Saturday, March 21, 2020

தமிழ் - பல்லவர்காலம் - வினா – விடைகள் தொகுப்பு – ஆசிரியர் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.



தமிழ் -  பல்லவர்காலம்  - வினா – விடைகள்தொகுப்பு – ஆசிரியர் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.



01.பல்லவர்கால இலக்கிய வளர்ச்சிற்கு ஏதுவாக அமைந்த சமுகஇ அரசியல் காரணிகளை விளக்குக?

அல்லதுபல்லவர்கால அரசியல்இ சமூகஇ பொருளாதார நிலையினை விளக்ககுக?


அறிமுகம்
கி. பி. ஆரும் நூற்றண்டின் பிற்பகுதியோடு முடிந்த தாகக் கூறிய சங்கமருவிய காலப்பகுதிக்கும்இ கி. பி. ஒன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்த சோழராட்சிக்காலப் பகுதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதி பல்லவர் காலம் எனப்படும். அது ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளைக் கொண்டது. 

அரசியல் நிலை
சங்கமருவியகாலப் பிற்பகுதியிலே தமிழ் நாட்டை ஆண்டு கொண்டிருந்த களப்பிரரின் ஆட்சி கி. பி. ஆறும் நூற்றண்டில் வலிகுன்றஇ அவர்க்குக் கீழ்ப்பட்டிருந்த பாண்டியர் அவருடன் போர்செய்து பாண்டிநாட்டைக் கைப்பற்றினர். அந்நூற் றண்டிற் பல்லவர் தமிழ்நாட்டிற் புகுந்தமை விசேடமாக இங்கு குறிப்பிடத்தக்கது. பல்லவரென் பார் தமிழ்நாட்டிற்கு வடக்கே சாதவாகன வமிசத்தினர் சிறப்புடன் விளங்கிய காலத்தில் அவர் தம் ஆட்சிக்குட்பட்டிருந்த சில மாகாணங் களுக்குத் தலைவராயிருந்துவந்த ஒரு வகுப்பினர். சாதவாகனப் பேரரசு நிலைதளரவேஇ பல்லவர் தாம் தலைமைவகித்த மாகாணங் களுக்குத் தாமே அரசராகிப் பிற நாடுகளையூம் தம் ஆட்சிக் குட்படுத்தினர். தமிழ்நாட்டின் வடபாகத்தையூம் தமதாக்கக் கருதியிருந்த பல்லவர்இ களப்பிரரின் ஆட்சி வலிகுன்றியிருப் பதை அறிந்துஇ அவருடன் போர்செய்து முதலிலே தொண்டை மண்டலத்தையூம் பின் சோழ மண்டலத்தையூம் கைப்பற்றினர். களப்பிரரை வென்ற பாண்டியன் கடுங்கோனின் காலந்தொடக்கம் முந்நூறு ஆண்டுகளுக்குமேற் பாண்டிநாடு பாண்டிய மன்னரால் ஆளப்பட்டுவந்தது. தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியைச் சேரமன்னர் ஆண்டுவந்தனர். 

பல்லவ அரசன் சிம்மவிஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மனும் “நின்றசீர் நெடுமாறன்’ எனச் சுந்தரமூர்த்திசுவாமிகளாற் பாராட்டப் பட்ட பாண்டியன் அரிகேசரி மாறவர்மனும் (கி. பி. 670-710) தமிழ்நாட்டை ஆட்சிபுரிந்த காலந்தொடக்கம் பாண்டியர்க்கும் பல்லவர்க்குமிடையே பகை மூண்டுவந்தது. திருப்புறம்பியம் என்னுமிடத்தில் நடைபெற்ற போரிலே பாண்டியரைப் பல்லவர் வெற்றிபெற்ற காலம் வரையூம் (கி. பி. 880) இப்பகை நீடித்திருந்தது. மகேந்திரவர்மன் காலந்தொடக்கமாகத் தெற் கிலிருந்த பாண்டியரோடு மட்டுமன்றி வடக்கிலிருந்த கீழைச் சாளுக்கிய வமிசத்து அரசர்களோடும் பல்லவ அரசர்கள் பகைமைபூண்டு போர்புரிந்துவந்தனர். அதன் பயனுகப் பல்லவரின் ஆட்சி கி. பி. ஒன்பதாம் நூற்றண்டின் ஆரம் பத்தில் வலிகுன்றத்தொடங்கிஇ பல்லவருக்கும் பாண்டியருக்கும் திருப்புறம்பியத்தில் நடைபெற்ற போருக்குப்பின் முடி வடைந்தது. பல்லவர் வலிகுன்ற அவர்க்கீழ்ச் சிற்றரசரா யிருந்த சோழமன்னர் பல்லவரையூம் பாண்டியரையூம் போரில் வென்று தமிழ்நாடு முழுதும் ஆதிக்கம் செலுத்திய வரலாறு பின்னர்க் கூறப்படும். களப்பிரரை வென்ற பல்லவராட்சி சிம்ம விஷ்ணு (கி. பி. 575 - 615) காலந் தொடக்கம் பல்லவ அரசன் நிருபதுங்கவர்மன் (கி. பி. 850-882) காலம் வரை ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்குத் தமிழ் நாட்டில் நிலைபெற்றிருந்தது. அக்காலப் பகுதியே தமிழிலக்கிய வரலாற்றிற் பல்லவர் காலமென வழங்கும். 


சமூகம்
கல்வியறிவிலும் தவவொழுக்கத்திலும் சிறந்து விளங்கிய சமணர்கள் பள்ளிக்கூடங்களை அமைத்து மக்களுக்குக் கல்வி கற்பித்தும் அறங்களைப் போதித்தும் சமணசமயப் பிரசாரத்திற்கு வேண்டிய நூல்களையெழுதியூம் பிற தொண்டுகளில் ஈடுபட்டும் மதமாற்றஞ் செய்யப் பலவாறு முயன்றதனுல்இ மக்களுட்பலர் வைதிகசமயங்களைக் கைவிட்டுச் சமண சமயத்தைத் தழுவலாயினர்.  காட்டுத்தீப்போல நாடெங்கும் பரவத்தொடங்கிய சமணசமயம் ஈற்றில் அரசர்கள் மனத்தையூம் கவர்ந்தது. கி. பி. ஏழாம் நூற்றண்டின் தொடக்கத்திலே தமிழ்நாட்டில் அரசு செய்த பல்லவ அரசன் மகேந்திரவர்மனும் பாண்டிய அரசன் நின்றசீர்நெடுமாறனும் சமணசமயத்தைத் தழுவினர். அரசனெவ்வழி குடிகளுமவ்வழி' என்ற முது மொழிக்கிணங்கஇ வைதிக மார்க்கங்களைக் கைவிட்டு மக்கள் திரள் திரளாகச் சமணத்தைத் தழுவத்தொடங்கினர். அதனை வளர்த்தற்குவேண்டிய பலவூதவிகளையூம் அரசர்கள் செய்து வந்தனர். சிவனுக்கும் திருமாலுக்கும் அக்காலத்திற் கட்டப்ரூ பட்டிருந்த கோவில்கள் யாவூம் செங்கல்லாலானவை. அவற் றைப் போற்றுவாரில்லாமையினுல் அவை விரைவில் அழியத் தொடங்கின. அவற்றுட் சில சமணப் பள்ளிகளாகவூம் மாற்றப்பட்டனவென்பர். கோச்செங்கணுன் காலந்தொடக்கம் சைவம் வைணவ மாகிய இரு சமயங்களும் மக்களாற் பட்சபாத'மின்றி ஒப்ப நோக்கிப் பாராட்டப்பட்டுவந்தன. 

சமண சமயத்தைத் தழுவிய தமிழ்நாட்டு அரசர்களுள் மகேந்திர வர்மனைத் திருநாவூக்கரசரும்இ நின்றசீர்நெடுமாறனைத் திருஞான சம்பந்தசுவாமிகளும் சைவர்களாக்கிய காலந்தொடக்கமாகச் சைவமும் வைணவமும் தமிழ்நாட்டிலே தழைக்கலுற்றன. சமண சமயத்தை எதிர்த்துப் போராடவேண்டியிருந்த காலத்தில் ஒற்றுமைப்பட்டுநின்ற சைவமும் வைணவமும்இ சமணம் வலியிழந்து நின்ற காலத்தில் ஒன்றையொன்று பகைக்கத் தொடங்கின. அச்சமயங்களுள் ஒன்றையொன்று அழித்து விடக்கூடிய அத்துணைப் பெரும்பகையாக அப்பகை மூளா திருந்தபோதிலும் பல்லவராட்சிக் காலத்திலும் அதற்குப் பின்னும் அது ஓரளவிற்குத் தமிழ்நாட்டில் நிலவிற்றென்றே அறியக்கிடக்கின்றது. வைதிக சமயங்களிரண்டும் வளர்ந் தோங்குதற்கு அவற்றிற்கிடையிலிருந்த பகைமையூம் ஒரு வகையில் உதவிபுரிந்ததென்றே கூறல்வேண்டும். 




02.பல்லவர்கால இலக்கிய வளர்ச்சிற்கு ஏதுவாக அமைந்த சமயக் காரணிகளை விளக்குக? அல்லதுபல்லவர்கால சமய நிலையினை விளக்ககுக?


அறிமுகம்
கி. பி. ஆரும் நூற்றண்டின் பிற்பகுதியோடு முடிந்த தாகக் கூறிய சங்கமருவிய காலப்பகுதிக்கும்இ கி. பி. ஒன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்த சோழராட்சிக்காலப் பகுதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதி பல்லவர் காலம் எனப்படும். அது ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளைக் கொண்டது.  சங்கமருவியகாலப் பிற்பகுதியிலே தமிழ் நாட்டை ஆண்டு கொண்டிருந்த களப்பிரரின் ஆட்சி கி. பி. ஆறும் நூற்றண்டில் வலிகுன்றஇ அவர்க்குக் கீழ்ப்பட்டிருந்த பாண்டியர் அவருடன் போர்செய்து பாண்டிநாட்டைக் கைப்பற்றினர். அந்நூற் றண்டிற் பல்லவர் தமிழ்நாட்டிற் புகுந்தமை விசேடமாக இங்கு குறிப்பிடத்தக்கது. 


சமயநிலை
சமய சம்பந்தமான தோத்திரப் பாடல்களே பல்லவ ராட்சிக் காலத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் விசேடமாகக் 'குறிப்பிடத்தக்கவை. ஆகவேஇ அக்காலத்து இலக்கியப்போக்கினை அறிந்து கொள்ளுதற்கு அக்காலத்துச் சமய நிலையினைப் பற்றி ஓரளவாயினும் நாம் அறிதல்வேண்டும். சங்கமருவிய காலப் பகுதியின் ஆரம்பத்தில் ஒன்றேடொன்று பகைமை பாராட்டாது வளர்ந்துவந்த சைவம்இ வைணவம்இ சமணம்இ சாக்கியமாகிய நால்வகைச் சமயங்களுட் சமணசமயமே அக்காலப்பகுதியின் முடிவில் உயர்நிலை பெற்றிருந்தது. சோழன் கோச்செங்கணுன் சிவனுக்கும் திருமாலுக்கும் பல கோவில்களை நாடெங்கும் கட்டி ஆதரித்த சைவம் வைணவமாகிய வைதிக சமயங்களும் கன்னிலையிலிருந்தனவென்பதை முதலாழ்வார்களும் காரைக்காலம்மையார்இ நக்கீர தேவநாயனுர் முதலியோரும் அருளிச்செய்த திருப்பாடல்களிலி ருந்து ஒருவாறு அறியலாம். எவ்வகையானும் சைவத்தையூம் வைணவத்தையூம் அழித்துத் தம் சமயத்தை நாடெங்கும் பப்பும் கருத்துடையராயிருந்த சமணமுனிவர்கள் அதற்கு வேண்டிய வழிகளைக்கையாளத் தொடங்கினர். கல்வியறிவிலும் தவவொழுக்கத்திலும் சிறந்து விளங்கிய சமணர்கள் பள்ளிக்கூடங்களை அமைத்து மக்களுக்குக் கல்வி கற்பித்தும் அறங்களைப் போதித்தும் சமணசமயப் பிரசாரத்திற்கு வேண்டிய நூல்களையெழுதியூம் பிற தொண்டுகளில் ஈடுபட்டும் மதமாற்றஞ் செய்யப் பலவாறு முயன்றதனுல்இ மக்களுட்பலர் வைதிகசமயங்களைக் கைவிட்டுச் சமண சமயத்தைத் தழுவலாயினர். 

காட்டுத்தீப்போல நாடெங்கும் பரவத்தொடங்கிய சமணசமயம் ஈற்றில் அரசர்கள் மனத்தையூம் கவர்ந்தது. கி. பி. ஏழாம் நூற்றண்டின் தொடக்கத்திலே தமிழ்நாட்டில் அரசு செய்த பல்லவ அரசன் மகேந்திரவர்மனும் பாண்டிய அரசன் நின்றசீர்நெடுமாறனும் சமணசமயத்தைத் தழுவினர். அரசனெவ்வழி குடிகளுமவ்வழி' என்ற முது மொழிக்கிணங்கஇ வைதிக மார்க்கங்களைக் கைவிட்டு மக்கள் திரள் திரளாகச் சமணத்தைத் தழுவத்தொடங்கினர். அதனை வளர்த்தற்குவேண்டிய பலவூதவிகளையூம் அரசர்கள் செய்து வந்தனர். சிவனுக்கும் திருமாலுக்கும் அக்காலத்திற் கட்டப்ரூ பட்டிருந்த கோவில்கள் யாவூம் செங்கல்லாலானவை. அவற் றைப் போற்றுவாரில்லாமையினுல் அவை விரைவில் அழியத் தொடங்கின. அவற்றுட் சில சமணப் பள்ளிகளாகவூம் மாற்றப்பட்டனவென்பர். கோச்செங்கணுன் காலந்தொடக்கம் சைவம் வைணவ மாகிய இரு சமயங்களும் மக்களாற் பட்சபாத'மின்றி ஒப்ப நோக்கிப் பாராட்டப்பட்டுவந்தன. 

அக்காலத்திலிருந்த கோவில்கள் சிலவற்றுட் சிவனுக்கும் திருமாலுக்கும் ஒரே உருவச் சிலையினையமைத்து இரு கடவூளரையூம் ஒருவர் போலப் பாவித்து வணங்கினர் என்று கருதக்கிடக்கின்றது. அவ்வாறு இருசமயங்களும் ஒன்றுபட்டு நின்றிராவிடின்இ பரவிக் கொண்டு சென்ற சமணசமயத்தை எதிர்க்கக் கூடிய ஆற்றல் வைதிக சமயங்களுக்கு வந்திருக்கமாட்டாது. சமண சமயத்தைத் தழுவிய தமிழ்நாட்டு அரசர்களுள் மகேந்திர வர்மனைத் திருநாவூக்கரசரும்இ நின்றசீர்நெடுமாறனைத் திருஞான சம்பந்தசுவாமிகளும் சைவர்களாக்கிய காலந்தொடக்கமாகச் சைவமும் வைணவமும் தமிழ்நாட்டிலே தழைக்கலுற்றன. சமண சமயத்தை எதிர்த்துப் போராடவேண்டியிருந்த காலத்தில் ஒற்றுமைப்பட்டுநின்ற சைவமும் வைணவமும்இ சமணம் வலியிழந்து நின்ற காலத்தில் ஒன்றையொன்று பகைக்கத் தொடங்கின. அச்சமயங்களுள் ஒன்றையொன்று அழித்து விடக்கூடிய அத்துணைப் பெரும்பகையாக அப்பகை மூளா திருந்தபோதிலும் பல்லவராட்சிக் காலத்திலும் அதற்குப் பின்னும் அது ஓரளவிற்குத் தமிழ்நாட்டில் நிலவிற்றென்றே அறியக்கிடக்கின்றது. வைதிக சமயங்களிரண்டும் வளர்ந் தோங்குதற்கு அவற்றிற்கிடையிலிருந்த பகைமையூம் ஒரு வகையில் உதவிபுரிந்ததென்றே கூறல்வேண்டும்.

