆராய்ச்சி நூல்களையும் "திராவிட மாபாடியம்" என்னும் சிவஞான்போதப் பேருரையும் இயற்றினார். தாம் எடுத்துக் கொண்ட பொருளை படிப்போர் மனத்திற் பதியுமாறு தர்க்க முறையாக அமைத்துக் காட்டும் ஆற்றலும், மீறர் எளிதில் அறிந்து கொள்ள முடியாத விடயமாயிலும் அதனைத் தெளிவாக விளக்கும் நிறனும் சிவஞான முனிவருக்கு உண்டு என்பதை அவர் மடரைநடையை நோக்கி அறியலாம். பொருட் செறிவுடைய அவர் வாக்கியங்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கம்பீரமாகர் செல்லும் பண்பினையுடையன, அவர் இயற்றிய உரைநடைக்க எடுத்துகாட்டுவருமாறு
* இனிக் குடத்தையும் அதனை வகையுங் குமலனையும் ஓரிடந்து ஒருங்கு கண்டான் அல்லூழிக் குடத்தைக் கண்டு, இதுவும் வளைதற்கு
3
ஒரு கருத்தாவையுடைத்தன அலுமித்துவர்வது போல இவ்வுலகம் படைத்தற்கு ஒரு கருந்தா வுண்டென வழியளவையான் உணர்தற்குமுன் ஓருலகத்தையும் அதனைப் படைப்பாவொடு கடுவுளையும் ஒருங்கு கண்டதின்மையின் அவிநாபாவமறிதல் கூடாமையான் அனுமானமே சணிடைக்கேலா தொன்றாய்,
தமிழில் உரைநடை இலக்கியம் பதினெட்டாம் நுற்றாண்டின் முற்பகுதியில் ஆரம்பித்த போதும் அது விரைவாக வளரத் தொடங்கிய லம் பத்தொன்பதாம் நுற்ராண்டு என்றே கூறலாம் தமிழ் நாட்டில் ஆங்கிலக் கல்வி விருத்தியே அதற்கு காரணமாகும்.
ஆங்கிலம் சுற்ற ஆசிரியர் பலர் ஆங்கில உரைநடை இலக்கியங்களைத் தழுவித் தமிழ் உரைநடை
இலக்கியங்களை இயற்றமுற்பட்டவர். அதனால் நாவல்கள், கட்டுரைகள், சுதைகள் ஆராய்ச்சி நூல்கள்
இன்னோரன்ன பல உரைநடை நூல்கள் தமிழில் எழுந்தன.
தாண்டவராய் முதலியார், ஆறுமுகநாவலர், வேநதாயாம் பிள்ளை, வீரசாமிச் செட்டியார், ராஜமையார். சரவணப்பிள்ளை, சூரியநாராயண சாஸ்திரியர் ஆகியோர் பத்தொன்பதாம் நூற்றாண்டு உரைநடை ஆசிரியர்களுட் சிறப்பினராக குறிப்பிடத்தக்கவர்களாவர்.
இக்காலத்தில் உரைநடை நூல்கள் பெருக வேண்டும் என்ற கருத்துடையோர் பலர் மக்களை வசிகரிக்கத் தருந்த இராமாயணக்கதை, பாரதக்கதை, அதிர்சத்திரன்கதை. நளன் கதை முதலியவற்றை எழுதி வெளியிட்டனர்
தாண்டவராய முதலியார் பஞ்சதந்திரக் கதைகளையும் வீரசாமி செட்டியார் விநோதரச மஞ்சரி என்ற நூலையும் எழுதினர். ஆங்கிலத்திலுள்ள 'அற்புதாம்பவக்கதைகளைத் தழுவித் தமிழில் தமிழில் எழுந்த கதை நூல்களுள் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாபமுதலியார் சரித்திரம், கருணகத்தரி என்பனவும் சூரிய நாராயண சாஸ்திரியார் எழுதிய “மதிவாணன்' என்பதும் விஷேடமாக குறிப்பிடத்தக்கவை.
ராஜமையர் எழுதிய கமலாம்பாள் சரிந்திரம், திருகோணமலைச் சரவணப்பிள்ளை எழுதிய "மோகனாங்கிர்"
என்பதும் ஆங்கிலத்திலுள்ள உரியற் கதைகளாகிய நாவல்களைத் தழுவி தமிழில் ஏழுதப்பட்ட
உரைநடை நூல்களாகும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உரைநடை ஆசிரியர்களும் சிவஞான சுவாமிகள் ஒப்புயர்வற்று விளங்கியது பொலவே பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆறுமுகநாவலர் சிறப்புற்று விளங்கினார். தமிழ் இலக்கியம் வளர்ந்து வந்த வரலாற்றை நோக்கும் போது நாவலர் வாழ்ந்த காலம் தமிழ் உரைநடை விருத்திக்கு உரியகாளம் என்பது தெரிய வருகின்றது. நாவலர் காலம் பொது மக்களுக்கு சமய உணரச்சியை நியாய வழிகளால் ஏற்படுத்த வேண்டிய காலமாக இருந்தது. ஏவெனில் கிறிஸ்தவ சமயப் பிரசாரகர்கள் பெரும்பாலும் சைவசமய மக்களையே மதமாற்றம் செய்யத் தொடங்கினர்,
ஆகவே அம்மக்களுக்குச் சைவசமய உண்மைகளை எடுத்துக் காட்டுதலும் சமய ஆர்வத்தை உண்டாக்குநலும் இக்காலத்திலேயே பெரிதும் தேவைப்பட்டமையினால் அவர்களுக்கென எழுதப்படும் நூல்களிலும் பிறவற்றிலும் அவர்களுக்கு எழுதிப் புலப்படக் கூடிய ஒருதடையை வருத்துக் கொள்ளுதல் இன்றியமையாததாயிற்று அதனால், சிவஞான முனிவரைப் போல் அரிய செந்தமிழ் நடையைக் கையாளக்கூடிய ஆற்றல் தாவலருக்கு இருந்ததாயிலும் அவர் அதை விட்டும் பொதுமக்களுக்குரிய இலகுவான உரைநடை ஒன்றைக் கடைப்பிடிந்து அதை கையாள முன. அதனால் உரைநடை வரலாற்றில் ஒரு முக்கிய இடம் அவருக்கு அளிக்கப்படுகின்றது. அவர் எந்தெந்த வகையில் தமிழ் உரைநடையை பொதுமக்கள் இலகுவாக அறிந்து கொள்ளுதற்கு உரியதாக ஆக்கலாம் என்று ஆராய்ந்த செய்தப் பிரயத்தனங்களை யாவற்றையும் அவர் எழுதிய நூல்களிலும் கண்டனங்களிலும் பிறவற்றிலும் காணலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment