Saturday, March 21, 2020

தமிழ் - க.பொ.த உயர்தரம் கட்டுரைத் தொகுப்பு ஆசிரியர் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng

 

தமிழ் - க.பொ.த உயர்தரம்கட்டுரைத் தொகுப்புஆசிரியர் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng




1.இலக்கியமும் வாழ்கையூம்
                                   ஓரு நாட்டு மக்களின் வாழ்கை எடுத்துக்காட்டும் பளிங்கு போல எடுத்துக்காட்டுவது அந்நாட்டு இலக்கியங்களாகும். இவ்வகையில் தமிழ் இலக்;கியங்களின் மூலம் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை சமூக நிலை அரசியல் நிலை தமிழ் நாகரீகம் எனப் பல விடயங்களை அறிய முடியூம் எனவே இலக்கியம் என்றால் என்ன என்பதை விளக்கிக்கொள்வதோடு இலக்கியங்கள் வாழ்கையில் எத்தகைய தொடர்புடையதாக காணப்படுகின்றுது என்பதை நோக்குவது அவசியமானது. 

இலக்கியம் என்பது காலத்தைக் காட்டும் கண்ணாடியாகும்.அதாவது ஒருகுறிப்பிட்ட காலப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் ஜதார்த்த வாழ்வியலை ஜதார்த பூர்வமாக சித்தரிப்புத இலக்கியம் ஆகும். இயற்கை அன்னை மனிதனை அறிவூத் தேடலுக்குரிய மூளையோடு ஊற்றேடுக்கும் உள்ளத்தோடுபடைத்துள்ளான் முழுமையான வாழ்விற்கு உணா;வூ வேண்டும். ஒன்றே மட்டும் போற்றி மற்றயதை புறக்கணிப்பததால் மனிதன் இயந்திரமாகிறான்.உணா;ச்சிகளை அடக்கி வாழும் வல்லமையற்றவனாளய் வாழ்கிறான்.அதேவேளை உணர்ச்சிளைளை மாத்திரம் வளர்து அறிவை புறக்கணிப்தனால் மனிதன் நல்லவை தீயவை என்பவற்றை பகுத்தறியூம் அறிவற்றவனாகி விடுகிறான் நடுநிலையில் நின்று எதையூம் ஆராயூம் ஆற்றலை இழக்கிறான். எனவே இதன் மூலம் இலக்கியம் என்பது உணா;ச்சியையூம் கற்பனையையூம் கூடிய அனுபவ வெளிப்பாட்டின் பிரதிபலிப்பாக அமைவது எனலாம். இதனால் இலக்கியம் ஏனைய படைப்புக்களிலிருந்து வேறுபடுகிறது. 

இத்தகைய இலக்கியங்கள் மனித வாழ்விலே பல்வேறு பயன்பாடுகளைப் புரிகின்றுது. அவற்றுள் பிரதானமாது உலக வரலாற்றை மாற்றியமைக்கும் தன்மையாகும் அறிவியல் வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்களிலும் பார்க மனவளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்களே வரலாற்றை மாற்றியமைக்கும் ஆற்றலுடையது. அதாவது மனித சமுதாயத்தின் மன வளர்ச்சியின் கூறுகளாக விரும்பி அவறுப்பு நம்பிக்கை போன்றவற்றை பயன்படுத்துவதனாலே வரலாறு பெருமளவூ மாறுகிறது. மனவளர்ச்சிக்கூறுகளில் செல்வாக்குச் செலுத்தும் காரணியாக இலக்கியம் அமைந்துள்ளது.

உரிய சமூதாய வளர்ச்சியை உண்டாக்க வல்லது இலக்கியமாகும். கொடுமையூம் கொண்ட அரசியல் அமைப்பினாலும் சட்ட திட்டங்களாலும் நிலையான சீர்திருத்தம் உண்டாகாது. உள்ளத்தின் ஆளத்திலே முளை விட்டு வளர்ந்து செழிக்கும் அன்பு அருள் யாகம் தன்னலமறுப்பு முதலிய நல்லுணர்வூகளால் உண்டாகும் சீர்திருத்தமே நிலையானதும் பயனுள்ளதுமாகும் இந்த நாட்டத்தை மனிதனிடத்தே மலரச்செய்வது இலக்கியமேயாகும். எனவே உரிய சமூதாய வளர்சியியை உண்டாக்க வல்லதாக இலக்கியம் அமைந்திருக்கின்றமை இலக்கியத்துக்கும் வாழ்கைக்கும் இடையிலான தொடர்பை காட்டுகிறது.
வாழ்கை எனும் நறுங்கனியின் தீஞ்சுவைச்சாறே இலக்கியமெனின் அது முற்றும் பொருத்தமுடையது. உலக மாந்தர் இயல்புகள் பெருங்கடல் போல் ஆழமும் அகலமும் உடையது. அவையனைத்தையூம் அளவிட்டுக்காணுதல் சில வாழ்நாளையூடைய பிணிச்சிறிற்றறிவூ உடைய மாந்தர்களுக்கு இயலாத ஒன்றாக காணப்படுகின்றது. இதனை நாலடியார் 
       கல்விக் கரையில் கற்பவர் நாள் சில 
       மெல்ல நினைக்கின் பிணி பல 
       தௌ;ளிதின் ஆராய்ந்து அமைவூடைய கற்பவே நீரொழியப் 
       பாலுண் குருகிற் தௌpந்து.
எனக் கூறுகிறது. இதன் மூலம் சமூக வாழ்வை வளப்படுத்தும் இலக்கியங்களை குறுகிய வாழ்நாளைக் கொண்ட நாம் கற்று வாழ்வை வளப்படுத்தி கொள்ள வேண்டும்.    



2.தமிழ்மொழி வளர்ச்சியில் இணையத்தின் பங்கு

                              
                           கணிணி வளர்ச்சி வரலாற்றில் கடந்த முப்பது ஆண்டுகளில் அனைவருக்கும் எளிதாககிட்டும் வாய்ப்பு உருவாகி கணிணியின் பயன்பாடு வேகமாக வளர்ந்த போது ஆரம்பகால கட்டத்தில் கணிணியின் சேவைகளுக்கு ஆங்கிலமொழி மட்டுமே தேவையென்ற கருத்து வலியூற்றது.இத்தகைய மனப்பாங்கு தழிழ் அறிஞ்சர்களுக்கு வேரூன்றி;னால் தழிழ்மொழி கற்கும் ஆர்வம் பின்னடைவூ பெறும் என்ற நிலையில்இஉலகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தழிழ் அறிந்த கணிணி வல்லுனர்கள் கணிணியில் தழிழ்மொழி எளிதாக முழுமையாக செயல்பட வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து அதற்கு ஏற்ப பல முயற்சிகளை முப்பது ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.


ஆரம்பத்தில் இத்தகைய முயற்சிகளை தொடங்கியவர்களில் தழிழ்நாட்டை சேந்தவர்கள் மிக குறைவூ.பெரும்பாலும் இவர்கள் கனடாஇவடஅமெரிக்காஇபிரான்ஸஇ;ஜேர்மனஇpசிங்கப்பூரஇ;மலேசியாஇஇலங்கை மற்றும் சுவிஸ்லாந்து போன்ற நாடுகளை சேர்ந்த ஆர்வலர்கள்.இவர்களில் பலர் கணிணிதுறை அல்லாதமற்ற அறிவியல் தொழிநுட்பத்துறையில் ஈடுபட்டு இருந்தாலும் கணிணியின் பயன்பாட்டினை நன்குஅறிந்தவர்கள் இவர்கள் 1980களில் மேற்கொண்ட முயற்சிகளில் பெரும்பாலும் தழிழ் எழுத்துக்களைக் கணிணிக்கு ஏற்றவாறு உருவாக்குவது அவற்றை கணிணியில் பயன்படுத்துவதும் அதற்கேற்ப மென்பொருட்களை தயாரிப்பது தொடர்பான ஆய்வூகளாகும்.இவை யாவூம் தனித்தனி முயற்சிகளாக மேற்கொள்ளப்பட்டதால்இஒருவருடைய படைப்பை மற்றவர்கள் பயன்படுத்துவது கடினமாக இருந்ததால் இவற்றை தரப்படுத்த வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டது.