அச்சமயங்கள் தழைக்கவேஇ சமணம் பௌத்தமாகிய சமயங்களுக்கு நாட்டிலிருந்த ஆதரவூ குன்றத்தொடங்கிற்று; அதற்குச் சமண பௌத்த சந்நியாசிகளிடத்திற் காணப்பட்ட  சில குறைகளும் காரணமெனலாம். வைதிக சமயங்கள் தழைக்கத் தொடங்கியதுமட்டுமன்றிஇ சமண முனிவர்களின் போலிவேடம்இ ஒழுக்கக்கேடு முதலியனவூம்இ அரசர்கள் மதம் மாறியதும் பிறவூம் சமண சமயத்தின் தளர்ச்சிக்குக் காரணமென்பதைச் சமணர்கள் பலரும் உணர்ந்தனர். அதனுல்இ தம்மிடத்திற் காணப்பட்ட குறைகளை நீக்குவதாலும்இ மக்களுக்குக் கல்வி கற்பித்தல் முதலிய தொண்டுகளைச் செய்த காரைக்காலம்மையார்இ முதலாழ்வார் பிரபந்தங்களை நோக்குவதாலும் மக்களின் அன்பைப்பெறலாம் என்பதை உணர்ந்துஇ அவற்றைச் செய்து மக்களைத் தம்வசப்படுத்த முயன்றனர். இவ்வாறு தமிழ்நாட்டிற் கல்வியை விருத்திசெய்யூம் பணியில்இ பௌத்தரைவிடச் சமணரே பெரிதும் ஈடுபட்டு உழைத்தனஇ ரென்பது அவரியற்றிய நூல்களால் அறியக்கிடக்கின்றது. அவர் தமிழ் நூல்களுக்கு உரையெழுதியூம் இலக்கியம்இ இலக்கணம்இ நிகண்டு முதலிய பல நூல்களை யியற்றியூம் தமிழ்மொழியை வளர்த்துவந்தனர்.





03.பல்லவர்கால இலக்கியங்களை வகைப்படுத்துக? அல்லதுபல்லவர்கால இலக்கியங்களின் பொருள்மரபிலாக வகைப்பாட்டினை தருக?பல்லவர் கால இலக்கியங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

ஐ. பக்திசார் இலக்கியங்கள்
- சம்பந்தர்இ அப்பர்இ சுந்தரர்இ மாணிகக் வாசகர் பாடல்கள்
- முதலாழ்வார் மூவர ; தவிர்ந்த ஏனைய ஆழ்வார்களின் பாசுரங்கள
- சேரமான்பெருமாள்இ திருமூலர் ஆகியோரின் படைப்புக்கள்
ஐஐ. உலகியல்சார் இலக்கியங்கள்
- பாரத வெண்பா
- நந்திக்கலம்பகம்
- பாண்டிக்கோவை
- பெருங்கதை
- முத்தொள்ளாயிரம்
- ஸ்ரீ புராணம்
- கயசிந்தாமணி





4.பல்லவர்கால கலைவளமும் இலக்கியப் பண்பும் பற்றி விளக்குக?
அல்லது
பல்லவர்கால கலைவளமும் இலக்கியப் பண்பும் இலக்கிய பொருள்மரபில் ஏற்படுத்திய மாற்றத்தினை ஆராய்க?

கலைவளமும் இலக்கியப் பண்பும்
தமிழ்நாடு கலைவளம்பெற்று விளங்கியகாலம் பல்லவ ராட்சிக் காலமாகும். சிற்பம்இ ஓவியம்இ இசைஇ நடனம் முதலிய நுண்கலைகள் அவர் காலத்தில் உயர்நிலை பெற்றி ருந்தனவென்பது அவர் குடைந்தெடுத்த கோவில்களிலிருந்தும் அக்காலத்துச் சிலாசாசனங்களிலிருந்தும் அறியக்கிடக்கின் றது. பல்லவர் காலத்துப் பெருங்கோவில்களில் நடனமண் டபம்இ தருக்கமண்டபம் முதலிய பல மண்டபங்கள் அமைக் கப்பட்டிருந்தன் அதனுல்இ அக்கோவில்கள் சமயக்கல்விஇ சாத்திரக்கல்விஇ இசைஇ நடனம் முதலியவற்றை வளர்த்தற் குரிய இடங்களாகவூம் விளங்கினவென்று ஆராய்ச்சியாளர் கூறுவர். 


எல்லாச் சமயத்தோரும் தத்தம் மதங்களை வளர்த்தற் பொருட்டு நாடெங்கும் பல மடங்களைக் கட்டினர். அவை: துறவிகளுக்குத் தங்குமிடமாகவூம்இ திக்கற்றவர்க்குப் புகலிட மாகவூம்இ மாணவர்கள் உண்டியூம் உறையூளும் பெற்றுக் கலைபயிலிடமாகவூம் விளங்கின. இவ்வாறு சமயத்தை வளர்த் தற்கெனக் கட்டப்பட்ட மடங்களும் பிறவூம் மக்களின் அறிவூ வளர்ச்சிக்கும் கலைவிருத்திக்கும் பெரிதும் பயன்பட்டன. திருஞானசம்பந்தசுவாமிகள் முதலிய சைவப்பெரியார்கள் சிவனடியார்களுடன் ஊர்கள்தோறும் சென்று தங்கியிருந்து சமயத்தொண்டு செய்வதற்கு அக்காலத்திலிருந்த சைவமடங்கள் பெரிதும் பயன்பட்டன. வைதிக சமயங்களை வளர்த்தற்பொருட்டு மறையவர் பலருக்கு மானியமாக நிலங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அவர்கள் ஆகமம் முதலியவற்றைப் படித்தற்கு வடமொழிப் பாடசாலைகள் பல அக்காலத்தில் நிறுவப்பட்டன. சிவன்இ திருமால் முதலிய கடவூளர்க்குக் கோவில்கள் பலவெடுத்தும் அவற் றிற்கும் வேதியர்க்கும் பல நிலங்களை மானியமாகக் கொடுத்தும்இ மடங்களையாதரித்தும் வைதிக சமயங்களை வளர்த்ததோடுஇ பல்லவ அரசர்கள் இசைக்கலைஇ சிற்பக்கலை முதலிய இன்பக் கலைகளை யாதரித்தும்வந்தனர். பல்லவர் காலத்திலெழுந்த இலக்கியங்கள்இ கோவில்கள்இ கல்வெட்டுக்கள் முதலியவற்றிலிருந்து அக்காலத்தில் கலைவளத்திலும் பிறவற்றிலும் நாட்டைந்திருந்த சிறப்பினை ஒருவாறு அறியலாம்.

அறநூல்களெழுந்த சங்கமருவிய காலப்பகுதியிலே தமிழிலக்கியப் போக்கில் வடமொழியின் சாயல் படியத் தொடங்கிய வகையினை காம் முந்திய அதிகாரத்திற் கூறினும்இ சிறிதுசிறிதாகத் தமிழிலக்கியம் வடமொழியிலக்கியப் போக்கைத் தழுவூதலைப் பல்லவர் காலத்திலெழுந்த இலக்கியங்களிலே தௌpவாகக் காணலாம். அக் காலத்திலே தமிழ்நாட்டை ஆட்சிபுரிந்த மகேந்திரவர்மன் முதலான பல்லவ அரசர்கள் வடமொழியினையூம் வடமொழிப் புலவர்களையூம் பெரிதும் போற்றிவந்தனர். வடமொழிக்குத் தழிழ்காட்டிற் பெருமதிப்பு ஏற்பட்டிருந்த அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் வடநூற் கருத்துக்களையூம்இ அதி லுள்ள இதிகாச புராணக் கதைகளையூம் அமைத்துச் செய்யூட் செய்யத்தொடங்கினர். சைவமும் வைணவமும் வேதாகமங் களைப் பிரமாணமாகக் கொள்வனவாதலின்இ வேதாகமப் பயிற்சி நாட்டிற் பரவூவதும் மக்கள் வேதாகமங்களையூம் பிற வடமொழி நூல்களையூம் போற்றுவதுமியல்பே. இவ்வாறு பல்லாற்றணும் வடமொழி தமிழ்நாட்டிற் போற்றப்படவேஇ அம்மொழிச் சொற்கள்இ கருத்துக்கள்இ இலக்கணங்கள்இ யாப்பமைதிகள் தமிழ்மொழியில் இடம்பெறலாயின் அன்றியூம்இ
வடமொழியிலக்கியப் போக்கினையூம் தமிழ்மொழி தழுவத்தொடங்கிற்று. 

தமிழுக்கே சிறப்பாகவூரியதும் சங்கமருவிய காலப்பகுதியிற் பெருவழக்காயிருந்ததுமாகிய வெண்பா யாப்பினைப் பல்லவர் காலத்துப் புலவர்கள் பெரிதும் கைக்கொள்ளாதுஇ தமிழ்மொழிக்கும் வடமொழிக்கும் பொதுவாயூள்ள விருத்தப்பாவினையூம் வேறு சில செய்யூள் வகையினையூம் போற்றத்தொடங்கினர். வினவூக்கு இறுக்கும் விடையைப் போன்று சொற்சுருக்கமும் பொருட்செறிவூமுள்ள வெண்பா யாப்பு ஒழுக்கநெறிகளை எடுத்துக்கூறுதற்குச் சிறந்ததெனினும்இ இறைவனிடத்தில் அடியார் கொண்டுள்ள பத்திப்பெருக்கைப் புலப்படுத்துதற்கு விருத்தம் முதலிய பிற யாப்புக் களைப்போல அது அத்துணைச் சிறந்ததன்றெனக் கிருதிப் போலும் விருத்தம் முதலிய பாவினங்களைப் பல்லவர் காலத் திலிருந்த அடியார்கள் பெரிதும் விரும்பினர். சங்கமருவிய காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்த முதலாழ்வார்களும் காரைக் காலம்மையாரும் இணையற்ற பத்திப் பாடல்களாகிய திருவக் தாதிகளை வெண்பாயாப்பிற் பாடியூள்ளனரன்றேவெனின்இ அவர்களைப்போல் உணர்ச்சிப் பெருக்கை வெண்பா வாயிலாக வெளிப்படுத்துதல் எல்லார்க்கும் எளிதன்று. அவ்வாறு வெண்பாவில் அற்புதத் திருவந்தாதி பாடிய அம்மை யாரும் தமது திருவிரட்டைமணிமாலையிற் கட்டளைக் கலித்துறையைக் கையாண்டதோடு திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்களை விருத்தப்பாவிலே பாடியருளினூர். அவருக்குப்பின் வந்த புலவர்கள் அப்பாவகைகளைப் பெரிதும் கையாளத் தொடங்கினர். 

தமிழ்நாட்டில் வடமொழிக் கல்வி விருத்திபெற்ற பல்லவராட்சிக் காலத்தில் விருத்தப் பாவை மட்டுமன்றி வேறுபல வடமொழி யாப்புக்களையூம் தமிழ்ப்புலவர்கள் கையாளத் தொடங்கினர். அவ்வாறு தமிழின்கண் வந்த செய்யூள் வகைகளின் இலக்கணத்தைக் கூறும் யாப்பிலக்கண நூல்கள் பல பல்லவர் காலத்தில் எழுந்தன. புதிய இச்செய்யூள் வகைகளைத் தமிழ்ப்புலவர்கள் கையாண்ட போதினும்இ அவர்கள் வெண்பாவை முற்றாகத் தள்ளிவிட வில்லை. அக்காலத்திலெழுந்த சாசனங்களும் பாரத வெண்பா முதலிய இதிகாசங்களுமே இதற்குச் சான்றாகும். 

பல்லவர் காலத்திற் பெருவழக்காயிருந்தது பதிகமென்றே கூறல்வேண்டும். நாயன்மார்களும் ஆழ்வார்களும் தம் உணர்ச்சியனுபவங்களைப் பெரும்பாலும் பதிகங்கள் வாயிலாகப் புலப்படுத்தியூள்ளனர். பதிகமென்பது பத்துப் பாக்களைக் கொண்டுள்ளது. பதினொரு பாக்களைக் கொண்டுள்ள பதி கங்களுமுள். அவ்வாசிரியர்கள் பதிகவமைப்பை வேண்டிய வாறு செப்பஞ்செய்து தம் உள்ளக்கருத்துக்களையூம் உணர்ச்சி களையூம் தௌpவாகப் புலப்படுத்துதற்குரிய கருவியாக ஆக்கிக் கொண்டனர். அப்பதிகம் அப்பர் சுவாமிகள் காலந் தொடக்கம் சிறிதுசிறிதாக வளர்ச்சிபெற்றுவந்துஇ மாணிக்கவாசக சுவாமிகள் காலத்தில் உச்சநிலை அடைந்துள்ளது என்பதை அவர்கள் பாடியருளிய திருப்பதிகங்களைப் படித்தறியலாம். சங்ககாலத் திலும் சங்கமருவிய காலத்திலும் வாழ்ந்த சான்றௌர்கள் தாம் பெற்ற தெய்வானுபவங்களை வெளிப்படுத்துவதற்குப் பெருந்தேவபாணிஇ சிறுதேவபாணிஇ பரிபாட்டு முதலிய செய்யூள் வகைகளைக் கையாண்டனர். நாயன்மார்களும் ஆழ்வார்களும் அச்செய்யூள்வகைகளைக் கைவிட்டுஇ வளமுள்ள பதிகவடிவத் திலே தம்முடைய பத்தியனுபவங்களை வெளிப்படுத்த முன் வந்தமைஇ தமிழிலுள்ள செய்யூளிலக்கிய வளர்ச்சியிற் குறிப் பிடத்தக்கதொன்றாகும். அடியார்கள் தாம் புலப்படுத்துவதற்கு எடுத்துக்கொண்ட பொருளையூம் அதனோடு தொடர்புடைய உணர்ச்சி முதலியவற்றையூம் வகுத்துஇ அவற்றை வளர்ச்சிக் கிரமத்தில் அமைத்துக் காட்டுதற் தப் பதிக முறை பெரிதும் பொருத்தமுடையதொன்றாகக் கருதினர். ஒரு பதிகத்திலுள்ள செய்யூட்கள் யாவூம் ஒரே ஓசையூடையனவாகலின்இ முதலிலுள்ள செய்யூளைப் படிக்கும்போது உண்டாகும் ஓசையின்பம் இ அதே ஓசையில் அமைந்த ஏனைச் செய்யூட்களை ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கும்போதுஇ படிப்படியக வளர்ந்து செல்வதை நாம் காணலாம். இங்கனம் முதலாவது செய்யூளில் ஆரம்பிக்கும் உணர்ச்சியின்பம் சிறிதுசிறிதாக வளர்ந்து ஏழாவது அல்லது எட்டாவது செய்யூளில் உச்சநிலையடைந்துஇ அதன்பின் அது குறையத்தொடங்கிப் பத்தாவது செய்யூளில் முடிவடைகின்றது. இதேபோன்ற செய்யூளமைப்பு ஆங்கிலம் முதலிய பிற மொழிகளிலும் காணப்படுகின்றது.

