தமிழ் - சங்கமருவிய காலம் - வினாக்களும் - விடைகளும்
தொகுப்பு – ஆசிரியர் எஸ்.எஸ்.ஜீவன்
01.சங்கமருவிய கால இலக்கிய வளர்ச்சிற்கு ஏதுவாக அமைந்த சமுகஇ அரசியல் காரணிகளை விளக்குக?
அல்லது
சங்கமருவிய கால அரசியல்இ சமூகஇ பொருளாதார நிலையினை விளக்ககுக?
அறிமுகம்
சங்கமருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டோடு முடிந்ததாகக் கூறிய சங்ககாலத்திற்கும் கி. பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்த பல்லவராட்சிக் காலத்திற்கும் இடைப்பட்ட காலப் பகுதி சங்கமருவிய காலமெனப்படும். அது ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளைக் கொண்டது.
அரசியல் நிலை
சங்கமருவிய காலப் பகுதியில் ஆரிய நாகரிகமும் கலைப்பண்பும் தமிழ் நாட்டிற் பரவியிருந்தமையால் வடமொழியிலுள்ள அறநூல் பொருணூல்களுக் கிணங்க அவர் ஒழுகத் தொடங்கினர். அந்நூல்களிற் கூறப்படும் யாகம் முதலிய வற்றை அவர் செய்ய விரும்பியமையால் அந்தணரின் உத வியை நாடினர். அந்தணரும் அவருக்குப் புரோகிதராயூம்இ பின் அமைச்சராயூம்இ தூதுவராயூமிருந்து அரசியற்கருமங்கள் நடத்தினர். சங்காலத்தில் குடிகளுக்கு மிடையேயூள்ள நெருங்கிய தொடர்பு நாளடைவிற் குன்றத்தொடங்கிற்று. அரசனைத் தம் உயிரென மதித்து வாழ்ந்த சங்ககால மக்களுக்கும் மன்னருக்குமிடையே இருந்த அன்புத்தொடர்பு சங்கமருவியகால ஆரம்பத்திலிருந்து சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கிற்று. அக்காலத்தில் உயர்நிலை பெற்றிருந்த அரசியல் முறை வலிகுன்றுதற்கு மக்களுக்கும் அரசருக்குமிடையே நெருங்கிய தொடர்பில்லாதிருந்தமையூம் ஒரு காரணமெனலாம். இவ்வாறு தமிழரசரின் வலிமை குன்றிய காலத்திற் களப்பிரர் என்னும் ஒரு மக்கட்குழுவினர் தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். அவர் யாவர்இ அவராட்சி எத்தகையதுஇ அதனுல் நாடடைந்த பயன் யாது என்றெல்லாம் நாம் திட்டமாகக் கூறமுடியாத நிலையிலிருப்பதால்இ தமிழ்நாட்டின் வரலாற்றில் அவராட்சிக்காலம் ஒர் இருள்பரந்த காலப்பகுதியாகவே காட்சியளிக்கின்றது. ஏறக்குறைய ஒரு நூற்றண் டளவிலே தமிழ்நாட்டையாண்ட களப்பிரரின் வலிமை நாளடை விற் குன்றத் தொடங்கியது. பின்னர் கி. பி. ஆறாம் நூற்றண்டின் பிற்பகுதியிற் சோழநாட்டைப் பல்லவரும்இ பாண்டி நாட்டைப் பாண்டியரும் கைப்பற்றி ஆளத்தொடங்கினர்.
சமூகம்
தமிழ் மக்களின் பண்பாடு சங்க மருவியகாலம் ஆரம்பித்தபின் மாறுபட்டதற்குப் பலஇ கார ணங்களுள. ஆரியர் பெருந் தொகையினராய்த் தமிழ்நாட்டிற்கு வந்து தங்கியிருந்துஇ தம் அறிவூ ஆற்றல் ஒழுக்கங்களால் மக்களைத் தம் வசப்படுத்தித் தம் பண்பாட்டினை அவர்களி டையே பரவச்செய்தமையை அக்காரணங்களுள் ஒன்ருகக் கூறலாம். சங்ககாலத்தில் ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்து தங்கி யிருந்தபோதிலும்இ அவர்களுக்கும் தமிழ் மக்களுத்குமிடையே நெருங்கிய தொடர்பிருக்காமையால்இ ஆரியரின் பண்பாடு தமிழ்மக்களின் பண்பாட்டோடு பெரிதும் கலக்கவில்லை யென்றே கூறுதல் வேண்டும். தமிழ்நாட்டின் தமிழ்மக்களோடு கூடிவாழ்ந்ததின் பிராமணர்இ சத்திரியர்இ வைசியர்இ சு+த்திரர் என்னும் நால்வகை வருணப் பாகுபாடு மக்களிடையே புகுந்தது.
சங்கமருவிய காலத்து மக்களின் பண்பாட்டிற் பெரியதோர் மாறுதலேற்பட்டது. தமிழ்மக்கள் ஆரியர் போற்றிய மணவினைக் கரணங்களையூம் ஒழுக்க ஆசாரங்களையூம் தழுவத்தொடங்கினர். அதனுல்இ இயற்கையோடு மக்கள் வாழ்க்கை தொடர்புற்றிருந்த சங்ககாலத்தில் எழுந்த தமி ழிலக்கியத்திலும் வேறுபட்ட பண்பினையூடையதாய்ச் சங்க மருவிய காலத்து இலக்கியம் செல்லத் தொடங்கிற்று. இலக்கியம் வாழ்க்கையை ஆதாரமாகக்கொண்டு எழுவதாகலின்இ சங்கமருவிய காலத்து இலக்கியமும் அக்கால மக்கள் வாழ்க்கைக்கு இணங்க உருப்பெறுவதாயிற்று. அதனால்இ வடமொழி நூற் கருத்துக்களும் கதைகளும் பிறவூம் தமிழிலக்கியங்களில் இடம்பெறத் தொடங்கின. அவற்றைத் தொல்காப்பியம்இ கலித் தொகைஇ சிலப்பதிகாரம் முதலிய நூல்களிற் கண்டு தௌpயலாம்.