இந்த காலகட்டத்தில் இணையத்தின் செயல்பாடுகள் ஆரம்பமாகின. தழிழ் வல்லுனர்கள் இணையத்திலும் தமிழ் செயல்பட வேண்டும்.என்ற ஆர்வத்தில் பல தழிழ் இலக்கிய  நூல்களை இணையத்தில் அமைத்தனர்.ஆனால் இதற்காக பயன்படுத்தப்பட்ட எழுத்து உருக்கள் பல்வேறு வகைகளில் இருந்ததால் இவற்றை அனைவரும் பயன்படுத்துவதில் பல சிக்கல் இருந்தன. இவற்றை எல்லாம் ஒழுங்கு படுத்தினால் மட்டுமே கணிணித்தழிழும்இஇணையதழிழும் வளர முடியூம் என்ற நோக்கத்தில் 1997ல் சிங்கப்பூரில் பேராசிரியர் நா.கோவிந்தசாமி அவர்களின் முயற்சியால் ஒரு சிறிய தழிழ் கணிப்பொறி மற்றும் இணைய ஆர்வலர்களின் மாநாடு நடைபெற்றன.இவற்றில் பங்கெடுத்த சுமார் 40பேரும் சிங்கப்பூர்இமலேசியாஇஇலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள்.அப்பொழுது கண்டெறியப்பட்ட முக்கிய குறைகளை நிவர்த்தி செய்யப்பட்ட முயற்சிகளை பற்றிய கலந்தாய்வூ செய்ய 1999ல் சென்னையில் இரண்டாம் இணைய தழிழ் மாநாடு நடைபெற்றது.அன்றய நிலையில் கணிணியிலும் இணையத்திலும் தழிழ்மொழியின் ஈடுபாடு வளர்ச்சி அடைய எடுக்கப்பட வேண்டிய முயற்சிகளை பற்றி ஒருமித்த கருத்து ஏற்படாத போதிலும் ஓர் அளவூக்கு தழிழ் எழுத்துகளுக்கு பயன்படுத்தப்படும் குறியீடுகளை தரப்படுத்த வூயூஆஇவூயூடீ என்ற இரு குறியீடுகள் ஒப்புகொள்ளப்பட்டன.அதனோட கணணியில் பயன் படுத்தப்படும் விசைப்பலகையின் தழிழ் எழுத்துக்களின் இடவரிசைகளை நிர்ணயிக்க வேண்டிய வூHயூஆஐடுNநுவூ  99 என்ற விசைப்பலகையின் அமைப்பு உருவானது.இம் முடிவூகளுக்கு தழிழக அரசின் ஆணைகளும் அளிக்கப்பட்ட்ன.இருப்பினும் இதுவரை இருந்த எழுத்துக்கு குறியீட்டுமுறை மற்றும் விசைபலகை ஓரளவூக்கு பரவலாக தழிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயன்படுத்தப்பட்ட போதும் முழுமையாக எவரும் செயற்படுத்தவில்லை.
சென்ற 10 ஆண்டுகளில் இணைய தமிழ் வளர்ச்சி எதிர்பாராத அளவிற்கு மிகவேகமாகவூம் பயனுள்ளதாகவூம் நிகழ்ந்துள்ளது.அவற்றில் குறிப்பிடத்தக்க பின்வரும் வளர்சியை காணலாம்.


1.மின்னஞ்சல் தமிழைப் பயன்படுத்தி மடல்கள் அனுப்புவது பெருகிவருபின்றது. மின்னஞ்சல் சேவைகள் இலவசமாக கிடைக்கின்றன.முன்பெல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே மடல்களில் பரிமாற்றம் நிகழ்ந்தது.மாறி தற்பொழுது தமிழையே பரிமாற்றம் செய்துகொள்ள முடியூம்.இதற்கு முக்கிய காரணமாக தமிழ் எழுத்துக்கள் குறியீட்டு முறையில் பயன்படுத்தப் படுவதால் அனைவரும் தங்குதடையின்றி மடல்கள் பரிமாற்றம் செய்துகொள்ள முடிகின்றது.


2.யூனிக்கோட் முறையை பயன்படுத்தி நுற்றுக்கணக்கான இணைய இதழ்கள் உலகின் பல்வேறு பாகங்களில் உருவாக்கப்பட்டு எளிதாக அனைவருக்கும் கிடைக்கின்றது. இவற்றில் நாழ்இதழ்;இ மாதஇதழ்;;இ மற்றும் பல வகையான தனிஇதழ்கள் இணையத்தில் கிடைக்கின்றன.யூனிக்கோடு பயன்படுத்தாத இதழ்கழை இணையத்தில் படிப்பதற்கு அதற்கான தனியாக எழுத்து உருக்கள் உள்இறக்கம் செய்ய வேண்டும்
3.தற்பொழுது வேகமாக பரவிவரும் தழிழ் வலை மலர்கள் பல்வேறு தகவல்களையூம் நுhல்களையூம் ஒளிஇஒலி கோப்புகளையூம் ஓவியங்கள்இபடங்கள் போன்றவற்றையூம் குறிப்பிட்ட பதிவாழர்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப் படுகின்றது.

4.தமிழில் விக்கிப்பீடியா மிக வேகமாக வளர்ந்து வரும் கலைக் களஞ்சியமாகும்.ஆங்கில மொழியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த கலைக் களஞ்சிய திட்டம் உலக அளவில் பல்வேறு மொழிகளில் வேகமாக வரிவடைந்து வருகின்றது.தற்பொழுது தமிழ் மொழியில் விக்கிப்பீடியாவால் 20இ881 கட்டுரைகள் கொண்டு 68வது இடத்தில் உள்ளது.

5.இன்றைய முக்கிய தேவை சொற்பிழைத் திருத்திஇஇலக்கணபிழை திருத்திஇஎழுத்து பேச்சு மாற்றி பேச்சு எழுத்து மாற்றி போன் மொழி சாதனங்களுக்கு தேவையான மென் பொருள்களை உருவாக்கி அனைவரும் பயன்பெற வழிவகுக்க வேண்டும்.

6.இதற்கெதிரான வாசகங்களை பொறித்து கொடுக்கலாம்.பொதுமக்கள் கூடும் இடங்களில் போக்குவரத்து சாதனங்களை ‘‘மனிதன் மதுவை குடிக்கிறான்.இறுதியில் மது மனிதனை குடித்து விடுகிறது.’’போன்ற அரிய வாசகங்களை பொறிக்கலாம்.

7.ஊடகங்களின் மூலம் விளம்பரங்களை மேற்கொள்ளலாம்.இவ்வகையில் பத்திரிகைகளில் மதுபற்றியூம் புகைத்தல்பற்றியூம் அறிஞ்சர்கள் மருத்துவர்கள் எழுதி வரவேண்டும்.மேலும் பத்திரிகைகள் மதுவின் தீமைகள் குறித்த கார்ட்டூன்கள் கவிதைகள் சிறு கதைகள் தொடர் நாடகங்களை வெளியிட முடியூம் மன்றங்கள் நலன்விரும்பிகள் காசு செலுத்திய விளம்பரங்களை பத்திரிகையில் போடலாம்.இவற்றின் தீமைபற்றி உரிய விளம்பர படங்கள் விளக்கத்துடன் சிறுகையேடுகளை அடித்து பத்திரிகையூடன் வைத்து மக்களை சென்றடைய செய்யலாம்.

8.மற்றும் வானொலி தொலைக்காட்சி இணையத்தளம் சினிமா போன்ற இலத்திரனியல் சாதனங்கள் மூலம் மது புகை போதைப்பொருள் என்பவற்றினால் ஏற்ப்டும் தீமைகள் பற்றி மருத்துவர்களும் நேர்காணல் கேள்வி பதில் கவிதை கட்டுரை பேச்சு போட்டிகளை நடாத்தலாம்.மேலும் மதுவின் கொடுமை போன்ற தலைப்புகளில் நாடகங்கள் போன்றவற்றை ஒழிபரப்பு செய்யலாம்.இத்தகைய செயற்பாடுகள் மூலம் விழிப்புனர்ச்சியினை ஏற்படுத்தி போதைப்பொருள் பாவனையை இருந்து மக்களை பாதுகாக்கலாம்.;


3.சேரிம் அறிந்து சேH 

                                                 “அரிது அரிது மாணிராய் பிறத்தல் அரிது” என்ற ஒளவையார் வாக்கிற்கு இணங்க மாணிடப்கபிறவி எடுத்த நாம் வையகத்தில் பலரும் போற்ற வாழ்வாங்கு வாழ வேண்டும்.