அகவல்இ வெண்பா முதலிய பாவகைகள் பல்லவர் காலத்துப் புலவர்களாற் கையாளப்பட்டபோதும்இ அக்காலப் பகுதியிற் பெருவழக்காயிருந்தவை தாழிசைஇ துறைஇ விருத்தம் என்னும் பாவினங்கள் என்றே கூறுதல்வேண்டும். இப் பாவினங்கள் ஒவ்வொன்றும் பலதிறப்பட்ட ஒசைவிகற்பங் களை உடையன. அவற்றுள்ளேஇ அடியார்கள் தாம் புலப் படுத்தக் கருதிய பொருளுக்கும் உணர்ச்சிக்கும் ஏற்ற ஒசைகளைத் தெரிந்து பதிகங்களிற் பயன்படுத்தியிருத்தலை நாம் காணலாம். இங்கனம் அவர்கள் கையாண்ட ஒசைகளுட் பெரும்பாலானவை தமிழுக்குப் புதியனவாகும். நாயன்மார் களும் ஆழ்வார்களும் பல்வகை உணர்ச்சிபேதங்களைப் புலப்படுத்தவேண்டியிருந்ததனுல்இ பல்வேறு வகைப்பட்ட ஒசைமுறைகளைக் கையாளவேண்டியதாயிற்று. அவர்கள் கையாண்ட ஒசைவகைகளையே சோழப்பெருமன்னர் காலத் திலும் அதற்குப் பின்னும் வாழ்ந்த பெரும்புலவர்கள் கையாண்டு ஒப்பற்ற காவியங்களை இயற்றித் தந்துள்ளனர். காவியங்கள் அகவற்பாவில் அல்லது வெண்பாவில் அமைதல் வேண்டும் என்னும் மரபு பல்லவர் காலத்தோடு நீங்கப்பெறஇ அவற்றை விருத்தப்பாவில் இயற்றுதற்கு வழிகாட்டி வைத்த வர்கள் நாயன்மார்களும் ஆழ்வார்களும் எனலாம். அவை சிந்தாமணி முதலாகத் தோன்றிவளர்ந்த வரலாற்றை அடுத்து வரும் அதிகாரத்திற் கூறுவோம். 。

தமிழிலுள்ள தொண்ணுற்றறுவகைப் பிரபந்தங்களுள் வாயூறைவாழ்த்துஇ செவியறிவூறுஉஇ இயன்மொழிவாழ்த்து முதலிய பிரபந்தவகைகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே வழக்கில் இருந்திருக்கின்றன. அவையாவூம் ஒரு பொருளை ஒரு செய்யூளில் அமைத்துக்கூறுவன. ஒரு பொருளைப் பல செய்யூட்களில் அமைத்துக்கூடறும் பதிகம் முதலிய ஏனைப் பிரபந்தவகைகள் காரைக்காலம்மையார் காலந் தொடக்கமாகத் தமிழில் எழுந்தவை. இங்ஙூனம் தொடர்நிலைச் செய்யூளாக வரும் பிரபந்தவகைகளுள் உரு வத்திற் சிறியனவற்றுள் ஒன்று பதிகமாகும். இரட்டைமணி மாலைஇ மும்மணிக்கோவை முதலிய ஏனைப் பிரபந்தவகை கள் பத்துக்குமேற்பட்ட செய்யூட்களாலானவை. அவற்றுள் உலாஇ கோவைஇ கலம்பகம் முதலியன பல்லவர் காலத்தில் ஆரம்பித்துப் பிற்காலங்களில் வளர்ச்சியூற்று வந்துள்ளன. மடல்இ எழுகூற்றிருக்கைஇ மறம் முதலிய பிரபந்தவகைகள் பல்லவர் காலத்தில் ஆரம்பித்துள்ளனவெனினும்இ அவை அக்காலத்தின் பின் அருகியே வந்துள்ளன. இறைவழிபாட்டிற்குச் சிறப்பாக உரிய தோத்திரப் பாமாலைகள் இக்காலப் பகுதியிற் பதிகம் முதலிய பிரபந்த முறையில் வெளிவந்ததனால்இ ஒரு புதிய இலக்கிய மரபு தமிழ்மொழியில் ஆரம்பித்துள தெனினும்இ சங்க காலத்திலும் சங்கமருவிய காலத்திலும் பெருவழக்காக இருந்த பழைய அகத்திணை மரபை நாயன்மார்களும் ஆழ்வார்களும் கைவிட வில்லை. அம்மரபு காலத்தின் போக்கிற்கிணங்க ஒரு புது முறையிலே பத்திப்பாடல்களில் இடம் பெறுகின்றது. தலைவன் தலைவியருக்கிடையேயூள்ள அன்பை வெளிப்படுத்துவதற்கென வகுக்கப்பட்ட அகப்பொருட்டுறைகள் யாவூம் இறைவன் மாட்டு அடியார்கள் கொண்ட அன்பினை வெளிப்படுத்து வதற்கு ஏற்ற கருவியாக அமைகின்றன. 

அகத்திணைச் செய்யூட்களில் வந்துள்ள உலகியற்காதல் தோத்திரப்பாடல் களிலே தெய்வீகக் காதலாக உருவெடுக்கின்றது. இங்ஙூனம் பழைய செய்யூள் மரபு ஒரு புதுமுறையிற் கையாளப்படுத லால்இ தமிழிலக்கியம் பல்லவர் காலப்பகுதியில் வளம் பெற்று வளரத்தொடங்கிற்று. அகத்திணைப் பொருளில் அமைந்த பத்திப்பாடல்கள் பெரும்பாலும் தலைவி கூற்றாகவூம் தோழி! கூற்றாகவூம் செவிலி கூற்றாகவூம் வந்துள்ளன. தலைவனிடத்திலே தலைவி கொண்ட காதல் இறைவனிடத்தில் அடியார். கொண்ட அன்பாக மாறுகின்றது. தெய்வானுபவங்களை உலகியல் வாழ்க்கையனுபவங்களில் அமைத்துக்கூறும் வழக்கு இக்காலப் பகுதியிலேயே ஆரம்பமாகின்றது. உலகியற் காதலாகிய அன்பினைந்திணைதான் கவிதைக்குப் பொருளாக அமைதல்வேண்டும் என்பது தமிழ் மரபாகும். அம்மரபு பிறழாமல் இக்காலப் பகுதியில் எழுந்த இலக்கிய நூல்களும் சிலவூள. அவற்றுக்குத் திருச்சிற்றம்பலக்கோவையாரை ஓர். உதாரணமாகக் கூறலாம். அந்நூலில் தலைவன் தலைவியர்இ மாட்டு நிகழும் உலகியற் காதலே கூறப்படுகின்றதெனினும்இ இறையன்பும் அதனோடு அழகுற இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிக்கோவைஇ முத்தொள்ளாயிரம் என்னும் நூல்களில் உலகியற் காதலே கூறப்படுகின்றதெனினும்இ அக்காலத்தில் வாழ்ந்த அரசர்களின் வீரச்செயல் முதலியனவற்றைப் பாராட்டிக் கூறுதற்பொருட்டு அகத்திணைப்பொருள் கருவி யாகக் கொள்ளப்பட்டிருத்தலைக் காணலாம்.


பல்லவர் காலத்துப் பெரியார்கள் தம்முடைய காலத் திற்குமுன் வழக்கிலிருந்த செய்யூள் மரபு முதலியவற்றைத் தம்முடைய உணர்ச்சி பேதங்களை வெளிப்படுத்துதற்குத் தழுவிக்கொண்டது போலவேஇ தம்முடைய பத்தி நிலையைப் புலப்படுத்துதற்கு வடமொழிப் புராணஇ இதிகாசங்களிலுள்ள கதைகளையூம் கருத்துக்களையூம் துணையாகக் கொண்டுள்ளனர். சைவநாயன்மார்கள் சிவபெருமானுடைய திருக்கோலக் காட்சியினையூம் அருட்டிறங்களையூம் சித்திரித்துக் காட்டுவதை நோக்கும்பொழுதுஇ வடமொழி நூல்களிலுள்ள கருத்துக்களை எத்துணைச் சிறப்பாகத் தம் முடைய பதிகங்களில் எடுத்தாண்டிருக்கின்றனர் என்பது புலப்படும். அவர்களைப்போலவே வைணவ ஆழ்வார்களும் பாதவதம்இ இராமாயணம்இ மகாபாரதம் முதலிய வடமொழி நூல்களிலுள்ள கதைகளை நன்கு பயன்படுத்தியூள்ளனர். கோசலை தாலாட்டுதசரதன் புலம்பல்இதேவகி புலம்பல்இ கண்ணனுடைய பாலலிலைகள் முதலிய நிகழ்ச்சிகளை அடிப்படையாகக்கொண்டு ஆழ்வார்கள் தம்முடைய பத்திநிலையை ஒரு புது முறையில் வெளிப்படுத்தியூள்ளன்ர் இங்ஙூனம் பல்லவர் காலத்து இலக்கியம் ஒரு புதுவழியிற் சென்றமையை வடமொழித் தொடர்பினுலே தமிழிலக்கியம் அடைந்த சிறப்புக்களுள் ஒன்ருகக் கூறலாம்.

தமிழ் நாட்டில் ஆங்காங்கு பாமர மக்களிடையே வழங்கி வந்த சில நாட்டுப்பாடல் வகைகளைத் தழுவிப் பல பதிகங்கள் பல்லவர் காலப்பகுதியிற் பாடப்பட்டுள்ளன. தேவாரத்திருப் பதிகங்கள் முதலியனவற்றுட் பெரும்பாலானவை நாட்டு மக்கள் இறைவனை வழிபடும்போது ஒதுதற்கென இயற்றப் பட்டனவாகலின்இ அம்மக்களிடையே வழங்கிவந்த பாடல் முறையில் அத்திருப்பதிகங்கள் அமைதல் பயனுடைத்தென் பதை உணர்ந்தேஇ நாயன்மார்களும் ஆழ்வார்களும் நாட்டு முறையில் அவற்றைப் பாடினர்கள் என்று கருதக் கிடக்கின்றது. திருவாசகத்திலுள்ள திருவம்மானைஇ திருச்சாழல்இ திருப்பொன்னுரசல் முதலிய பதிகங்களும்இ பெரியாழ்வார் பாடியருளிய கண்ணன் குழல்வாரக் காக்கையை அழைத்தல் முதலிய பதிகங்களும் இதற்கு உதாரணங்களாகும். நாட்டுப்பாடல்களிலுள்ள ஓசை முறைகளைத் தழுவி அக்காலத்துப் புலவர்கள் பதிகங்களைப் பாடினுர்கள் என்பதற்குச் சான்ருதச் சுந்தரமூர்த்திசுவாமிகளுடைய திருப்பதிகங்களுட் சில கானப்படுகின்றன. இங்கனம் பல்லாற்ருனும் வளமுடையனவாகப் பல்லவர் காலத்துப் பத்திப்பாடல்கள் அமைந்திருத்தலால் அவை தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு தனிச்சிறப்புடன் விளங்குகின்றன.


பல்லவர் ஆட்சிக்காலம் வைதிக சமயங்கள் புத்துயிர் பெற்று வளர்ந்த காலமாதலின்இ இறைவனேக் குறித்துப்பாடப்பட்ட பிரபந்தங்களே பெருக்தொகையாக வெளிவந்தன. சமணம் பௌத்தமாகிய சமயங்கள் வீறுபெற்று வளர்தற்கான வசதிகள் அக்காலத்தில் அருகிப்போனமையால் அறங் கூறும் நூல்கள் பல இயற்றப்பட்டில. அக்காலத்தில் ஆட்சி புரிந்த பல்லவ அரசர்களுட் பலர் வடமொழிப் புலவர்களை ஆதரித்தனரன்றித் தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கவில்லை. தமிழ் மொழியூம் புறக்கணிக்கப்பட்டது. பிறகாட்டு மன்னர் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலையில் ஒரு நாடு இருக்குமாயின் அந் காட்டின் சமுதாயம்இ பொருளாதாரம்இ பண்பாடுஇ இலக்கியம் முதலியவற்றிலே தீவிரமான வளர்ச்சி ஏற்படமாட்டாது. அதனுலேதான்இ பல்லவர் ஆட்சிக்காலத்தில் உலகியலும் உலகியல் கூறும் இலக்கியமும் சிறப்படையவில்லை. மன்னர் களுடைய வீரச்சிறப்புஇ கொடைச்சிறப்பு முதலியவற்றைக் கூறும் செய்யூட்கள் அக்காலத்திற் பெருந்தொகையாக எழவில்லை. அது அக்காலத்தின் போக்கினைக் காட்டுகின்றது. 







05. பல்லவர்கால கலைவளமும் இலக்கியப் பண்புகளை தருக?இலக்கியப் பண்புகள்


இறைவனுடைய தோற்றப் பொலிவூஇ அருட்சிறப்புஇ பெருமை என்பன உணர்வூப+ர்வமாக விவரிக்கப்படல்.
தனித்தனிப் பதிகங்களாகவூம் பிரபந்தங்களாகவூம் பாடுதல். அடியார்கள் நேரடியாகவூம் பாவனை செய்தும் பாடுதல்.
கடவூளை வாழ்த்தும் பக்திப்பாசுரங்கள் முன்னிலைப் பரவலாகவூம் படர்க்கைப் பரவலாகவூம் அமைந்துள்ளன.
இக்காலப் பாடல்களில் தாழிசைஇ துறைஇ விருத்தம் ஆகியன பெருகிக் காணப்படுகின்றன.
இக்காலப் பாடல்களில் வடமொழிப் புராணக் கதைகளஇ; கருத்துகள் எடுத்தாளப்படுகின்றன.
பொதுமக்களைக் கவரும் இலக்கிய உத்திகள் பயன்படுத்தப்படல்.


06.பல்லவர்கால பக்திமரபினை விளக்குக?

 பத்திப்பாடல்கள்
சைவம் வைணவமாகிய வைதிக சமயங்கள் புத்துயிர் பெற்றுத் தழைத்த பல்லவராட்சிக்காலம் தமிழிலக்கிய வரலாற் றில் ஒரு சிறந்த காலப்பகுதியெனக் கருதப்படுகின்றது. பத்திச்சுவை மலிந்த தோத்திரப்பாடல்கள் அக்காலப்பகுதி யிலே தோன்றியதுபோல வேறெக்காலத்திலும் தோன்ற வில்லையென்றே கொள்ளவேண்டும். அக்காலத்தில் சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் தோன்றியிராவிடின் சைவத்தையூம் வைணவத்தையூம் சமண பௌத்த மதங்கள் நிலைதளரச் செய்திருக்குமெனக் கூறுதல் பிழையாகாது. நாயன்மார்இ ஆழ்வார் என்னும் சொற்களுக்கு தலைவர்இ இறைவனுடைய குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர் என்பன பொருளாகும். பல்லவர் காலத்தில் வாழ்ந்த சிவனடி யார்களுள் தலைசிறந்தோராகக் கருதப்படுவோர் 
திருஞான சம்பந்தர்இ 
திருநாவூக்கரசர்இ 
சுந்தரர்இ 
சேரமான்பெருமாள்இ 
மாணிக்கவாசகர்இ 
திருமூலர் முதலியோராவர். 

பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் மூவருமொழிந்த 
திருமழிசையாழ்வார்இ 
பெரியாழ்வார்இ 
கோதையார்இ 
தொண்டரடிப்பொடியாழ்வார்இ 
குலசேகராழ்வார்இ 
திருமங்கையாழ்வார்இ 
திருப்பானுழ்வார்இ 
நம்மாழ்வார்இ ‘
மதுரகவியாழ்வார் ஆகிய ஒன்பதின்மரும் பல்லவர் காலத்தோராவர். 


நாயன்மார்கள் பாடிய பத்திப்பாடல் களைச் சோழப் பெருமன்னர் காலத்திலிருந்த நம்பியாண்டார் நம்பி தேடிப்பெற்று அவற்றைத் திருமுறையாக வகுத்தமைத் தது போலவேஇ அக்காலத்திலிருந்த நாதமுனிகளும் ஆழ்வார் கள் பாடிய பிரபந்தங்களைத் தேடிப்பெற்று நாலாயிர திவ்வியபிரபந்தம் எனத் தொகுத்துள்ளனர். தம் உள்ளத்தை இறைவனுக்குக் கோயிலாக அமைத்துக்கொண்ட நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவன் திருவருளை எண்ணியெண்ணி நெஞ்சுருகிப் பாடிய பாக்களின் பெருமை அளவிடற்கரியது. தௌpவூஇ கனிவூஇ பத்திச்சுவைஇ ஒசைப்பெருக்கு முதலிய பல சிறப்பியல்புகளை யூடையன அத்திருப்பாடல்கள். சமண பௌத்த முனிவர்கள் கொண்டாடிய புறவேடங்களால் ஒருவன் பெறும்பயன் யாதுமில்லை யென்பதையூம்இ ஒருவன் இறைவனே நாள்தோறும் நினைந்து கைந்து உள்ளம் கசிந்துருகிலைன்றி அவனருளைப் பெறமுடியாது என்பதையூம்இ தம் வாழ்க்கையால் மக்களுக்கு எடுத்துக் காட்டி அவர்களை நல்வழிப்படுத்திய பெரியார்களின் கள்ளமற்ற உள்ளத்தை அவர்கள் பாடியதிருப்பாசுரங்கள் தௌpவாக எடுத்துக்காட்டுகின்றன. சங்கமருவிய காலப்பகுதியில் எழுந்த பத்திப் பிரவாகமொன்றே பல்லவராட்சிக் காலத்தில் சைவம் வைணவம் என்னும் இரு நதிகளாக ஒடித் தமிழிலக்கியத்தைத் தழைக்கச் செய்த தெனலாம். - கி. பி. ஏழாம் நூற்றண்டின் ஆரம்பத்தில் சமணசமயம் பல்லவ அரசன் மகேந்திரவர்மனேயூம் பாண்டிய அரசன் நின்றசீர்நெடுமாறனையூம் தன்வசமாக்கித் தமிழ் நாட்டில் ஆதிக்கஞ் செலுத்தத் தொடங்கிற்று. அந்நாளில் 'சைவ நெறிதான் பெற்ற புண்ணியக்கண் இரண்டெனத் திருநாவூக்கரசரும் திருஞானசம்பந்தரும் அவதரித்துஇ அம்மன்ன்ரிரு வரையூம் சைவராக்கிச் சமணத்தின் விறடக்கிச் சைவத்தை வளர்த்தனர். சைவசமயத்திற் பிறந்த திருநாவூக்கரசர் இறை வனேயடைய மனங்கொண்டவராகி இளமையிலேயே சைவ சமயத்தைவிட்டுச் சமணனுகித் துறவொழுக்கத்தை மேற் கொண்டு வாழ்ந்தனர். 