     “தோன்றி புகழோடு தோன்றுக அஃதிலார்
     தோன்றலில்  தோன்றாமை  நன்று" 

  எனும்; வள்ளுவர் வாக்கிற்கு இனங்க எம் வாழ்கையினை மற்றவர்கள் போற்ற வேண்டும். ஆதற்காக நாங்கள் சேரிடம் அறிந்து சேர வேண்டும் அதாவது நாற்கள் நல்லவர்கயூடன் பழக வேண்டும் இத்தலைப்பும் இதனையே உணர்த்துகிறது. 

நாம் அனைவரும் பிறக்கையில் நல்லவராக நற்குணம் படைத்தவர்களாகவே பிறக்கிறௌம் வளர்ற்து பெரியவர்களானதும் நம் எண்ணங்களும்இ சிந்தனைகளும்இ பழக்கவழக்கற்களும் இவரின் போக்கிற்கேற்ப மாறுபடுகின்றன. இவ்வாறு மாறுபடுவதற்கு முழுக்க முழுக்க நாம் சேர்பவர்களே காரணமாகி  விடுகின்றனர் நல்லவர்களின் சேர்கைளினால் நல்ல பழக்கங்களும் தீயவர்களின் சேர்கையினால் தீய பழக்கங்களும் எம்மை வந்தடைகின்றன. எனவே நாம் சேர்கையில் நல்வர்களுடனேயே சேர்து வாழ வேண்டும்

நாம் சேரக்கூடிய நல்லவர்கள் யார் என்பதை இனங்கண்டு சேர்து வாழ்வோமானால் எங்களது எதிர்காலம் இருலடையாது  ஒளிமயமாகத் திகழும் அவ்வாறேனில் நாம் யாருடன் சேர வேண்டும் . நல்ல சான்றௌர்கள்இ அறிஞ்ஞர்களஇ; பெரியோர்களஇ நல்ல ஆசான்இ நல்ல நன்பர்கள்இ நல்ல விழுமியம் உள்ளவர்கள்இ நன்கு கற்றவர்கள்இ எங்களது நலன்களில் அக்கறை காட்டுபவர்கள் என இவர்களை நாம் சேர்து பின்பற்றி வாழ வேண்டும் அதேபோல் நாம் சேரக்கூடாதவர் யார் என்பதை இனங்கண்டு
வாழப் பழகி கொள்ள வேண்டும்.

 இவ்வகையில் தீயவர்கள்இ மூடர்கள்இ இகுடிகாரர்கள்இ கொள்ளைக்காரர்கள்இ காம இச்சை கொண்டவர்கள்இ சுயநலவாதிகள்இ சூதாடுபவர்கள்இஃ என்போர் எடுத்து கூறத்தக்கவராவர் இவர்களைச் சேரக்கூடாது 
ஒரு மணிதன் தன் வாழ்;நாளில் சிறப்பாகஇ நல்லவனாக வாழ வேண்டும் எனில் அவனுடைய நன்பன் நல்லவனாக இருத்தல் வேண்டும். வூhழ்கையிலே ஏனையவர்களை விட நன்பனே எம் வாழ்வின் அதிகபங்கு வகிக்கின்றனர்;.    

ஒரு மணிதன் தன் வாழ்நாளில் சிறப்பாக நல்லவனாக வாழ வேண்டும் எனில் அவனுடைய நன்பன் நன்பன் நல்ல ;தட்டீ கொடுத்து எம்மை உயர்துபவனே நன்பனே ஆவான் நாம் சேர்கின்ற நன்பர்கள் நல்ல நன்பர்களாகவூம் நற்பண்புகளை உடையவனாகவூம’ இருத்தல் வேண்டும் ஆபத்தன வேளைகளில் உதவூகின்றவனாகவூம் இருத்தல் வேண்டும..

; நாம் கண்ணீர் விட்டு கலங்கி நிற்கும் வேளையில் நம் துயரத்தை தாங்க முடீயாமல் கண்ணீர் சிந்தி உதவ வருபவன் தான் சட்புக்கு இலக்கணமானவன். இதனையே வள்ளுவர் பெருந்தொகை “அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ்-ஆர்வலர் புன் கண்ணீர் ஊசல் தரும்” என்றார் “

உன் நன்பனை காட்டு உன்னைபற்றி சொல்கிறேன் என்பது சான்றௌர் வாக்கு  அதாவது உன் நன்பன் நன்பன் எவ்வாறு நற் குணங்களை படைத்தவபனாக இருக்கின்றாணோ அதேபோல் நீயூம் இருப்பாய் மாறாக தீய குணங்களை கொண்டு காணப்படுவூhயின் நீயூம் அவ்வாறே காணப்படுவாய் என்பதுதான் அதன் கருத்து நேற்று வரையிலும் இனிமையாகவூம் நன்மையாகவூம் போற்றி புகழ்து வந்தவைகள் எல்லாம் கசப்பும் பகையூம் உடையவளாகவே மாறிவிடுகின்றன பகைமை கொண்ட மனமும் பாகனில்லாத யானையூம் ஒன்றே இங்கணம் சுயநலம் வெறுப்பு பகைமை கொண்டு சீறும் மனம் நல்ல குணங்களையெல்லாம் இழந்து மத யானை போன்று தனக்கும் சமுதாயத்திற்கும் பெருங்கேடுகளை விளைவிக்கிறது மணிதருடைய மனம் கெட்டுவிட்டார் இவ்வையகம் முழுவதும் கெடும் அடீமனம் கலப்பில்லாத அமிர்த துல்லியமபகும் பேராசையூம் அகங்காரமும் மனம்மென்ற பொதிக்குள் வித்தை ஊற்றி விடுகின்றது.

 அக்கினியின் ஒளியால் கவரப்பட்டு அதிலே மாண்ட மடீகின்ற வீட்டீல் பூச்சி போன்று உலக வாசனையில் தடீப்பேறிய அகங்காரமும் பேராசையூம் அதற்கரியவரை சுட்டெரிக்கின்றன நாம் சேர்கின்றவர்களின் மனம் நல்லதாக தீய குணங்கள் அற்றதாக காணப்பட வேண்டும் .

அப்போதுதான் நமது  மனங்களும் சுத்தமாக இருக்கும் இதனாலேயே மனம் உண்டால் குணம் உண்டு எனக் குறிப்பிடுவர் மேலும் நாம் சேரக்கூடீயவர்கள் எங்கள் முதுகிற்கு பின்னால் குத்துபவர்களுடன் சேரக்கூடாது முதுவிற்க பின்னால் நின்று தட்டீ தந்து உதவூபர்களுடன் சேர வேண்டும் இதனையே சுவாமி விவேகானந்தர தட்டீ கொடப்பத மட்டுமே எனக் கூறியூள்ளார்.
 எனவே தட்டீ கொடுப்பகர்புளை சேர்கின்ற வேளையில் சமுகத்தில் எங்களுக்குர்ய பெறுமானம் உயர்வாகவே காணப்படும அத மட்டுமின்றி நாம் நல்லவர்களுடன் சேரது நல்லவானாக திகழ்கின்ற வேளையிலே நமது பெற்றௌர்களும் அதனால் புகழ் உண்டாகும் என்பது தின்னம் 

“என்ன தவம் செய்தாரோ” இவன் தந்தை இவனை பெற  என்கின்ற புகழ் மொழியூம் எந்நாளும வந்திடுமே மாறாக நல்லார் அல்லாரை சேர்கின்ற வேளையிலே நல் ஒழுக்கம் இழந்து நன்மதிப்பும் நல் உயர்வூம் நம்மை விட்டு நடந்திடுமே நற் புகழும் நல் உயர்வூம் நம் புக்கம் சாயாது.


 நாம் எவ்வளவூதான் கற்றாலும் அவற்றுகெல்லாம் நல்லுயர்வூம் நற்பேறும் பயனாக அமையாது உலகநாதரால் கூறப்பட்ட கருப்பொருள்களும் தாங்கள் நல்லவர்களோடு சேர வேண்டும் என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது

 “ ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையூம் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் 
அடுத்தவனை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம் மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் மற்றானை உறவினர் என்று நம்ப வேணடாம் என்று நினைவூபடுத்துவது அவசியமாகின்றத  மேலும் நன்றாக ஆராயாமல் நட்பு செய்வதை சிட கெடுதி வேற எதுவூம் இல்லை அப்படீ நட்பு புpன் கைவிடுதல் நட்பை விரும்புவோரால் முடீவதில்லை இதனாலேயே பொய்யாமொழி புலவர் நட்பராய்தல் எனும் அதிகாரத்தில்.

 “நடாத நட்தலில் கேடீல்லை நட்ட பின் வீடீல்லை நட்பால் பவர்கு”என அழகாக கூறியூள்ளார் “ கணமும் குடீமையூம் குற்றமம் குன்றா இன்னும் அருந்தியாக்க நட்பு “ ஒருவன் குணத்தையூம் அவன் பிறந்த குடீயூpன் சிறப்பையூம் அவன் குற்றங்களையூம்  நிலையாக அவனோடு இருக்கும் தோழர்களையூம் அறிந்தே நட்பு செய்ய வேண்டும் ஏனவூம் கூறுகிறார்.

; “ குடிபிறந்து தன் கட் பழி நானு வாசனை கொடுத்தும்  கொள்ளல் வேண்டும் நட்பு உயர்த குடீயிலே புpறந்தவனும் பழிச்சொற்களுக்கு வெட்கப்படுகின்றவனாகிய ஒருவனை எந்ந பொருளை கொடுத்தாலும் நட்பாக்கி கொள்ள வேண்டும் எனவூம் சேர்கினறவர்ளுடன் எவ்வாறு பழக வேண்டும் என்பதையூம் யாருடன் சேர வேண்டும் எனவூம் கூறுகிறார் ஆழம் அறியாமல் காலை விடாதே என்பது சான்றௌர் வாக்கு அதற்கமைய நாம் சேர்கின்றவர்கள் ஒழுகி நாங்கள் சேர்கின்றவர்களை ஆராய்து நல்லவர்களோடு சேர்து நல்வாழ்வூ வாழ்வோமாக .




4.மொழிபெயர்ப்பும் மொழி பெயர்ப்பின்        இன்றியமையாமையூம்


                          ஒரு மொழியிலுள்ள இலக்கியங்கள் பிறிதொரு மொழியில் மொழிபெயர்க்கப்படுவது பல்வேறு நாடுகளையூம்இ பல்வேறு சமூகங்களையூம் சேர்ந்த பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் தமக்குள் தொடர்பு பொள்ள நேர்வதால் ஏற்படும் பல்வேறு சமூகங்களையூம் சேர்ந்த பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் தமக்குள் தொடர்பு கொள்ள நேர்வதால் ஏற்படும் கலாசார கலப்பின் ஓர் அம்சமாகும். இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் நெடுங்காலமாக இடம்பெற்று வந்துள்ளது. எனின் கடந்த கால் நூற்றாண்டுகளில் இம்முயற்சி அதிகரித்துள்ளது. எனவே மொழிபெயர்ப்பு என்ன என்பதை விளங்கிக் கொள்வதோடு மொழி வளர்ச்சியில் இன்றியாமை பற்றி நோக்குவது அவசியமானதாகும்.

மோழிபெயர்ப்பு என்பது ஒரே கருத்தை வெளிப்படுத்துவதற்காக ஒரு மொழிக்கு பதிலாக பிறிதொரு மொழியை பிரதியீடு செய்வதாகும். அதாவது ஒர மொழில் கூறப்படுகின்ற கருத்தை பிறிதொரு மொழியில் கூறுவதாகும். மேலும் சிறப்பாக கூறுவதனால் ஒரு ஊடகத்தில் கூறப்படுகின்ற விடயத்தை இன்னொரு ஊடகத்திற்கு மாற்றுவதாகும். மோழிபெயர்ப்புக்களை ஆராய்ந்த மொழி நூல்கள் பற்றிய நூலார் மொழிபெயர்ப்பின் வகையை 6 வகையாக வகைப்படுத்தியூள்ளமையைக் காணலாம். சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தல்இ விரிவான மொழிபெயர்த்தல் இ முழமையாக அல்லது சரியான மொழிபெயர்ப்பு. முந்துநூல் செய்திகளை சுருக்கமாக மொழியெர்த்தல்இ தழவல் முறை மொழிபெயர்ப்புஇ மொழியாக்கம் என்பவையாகும்.  

ஜரோப்பியர் நமது நாடுகளுக்கு வரும் வரை சமஸ்கருதம்இ பாளி போன்ற சில குறிப்பிட்ட மொழிகளிலுள்ள இலக்கியங்களே நமது மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது அல்லது தழவப்பட்டது. இவற்றை விட ஜரோப்பியர் காலம்வரை தமிழிலக்கிய வரலாற்றில் இலக்கியங்களின் மொழிபெயர்ப்பானது செய்யூள் இலக்கியங்களுக்கு உரை எழுதுகின்ற வகையில் அமைந்திருந்தது. இவ்வகையில் செய்யூம் ஊடகத்திலுருந்து உரை நடைக்கு மாற்றியமையூம் இதுபோல் விஜயநகர நாயக்கர் காலத்தில் நாச்சினினார்க்கினியார்இ அடியார்க்கு நல்லார்இ பரிமேளழகர்இ அழவந்தார்இ நக்கீரர்இ அழகிய மணவாளயீயர்இ பெரியவச்சான் பிள்ளைஇ வடக்கு திரு வீதிப்பிள்ளை போன்ற உரையாசிரியர்கள் செய்யூம் நடையில் அமைந்த பல இலக்கியங்களை உரை நடைக்கு மாற்றயமைக்க ஓர் வகை மொழிபெயர்ப்பு என்றே கூறவேண்டும். இவ்வகையிலே தொல்காப்பியம்இ பத்துப்பாட்டுஇ கலத்தொகைஇ சீவகசிந்தாமணி போன்ற நூல்களை நாச்சினார்க்கினியரும்இ திருக்குறளை பரிமேலழகரம்இ  சிப்பத்காரத்தை அடியார்க்கு நல்லார்இ ஆழ்வார் பாசுரங்களின் சில பகுதிகளை ஆழவந்தார் போன்றௌர் மொழிபெயர்த்தமை குறிப்பித்தக்கது.

முதலாளித்துவ சமூக பொருளாதார மாற்றமும்இ நவீன கல்வி வளர்ச்சியூம் ஏற்பட்ட பின்னர் பிற மொழித் தொடர்பு விரிவடைந்ததன் காரணமாகவூம் உலகில் பல்வேறு மொழியிலுள்ள இலக்கியங்கள் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன. இவவகையில் முக்கியமான உலக மொழியிலுள்ள அநேக இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படட்டுள்ளன. தொடர்ந்தும் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. இவ்வகையிலே விஞ்ஞானம்இ பொருளியல். சமூகவியல்இ போன்ற அறிவூத்துறை சார்பான நூல்களும் கவிதைஇ நாவல்இ சிறுகதைஇ நாடகம் போன்ற ஆக்க இலக்கியங்களும் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வெவ்வேறு வகையான நூல்கள் தமிழிலே மொழி பெயர்க்கப்படுவது தமிழ் மொழியின் வளர்ச்சியினை மேன்;மையூறச் செய்கின்றது எனலாம்.

தமிழ்ல் மொழிபெயர்ப்பானது வடமொழியிலிருந்து தமிழக்கு மொழிபெயர்த்தலே முதல் முயற்சியாக அமைந்தது. ஆரியத்திற்கும் தமிழ்ற்கும் பொதுவாக விகாரமின்றி தமிழில் வளங்கும் சொல் தற்சமம் என வழங்கப்பட்டது. ஆரியச் சிறப்பெழத்துகள் தமிழ் எழத்துக்காக விகாரப்பட்டு அல்லது திpரிவெய்து தமிழல் வழங்கும் வடசொற்கள் தற்பவம் என அழைக்கப்பட்டது. ஜரோப்பியர் காலத்திற்கு பின்னர் ஆக்க இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. ஆக்க இலக்கியங்களை 2வகையாக வகைப்படுத்தலாம்.