பல ஆண்டுகள் சென்றும் விடாய் கொண்ட அவர் மனத்திற்கு அச்சமயம் ஆறுதலளித்திலது. ஆகவேஇ சமணசமயத்தை விட்டு மீண்டும் அவர் சைவத்தைத் தழுவினர். அதைக்கண்ட சமணத் துறவிகள் அவருக்குப் பல இன்னல்களை இழைத்தனர். அவற்றிற்கெல்லாம் ஆளாகியூம்இ கலங்காத நெஞ்சினராய்ச் சைவசமயத்தை இறுகத் தழுவிக்கொண்டுஇ சிவபெருமானுக்குப் பாமாலை அணிந்தும் உழவாரப் படைகொண்டு வாணுளெல்லாம் ஆலயத்திருப் பணி செய்தும் சைவத்தை வளர்த்தனர். இவ்வாறு வயோதி பராய்த் திருநாவூக்கரசர் திருத்தொண்டு செய்துவருங் காலத் தில்இ சீகாழி என்னும் திருப்பதியில் திருஞானசம்பந்தர் அவதரித்துப் பாலனுய் விளையாடும் பருப்பருத்திலேயே பண் கனிந்த பாடல்கள் பலபாடி இறைவனே ஏத்தலாயினர். தமிழ்நாட்டில் ஆங்காங்கு கட்டப்பட்டிருந்த சிவாலயங்களைத் தரிசிக்கச் செல்கையில்இ ஒருநாள் திருநாவூக்கரசரைச் சந்தித்து அவரை அப்பரே' என்று அழைத்ததல்இ அவருக்கு அன்று தொட்டு அப்பர் என்னும் பெயர் வழங்கலாயிற்று. அவர்க ளிருவரும் சைவ சமயத்துக்கு அளவிடற்கரிய தொண்டுகள் செய்துள்ளனர். 


சங்கமருவிய காலப்பகுதியிலே தமிழ்நாட்டிற் சிறப்புடன் விளங்கிய சிவாலயங்கள் பலஇ சமணர் ஆதிக்கம் செலுத்திய கி. பி. ஏழாம் நூற்றண்டின் தொடக்கத்தில்இ ஆதரிப்பாரின்றி அழியூம் நிலையினே எய்தின. தம் சமயத்தைப் பரப்பு தற்குச் சமணர் செய்துவந்த சமயப் பிரசாரத்தின் பயனுகச் சைவசமயிகள் தம் சமயவொழுக்கங்களைக் கைவிட்டமையே சிவாலயங்கள் பல சீர்குன்றுதற்கெல்லாம் காரணமாயிருந்தது. அவற்றுட்சில சமணப் பள்ளிகளாகவூம் மாற்றப்பட்டன ஆராய்ச்சியாளர். இவ்வாறு போற்றுவாரின்றிப்பொன்றும் நிலையிலிருந்த சிவாலயங்களே மீண்டும் நன்னில்யில் வைப்பதற்கு அப்பரும் திருஞானசம்பந்தரும் அக்காலத்தில் அரியதொண்டுகள் பலவற்றைச் செய்தனர்; அவற்றுள்இ மக்களாற் கைவிடப்பட்ட ஆலய வழிபாட்டுமுறைக்குப் புத்துயிரளித்தமையூம் ஒன்றகும். ஆலயத்துக்குச் சென்று மக்கள்இறைவனை வழிபடும்பொழுதுஇ அவர்கள் எல்லோரும் ஒருங்கு கூடி ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் ஆல யத்தைச் சுற்றிவருதல்இ அவன் புகழ் பாடுதல்இ துதித்தல் ஆதியனவூம் அக்காலத்தில் கோவில் வழிபாட்டு முறையாயிருந்தன. அம்முறையினை மக்கள் போற்றமையே கோவில்கள் நிலைகுன்றுதற்குக் காரணமென்பதை அறிந்து அங்காயன்மா ரிருவரும் ஊர்கள் தோறும் சென்று ஆங்காங்குள்ள சிவாலயங்களைத் தரிசிக்கலாயினர். 

அவற்றுள் வீற்றிருக்கும் சிவபிரானின் அருட்டிறத்தையெல்லாம் நினைந்து நெஞ்சுருகித் தேவாரத் திருப்பதிகங்களைப் பாடிக்கொண்டு அடியார் புடைசு+ழக் கோவில்களைச் சுற்றி வலம்வந்தனர். அதனைக் கண்ட மக்களுக்கு ஆலயவழிபாட்டில் ஆர்வமுண்டாயிற்று; அவரும் சிவனடியாருடன் கூடித் தேவாரங்களைப் பாடிக் கொண்டு கோவில்களை வலம்வந்தனர். அத்தேவாரங்கள் அவரின் அகவிருளை யகற்றும் விளக்காயின. இவ்வாறு அவர் புத்துணர்ச்சிபெற்றுக் கோவில் வழிபாட்டில் ஊக்கங் கொள்ளவேஇ அழியூம் நிலையடைந்த சிவாலயங்கள் அழியா நிலை பெற்றதோடு பிற்காலத்திற் கலைக்களஞ்சியங்களாகவூம் திகழ்ந்தன. அப்பர்சுவாமிகள் கோவில்கள்தோறும் சென்று உழவாரத் திருப்பணியை இடைவிடாது செய்துவந்தமையால் அவற்றை நன்னிலையில் வைத்து மக்கள் ஆதரித்தற்பொருட்டு அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாய் விளங்கினரென்பது அறி யக்கிடக்கின்றது. இவ்வாறு தொண்டுகள் பலவற்றைச் செய்து காலத்தைக் கழித்த அப்பர் சுவாமிகளின் மனவூறுதியையூம் பத்தி வைராக்கியத்தையூம்இ வானந்துளங்கிலென் மண் கம்பமாகிலென் மால்வரையூம் தானங் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும் மீனம் படிலென் விரிசுடர் விழிலென் வேலை நஞ்சுண் டூன மொன்றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே" என்றும்இ "நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம் என்றும் பாடுவதிலிருந்து ஒருவாறு அறிந்துகொள்ளலாம். பன்னெடுங்காலம் துறவூபூண்டு பழுத்த அநுபவம் வாய்க்கப் பெற்ற அப்பர்சுவாமிகளின் திருப்பாடல்களில் ஐம்புல ஆசையால் விளையூம் துன்பம்இ உலகநிலையாமைஇ வாழ்க்கை நிலையாமை என்பவை பற்றிய குறிப்புக்கள் ஆங்காங்கு காணப்படுதல் இயல்பாகும். அதனுல்இ உலகவாழ்விற் கிடந்து அல்லற்படும் ஒருவனுக்கு அவர் பாடிய பாக்கள் யாவூம் ஆறுதலளிக்கும் பண்புடையனவாய் விளங்குகின்ற்ன. ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்வதுபோன்று தங்குதடை யின்றி இறைவன் திருநாமங்களை ஒன்றன்பின் ஒன்றப் அடுக் கிச் செல்லும் அவர் திருத்தாண்டகத்தையொத்த கவிதைப் பெருக்கைத் தமிழிலக்கியத்தில் வேறெங்குங் காண்டலரிது. அத்தகைய சிறந்த பாக்களைப் பாடியதால் அவர் திருநாவூக்கரசர் என்றும் வாகீசர் என்றும் அழைக்கப்பட்டனர். 




07. பல்லவர்கால உரைநடை நூல்கள் பற்றி கருத்துறை வழங்குக? அல்லதுபல்லவர்கால உரைநடை நூல்கள் பற்றி விளக்குக?


முந்திய காலப்பகுதியைப் போலவே பல்லவர் காலமும் உரைநடை இலக்கியம் விருத்திபெருத காலமாகும். இறையனு ரகப்பொருளுக்கு எழுதிய உரையைவிட வேறு உரைநூல் கள் பல்லவர் காலத்தில் எழுந்தனவாகத் தெரியவில்லை. அதனுல்இ அக்காலத்து உரைநடையின் வளர்ச்சியை அவ்வூரை நூல்கொண்டும் அக்காலத்திலே தோன்றிய சா சனங்கள் கொண்டுமே ஒரு வாறு நிச்சயிக்கலாம். சிலப்பதிகாரத்திற் காணப்படும் உரைநடையிலும் இறையனுரகப்பொருளுரையின் நடை வளர்ச்சியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது; எனினும்இ மோனை எதுகைகளை அதிகமாகக் கொண்டுள்ள அவ்வூரை நடை சிறந்த ஒத்திசையூடையதாய் விளங்குகின்றது. அவ்வூரைகடைக்கு மேல்வரும் வாக்கியம் தக்க உதாரணமாகும்: 'என்னை பிரியூமாறெனின்இ ஒருவரொருவரின் முன்னங் தழை விழைதக்கன தொடுத்துமென்றும்இ கண்ணி தண்ணறு நாற்றத்தன செய்து மென்றும்இ போது மேதக்கன கொய்து மென்றும்இ குயிலொடு மாறு கூவூதுமென்றும்இ அருவியாடி அஞ்சுனே குடைதுமென்றும்இ வாசமலர்க்கொடியில் ஊசலாடுது மென்றும்இ பரந்து அப்பாலுள்ளார் இப்பாலுள்ளார் கொல்லோ வென்றும்இ இப்பாலுள்ளார் அப்பாலுள்ளார் கொல்லோ வென்றும் இவ்வகை நினைத்துப் பிரிபவென்பது.' சமணம் முதலிய வடநாட்டுச் சமயங்கள் தமிழ்நாட்டிற் பரவியதன் பயனுக வடமொழியூம் தமிழ்மொழியூம் கலந்த ஒரு புதிய உரைநடையூம் பல்லவர் காலத்திலே தோன்றிற்று. அது மணிப்பிரவாள நடையெனப்படும். ஷிறிபுராணம்இ கயசிந்தாமணி முதலிய சமணசமயத் தொடர்பான நூல்கள் பல்லவர்காலத்தில் மணிப்பிரவாள நடையில் எழுந்த நூல் களாகும். அக்காலந்தொடங்கி அங்கடை பல நூற்றண்டுக ளாகத் தமிழ் நாட்டில் வளர்ந்துவந்தது. மேல்வரும் அதி காரங்களில் அதன் வளர்ச்சியைக் கூறுவாம்.
இறையனார் அகப்பொருள் உரை 
இறையனார் என்னும் புலவர் செய்த நூல். அகவல் யாப்பில் அறுபது பாடல்களைக் கொண்டது. அகப்பொருளின் இலக்கணம் கூறுவது. களவூஇ கற்பு எனும் இருபொருள் பற்றி அமைந்துள்ளது. சிறப்பு பற்றிஇ இறையனார் களவியல் என்றே அழைக்கப்படுகிறது. உரைநூலில் இந்தப் பெயரே இடம் பெற்றுள்ளது. பிற்காலத்தில் வந்தவர்கள்இ இறையனார் என்னும் பெயர் காரணமாக இது 'சிவபெருமான் செய்த இலக்கணநூல்' என்று சொல்லத் தொடங்கினர் எனலாம். தமிழில் தோன்றிய உரைநூல்களில் இறையனார் களவியல் உரையே முதலாவதாகக் கருதப்படுகிறது. உரை காப்பிய இன்பம் தருவது. அக்காலத் தமிழை நினைத்து ஆசிரியர்கள் இந்த உரையை நன்கு படித்துத் தேர்ச்சி பெற்ற பின்னரே பிறநூல்களுக்கு உரை எழுதத் தொடங்கினர். அவ்வகையில் இவ்வூரை நூலின் பங்களிப்பு மிகவூம் சிறப்பானது.

ஸ்ரீபுராணம்
இது உரைநடை இலக்கியம். சமணநூல். குணபத்திராசாரியார் என்பவர் செய்தது. சமண சமயத்தைச் சேர்ந்த 63 பெரியோர்களது வரலாற்றைச் சொல்லும் நூல் உத்தர புராணம். ஸ்ரீபுராணம் அதை அடியொற்றி வந்த நூல். ‘புராணம் என்றால் பழமை’இ ‘பழைய வரலாறு’ என்பது பொருள். ‘ஸ்ரீ’ என்பது திரு என்பதைக் குறிக்கும் அடைச்சொல். இது மணிப்பிரவாள நடையில் அமைந்த நூல். முத்தும் பவளமும் கலந்த மாலை போலத் தமிழும்இ வடமொழியூம் கலந்த கலப்பு இலக்கிய நடை மணிப்பிரவாளம் ஆகும். உலகம்இ நாடுஇ நகரம்இ அரசுஇ ஈகைஇ பிறப்புகளின் வகைஇ வீடுபேறு அடையூம் வழிஇ கொடைப்பயன் முதலியவை பற்றி இந்நூல் விளக்குகிறது. நாடுஇ நகரம்இ அரசு ஆகியவற்றை வர்ணித்து நூலைத் தொடங்கும் மரபைத் தமிழ் இலக்கியத்தில் தொடங்கி வைத்த சிறப்பு இந்நூலுக்கு உண்டு என்று தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் கூறுவார்




08.பல்லவர் கால இலக்கிய வளர்ச்சிக்கு நாயன்மாHகள்;        பங்களிப்பினை மதிப்பிடுக ?


பக்தி இலக்கியம்
சங்கக்காலத்தையூம் நீதி நூல்காலத்தையூம் அடுத்தடுத்துத் தௌpவாகக் காணப்படுவது பக்தி இலகியம் ஆகும்.
சைவ சமய பெரியவர்களான நாயன்மார்களும் வைணவ சமயப் பெரியவர்களான ஆழ்வார்களும் தோன்றிப் பக்தி பாடல்களைப் பாடி ஊர் ஊராகச் சென்று தத்தம் சமயங்களைப் பரப்பி வந்தார்கள்.
நானய்ன்மார்கள் நால்வரும் ஆழ்வார்களின் பலரும் இசையோடு பக்தி இசையோடு பக்திப் பாடல்களைப் பாடி இறைவனை வழிப்பட்டனர்.
இதன்வழி சமணமதத்தில் மன்னர்களை மாற்றவூம் மக்களை உற்சாகப்ப்டுத்தவூம் எழுச்சியை ஏற்படுத்த பக்திபாடல்கள் துணை புரிந்தன.

சைவ இலக்கியங்கள்
சைவ சமயம் தமிழ் நாட்டின் பழமையான சமயங்களுள் ஒன்று.  சிவனைத் தென்னாடுடைய ‘சிவன்’ என்று போற்றுவது மரபு.
சைவ சமயத்தை வளர்த்தவர்கள் சமயக்குரவர் நால்வர். திருஞானசம்பந்தர்இ திருநாவூகரசர்இ சுந்தரர்இ மாணிக்கவாசகர் அடங்குவர்.இவர்கள் சிறப்பாகப் பாமாலைகளால் இறைவனை அழகு செய்து பாடியவர்கள்.