முதலாவது ஒரு மெழிக்குள் இடம்பெறும் மொழிபெயர்ப்புச் செய்யூளிலிருந்து உரைநடைக்கும்இ உரைநடையிலிருந்து செய்யூளுக்கு மாறுவது வழக்கிழந்த பழமை மொழியிலிருந்து வழக்கிலுள்ள புது மொழிக்கு மாற்றுவது இதில் அடங்கும். இவ்வகையிலே மு.வரதராஜன் இ.மு.வா.ஜெயநாதன்இ புலியூ+ர் கேசிகன் போன்றௌர் அநேக பண்டைய இலக்கியங்களின் பொருளை உரைநடைக்கு மாற்றியமைத்தனர்.

ஒரு மொழியிலிருந்து பிறிதொரு மொழிக்கு மாற்றுவது மொழி பெயர்ப்பின் இரண்டாவது வகையாகும். இதுவே பரவலோடு  அறியப்பட்டதும். முக்கிய கவனத்திற்;;கு உரியதுமாகும். இவ்வiயிலே ஜரோப்பியர் காலப்பகுதியில் திறக்குறள்இ திருவாசகம் ஆகிய தமிழ் வடிவங்கள் ஆங்கிலம் போன்ற பிற மொழிபெயர்க்கப்பட்டன.

இதுபோல் 19ம் நூற்றாண்டு டாகடர் கறீனும் அவரது மாணவர்களும் பல நூல்களை மொழிபெயர்த்தார்கள். இவ்வகையிலே இரண வைத்தியம்இ கெமிஸ்தம்இ வைத்தியாகாரம் போன்ற பல நூல்களை மொழி பெயர்த்தனர்.

இதன் பின்னர் இலங்கையில் பல்கலைக்கழகம் வரை தாய்மொழி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர்.கல்வி வெளியிட்டு திணைக்களம் ஆங்கில மொழியல் எழதப்பட்ட இயற்கை விஞ்ஞானம்இ கணிதம் போன்ற பல பாடங்களையூம் வேறு பல புகழ்பெற்ற நூல்களையூம் மொழிபெயர்த்து வெளியிட்டது. இத்தகைய முயற்சியால் புதிய பல கலைச் சொற்களும்இ அறிவியல் சொற்களும் தமிழ் மொழியல் நுழைந்த தமிழ் மொழியை வளர்ச்சியடையர் செய்தது.

மேலும். யூ.டு . புர~hமின் வியத்தகு இந்தியாஇ மு. ஆ. புணிக்கரின் ஆசியாவூம்- மேல்நாட்டு ஆதிக்கமும் போன்ற நூல்களும்இ ஆக்க இலக்கியங்களும்இ உமர்கையாம் பாடல் மொழிபெயர்ப்புஇ கலாநிதி றுஃமான் அவர்களின் பாலஸ்தீன கவிதைகளின் மெரழி பெயர்ப்புஇ சிங்கள ஆக்கங்களது தமிழ்மொழி பெயர்ப்பு போன்றன தமிழ் வளர்ச்சியில் முக்கிய கவனத்திற்கு உரியது. புகழ்பெற்ற சிங்கள நாவல் ஆசிரியரான மாட்டின் விக்கிரமசிங்க அவர்களது மூன்று நாவலகள் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன. இவ்வகையில் கம்பர் எலிகள் - கிராப்பிறள்வூ எனவூம்இ விதனையார் - பட்டற்ற வாழ்வூ எனவூம்இ யவேல்துவ - மடேல் தீவூ எனவூம் தமிழ்ல் மொழிபெயர்க்கப்பட்டது.

மேலும் இலங்கை இந்தியாவைச் சேர்ந்த 20 தமிழ் கவிஞர்களின் 33 கவிதைகளை பராக்கிரம மொழித்துவக்கு சிங்களத்தில் மெரழி பெயர்த்து 1979ல் இந்து சகலங்கா எனும் தொகுப்பாக தொகுத்தார்.

இதுபோல் பிரித்தஞ்சனி 1993ல் தேங்கரையர் எனும் தொகுதியாக 18 தமிழ் கவிஞர்களின் 34 கவிதைகளை வெளியிட்டார். இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் அந்தந்த மொழிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்து அதன் சிறப்பினை மேலும் மெருகூட்டுவதனை காணமுடியூம். 

ஒரு மொழி தனித்து இயங்குவதால் அது விருந்தியடைய முடியூம். வேறு வேறு மொழிகளிலிருந்து கருத்துக்களை உள்வாங்கி தம்மொழியில் பெயர்க்கப்படுகின்ற பொழது பல்வேறு வகையான குறைபாடுகளை எதிர்நோக்கும். அதாவது மூலமொழியிலுள்ள குறியீடுகள்இ ஓவியன்கள் தன்மொழியில் இல்லாதவனை அறியூம்போது அதற்கேற்ப  தம்மை மாற்றிக்கொண்டு செப்பனிக்கூடிய நிலையினை மொழிபெயர்ப்பாளர்கள் உருவாக்குவர். மோழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிட்ட ஒரு விடையத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மொழிபெயர்க்கின்ற பொழது பெயர்க்கப்படும் மொழி மேலும் வளர்ச்சியடைவதனைக் காணலாம். இதற்கு உமர்கையாம் பாடல்களின் மொழிபெயர்ப்பு சிறந்த உதாரணம் ஆகும். மேலும் சுனில் குணவர்த்தன அவர்களது ஜம்பொடிலமையோ ஜம்பொடிலமையோ சந்தனு சலாலா ஹன்டா வெட்டன்னே மக மக அத்ததஹ மவூ உகுளே கிந்த எனும் சிங்கள கவிதையின் முதல் நான்கு வரிகளையூம் பைஸ்தீன் அவர்கள் சின்னஞ் சிறுவனே சின்னஞ் சிறுவனே நெடுவழி இடையே தாய் மடி அமர்ந்து கண்ணீர் சிந்தி கதறியழவதேன் என மொழிபெயர்க்கின்றார். இதனை செந்தீரர் அவர்கள் 
சின்னஞ் சிறுவனே சின்னஞ் சிறுவனே
தெருவோரத்தில் தாயின் மடியில் முடங்கியிருந்தும் 
நீ ஏன் கண்ணீர் சிந்தி கதறியழகிறாய் என பெயர்த்துள்ளார்.

இதனை கலாநிதி ரகுமான் அவா;கள் ஏன் சிறுகுழந்தாய் ஏன் சிறுகுழந்தாய் பெருந்தேரு அருகில் தாயின் மடியில் அமர்ந்து கொண்டு கண்ணீர் பெருக்கி அழது வடிக்கின்றாய் என அமைந்துள்ளமையைக் காணலாம்.

இதன் மூலம் குறிப்பிட்ட ஓர்மொழியில் உள்ள இலக்கியத்தை மொழிபெயர்ப்பாளர்கள் வேறு மொழிக்கு பெயர்க்கின்ற போது வெவ்வேறு வகையான புதிய புதிய சொற் கையாளுகைகளைக் அமைத்து மொழியை மேலும் வளமுறச் செய்வதனைக் காண முடியூம். 

உலகமயமாக்கலும்இ தொழிநுட்ப வளர்ச்சியூம் இம் மொழிபெயர்ப்பும் தேவையை அதிகர்க்கச் செய்துள்ளன. உலகங்களுக்கிடையிலான தொடர்பகள் இன்று மிகவூம் அதிகரித்துள்ள நிலையில் பெயர்ப்பு மிக முக்கியத்துவம் பெறுவதாகின்றது. உலக கிராமத்தின் உதயமானது இன்று மொழி என்ற வரம்பைக்  கடந்து மக்களிடையே கருத்தாடல் ஏற்பட வழியமைத்து விட்டது. எனவே இதன் மூலம் மொழிபெயர்ப்புகலையினுடைய அவசியம் எவ்வவகையில் முக்கியமானது என்பதை அறிந்து கோள்ள முடியூம். இத்தகைய அவசியமான செயற்பாடுகள் மொழியினை வளர்ச்சியடையச் செய்வதில் முக்கிய கங்காற்றுகின்றது என்பதை இதன் மூலம் உணரலாம்.  