நாயன்மார்கள்
அ) திருஞானசம்பந்தர்
நான்மறையின் தனித்துணையாக விளங்கியவர்.
அவதரித்த ஊர் சீர்காழி
மூன்று வயதாக இருந்தபோதுஇ கோவில் குளக்கரையில் விட்டு சிவபாதர் குளத்தில் மூழ்கவேஇ தந்தையைக் காணாது பசியூம் மேலிட குழந்தை அழுந்தது. அப்போது அம்மையப்பர் காட்சியளித்து பாலோடு ஞானத்தையூம் கலந்தூட்டி மறைந்தாH கையில் கிண்ணமும் வாயில் பாலும் வடியவூம் கண்ட தந்தை “யார் கொடுத்த பாலினை உண்டாய்” என அதட்டவேஇ ‘தோடுடைய செவியன்’ எனப்பாடி அம்மையப்பரைச் சுட்டிக் காட்டினார்.
திருத்தலங்கள்தோறும் இசையூடன் தமிழ்ப் பாடல்களைப் பாடி ‘நாளுமின்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்’ எனப் போற்றப்பெரும் சிÈப்பினை அடைந்தார். தமிழ் வாழ்வில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த சம்பந்தர்இ தமிழ்நாட்டில் சைவநெறி தழைத்தோங்க பெரும் பணியை மேற்கொண்ட மங்கையற்கரசியாரைத் தேன் தமிழால் பாராட்டினார்.ஷ
இவருடைய தேவாரப்பாடல்கள் மூன்று திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 
இவர் பாடிய 4213 பாடல்களே கிடத்துள்ளன.

ஆ) திருநாவூகரசர்
திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் வேளான் குடியில் தோன்றியவர். தந்தையார் பெயர் புகழனார்; தாயார் மாதினியார். அவரின் இயற்பெயர் மருள்நீக்கியார்.இவரும் ஞானசம்பந்தரும் ஒரே காலத்தவர்.
இலகு எத்ஹ்தும் உழவராப் படையாளியாகிய இவர்இ சிவ தலங்கள் தோறும் சென்று பணிப்புரிந்து சிவப்பெருமானைப் பாடி மகிழ்ந்தார்.
இவருடைய பாடல’கள் 4இ5இ6 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இவை முறையே திருநேரிசைஇதிருக்குறுந்தொகைஇ திருத்தாண்டகம். வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்த நாவூக்கரசர் ‘நாமார்க்கும் குடியலோம்இ நமனை அஞ்சோம்’ என அஞ்சா நெஞ்சினராய்த் திகழ்ந்து துன்பங்களை வென்றார்.
பல்லவ மன்னன் இவரை நீற்றறையில் இட்டபோது இவர் ‘மாசில் வீணையூம் மாலைமதியமும்’ எனும் பாடல் இவர் திண்ணிய உள்ள உறுதியையூம் ஈசன் கழலின் சிறப்பினையூம் ஒருங்கே உணர்த்தும்.
இவர் பாடிய பாடல்கள் 4900. கிடத்தவை 3066. திருத்தாண்டக வேந்தர் எனும் புதிய பா முறையைக் கையாண்டமையால் இவர் தாண்டக வேந்தர் எனும் பெயர் பெற்றார்.
மருள் நீக்கியார் என்னும் இயற்பெயருடைய இவரைச் சம்பந்தர் ‘அப்பரே’ என அழத்தார்.
இறைவானரோ இவருக்கு ‘நாவூகரசர்’ எனும் பெயரைச் சு+ட்டினார்.

இ) சுந்தரர்
இவர் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் ஆதி சைவ அந்தணர் மரபில் அவதரித்தார்.இவருடைய தந்தையார் சடையனர்; தாயார் இசைஞானியார்.
முற்பிறவியில் கயிலை மலையில் சிவப்பேருமானின் அணுகத்தொண்டராக இருந்துஇ பின் மண்ணுலகத்தில் பிறந்துஇ புத்தூர் சடங்கவி சிவச்சாரியாரின் மகளை மணக்க முனைந்தபோதுஇ இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டார்.
இறைவன் அருளால் பரவையார்இ சங்கிலியார் எனும் இருமாதரை மணந்துஇ தலங்கள்தோறும் சென்றுஇ சைவை பயிர் தழைக்குமாறு செய்த பிறகு வெள்ளானை மீது ஏறி திரும்பவூம் கயிலை சென்றடந்த வரலாற்றைப் பெரிய புராணம் விரிவாகக் கூறுகின்றது.
தலங்கள் தோறும் சென்று சிவப்பிரானது புகழைப் பாடிய இவருக்கு ‘வந்தொண்டர்’இ’தம்பிரான் தோழர்’ எனும் பெயர் உண்டு.
4000 பதிகங்களைப் பாடியூள்ளார்.ஆனால் கிடைப்பன 1025 பாடல்களே.இவரிம் தேவாராப் பாடல் 7ஆம் திருமுறையாக விளங்குகின்றன.


ஈ) மாணிக்கவாசகர்
பாண்டிய நாட்டில் திருவாதவூ+ரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர்.இயற்பெயர் வாதவூ+ரர். இறைவன் மீது கொண்ட அன்பின் காரணமாகப் பாண்டிய மன்னனுக்காகக் குதிரைகள் வாங்கப் புறப்பட்டார். திருப்பெருந்துறை எனும் தலத்தில் குருந்த மரத்தடியில் இறைவன் இவருக்கு ஞானோபதேசம் செய்தருளினார்.
பின்னர் வாதவூ+ரர் பக்தி வெள்ளத்தில் மூழ்கிப் பாடல் பலவற்றை இயற்றினார்.
வாதாவூ+ரில் மணிபோன்ற வாசகங்களைக் கேட்ட இறைவன் ‘மாணிக்கவாசகர்’ என்ற பெயரை இவருக்குச் சு+ட்டினார்.


09. பக்தி   இலக்கிய  வளHச்சியில்  மாணிக்கவாசகH  பெறும்  முக்கித்துவத்தினை  விளக்குக?


சைவ இலக்கியங்கள் பற்றிய அறிமுகம்
அப்பர்இ சுந்தரர்இ சம்பந்தர் ஆகிய மூன்று சிவனடியார்கள் சிவன் கோயில்களில் பாடிய பதிகங்களில் மறைந்தவை போகக் கிடைத்தவை 8000 ஆகும். இதன் தொடர்ச்சியாக இந்தக் காலக்கட்டத்தில் மாணிக்கவாசகர் தோன்றிப் பதிகம் பாடினார். சுந்தரமூர்த்தி நாயனாரது திருத்தொண்டத் தொகை நூலில் மாணிக்கவாசகர் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் மாணிக்கவாசகரின் பாடல்களில் வரகுண பாண்டியனின் பெயர் இடம் பெறுகிறது. எனவே மாணிக்கவாசகர் வரகுணபாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர் எனலாம். இவரது காலம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும்.

திருவாசகம்
திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்கவாசகர் ஆவார். இது 656 பாடல்களைக் கொண்டது. 51 பிரிவூகள் உள்ளன. எட்டாம் திருமுறை என்று அழைக்கப்படுகிறது. சிவபுராணம் முதல் அச்சோப்பதிகம் வரை அமைந்துள்ளது. திருவாசகத்தைப் படித்தால் உள்ளம் இளகும். உயிர் உருகும். கரும்புச் சாற்றில் தேன் கலந்துஇ பால் கலந்துஇ கனியின் சுவை கலந்து இனிக்கும் திருவாசகப் பாடல்கள் உயிரில் கலந்து உவகை தரும் என்று இராமலிங்க வள்ளலார் கூறுவார். 

“திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற தொடர் பாடல்களின் கனிவூத் தன்மையைப் புலப்படுத்தும். ‘எலும்பை உருக்கும் பாட்டு’ என்று டாக்டர்.ஜி.யூ+.போப் கூறுவார். திருவாசகத்தை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தாயூமானவர்இ இராமலிங்கர் ஆகியோரது பாடல்கள் மாணிக்க வாசகரது பாட்டு அமைப்பைப் பின்பற்றி அமைந்துள்ளன எனில் இதன் செல்வாக்குப் புலப்படும். சிவனைப் பற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பே திருவாசகம். அப்பாடல்கள் இன்றும் சைவர்களது வீடுகளில் வழிபாட்டின்போது பாடப்படுகின்றன. பாடினால் மனத்தை நெகிழ்விப்பவை அவை. மக்களிடையே வழக்கத்தில் இருந்த சில நாட்டுப்புறப்பாடல் வடிவங்களை மாணிக்கவாசகர் பயன்படுத்தி உள்ளார்.

இளம்பெண்கள் உட்கார்ந்து காய்களைத் தூக்கிப்போட்டு கையால் பிடித்து விளையாடும் விளையாட்டு அம்மானை. அப்போது அவர்கள் பாடுவர். அப்பாடல் அமைப்பில் மாணிக்கவாசகர் பாடியது திருவம்மானை ஆகும்.

1.பெண்கள் வாசனைப்பொடி இடித்தபடியே பாடுவது பொற்சுண்ணம் ஆகும். அந்தப் பாடல்களின் அமைப்பில் மாணிக்கவாசகர் இயற்றியதுஇ திருப்பொற்சுண்ணம் ஆகும்.

2.பெண்கள் பூப்பறிக்கும்போது பாடும் அமைப்பில் அவர் எழுதியதுஇ திருப்பூவல்லி.

3.பெண்கள் ஊஞ்சலில் அமர்ந்து ஆடும்போது பாடும் பாடல் வடிவில் அவர் அமைத்த பாக்கள்இ திருப்பொன்னூஞ்சல் ஆகும்.

பாண்டியனுக்காகக் குதிரைகள் வாங்க நாகப்பட்டினத் துறைமுகத்துக்குச் சென்றார். செல்லும் வழியில் திருப்பெருந்துறையில் சிவனால் ஆட்கொள்ளப்பட்டார். வந்த வேலையை மறந்தார். கொண்டு வந்த பணத்தைச் சிவனுக்குக் கோயில் கட்டும் பணியில் செலவிட்டார். மன்னனால் பல தொல்லைகளை அடைந்தார். இறுதியில் மன்னன் இவரது சிறப்பை உணர்ந்து வணங்கினான் என்று அவரது வாழ்க்கைக் குறிப்பு உரைக்கும்.


திருவெம்பாவை
மாணிக்கவாசகர் பாடியதுஇ ‘திருவெம்பாவை’. இது திருவாசகத்தில் ஒரு பகுதி. இன்றளவூம் மார்கழி மாதத்தில் அதிகாலையில் சைவர்களால் பாடப்படுகிறது. 20 பாடல்களைக் கொண்டது. திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் ஒருவரை ஒருவர் துயில் எழுப்பிஇ கூடிஇ பொய்கைக்குச் சென்று நீராடி பாவை வைத்து வழிபடுவதைச் சொல்லுகிறது.
ஆதியூம் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயூம் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம் மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙூன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோர் எம்பாவாய்..        
(1) என்று இறைவழிபாட்டுக்கு உயிர்களை ஆயத்தப்படுத்தும் அழகு நயமிக்கது.


திருப்பள்ளி எழுச்சி
அதிகாலையில் எழுக என்று பாடுவது ‘பள்ளி எழுச்சி’ ஆகும். மன்னர்களை எழுப்பஇ பள்ளியெழுச்சி பாடும் நிலை அந்நாளில் இருந்தது. மாணிக்கவாசகர் சிவனைத் தூக்கத்திலிருந்து எழுப்புவதாகப் பத்துப் பாடல்கள் பாடியூள்ளார். இதுவூம் திருவாசகத்தில் ஒரு பகுதியே.


கீர்த்தித் திரு அகவல்
மாணிக்கவாசகர் பாடியது. கீர்த்தி என்பது புகழ். சிவனது புகழைப் பாடும் நூல் இது. அடியார் பார்க்கும் வகையிலும்இ நினைக்கும் வகையிலும் அருள் செய்தவன் சிவன். தில்லையில் ஆடுபவன் சிவன். வேட்டுவன் வடிவம் தாங்கியவன். வலைஞன் ஆக வந்து கௌpற்று மீனைக் கொன்றவன்; உமையைக் கூடியவன் என்று போற்றுகிறார் மாணிக்கவாசகர். இதுவூம் திருவாசகத்தின் ஒரு பகுதியே ஆகும்.

திருவண்டப் பகுதி
மாணிக்கவாசகர் பாடியதுஇ ‘திருவண்டப் பகுதி’ ஆகும். சிவன் எல்லாம் வல்லவன். பெரியதில் பெரியவன்இ சிறியதில் சிறியவன் என்று அவனது வடிவத்தைப் போற்றுவது ‘திருவண்டப் பகுதி’ ஆகும்.
படைப்பாற் படைக்கும் பழையோன்இ படைத்தவை
காப்போற் காக்கும் கடவூள்இ காப்பவை
கரப்போன் கரப்பவை கருதாக் 
கருத்துடைக் கடவூள் 
(திருவண்டப் பகுதி : 13-16)

சு+ரியனுக்கு ஒளி தந்தவன். சந்திரனில் குளிர்ச்சியை வைத்தவன். தீயில் வெப்பத்தை வைத்தவன். காற்றில் இயக்கத்தை வைத்தவன். நீரில் சுவையைத் தந்தவன். மண்ணில் திட்பத்தை வைத்தவன் என்று சிவனை வியக்கிறார் மாணிக்கவாசகர்.

போற்றித் திரு அகவல்
‘போற்றி’ என்றால் வணக்கம் என்று பொருள். உலகில் உயிர்கள் உடம்புடன் பொருந்தித் தோன்றும் உலக உற்பத்தியைக் கூறுவதுஇ போற்றித் திருவகவல் ஆகும்.
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
(அடிகள் :112-117)

திருச்சிற்றலம்பலக் கோவை 
மாணிக்கவாசகர் அருளிய மற்றொரு நூல்இ திருச்சிற்றம்பலக் கோவை ஆகும். சிவன் பாட்டுடைத் தலைவன். தில்லையில் சிற்றம்பலத்தில் உறையூம் சிவன் தலைவன் ஆதலால் இந்நூல்இ ‘திருச்சிற்றம்பலக் கோவை’ எனப்படுகிறது. இறைவன் தலைவன். மனித ஆன்மா தலைவி. இத்தலைவன் -தலைவியின் அன்பு கலந்த காதல் நுவல்பொருள் ஆக அமைந்த நானூறு பாடல்களைக் கொண்டது. பாடல்களில் சொற்சுவைஇ பொருள் சுவை மிகுந்துள்ளது. ‘தேனூறு செஞ்சொல் திருக்கோவை நானூறு’ என்பர். பாடல்கள் கட்டளைக் கலித்துறைப் பாவகையில் அமைந்துள்ளன.
மீண்டாரென உவந்தேன் கண்டும்மை இம்மேதகவே
பூண்டார் இருவர்முன் போயினரே புலியூ+ரெனை நின்று
ஆண்டான் அருவரை ஆளியன்னானைக் கண்டேனயலே
தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே
(திருக்கோவையார் - 244)
என்று தலைவி பாடுவதாக வரும் பாடலில் பொங்கும் உணர்வூ வேகத்தைப் பாருங்கள்.


மாணிக்கவாசகர் வெளிப்பாட்டு முறைகள்
மாணிக்கவாசகரது பாடல்கள்இ ‘திருப்பிச் சொல்லும் முறையில்’ அமைந்துள்ளன.
தாயூமிலி தந்தையூமிலி தான் தனியன் காணேடீ
தாயூமிலி தந்தையூமிலி தான் தனியன் ஆயிடினும் (3)
என்றும்

தொக்கன வந்தவர் தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ!
தொக்கன வந்தவர் தமைத் தொலைத்தருளி அருள் கொடுத்தங்கு 
                                               (5)
என்று ‘திருச்சாழல்’ பகுதி முழுவதுமே திருப்பிச் சொல்லும் முறையில் உள்ளது. ஒருவர் பாட ஏனையோர் திருப்பிச் சொல்லும் முறை அனைவரிடமும் பாடல்களைக் கொண்டு சேர்க்க உதவியது எனலாம்.


மாணிக்கவாசகரது பாடல்கள் எல்லோரது மனதையூம் கவர்பவை. 
‘ஆதியூம் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதியை’ என்ற திருவெம்பாவைப் பாடலையூம்இ ‘நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க! எனத் தொடங்கும் சிவபுராணத்தையூம்இ 
‘முத்திநெறி அறியாத மூர்க்கரொடு’ எனத் தொடங்கும் அச்சோப் பதிகத்தையூம் எழுதப் படிக்கத் தெரியாத சிற்றூர் மக்களும் காதால் கேட்டுஇ மனப்பாடம் செய்துஇ வெகு எளிதாகப் பாடுவதைக் காணமுடியூம். திருத்தௌ;ளேணம்இ திருச்சாழல்இ திருப்பொற்சுண்ணம்இ திருவம்மானைஇ திருப்பூவல்லிஇ திருவூந்தியார் முதலியன பலர் கூடிப் பாடும் கூட்டுப் பாடலாக அமைந்துள்ளன.

1. நெல் முதலியவற்றைக் குத்தும் போது பெண்கள் கை சோர்வூ தெரியாமலிருக்கப் பாடும் பாடல் ‘வள்ளைப் பாட்டு’ என்பது. இதைத் தான்இ ‘திருப்பொற்சுண்ணமாக’ மாணிக்கவாசகர் அமைத்துள்ளார்.

2. விழாக் காலங்களில் மகளிர் ஒன்றாகக் கூடி வட்டமாக நின்று கைகொட்டி ஆடும் போது பாடும் பாடல் வடிவம் ‘திருத்தௌ;ளேணம்’ ஆகும்.

3. தோழியர் இருவர் ஒருவரை ஒருவர் வினாவி விடை கூறும் விளையாட்டுப் பாடல்இ ‘திருச்சாழல்’ ஆகும். 

இங்ஙூனம் சிறுபெண்களது பாடல்கள் முறையமைய மாணிக்கவாசகர் பாக்களை அமைத்துள்ளமை சிறப்பானது. மாணிக்கவாசகரது திருவெம்பாவையூம்இ ஆண்டாளின் திருப்பாவையூம் மிகச் சிறந்த பாவைப் பாடல்கள் ஆக இன்றளவூம் திகழ்கின்றன.





10..பல்லவர் கால இலக்கிய வளர்ச்சிக்கு முதல்மூன்று ஆழ்வாHகள்  ஆற்றிய  பங்களிப்பினை மதிப்பிடுக ?


முதல் ஆழ்வார்கள்  
பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார்
இப் பன்னிருவருள்ளும் பொய்கையாழ்வார்இ பூதத்தாழ்வார்இ பேயாழ்வார் என்னும் மூவரும் ஏனையோர்க்குக் காலத்தால் முற்பட்டோர் ஆவர். எனவே இவர்களை முதல் ஆழ்வார்கள் என்பது மரபு. உபதேச ரத்தினமாலை என்ற நூல் மணவாள மாமுனிகள் என்னும் பெரியாரால் செய்யப்பட்டது. இந்நூல் பன்னிரு ஆழ்வார்கள் பற்றிய அரிய பல செய்திகளைத் தருகின்றது. முதல் ஆழ்வார்கள் பற்றிக் குறிப்பிடும்போது ஏனைய ஒன்பதின்மருக்கும் முதலாழ்வார்கள் காலத்தால் முற்பட்டோர் எனக் கூறியூள்ளது.

இம்மூவரின் வரலாறுகள் வைணவ மரபில் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளன. இம்மூவரும் ஐப்பசி மாதத்தில் அவதரித்தனர். மேலும் இவர்கள் மானுடத் தாயின் வயிற்றில் தோன்றாதவர்கள் என்று கருதுவர். தமக்கு எல்லாமே திருமால் என்று கொண்டுஇ இறைத் தொண்டில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் அறியாமல்இ தனித்தனியே நாடு முழுவதும் அலைந்து திரியூம் வாழ்வை நடத்தினர்.

இவர் மூவரையூம் ஒரே நேரத்தில் ஆட்கொள்ள விரும்பின திருமாலின் அருள் ஆணையின்படி இம்மூவரும் திருக்கோவலூரில் சந்திக்கும் நிலை தோன்றிற்று. ஒரு நாள் கதிரவன் மறைந்த மாலை வேளையில் பொய்கையாழ்வார் திருக்கோவலூர்க்குச் சென்றார். அங்கு இருந்த மிருகண்டு முனிவர் திருமாளிகைக்குச் சென்று வழிபட்டார். அம்மாளிகையின் இடைகழியில் (ரேழி) படுத்தார். சிறிது நேரத்தில் பூதத்தாழ்வாரும் அங்கு வந்து சேர்ந்தார். இருவரும் வைணவ மரபுப்படி ஒருவரையொருவர் வணங்கி மகிழ்ந்தனர். அப்போது பொய்கையார் மற்றவரிடம்இ “இவ்விடம் ஒருவர் படுக்கலாம்இ இருவர் இருக்கலாம்” (அமர்ந்திருக்கலாம்) என்றார். அவ்வாறே இருவரும் அமர்ந்த நிலையிலேயே பெருமானின் பெருமைகள் பற்றி உரையாடியிருந்தனர். அப்போது பேயாழ்வாரும் அவ்விடம் வந்து சேர்ந்தார். அவர்கள் ஒருவரையொருவர் வணங்கி மகிழ்ந்தனர். அப்போதுஇ முதலிருவரும் பேயாழ்வாரிடம்இ “இவ்விடம் இருவர் இருக்கலாம்இ மூவர் நிற்கலாம்” என்றனர். அவ்வாறே மூவரும் நின்ற நிலையிலேயே பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது உலகளந்த பெருமான் தம் திருவிளையாடலை நிகழ்த்தினார். அவர் திரு ஆணைப்படி செறிவான இருள் சு+ழ்ந்தது; பெருமழை பொழிந்தது. பெருமான் ஒரு பெரிய உருவமெடுத்து அம்மூவரிடையே புகுந்து நெருக்குதலை உருவாக்கினார். சட்டென உருவான அந்த நெருக்கத்திற்குக் காரணம் அறியாமல் மூவரும் திகைத்தனர்.

பொய்கையாழ்வார் இருளை ஓட்டிட விளக்கேற்ற விரும்பினார். இம்மண்ணுலகத்தையே அகலாகக் கொண்டுஇ உலகை வளைத்துக் கிடக்கும் கடலையே நெய்யாக வார்த்துஇ கதிரவனையே சுடராகக் கொளுத்தினார். பூதத்தாழ்வாரும் விளக்கேற்றினார். அவர் அன்பையே தகழியாக்கினார்; ஆர்வத்தையே நெய்யாக ஊற்றினார்; உருகும் தம் சிந்தையையே திரியாக அமைத்தார்; ஞானத்திருவிளக்கை ஏற்றினார். இப்பெருமக்கள் ஏற்றிய விளக்குகளின் ஒளி இருளை ஓட்டியது. அதன் வெளிச்சத்தில் பேயாழ்வார் பெருமானின் திருவடிவினைக் கண்டார். அவர் கண்ட காட்சியை மற்றைய இருவரும் பின்னர்க் கண்டனர். அவர்கள் பெற்ற வியப்புக்கு உரிய அந்த இறைக்காட்சியைப் பொருளாக வைத்து மூன்று திருநூல்களை வெளியிட்டருளினர். அவை ஒவ்வொன்றும் நூறு வெண்பாக்களால் ஆனவை. அவை அந்தாதித் தொடையில் அமைந்தன. அவற்றின் திருப்பெயர்கள் முறையே முதல் திருவந்தாதிஇ இரண்டாம் திருவந்தாதிஇ மூன்றாம் திருவந்தாதி என்பனவாகும். இவைஇ நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் உட்பிரிவூகளுள் இயற்பா என்ற பகுப்பில் அடங்குவனவாகும். மேலே சொன்ன வரலாற்றை விளக்குவனவாகஇ திருவந்தாதிகளின் முதல் வெண்பாக்கள் விளங்குகின்றன.

ஒரே கோயில்இ ஒரே வழிபாடுஷ
வைணவத் திருப்பதிகளில் முதலாழ்வார் மூவர்க்கும் கோயில் உள்ளது. பூசைகளும்இ திருவிழாக்களும் ஒன்றாகவே செய்யப்படுகின்றன.  இவர் மூவரும் இயற்றிய நூல்களில் திருமாலின் உருவச்சிறப்பும்இ அவருடைய அவதார நிகழ்ச்சிகளும் வைணவ சமயத் தத்துவங்களும் மாறுபாடின்றி ஒன்றாகவே அமைந்திருப்பதும் கண்டு மகிழத்தக்கது. இனி இம்மூவரின் நூல்கள் பற்றித் தனித் தனியே அறிந்து கொள்ளலாம்.


1.பொய்கையாழ்வார்
முதலாழ்வார் மூவருள்ளும் முதலில் வைத்துப் போற்றப்படுபவர் பொய்கைஆழ்வார். சங்க காலத்தில் வாழ்ந்து சேரமான் புகழ்பாடிய பொய்கையாரினும்இ பின்னர்க் களவழி நாற்பது பாடிய பொய்கையாரினும்இ இப்பொய்கை ஆழ்வார் வேறானவர். இவர் காஞ்சிமாநகரில் உள்ள திருவெஃகா என்ற வைணவத் திருப்பதியின் வடபகுதியில் இருந்த ஒரு பொய்கையில்இ ஒரு பொற்றாமரை மலரில் திருஅவதாரம் செய்தார் என்கிறது வைணவ மரபு. இவரைத் திருமால் ஏந்திய படைக்கலங்களுள் பாஞ்சசந்நியம் (திருமால் கைச்சங்கின் பெயர்) என்பதன் அமிசம் (ஒருகூறு) என்று வைணவர் கருதி வருகின்றனர். ஒரு பொய்கையில் தோன்றியவராதலால் பொய்கையாழ்வார் எனப்பட்டார்.

பொய்கையாரின் அருளிச்செயல் (திருநூல்) 
பொய்கையார்இ திருக்கோவலூரில்இ திருமாலின் திருவருளால் ஏற்பட்ட இருளில் இருந்து விடுதலை பெறுவதற்காக வையம் தகளியா எனத் தொடங்கி இயற்றியருளிய 100 வெண்பாக்களைக் கொண்டது முதல் திருவந்தாதி என்று பெயர் பெற்றது. அந்தாதித்தொடையில் இயற்றப்பட்ட மிகப் பழைய பிரபந்தங்களுள் இதுவூம் ஒன்றாகும்.


2.பூதத்தாழ்வார்
முதலாழ்வார் மூவருள் இரண்டாம் இடம் வகிப்பவர் பூதத்தாழ்வார். இவரும் தொண்டை நாட்டில் பிறந்தவரே. கடல்மல்லை என்று சிறப்பிக்கப்படும் மகாபலிபுரத்தில்இ ஒரு குருக்கத்திப் பந்தலில்இ ஒரு குருக்கத்தி மலரில் பிறந்தவராக இவர் பாராட்டப்படுகின்றார். இவர் ஐப்பசித் திங்களில் அவிட்ட விண்மீனில் பிறந்தவர் என்பர். இவர் திருமாலின் கையிலுள்ள கதை என்னும் படைக்கருவியின் அமிசம் எனக் கருதுவது வைணவ மரபாகும்.

பெயர்க்காரணம் 
பூதம் என்னும் வடசொல் பூ என்ற அடிச்சொல்லில் இருந்து தோன்றியது. இதன் பொருளாவதுஇ சத்தைப் பெற்றது என்பது. (சத்து ஸ்ரீ அறிவூ) திருமாலின் திருக்குணங்களை அநுபவித்தே அறிவைப் பெற்றவர் பூதத்தாழ்வார் என்பர்.

பூதத்தாழ்வாரின் அருளிச்செயல் (திருநூல்)
பூதத்தாழ்வாரின் அருளிச்செயல் இரண்டாம் திருவந்தாதி. இது இயற்பா என்னும் பிரிவில் அடங்குவது. தனிப்பாடல் நீங்கலாக இதில் 100 இனிய வெண்பாக்கள் அடங்கியூள்ளன. பாடல் தோறும் எம்பெருமானின் கலியாண (நல்ல) குணங்கள் பற்றிய புகழ்ச்சியூம்இ அவருடைய அருட்செயல்களும் நிரம்பிய நூல் இது.


3.பேயாழ்வார்
முதலாழ்வார் மூவருள் மூன்றாமவராக விளங்குபவர் இவர். இவர் தொண்டைநாட்டில் உள்ள சென்னை நகரின் ஒரு பகுதியான திருவல்லிக்கேணிக்குத் தென்திசையிலுள்ள திருமயிலையில் (மயிலாப்பூர்) ஒரு கிணற்றில் மலர்ந்த செவ்வல்லி மலரில் உதித்தவர் என்பர். இவர் உதித்த புனித நாள் ஐப்பசி மாதம் சதய விண்மீன் கூடிய நாள். இவர் திருமால் ஏந்திய வாள் படையின் அமிசமாகப் பிறந்தார் என நம்புகின்றனர்.

பெயர்க்காரணம்
இவர் திருமாலிடம் ஆழ்ந்த அன்புடையவர். இவருடைய பக்தி வைராக்கியத்தால் இவர் செய்த செயல்கள் சராசரி மனிதரினும் வேறுபட்டவராக இவரைக் காட்டின. தம்மை மறந்த நிலையில்இ பேய் பிடித்தவர் போலஇ கண்கள் சுழலும்படி விழுந்தார்; சிரித்தார்; தொழுதார்; குதித்து ஆடினார்; பாடினார்; அலறினார். இதனால் இவரைப் பேயாழ்வார் என்று யாவரும் கொண்டாடினர்.

பேயாழ்வாரும் திருமழிசையாழ்வாரும்
பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார்களை அடுத்துப் பிறந்த பெருமை திருமழிசையாழ்வாருக்கு உண்டு. இவர் காஞ்சிக்கு அருகே உள்ள திருமழிசையில் பிறந்தவர். பார்க்கவர் என்னும் முனிவரின் புதல்வர் இவர். இவரைப் பத்திசாரர் என்று புகழ்வர். இவர் சமயப் பொறையூடையவரல்லர். 
இவரைப் பேயாழ்வார் திருத்திப் பணி கொண்டார் என்கிறது வைணவ சமய வரலாறு.

பேயாழ்வாரின் அருளிச்செயல் (திருநூல்)
பேயாழ்வார் அருளியது மூன்றாம் திருவந்தாதி. இது இயற்பாவில் இடம் பெற்றது. 100 வெண்பாக்கள் இதில் உள்ளன. இத்திருநூல் திருக்கண்டேன் எனத் தொடங்கிஇ சார்வூ நமக்கு என்றும் எனத் தொடங்கும் வெண்பாவில் முடிகின்றது. இது திருக்கோவலூரில் அருளிச் செய்யப்பட்டது. திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன்
என்ஆழி வண்ணன்பால் இன்று
(அருக்கன் ஸ்ரீ கதிரவன்; செருக்கிளரும் ஸ்ரீ போர்க்களத்தில் கிளர்ச்சியூடன் விளங்கும்; பொன்ஆழி ஸ்ரீ பொன்மயமான சக்கரப்படை; சங்கம் ஸ்ரீ சங்கு; ஆழிவண்ணன் ஸ்ரீ கடல் நிறம் கொண்ட பெருமான்.)

நூற்சிறப்பு
முதல் இருவர் போலவே இந்த ஆழ்வாரும் திருமாலின் பல்வேறு அவதாரச் செய்திகளைப் பல செய்யூட்களில் பாடியூள்ளார். திருமால் எழுந்தருளியூள்ள தலங்கள் பலவற்றைப் பாராட்டியூள்ளார். அவற்றுள் வெஃகாஇ திருவேங்கடம்இ தென்குடந்தைஇ திருவரங்கம்இ திருக்கோட்டியூ+ர் ஆகிய தலங்கள் ஒரு பாட்டிலேயே (62) குறிக்கப்பட்டுள்ளன.

கற்பனை வளம்
இவ்வாழ்வார் சிறந்த கற்பனை வளம் மிக்கவர். இவர் கற்பனைத் திறத்துக்கு எடுத்துக்காட்டாகஇ திருமாலின் உந்தியில் உள்ள தாமரை அவர் கையில் ஏந்தியூள்ள சக்கரத்தைக் காலைக் கதிரவன் என்று கருதி மலர்கிறதாம். அவர் மற்றொரு கையில் ஏந்திய வெண் சங்கினைச் சந்திரன் எனக் கருதிக் குவிகிறதாம் என்று பாடியதைக் கூறலாம்.
ஆங்கு மலரும் குவியூமாம் உந்திவாய்
ஓங்கு கமலத்தின் ஒண்போது - ஆங்கைத்
திகிரிசுடர் என்றும்; வெண் சங்கம் வானில்
பகரும் மதி என்றும் பார்த்து             (67)






11.பல்லவர் கால இலக்கிய வளர்ச்சிக்கு ஆழ்வாHகள்  ஆற்றிய  பங்களிப்பினை மதிப்பிடுக ?
                                  அல்லது
  பல்லவர் கால இலக்கிய வளர்ச்சிக்கு ஆண்டாளின் பங்களிப்பினை மதிப்பிடுக ?