சேன்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வய்கள் யாவூம் கொண்ர்ந்திங்க சேர்ப்பீர் எனப் பாடினார். புhரதியார் மேல்நாட்டில் சிறப்பாக வளர்ந்துள்ள விஞ்ஞாம் மற்றும் தொழிநுட்பம் சார்ந்த விடையங்கள் யாயூம் இன்று தமிழில் வரவேண்டுமானால் அதாவது மேலைத்தேய மொழிகளிலுள்ள இவ்வம்சங்கள் கீழைத்தேய மொழிக்கு வரவேண்டுமானால் மொழிபெயர்ப்பு கலை மிகவூம் அவசியமாகும். நமது கீழைத்தேய மொழிகள் ஆன்மீகத்தினதும் கலைகளினதும் கூட்டாக விளங்ககின்றது. எனினும் நவீன nhழிநுட்ப ஊற்றுகளாக விளங்குவது மேலைத்தேய மொழிகளே ஆகும். ஏல்லா மேலைத்தேய மொழிகளையூம் எல்லோரும் கற்பது இலகுவவான விடமல்ல. அதற்காக மேலைத்தேய அறிவியல் செய்திகளை அறியாமல் இருப்பது குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போன்ற செயலாகும். எனவே மேலைத்தேய அறிவியலை நமது சமூகம் உணர்ந்து கொள்வதற்கான ஒரு வழி மொழிபெயர்ப்புக் கலையாகும். இவ்வாறு மொழிபெயர்ப்பு செய்வதன் மூலம் புதிய புதிய அறிவியற் செய்திகளைஇ அறிவிற் சொற்களை புதுக் கலைச் சொற்களை பெற்று மொழியானது மேலும் வளர்ச்சியூளும். எனவே இதன் மூலம் மொழி வளர்ச்சியில் மொழி பெயர்ப்பானது இன்றியமையாத ஒன்றென்பதை அறிந்து கொள்ள முடியூம்.

தகவல் தொழிநுட்ப யூகத்தை நோக்கி உலகம் முன்னேறி வருகின்றது. இத்தகவல் தொழிநுட்ப புரச்சி காரணமாக உலக மக்களிடையே அறிவூத் தேடல் அவிகரித்துள்ளது. இன்று அறிவூப் பிரவாகம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஊலக மக்களின் இந்த அறிவூத் தேலுக்கு மொழிபெயர்ப்ப உதவலாம் என்பது பலரது அபிப்பிராயமாகும். ஏன்வே பிறமொழி நூல்களை மொழிபெயர்ப்பதன் மூலமாக இத்தேவை ஈடுசெய்யப்படலாம். இச்செயலோடு மொழியூம் விருத்தியடையூம். இதன் மூலம் மொழி வளர்ச்சியில் மொழி பெயர்ப்பை அறிந்து கொள்ள முடியூம்.  





5.பேராசிரியர் சு.வித்தியானந்தன் .இலங்கைத் தமிழ் நாட்டார் கலை வளர்ச்சிக்குப்
 பேராசிரியர் சு.வித்தியானந்தன் ஆற்றிய பங்களிப்பு


அறிமுகம்.
           ‘ தோன்றிப் புகலோடு தோன்றுக அஃறிலாh;
            தோன்றலில் தோன்றாமை நன்று’’
என்னும் வள்ளுவரின் வாக்குக்கு இணங்க வித்தியானந்தம் அவHகள் புகழோடு தோன்றி புகழோடுவாழ்ந்து புகழ்பட மறைந்தவHகளுள் ஒருவH. ஆகையால் இவரது தமிழ்ப்பணி முக்கியத்துவப்படுத்தப்படுகிறது.
இலங்கை தமிழிலக்கிய வரலாற்றில் தனக்கென முக்கியமான இடத்தை உடையவர் சுப்பிரமணியம்  முத்தம்மா தம்பதியருக்கு 2வது புதல்வராக 1924ம் ஆண்டு மே மாதம் 8ம் திகதி பிறந்தர். 
யாழ்பாணமாவட்டத்தில் தெல்லிபளையில் உள்ள வீமன் காமம் என்னும்ஊரில்ஆரம்பக்கல்வி வீமன் காமம் தமிழ் பாடசாலையிலும் இடைநிலைக்கல்வி யூனியன் கல்லுhரியிலும்  யாழ் பரியோன் கல்லுhரியிலும் இந்துக்கல்லுhரியிலும் பெற்றார்
1941ம் ஆண்டு கொழும்பு கல்லுhரி மாணவரானர் 
1944 கலைமானி பட்டம் 1946ம் ஆண்டு முதுகலைமானி பட்டத்தையூம் பெற்றார்
1998ம் ஆண்டு லண்டன் பல்கழைக்கலகத்தின் கீழைத்தேய கல்விக்கல்லுHரியில் ‘பத்து;பாட்டு வரலாற்று சமுக மொழ்நோக்கு’ என்பதைபற்றி கலாநிதிப்பட்ட ஆய்வினை மேற்கொண்டர்

தமிழ்ப்பணிகள்-
1. தமிழிலக்கிய ஆய்வூ பணி. 
2. நாட்டார் வழக்காற்றிலுக்கு ஆற்றிய பணி. 
3. தமிழபராய்ச்சி மாநாட்டுப் பணி 
4. தமிழிலக்கிய ஆய்வூ-

தமிழிலக்கிய ஆய்வூ பணி. 
பண்டைத் தமிழரது பண்பாடு எவ்வாறு இருந்தது என்பது பற்றி அக்கால இலக்கியதரவூகளைக் கொண்டு எழுதிய நுhலாக ‘தமிழா; சால்பு’ ஆகும் 1954இல் வெளியாகியது.
தமிழருடைய பண்டைய வரலாறு .அரசமைப்பு .நாட்டுபொருளாதார நிலை .சமுக அமைப்பு .கலை. கல்விபற்றி ஆராய்ந்து எழுதியூள்ளார்.
கிறிஸ்தவ. இஸ்லாமிய இலக்கியங்கள் பற்றி பல கட்டுரையை எழுதினார்
இவர் ‘இஸ்லாமியரும் தமிழும்’ ‘இஸ்லாமியர் தமிழிற் பாடிய புதிய பிரபந்த வகைகள்’’ இஸ்லாமியர் நாடோடிபாடல்கள்’ ‘இஸ்லாத்தின் திருத்துதர் காட்டிய வழி’’ போன்ற பல கட்டுரைகளை எழுதினார் .
கலையூம். பண்பும்’’ 1961ம் என்னும் நுhலை எழுதினார்.
கிறிஸ்தவர் தமிழுக்கு தமிழ் சங்க இதழாகிய இளங்கதிரில் ‘கிறிஸ்தரும் ஈழத்திலே தமிழ் வளர்ச்சியூம்’’ 1962ம் ஆண்டில் கடடுரையை எழுதினார்.
உடுவில் மகளீர் கல்லுhரி இதழிலே ‘அமெரிக்க மிசனும் தமிழர் கல்வியூம்’’ என்னும் கட்டுரையை எழுதினார்
மலேசியாவில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் ‘ஈழத்து மிசனரிமாh; தமிழ்த் தொண்டு’’ 1964ம் ஆண்டு எழுதினாh;.
இவரின் முதல் நுhல் ‘இலக்கிய தென்றல்’’இது 1953ல் வெளியாகியது.
யாழ்ப்பாண முத்தமிழ் வெளயீட்டுக்கழகம் ‘தமிழியற் சிந்தனைகள்’’ எனனும் நுHலை1979 இல் வெளியிட்டார்.
இளங்கதிரில் ‘தமிழ் இலக்கியப் பரப்பு;;’’ ‘பாரதி சபதம்’ கட்டுரையை எழுதினார்

நாட்டார் வழக்காற்றியலுக்கு ஆற்றிய பணி-
1957இல் இலங்கை கலைக்கழகத்தில் நாடகக் குழுவிற்கு தலைவராகி இலங்கை தமிழரது பண்பாட்டை பேணினார்
‘மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள்’’ என்னும் நுhலை 1960இல் தொகுத்தார் 
மன்னார் நாட்டுப்பாடல்கள்’’ என்னும் நுhலை 1964இல் தொகுத்தார்
இவரின் முதல் கூத்து பிரதியாக ‘அலங்காரருபன் நாடகம்’’ விளங்குகின்றது.
இவரின் மூன்று கத்தோலிக்க நாட்டுகூத்து-
1 எண்டிறீக்கு எம்பரதோர் நாடகம்-1964
2.மூவிராசாக்கள் நாடகம்-1966
3.ஞானசௌந்தரி நாடகம் -1967

1960களில் கூத்துக்களை நவீனப்படுத்தி நாடகமாக்கி  கூத்துக்கு புத்துயிh; அளித்தார் பல்கலைக்கழக மாணவரையே நடிகராய்க் கொண்டு இராவணேசன் .கா;ணன் போர் நொண்டி நாடகம் போன்ற பல நாடகங்களை மேடையேற்றினார்

இவா; நாட்டார் பாடல் நாட்டுக்கூத்து பற்றி பல கட்டுரைகளை எழுதினார்மட்டக்களப்பிலும் மன்னாரிலும் வழங்கப்படும் கிராமிய நாடகங்கள் பற்றி ‘ஈழத்தின் கிராமிய நாடகங்கள்’ 

தமிழாராய்ச்சி மாநாட்டுப் பணி-
பல தமிழாரய்ச்சி மகாறாடுகளில் பங்கு பற்றி பல கட்டுரைகளை படித்துள்ளார் 
கோலாம்éh; .சென்னை .பாhPஸ் மதுரை ஆகிய இடங்களில் மகாநாடுகளில் பங்கு பற்றியூள்ளார் 
உலக தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கை கிளைக்கு தலைவihயிருந்த கால கட்டத்தில் 1974ஆம் ஆண்டு நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டினை யாழ்ப்பாணத்தில் நடத்தினார்
மட்டக்களப்பில் வரலாறு. சமூகம் .அரசியல் .பொருளாதரம் மொழி.கலை .சமயம் .ஆய்வூ செய்தார் 1983ம் வன்னி மாவட்ட தமிழாராய்ச்சி மாநாடு ஒன்றினை முல்லைத்தீவில் நடத்தினார்

முடிவூரை-
தமிழ்ல் ஆய்வில் ஈடுபட்டும் .தமிழ் ஆய்வாளர் பலரை உருவாக்கினார்
ஈழத்து தமிழாய்வூ வரலாற்றில் சிறந்த இடத்தை பெற்றார் 
பல்கலைக்கழக மாணவருக்கு சிறந்த வகையில் பாடம் புகட்டினார் .உயா;மட்ட மாணவா;களின் ஆய்வூக்கு வழிகாட்டியாக திகழ்ந்தால் 
பல கண்டராய் தமிழா; சால்பினை தரங்கண்டு சொன்னவராய் .நாட்டார் பாடலை தொகுத்து உயா; மட்ட மாணவருக்கு திகட்டினார் 
1989இல் இவ்வூலகை விட்டு நீங்கினார் 
‘©தவூடல் மறைந்தாலும் புகழ் உடல் மறைவதில்லை’ 


நாட்டார் வழக்காற்றியலுக்கு ஆற்றிய பணி-

ஈழத்தமிழர்களின் நாடகப் பாரம்பரியத்தினை மீள்கண்டு பிடிப்புச் செய்தவராக வித்தியானந்தன் கருதப்படுகின்றார். தமிழ்த் தேசிய நாடக வடிவத்தினை உருவாக்க வேண்டுமென்ற நோக்கின் முன்னோடியாகவூம் இவரே காணப்படுகின்றார். 

50களில் நாடகத்துறையில் பெரு விருப்போடு செயற்பட்ட இவர்இ பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களை நெறியாள்கை செய்து மேடையேற்றினார். புpரபல சிங்கள நாடக நெறியாளரான பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திராவின் மனமேஇ சிங்கபாகு போன்ற சுதேசிய நாடகக் கூறுகளில் இருந்து உருவாக்கப்பட்ட சிங்களத் தேசிய நாடகங்களாகக் கருதப்பட்ட நாடகங்களினால் ஊக்கம் பெற்று தமிழ்த் தேசிய நாடக வடிவத்தினை உருவாக்க வேண்டுமென்ற பெருவிருப்பத்தோடுஇ எமது மரபுவழிக் கூத்து முயற்சிகளைக் கிராமம் கிராமமாகச் சென்று அவதானித்துஇ அவற்றுக்கு ஊக்கம் கொடுத்துஇ கூத்து| புத்துயிர் பெறுவதற்காக உழைத்தார். அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பின்வரும் வகையில் நோக்கலாம்.


1. கூத்தினை நவீனப்படுத்தி  புதாக்கங்கள் செய்து கல்வி கற்ற பார்வையாளர் மத்தியில் மேடையேற்றினார்.
கூத்துக்களின் மரபுவழிக்கூறுகள் பெருமளவில் சிதைவூறாது. பழைமைத் தனித்துவத்துடன் காணப்பட்ட மட்டக்களப்புப் பிரதேசத்தில் இருந்த கூத்து வடிவங்களைத் தெரிந்துஇ வந்தாறு மூலை அண்ணாவியார் க.செல்லையாவின் துணையோடு புத்தாக்கம் செய்துஇ கொழும்புஇ பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு தயாரித்துஇ பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு இடங்களிலும் மேடையேற்றினார். 

நாட்டுப் புறத்துக்குரியது என்று பலராலும் ஒதுக்கித் தள்ளப்பட்டஇ குறிப்பாகக் கல்வி கற்ற பார்ப்போர் சமூகத்தினால் நிராகரிக்கப்பட்ட கூத்து வடிவத்தினைஇ ஐரோப்பிய நாடக வடிவங்களுக்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை என்று நிரூபித்துப் பலரும் விரும்பிப் பார்க்கும் வடிவமாகப் ‘புதுக்கி| மேடையேற்றினார். இதனால் கூத்துக்கலை கௌரவத்தினையூம்இ பேணப்படும் தொடர்ச்சியினையூம் பெற்றுக்கொண்டது. அவர் கூத்தில் மேற்கொண்ட மாற்றங்கள் வருமாறு:

1) விடிய விடியக் கிராமங்களில் ஆடப்பட்ட கூத்து வடிவத்தினை இரண்டு மணித்தியாலங்களுக்குள் சுருக்கி மேடையேற்றினார்.
2) கிராமங்களில் வட்டக் களரியில் ஆடப்பட்ட கூத்துக்களைப் படச்சட்ட மேடைக்குரிய வடிவமாக மாற்றினார்
3) பழைய கூத்துக்களைச் சுருக்கியூம்இ சில புதிய கூத்துக்களை எழுதுவித்தும் தயாரித்து மேடையேற்றினார்.
4) பாடல்களைச் செம்மையாக்கிச் சாஸ்திரிய இசைக்கு நெருக்கமாக வரத்தக்கவகையில் சீர் செய்தார்.
5) ஆடல்களைச் செம்மையாக்கியதுடன்இ படச்சட்ட மேடைக்கு வரத்தக்கவகையில் திருத்தம் செய்தார்.
6) நாடக நிலைப்பட்டஇ மோதல்இ வளர்ச்சிஇ உச்சம்இ முடிவூ போன்ற நிலைகள் உருவாகத்தக்கவாறு நாடகப்பிரதியைச் சீர் செய்தார்.
7) பாத்திரப் பண்பு சிறப்புற வெளிப்படும் தன்மையில் அதிக பயிற்சிகளினூடாகஇ நடிப்பில் முழுமையைத் தோற்றுவித்தார்.
8) மோடியூற்ற வேட உடை ஒப்பனைக்குப் பதிலாகஇ யதார்த்தம் மேலோங்கிய பிரக்ஞைபூர்வமான பாத்திரப்பண்புகளுக்குரிய உடைகளை உருவாக்கினார்.
9) ஒளிஇ ஒலிஇ ஒப்பனை போன்ற ஒவ்வொரு அம்சங்களிலும் கலைத்துவத்தினைப்பேணினார்.
10) புதிய இசைக்கருவிகளான ஹார்மோனியம்இ மிருதங்கம்இ ஜெண்டை சங்குஇ வயலின் போன்றவற்றை இணைத்து இசையை மெருகூட்டினார்.
11) பெண்பாத்திரங்களைப் பெண்களே நடிக்கச் செய்தார்.
12) சபையோரை அரங்கின் பக்கத் தட்டிகளுக்குள் மறைத்ததுடன் பிற்பாட்டுப் பாடுவோரை ஒத்த வேட உடையூடன் அரங்கின் பின்வலதில் நிறுத்தினார். மேற்கூறப்பட்ட மாற்றங்களினால் கூத்து கவர்ச்சிகரமானதாகவூம்இ நகரப் பார்வையாளரைக் கவர்ந்த ஒன்றாகவூம் மாறியது. அவர் புதுக்கி மேடையேற்றிய கூத்துக்கள் வருமாறு