அறிமுகம்
கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் நிலவிய அரசியல்இ சமயஇ சமூகச் சு+ழ்நிலைகள் பற்றியூம்இ அக்காலம் பாலிஇ பிராகிருதம்இ வடமொழி ஆகியவற்றுக்கு ஆக்கம் அளிப்பதாகவூம்இ தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவாததாகவூம் இருந்தமை பற்றியூம் இதற்கு முந்தைய பாடத்தில் கூறப்பட்டன. சமண பௌத்தர்களும்இ சைவ வைணவரும் தத்தம் சமயக் கருத்துக்களை இலக்கியங்கள் வாயிலாக மக்களிடையே பரப்ப முயன்றனர் என்பதும்இ சைவ சமய வளர்ச்சிக்கு முன்னோடிகளாகக் காரைக்காலம்மையாரும்இ திருமூலநாயனாரும் விளங்கி அரிய தமிழ் நூல்களை இயற்றியருளினர் என்பதும் விளக்கப்பட்டன. இதே இருண்டகாலப் பகுதியில் சில வைணவ சமயப் பெரியோர் வாழ்ந்து சமயத் தொண்டும்இ தமிழ்த் தொண்டும் ஆற்றியூள்ளனர். அவர்கள் முதலாழ்வார்கள் எனப்பட்டனர். பொய்கையாழ்வாரும்இ பூதத்தாழ்வாரும்இ பேயாழ்வாருமே முதலாழ்வார்கள் ஆவர். இவர்களின் வரலாறும் இவர்கள் இயற்றிய நூல்களின் சிறப்பும் இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன.


ஆழ்வார்கள்
திருமாலை முழுமுதல் கடவூளாகக் கொண்டது வைணவ சமயம். திருமாலின் அடியார்களை ஆழ்வார்கள் என்று வழங்குவர். சைவ சமயத் தொண்டர்களை நாயன்மார்கள் என்று வழங்குவதற்கு இணையானது இவ்வழக்கம். ஆழ்தலாவது மூழ்குதல். உலக இன்பங்களில் ஈடுபாடு கொள்ளாதுஇ எந்நேரமும் திருமால் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்து கிடப்போர் என்று ஆழ்வார் என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வர். உண்ணும் சோறும்இ பருகும் நீரும்இ தின்னும் வெற்றிலையூம் அவர்களுக்குத் திருமாலே என்பர். சைவ அடியார்கள் அறுபத்து மூவர் என்பதுபோல்இ வைணவச் சமய அடியார் பன்னிருவர் என்று வழங்குவர். 

அவர்களின் திருப்பெயர்கள் வருமாறு:
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. பெரியாழ்வார்
6. ஆண்டாள்
7. தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
8. திருப்பாணாழ்வார்
9. நம்மாழ்வார்
10. மதுரகவி ஆழ்வார்
11. திருமங்கை ஆழ்வார்
12. குலசேகர ஆழ்வார். 
இவர்கள் இயற்றியருளிய பாடல்களின் தொகுப்புக்கு நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் என்று பெயர்.


முதல் ஆழ்வார்கள்  
பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார்
இப் பன்னிருவருள்ளும் பொய்கையாழ்வார்இ பூதத்தாழ்வார்இ பேயாழ்வார் என்னும் மூவரும் ஏனையோர்க்குக் காலத்தால் முற்பட்டோர் ஆவர். எனவே இவர்களை முதல் ஆழ்வார்கள் என்பது மரபு. உபதேச ரத்தினமாலை என்ற நூல் மணவாள மாமுனிகள் என்னும் பெரியாரால் செய்யப்பட்டது. இந்நூல் பன்னிரு ஆழ்வார்கள் பற்றிய அரிய பல செய்திகளைத் தருகின்றது. முதல் ஆழ்வார்கள் பற்றிக் குறிப்பிடும்போது ஏனைய ஒன்பதின்மருக்கும் முதலாழ்வார்கள் காலத்தால் முற்பட்டோர் எனக் கூறியூள்ளது.

இம்மூவரின் வரலாறுகள் வைணவ மரபில் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளன. இம்மூவரும் ஐப்பசி மாதத்தில் அவதரித்தனர். மேலும் இவர்கள் மானுடத் தாயின் வயிற்றில் தோன்றாதவர்கள் என்று கருதுவர். தமக்கு எல்லாமே திருமால் என்று கொண்டுஇ இறைத் தொண்டில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் அறியாமல்இ தனித்தனியே நாடு முழுவதும் அலைந்து திரியூம் வாழ்வை நடத்தினர். இவர் மூவரையூம் ஒரே நேரத்தில் ஆட்கொள்ள விரும்பின திருமாலின் அருள் ஆணையின்படி இம்மூவரும் திருக்கோவலூரில் சந்திக்கும் நிலை தோன்றிற்று. ஒரு நாள் கதிரவன் மறைந்த மாலை வேளையில் பொய்கையாழ்வார் திருக்கோவலூர்க்குச் சென்றார். அங்கு இருந்த மிருகண்டு முனிவர் திருமாளிகைக்குச் சென்று வழிபட்டார். அம்மாளிகையின் இடைகழியில் (ரேழி) படுத்தார்.





12.பல்லவH  காலத்தில்  எழுந்த பக்தி  சாராஇலக்கியங்களைக்  குறிப்பி;ட்டு  அவை  பற்றிச்  சுருக்கமாக  விளக்குக?     





13. பல்லவர்கால பிற நூல்கள் பற்றி கருத்துரை வழங்குக?

பல்லவர் காலத்திலே தோன்றிய பத்திப்பாடல்களை யொத்த பாவகைகள் அத்துனைப் பெருந்தொகையாக வேறு எக்காலப் பகுதியிலும் தமிழிலே தோன்றவில்லை யென்றே கூறலாம். அக்காலத்தில் தமிழிலே தோன்றி விருத்தியடைந்த செய்யூள்வகைகளும் பலவாகும். வேண்டிய ஆதரவளித்து வடமொழியைப் பல்லவ அரசர்கள் சிறப்பாகப் போற்றிவந்த தினுல் வடசொற்களும் சொற்றெடர்களும் முந்தியகாலப் பிரிவூகளிலே தமிழோடு கலந்ததிலும் அதிகமாகப் பல்லவர் காலத்திற் கலந்தன. அதனுடு வடமொழி யாப்பு முறைகளையூம் தமிழ்மொழி தழுவத்தொடங்கிற்று. அதனுல்இ வடமொழி யாப்பமைதிகளையூம் பிற இலக்கணங்களையூம் விளக்குதற்குத் தமிழிற் சங்கயாப்புஇ பாட்டியல்நூல் முதலிய யாப்பிலக் கண நூல்களும் பிற இலக்கண நூல்களும் பல்லவர் காலத்தில் எழுந்தன் அவையெல்லாம் இக்காலத்திற் கிடைத்தில.

சைவமும் வைணவமும் புத்துயிர் பெற்றதனுல் பௌத்த சமண சமயங்களின் வளர்ச்சி பெரிதும் தடைப்பட்டபோதும்இ அவை முற்றக அழிந்துவிடவில்லை. அவ்விரு சமயத்தவர்க ளும் பள்ளிக்கூடங்களையமைத்து மானுக்கருக்குக் கல்வி கற்பித்தும்இ சிறந்த நூல்களை எழுதியூம்இ ஒழுக்கநெறி வழுவாது வாழ்ந்தும் தமது சமய த்தை வளர்த்துவந்தனர். சமணமுனிவர்கள் எழுதிய இலக்கண நூல்கள்இ நிகண்டுகள்இ காவியங்கள்இ அறநூல்கள் முதலியன தமிழிலக்கியத்தை அணிசெய்து நிற்கின்றன. கொங்குவேளிர் என்னும் சமணப் பெரியார் எழுதிய உதயணன் கதை பல்லவர் காலத்தில் எழுந்த காவியங்களுட் சிறந்ததொன்றகக் கொள்ளப்படுகின் றது. அக்காலத்தில் வாழ்ந்த பௌத்தரும் சமணரும் பாடிய தனிப்பாடல்களும் சிலவற்றைச் சோழர்காலத்தில் எழுந்த யாப்பருங்கல விருத்தியூரை முதலியவற்றுட் காணலாம். பல்லவ அரசர்கள் வடமொழிப் பற்றுடையோரெனினும் அவர்களுள் இரண்டாம் நந்திவர்மன் மூன்ரும் நந்திவர்மன் முதலியோர் தமிழறிவூம் தமிழ் மொழிப்பற்றும் உடையோராய் வாழ்ந்துவந்தனரென்றும் அக்காலத்துச் சாசனங்கள் வாயிலாக அறியலாம். நந்திக் கலம்பகம் என்னும் பிரபந்தமும் பெருந்தேவர் எழுதிய பாரதவெண்பா வென்னும் இதிகாசமும் மூன்ரும் நந்திவர்மன் காலத்தவை

கி.பி.700 முதல் 800 வரை தஞ்சையை முத்தரையர்கள் ஆண்டனர். இந்நூற்றாண்டில் சிறப்புடன் திகழ்ந்த முத்தரைய மன்னன் பெரும் பிடுகு முத்தரையன் சுவரன் மாறன் என்பவன். அவன் புலவர் பலரை ஆதரித்தான். அவனைப் புகழ்ந்து ஷ
(1) பாச்சில் வேள் நம்பன் 
(2) ஆசாரியர் அநிருத்தர் 
(3) கோட்டாற்று இளம்பெருமானார் 
(4) குவாவங் காஞ்சன் ஆகியோர் வெண்பாக்கள் பாடியூள்ளனர். அவை செந்தலையில் உள்ள சிவன் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளன. அவற்றிலிருந்து இம்மன்னன் அழுந்தியூ+ர்இ மணலூர்இ கொடும்பாளுhர்இ காரைஇ கண்ணனூர்இ அண்ணல் வாயில் ஆகிய இடங்களில் நடந்த போர்களில் வெற்றி பெற்றவன் என்று தெரிகிறது.

இந்நால்வரும் இந்நூற்றாண்டினர். என்றாலும் இவர்கள் என்னென்ன நூல்களைப் பாடினர் என்பது தெரியவில்லை. வெண்பாஇ கட்டளைக் கலித்துறை எனும் இரு வடிவங்களில் பாக்கள் இவர்களால் ஆக்கப்பட்டுஇ கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. சங்க காலத்தில் அகவல் பா பெரிதும் கையாளப்பட்டது. கலிப்பா ஓரளவூ பயன்படுத்தப்பட்டது. வெண்பா அருகியே வழங்கியது. பல்லவர் காலத்தில் வடமொழிப் புலவர் தமிழகத்தில் குடிபுகுந்து வடமொழியில் எழுதினர். வடமொழியின் செய்யூள் இலக்கண அமைதிகள் தமிழில் கலந்ததன் விளைவாகஇ ‘விருத்தம்' முதலிய வடிவங்கள் தோன்றின. வடமொழியூம் தமிழும் கலந்த ‘மணிப்பிரவாளம்' எனும் கலப்புநடை உருவானது. சொற்களுக்கான பொருளை அறிந்து கொள்ளுவதற்கான நிகண்டு முதலிய கருவி நூல்கள் தோன்றின. 





14.சங்கமருவியஇபல்லவர் கால இலக்கிய வளர்ச்சிக்கு காரைக்கால் அம்மையார்  ஆற்றிய  பங்களிப்பினை மதிப்பிடுக ? 

                                  ; 
சிவனை முழுமுதல் தெய்வமாகப் போற்றுவது சைவ சமயம். சைவசமயப் பெரியோர்கள் பாடிய பாடல்கள் சைவத் திருமுறைகள் ஆகும். பக்தியூணர்வூ மிக்க பாடல்கள் நிறைந்தவை. சிறந்த பக்தி வைராக்கியம் கொண்டுஇ இறைவன் உருவைக் கண்டு அனுபவித்தல்இ அவன் புகழ் பாடுதல் இவற்றையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த காரைக்காலம்மையார் போன்றௌரது பாடல்கள் இந்த நூற்றாண்டில் தோன்றியவை ஆகும். சைவ அடியார் படைத்த பாடல்கள் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் காரைக்காலம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதிஇ திருவிரட்டை மணிமாலைஇ திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் ஐஇ திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் ஐஐ ஆகிய நான்கு நூல்களும் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. 



அற்புதத் திருவந்தாதி 
காரைக்காலம்மையாரின் வரலாறு பெரியபுராணத்தில் உள்ளது. காரைக்காலில் செல்வ வணிகனின் மகளாகப் பிறந்த இவரது இயற்பெயர் புனிதவதியார் என்பதாம். பரமதத்தன் என்ற வணிகனை இவர் மணந்தார். புனிதவதியார் இறைவன் திருவருள் பெற்றவர் என்பதை உணர்ந்து மருண்ட பரமதத்தன் அவரை விட்டுவிட்டுப் பாண்டிய நாடுசென்று வேறொரு பெண்ணை மணந்து வாழ்ந்தான். புனிதவதியாரைச் சந்திக்க நேர்ந்தபோது அவரைத் தெய்வம் எனக் கூறி அவர் திருவடிகளைத் தொழுதான். அதனால் நாணமுற்ற புனிதவதியார் துறவூ பூண்டுஇ சிவனை வேண்டிப் பேய் உருவம் கொண்டார்; கயிலைக்குச் சென்றபோது சிவன் அவரை அம்மையே என அழைத்தான். அப்பெருமை காரணமாக அவர் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்பட்டார். காரைக்காலம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி நூற்றியொரு வெண்பாக்களைக் கொண்டது. அந்தாதித் தொடை அமையப் பெற்றது. 

அற்புதம் என்றால் சிறப்பு என்று பொருள். சிவனின் சிறப்புகளை - அற்புதங்களைப் பாடும் நூல். திரு என்ற சிறப்பு அடைமொழியோடுஇ அற்புதத் திருவந்தாதி என்று குறிக்கப்பெறுகின்றது.  அந்தாதி என்பது ஒரு பாடலின் இறுதியில் உள்ள எழுத்தோஇ அசையோஇ சீரோ அடுத்த பாடலுக்கு முதலாக வருமாறு பாடல்களைப் பாடும் முறை ஆகும்.  சிவன் எலும்பு மாலை அணிந்துஇ கபாலத்தைக் (மண்டை ஓடு) கையில் ஏந்திஇ இடுகாட்டில் இரவில் ஒளிப்பிழம்பாக ஆடும் காட்சியை அம்மையார் சிறப்பாக வர்ணிக்கிறார். 
பிறர்அறிய லாகாப் பெருமையரும் தாமே
பிறர்அறியூம் பேருணர்வூம் தாமே - பிறருடைய
என்பே அணிந்துஇரவில் தீயாடும் எம்மானோர்
வன்பேயூம் தாமும் மகிழ்ந்து
(அற்புதத் திருவந்தாதி - 30)


திரு இரட்டை மணிமாலை 
இருபது பாடல்களைக் கொண்ட இந்நூலும் அந்தாதித் தொடையில் அமைந்ததே. திரு என்னும் சிறப்பு அடைமொழி கொண்டது. வெண்பாவூம்இ கட்டளைக் கலித்துறையூமாய் இந்நூல் அமைந்துள்ளது. இருவித மணிகளால் கோத்த மாலை கழுத்திற்கு அழகு தரும். அதுபோல இருவிதப் பாவகையால் தொடுக்கப்பெற்ற இந்நூல் சிவபெருமானின் அழகினைச் சொற்கோலங்களாக வெளிப்படுத்துகிறது. இரட்டைமணிமாலை என்னும் இலக்கிய வகைக்கு முன்னோடியாக அம்மையாரின் இப்பிரபந்தம் கருதப்படுகிறது. கட்டளைக் கலித்துறை யாப்பை முதன்முதல் கையாண்டவரும் அம்மையாராகவே கருதப்படுகிறார். 
தொல்லை வினைவந்து சு+ழாமுன் தாழாமே
ஒல்லை வணங்கி உமையென்னும் - மெல்லியல்ஓர்
கூற்றானைக் கூற்றுருவம் காய்ந்தானை வாய்ந்திலங்கு
நீற்றானை நெஞ்சே நினை 
(திருவிரட்டை மணிமாலை - 12) 
(தொல்லை ஸ்ரீ பழைய் தாழாமே ஸ்ரீ காலம் தாழ்த்தாமல் ஒல்லைஸ்ரீ விரைவாக் கூற்று ஸ்ரீ எமன்) 
பழைய வினை வந்து சு+ழ்ந்து கொள்வதற்கு முன்பாகவே உமைஒரு பாகத்தினனாய்த் திகழும் சிவனை நெஞ்சமே நீ நினைப்பாயாக என்று நெஞ்சுக்கு அறிவூரை கூறுகிறார். 

திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 
பத்துப்பாடல்களின் தொகுதிக்குப் பதிகம் என்னும் பெயர் வழங்குகின்றது. அம்மையார் பாடிய பதிகங்களுக்கே முதலில் இப்பெயர் ஏற்பட்டது என்பர். இவை பழைமையானவை என்பதனைக் குறிக்க மூத்த என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் ஒவ்வொன்றிலும் 11 பாடல்கள் உள்ளன. இறுதிச் செய்யூள் திருக்கடைக்காப்பு எனப்படும். அது அப்பதிகத்தைப் பாடுவார் பெறும் நன்மையைக் குறிக்கும். இப்பதிகங்களுள் அம்மையார் தம்மைக் காரைக்கால் பேய் என்று குறிப்பிடுகிறார்.  முதற்பதிகம் நைவளம் என்னும் பண்ணிலும் (இராகம்)இ இரண்டாம் பதிகம் இந்தளம் என்னும் பண்ணிலும் அமைக்கப்பட்டுள்ளன. இசையோடு இறைவனைப் பாடும் மரபை முதலில் தோற்றிய பெருமை அம்மையார்க்கு உரியது. எனவே தமிழிசையின் தாய் என்று இவரைப் போற்றுவது பொருந்தும். 


சிவபெருமான் சுடுகாட்டையே ஆடும் அரங்கமாகக் கொண்டு ஆடும் திருக்கூத்தினைக் கற்பனை நயம் தோன்ற அம்மையார் பாடியூள்ளார். சிவபெருமான் ஆடும்பொழுது நீண்ட அவர் திருச்சடை எட்டுத்திசையூம் வீசுகிறது. அவர் ஊழின் வலியால் இறந்த உயிர்கள் உள்ளம் குளிரவூம்இ அமைதி அடையவூம் திருக்கூத்து நிகழ்த்துகின்றார். 
ஈமம் இடு சுடு காட்டகத்தே
ஆகம் குளிர்ந்து அனலாடும்
எங்கள் அப்பன்
(மூத்ததிருப்பதிகம் - 3)
(ஈமம் ஸ்ரீ விறகு ; ஆகம் ஸ்ரீ உடம்பு) 
என்கிறார் அம்மையார். 
வடதிருவாலங்காடு எனும் ஊர் தொண்டை மண்டலத்தில் இன்றைய சென்னை மாநகரின் அருகில் உள்ளது. அவ்வூ+ரில் சிவன் உலகு எங்கும் நிலைபெற்று ஆடுவது பற்றிப் பாடப்பட்டுள்ளது. 

இப்பதிகங்களின் இறுதிப் பாடல்களிலும் அற்புதத் திருவந்தாதியின் கடைசிப் பாட்டிலும் காரைக்காலம்மையார் தம்மைக் காரைக்கால் பேய் என்று சொல்லிக் கொள்கிறார். “மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்தன் பேயாய நற்கணத்தில் ஒன்றாய நாம்” (அற்புதத்திருவந்தாதி இ 86)  திருவாலங்காட்டில் தலையால் நடந்து சென்று சிவனை அம்மையார் வழிபட்டார். அதைக் கேட்ட திருஞான சம்பந்தர் திருவாலங்காட்டில் காலால் மிதித்து நடக்க அஞ்சி ஊருக்கு வெளியிலேயே தங்கினார் என்று சேக்கிழார் கூறுகிறார். கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தர். அவருக்கு முன் வாழ்ந்தவர் காரைக்கால் அம்மையார் எனலாம். ஆகவே இவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதி அல்லது ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பர்





15.பல்லவர் கால இலக்கிய வளர்ச்சியில் வைஸ்ணவ சமயவளா;ச்சிப் போக்கு மதிப்பிடுக ? 


வைஸ்ணவ சமயவளா;ச்சிப் போக்கு
தென்னிந்திய தமிழ் இலக்கிய வரலாற்றிலே கி.பி 6தொடக்கம் கி.பி 9 வரையான ஆட்சிக்காலப்பகுதியே பல்லவர் காலம் என அழைக்கப்படுகின்றது. இக்காலத்தில் சைவ வைணவ சமயங்கள் உயர்நிலை பெற்று விளங்கியமையால் சமய வளர்ச்சிக்காலமென அழைப்பா;. இக்காலப்பரப்பில் சைவ வைணவ சமயங்கள் உயர்நிலை பெற்று காணப்பட்டாலும் வைணவ சமயமே பூரண வளா;ச்சி பெற்றுக் காணப்பட்டிருந்தது இதனை அக்கால மன்னர்களின் கல்வெட்டுக்கள்இ சமயசாh;புடை இலக்கியங்கள்இ அழிந்தும் அழிவடையாத ஆலயங்கள் முதலான பல விடயங்களின் மூலமாக அறியமுடிகின்றது.

பக்தி நெறிக்காலம் எனப்போற்றப்படுகின்ற பல்லவர் காலத்தின் சிறப்பினை பேராசிரியா; செல்வநாயகம் தமிழ் இலக்கிய வரலாற்றில் “இந்துமதத்தின் இரு பெரும் கிளைகளான சைவமும் வைஸ்ணவமும் பல்லவர் காலத்தில் இரு நதிகளாகப் பிரிந்து பெரு வளர்ச்சி கண்டது”. எகவூம் பேராசிரியா; கைலாசபதி பண்டைத் தமிழா; வாழ்வூம் வழிபாடும் என்ற நூலில் “ வைஸ்ணவத்திற்கு ஒளிபிறந்த காலம் பல்லவர் காலம்‟‟ எனவூம் குறிப்பிடுகின்றாh;. இத்தகைய அறிஞா;கள் ஆய்வில் இறுதியாக இராசமாணிக்கனாh; பல்லவ சமய வரலாற்றில் “அரசியல் ஆதரவோடு ஆழ்வாரின் ஆக்கத்தோடும் புதுப்பொழிவூ பெற்று தமிழ்நாட்டிலே வைஸ்ணவம் தழைத்த காலம் பல்லவர் காலமாகும்.” என குறிப்பிடுகின்றாh;. எனவே இக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டுதமிழ் நாட்டு வரலாற்றிலே வைஸ்ணவம் உயர்நிலை பெற்று விளங்கிய காலமாக பல்லவர் காலம் விளங்குகின்றது.

சங்கமருவிய காலத்தின் பிற்பகுதியிலே வாழ்ந்த முதலாழ்வாh;களான பேயாழ்வார்இ பொய்கையாழ்வார்களினால் இடப்பட்ட வைஸ்ணவ சமய வித்து பல்லவா; காலத்தின் வைஸ்ணவ பக்தி இயக்கமாக மிளிர காரணமாக அமைந்தது. இக்கால வைஸ்ணவ சமய வளா;ச்சியினை அக்காலத்தில் தோற்றம் பெற்ற இலக்கியங்களே சுட்டிநிற்கின்றன. இவ் 18 இலக்கியங்களின் எழுச்சிக்கு ஆழ்வாரினது வெளிப்பாடும் அக்கால ஆட்சியாளா;களின் செயற்பாடும் அடிப்படையாக அமைந்தது எனலாம். சிம்ம விஸ்ணுவை முதலாகக் கொண்டெழுந்த பல்லவர் காலத்தில் ஒவ்வொரு மன்னா;களும் சமயத்திற்கு பல்வேறு தன்மைகளில் பணியாற்றியூள்ளனா; இம் மன்னா;கள் சைவசமய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கை வட வைஸ்ணவ சமய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு மிகையானதாகும். எனவே மன்னர்களின் ஆதரவோடு வளா;க்கப்பட்ட ஒரு பெரும் மதமாக வைஸ்ணவம் பல்லவா; காலத்தில் மிளிர்வதைக் காணமுடிகின்றது. அது மட்டுமல்லாது வைஸ்ணவப்பரப்பில் பன்னிரு ஆழ்வார்களில் ஒன்பது ஆழ்வார்கள் பல்லவர் காலத்திற்குhpயவா;களாக காணப்படுகின்றாh;. இவா;களின் இலக்கியங்கள் மூலம் வைஸ்ணவ சமயம் பெற்ற சிறப்பினை காணமுடிகின்றது.

பல்லவ மன்னர்களின் ஆட்சியானது சமயத்துடன் இணைந்ததாகவே காணப்படுகின்றது. ஒவ்வொரு மன்னருடைய ஆட்சிப் பகுதியிலும் அம்மன்னர்கள் அமைத்த ஆலயங்கள் அவா;கள் வழங்கிய தானங்கள் பற்றிய விடயங்கள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. இம்மன்னர்களால் பல வைணவக்கோயில்கள் அமைக்கப்பட்டதோடு பராமரிக்கப்பட்டு வந்திருப்பதைக் காணமுடிகின்றது. எடுத்துக்காட்டாக பல்லவ சமய வளர்ச்சியிலே பங்களிப்பாற்றிய பல்லவ மன்ன வரிசையிலே குறிப்பிடத்தக்கவனாக பரமேஸ்வரன் விளங்குகின்றான். இவனுடைய ஆதரவூடனே வைகுந்தப் பெருமாள் ஆலயம் கட்டப்பட்டதாக அறியமுடிகின்றது. மகேந்திரவர்மன் சைவத்திற்கு ஆதரவளித்தது போல வைஸ்ணவ சமயத்திற்கும் ஆதரவளித்தான்.

வைஸ்ணவ சமயத்திற்க மன்னர்கள் ஆதரவளித்தது போல சமண பௌத்த மதங்களை எதிர்கொண்டுவைஸ்ணவ சமயத்தைவளா;த்த பெருமை ஆழ்வார்களையே சாரும். வெறுப்புத்தரக்கூடிய மதங்களை மனிதனுக்கு ஏற்பட்ட நோயாக சுட்டி அதிலிருந்து விடுதலை பெற இவ்வாழ்வார்கள் தம்மை ஆட்படுத்திக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை “வெறுப்பொடு சமணா; முண்டா; விதியினால் சாக்கியா;கள் வெறுப்பா; அதனதில் பேசியே போவதே நோயதாகில்” என்ற பாடலடிகளின் மூலம் காணமுடிகின்றது. இவ்வாழ்வார்கள் தமது பாடல்களின் மூலம் மனிதனை இறைநிலைக்கு இட்டுச் செல்வதற்காக இறைவனது உண்மையை நிலையையூம்இ முற்றுணா;வூம்இ முழுஞானம் பெற்ற ஆன்மாவின் உண்மை நிலையையூம்இ அறிவை வெளிப்படுத்தும் தன்மைக்கும் தடையாக உள்ள ஊழ் பற்றியூம் அவற்றில் இருந்து விடுபடும் வழிமுறையையூம்இ உயா;நிலை பெற்று வாழும் சிறப்பினையூம் எடுத்துக்காட்டியூள்ளனா;. இவையே வைணவம் கூறும் ஆன்மா ஈடேற்ற வழிபாட்டு முறையாகும். இதனை “மிக்க இறைநிலையூம் மெய்யாம் உயிh; நிலையூம் தக்கதௌpவூம் தடையாகி தொக்கியலும் ஊழ் வினையூம் வாழ்வினை ஒதுக்க குருகையா; போல் யாழிசை” என்ற பாடலின் மூலம் அறியமுடிகின்றது.

இவ்வாழ்வார்கள் ஏறத்தாழ 95 தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டதுடன் 108 தலங்கள் மீது பாடல்களைப் பாடினா;. இவா;கள் பாடிய பக்திப் பாசுரங்களில் அக்காலச் சமயச் சூழ்நிலையில் அவா;களின் ஆழ்ந்த பக்தியையூம் அவதானிக்க முடிகின்றது. இக்காலத்தில் வாழ்ந்த 9 ஆழ்வார்களுள் நம்மாழ்வார்இ திருமங்கையாழ்வார்இ பெரியாழ்வார்இ குலசேகராழ்வார்இ ஆண்டாள் முதலானோரின் இலக்கியங்கள் வைஸ்ணவ வளர்ச்சிக்கும் ஆழ்ந்த பக்திக்கும் வழிகாட்டுவதை காணமுடிகின்றது. அந்த வகையில் நால் வேதம் என நம்மாழ்வாhpன் நான்கு பதிகத்தினையூம்இ வேதாங்கம் என திருமங்கையாழ்வாhpன் ஆறு பனுவல்களையூம் இராமாயண சாரம் என குலசேகர ஆழ்வாhpன் இலக்கியங்களையூம்இ பாகவதசாரமென பெரியாழ்வாhpன் பாடல்களையூம்இ உபநிடத சாரமென ஆண்டாளின் பாடல்களையூம் குறிப்பிடும் அளவூக்கு வைஸ்ணவம் சிறப்புப்படுத்தப்படுகின்றது. 

எனவே வைஸ்ணவ சமய வளா;ச்சிக்கு ஆழ்வாhpன் இலக்கிய எழுச்சியே அடிப்படையாக அமைந்தது எனலாம். வைணவ சமய எழுச்சிக்கு ஆழ்வாhpன் இலக்கியங்கள் மட்டுமன்றி அவா;களின் வாழ்வின் நெறியூம் அடிப்படையாக அமைந்தது. நம்மாழ்வார் பிறந்ததிலிருந்து எவ்வித அசைவூமற்று இருந்த வேளை அவரை ஆலயத்திற்கு கொண்டு சென்று மரத்தடியில் வைத்துவிட்டு பெற்றௌh; விஸ்ணுவை நோக்கி மனமுருகி வேண்டியதன் பயனாக அவா; எழுந்து பத்மாசனத்தில் அமா;ந்து ஞானபோதனைகளை வழங்கி மக்களது ஆன்மீக சிந்தனைகளை தூண்டிய பெருமைக்குரியவராக விளங்குகின்றாh;. இதன் பேறாக மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரின் போதனைக்கு ஆட்பட்டு அவரைச் சிறப்பிக்கும் வகையில் தனது இலக்கியங்களை ஆக்கியிருப்பதனைக் காணமுடிகின்றது. விஸ்ணுசித்தா; என போற்றப்படுகின்ற பொpயாழ்வார் திருமங்க தாpசனத்தை பெற்றது மட்டுமன்றி ஆண்டாளை உருவாக்கிய பெருமைக்குரியவா;. 

ஆண்டாள் திருமாலை அடையவேண்டும் என்ற கொள்கையூடையவராக விளங்கி அவனையே முழுவதும் சரனடைந்து தனது கொள்கையை நிறைவேற்றியவா;. இத்தகைய வாழ்வூ நெறிகள் மக்களை வைஸ்ணவ நெறிக்கு ஆட்படுத்தியது எனலாம். திருமாலின் அவதார நிலைகள் ஆழ்வாh;களை ஆட்படுத்தியதன் பேறாக ஆழ்வாh;கள் பக்திப் பாசுரங்களை பாடி மக்களை வைஸ்ணவ சமயத்தை பின்தொடர வழிவகுத்தன. இதனால் பல்லவர் காலத்தில் வைஸ்ணவ சமயம் பெரும் வளர்ச்சி பெற்று காணப்பட வழிவகுத்தது. எனவே பல்லவர் காலத்தில் மன்னா;கள் ஆழ்வாh;கள் மக்கள் முதலானோh;கள் வைஸ்ணவ சமய வளா;ச்சிக்கு பெரும் பங்களிப்பை ஆற்றினாh;கள் எனலாம்.

   சங்கமருவியகால வினாவிடை நிறைவூ பெறுகின்றது.
  ………………………………முற்றும் ………………………..





ஆசிரியர்
எஸ்.எஸ்.ஜீவன்
B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2.II), IBSL, Dip In Eng.

4 comments:

  1. Typing mistake illama pannungka
    Otherwise complete definition irukku good

    ReplyDelete
  2. Typing mistake illama pannungka
    Otherwise complete definition irukku good

    ReplyDelete
  3. Plz Namber send me what app Nmber sent me contact Namber send me

    ReplyDelete