  கர்ணன் போர் (1962)
மகாபாரதத்தில் வருகின்ற ‘கர்ணன்| பாத்திரமே இக்கூத்தின் நாயகன்.
குந்திதேவியின் மகனான கர்ணன்இ ஆற்றிலே விடப்பட்டுத் தேரோட்டியினால்
எடுத்து வளர்க்கப்பட்டவன். பாரதப் போரின் மிக முக்கிய திருப்பு
முனையாகிறான். துரியோதனனால் ஆதரவளிக்கப்பட்டுஇ சிற்றரசனாகும் இவன்இ
பாரதப் போரில் பாண்டவருக்கெதிராகப் போர் செய்யப் புகும் போது பிறப்பின்
இரகசியம் அறிந்து தனது சகோதரர் தான் பாண்டவர் என்பதறிந்தும்
செஞ்சோற்றுக் கடனுக்காகப் போர் செய்து மடிகின்றான். அவனது
‘செஞ்சோற்றுக் கடனழிக்கும்| பண்பு இந்நாடகத்தில் வலியூறுத்தப்படுகின்றது.

  நொண்டி நாடகம் (1963)
மட்டக்களப்பில் ஆடப்பட்ட தென்மோடி நாடக வடிவமாகிய இதனைப்
பேராசிரியர் வித்தியானந்தன் புத்தாக்கம் செய்தார். செட்டி ஒருவனின்
மனைவியைத் தனது மனைவி என வாதிடும் பேராசைக்கார நொண்டி ஒருவனின்
கதையே இக்கூத்தின் கருப்பொருளாகும்.

  இராவணேசன் (1964)
இராமாயணத்திலுள்ள இராவணனைக் கதாநாயகனாகக் கொண்டுஇ வீரத்திற்காக
வீழ்ச்சியை ஏற்கும் ~அவல நாயகனாக இராவணனைச் சித்திரித்து வடமோடிக்
கூத்துமுறையில் இந்நாடகம் தயாரிக்கப்பட்டது.

  வாலிவதை (1965)
இராமாயணத்திலுள்ள ~வாலியை|க் கதாநாயகனாகக் கொண்ட நாடகமே
வாலி வதையாகும். சூழ்ச்சியால் கொல்லப்பட்ட வாலியின் அவலமுடிவே
நாடகத்தின் மையப்பொருளாகும். இதன் முற்பகுதியைக் கூத்தாகவூம்
பிற்பகுதியை உரைநடை நாடகமாகவூம் பேராசிரியர் வித்தியானந்தன் ஆக்கி
இருந்தார்.
1. கூத்து மரபுக்கு எழுச்சியை ஏற்படுத்தினார்.
கூத்துக்களின் புத்தெழுச்சிக்காகஇ பேராசிரியர் அண்ணாவிமார் மாநாடுகளையூம்இ கூத்து விழாக்களையூம்இ கருத்தரங்குகளையூம் நடத்தினார். மன்னார்இ மட்டக்களப்புஇ யாழ்ப்பாணப் பிரதேசங்களில் நடத்தப்பட்ட மேற்படி நிகழ்வூகளினால் கூத்து மரபுக்குப் புத்தெழுச்சி ஏற்பட்டது.

2. கூத்துப் போட்டிகளை நடத்தினார்.
கலைக்கழகத்தினூடாகஇ பிரதேசஇ தேசிய மட்டங்களில் கூத்துப் போட்டிகளை நடத்திப் பரிசில்களை வழங்கியதனூடாகக் கூத்து மரபுக்குப் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தினார்

3. கூத்து நூல்களை அச்சுவாகனமேற்றினார்.
ஏட்டுருவில் கிடந்து அழிந்து போய்க் கொண்டிருந்த கூத்து வடிவங்களை நூலாக்கி அச்சுருப்பெறும் நிலையைத் தோற்றுவித்தார். 
ஞான சௌந்தரிஇ 
என்றிக் எம்பரதோர்இ
மூவிராசாக்கள்இ 
அலங்கார ரூபன் போன்ற கூத்துக்கள் இவரால் பதிப்பிக்கப்பட்டன.இவரைத் தொடர்ந்து பலரும் இம்முயற்சியில் ஈடுபட்டனர்

பேராசியரியர் வித்தியானந்தன் மேற்கொண்ட புத்தாக்க
நடவடிக்கைகளினால் கவரப்பட்டுப் பலரும் அவ்வாறான நுட்பங்களைப் பின்பற்றிக் கூத்துக்களைத் தயாரித்தனர். மட்டக்களப்புஇ மன்னார்இ முல்லைத்தீவூஇ யாழ்ப்பாணம்இ மலையகம் என இம்முயற்சி பரவலாக இடம் பெற்றது. 
பேராசிரியர் மௌனகுருஇ இளைய பத்மநாதன்இ தாசீசியஸ் போன்றௌர் கூத்தின் வடிவத்துக்குள் சமகாலத்துக்குரிய கதைப் பொருளைப் புகுத்திப் புதிய கூத்துக்களை ஆக்கினர்இ சங்காரம்இ கந்தன் கருணைஇ பொறுத்தது போதும் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
கூத்தின் பல்வேறு கூறுகளை நவீன நாடகங்களில் இணைத்துப் பயன்படுத்தும் போக்கும் வித்தியானந்தனுக்குப் பின் காணப்பட்டது. கூத்தின் ஆடல்கள்இ பாடல்கள்இ அளிக்கைமுறைஇ வேட உடைகள் போன்றவை இவ்வாறு பயன்படுத்தப்பட்டன. தாசீசியஸ்இ நா. சுந்தரலிங்கம்இ குழந்தை ம. சண்முகலிங்கம்இ க. சிதம்பரநாதன்இ பிரான்சிஸ் ஜெனம் போன்றௌரை இம்முயற்சிகளின் உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
நடிகர் ஒன்றியத்தினால் தயாரிக்கப்பட்ட ஷுகந்தன் கருணை| சிந்து நடைஇ வடமோடிஇ தென்மோடிஇ மன்னார்ப் பாங்குஇ கண்டிய நடனம் போன்ற பல கூத்து மரபுகளையூம் பரீட்சார்த்தமாக ஒன்றிணைத்த வடிவமாகும். இத்தகைய ஒரு போக்கும் பிற்பட்ட காலங்களில் சிலரால்பின்பற்றப்பட்டது.
பேராசிரியர் மௌனகுருஇ செந்நெறிக் கலைவடிவமான பரத நாட்டியத்தினையூம்இ கூத்தினையூம் இணைத்துப் பரீட்சார்ததமான புதிய நாடகங்களையூம் தயாரித்தார். அவரது சக்தி பிறக்கிதுஇ மழைஇ சரிபாதி போன்றவற்றினை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
80 களுக்குப் பின் திருமறைக்கலாமன்றமும் மேற்கூறப்பட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.




ஆசிரியர் 

எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.

1 comment:

  1. Golden Gate Hotel and Casino - Mapyro
    Find 경산 출장마사지 Golden 강원도 출장샵 Gate Hotel and 오산 출장안마 Casino, Las Vegas, Nevada, 화성 출장샵 United States, 수원 출장마사지 0843092 directions, reviews and information for Golden Gate Hotel and Casino,

    ReplyDelete