பொருளாதாரம்
பௌத்த சமயப் பிரசாரத்திற்குக் காவிரிப்பூம் பட்டினமே தமிழ்நாட்டில் முக்கிய இடமாக இருந்தது என்பது சோழநாட்டில் அக்காலத்திலிருந்த புத்த தத்தர் என்னும் பெரியார் பாளி மொழியி லியற்றியூள்ள நூல் களாலும்இ சாத்தனாரியற்றிய மணிமேகலையாலும் அறியக்கிடக்கின்றது. காவிரிப்பூம் பட்டினத்தைக் கடல்கொண்ட தேசங்கள் அனைத்தும் கடல் கந்த பொருளாதார நிலை உள்நா;டு வர்த்தகம் என்பன முக்கியம் பெற்றது. சங்கமருவிய கால முற்பகுதியிலும் களப்பிரர் ஆண்ட காலத்திலும் தமிழ்நாட்டில் விளங்கிய பல்வேறு சமயங்களுக்கு மிடையே பகை மூளவில்லையென்றே கூறலாம்.இதனால் வனிக மரபு முக்கியமாக வளர்ச்சி பெற்றது எனலாம்.
02.சங்கமருவிய கால இலக்கிய வளர்ச்சிற்கு ஏதுவாக அமைந்த அரசியல் காரணிகளை விளக்குக?
அல்லது
சங்கமருவிய கால அரசியல் நிலையினை விளக்ககுக?
அரசியல் நிலை
சங்கமருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டோடு முடிந்ததாகக் கூறிய சங்ககாலத்திற்கும் கி. பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்த பல்லவராட்சிக் காலத்திற்கும் இடைப்பட்ட காலப் பகுதி சங்கமருவிய காலமெனப்படும். அது ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளைக் கொண்டது.
சங்ககாலத்தில் வளர்ச்சியூற்றுவந்த தமிழ்நாட்டு அரசியல் முறை சங்கமருவிய கால ஆரம்பத்தில் மிகச் சிறந்த நிலையில் விளங்கிற்று. பல வழிகளாலும் அது வளர்ச்சியூற்றிருந்ததனால் அரசியற் கருமங்களெல்லாவற்றையூம் அரசர்கள் தாமாகவே செய்துமுடிக்க இயலாதிருந்தது. அதனால்இ அமைச்சர்இ தூதுவர்இ தண்டத்தலைவர் முதலிய பலருதவியைப் பெற்றுத் தம் அரசியலை நடத்தினர். அக்காலப் பகுதியில் ஆரிய நாகரிகமும் கலைப்பண்பும் தமிழ் நாட்டிற் பரவியிருந்தமையால் வடமொழியி லுள்ள அறநூல் பொருணூல்களுக் கிணங்க அவர் ஒழுகத் தொடங்கினர். அந்நூல்களிற் கூறப்படும் யாகம் முதலிய வற்றை அவர் செய்ய விரும்பியமையால் அந்தணரின் உத வியை நாடினர். அந்தணரும் அவருக்குப் புரோகிதராயூம்இ பின் அமைச்சராயூம்இ தூதுவராயூமிருந்து அரசியற்கருமங்கள் நடத்தினர். அங்ஙூனம் அவர் ஆரியரின் வழிப்பட்டு நின்றமை யால்இ நாளடைவில் அவரும் வடமொழி நூல்களிற் கூறப் படும் நால்வகை வருணங்களுட் சத்திரிய வருணத்தவராகத் தம்மைப் பாவித்துஇ - அவ்வருணத்தினருக்கு உரியன வெனக்கூறப்படும் ஒழுக்கங்களைத் தழுவத்தொடங்கினர்.
அதுவூமன்றிஇ சத்திரியருக்குள்ள சந்திரவமிசம்இ சு+ரியவமிசம் முதலிய வமிசத் தொடர்பு தமக்குண்டென்று கொண்டனர். அதனால்இ தம்மை மக்களுள் உயர்ந்தவராகக் கருதும் மனப்பாங்கும் அவருக்கு உண்டாயிற்று. ஆகவேஇ அவருக்கும் குடிகளுக்கு மிடையேயூள்ள நெருங்கிய தொடர்பு நாளடைவிற் குன்றத்தொடங்கிற்று. அரசனைத் தம் உயிரென மதித்து வாழ்ந்த சங்ககால மக்களுக்கும் மன்னருக்குமிடையே இருந்த அன்புத்தொடர்பு சங்கமருவியகால ஆரம்பத்திலிருந்து சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கிற்று.
அக்காலத்தில் உயர்நிலை பெற்றிருந்த அரசியல் முறை வலிகுன்றுதற்கு மக்களுக்கும் அரசருக்குமிடையே நெருங்கிய தொடர்பில்லாதிருந்தமையூம் ஒரு காரணமெனலாம். இவ்வாறு தமிழரசரின் வலிமை குன்றிய காலத்திற் களப்பிரர் என்னும் ஒரு மக்கட்குழுவினர் தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். அவர் யாவர்இ அவராட்சி எத்தகையதுஇ அதனுல் நாடடைந்த பயன் யாது என்றெல்லாம் நாம் திட்டமாகக் கூறமுடியாத நிலையிலிருப்பதால்இ தமிழ்நாட்டின் வரலாற்றில் அவராட்சிக்காலம் ஒர் இருள்பரந்த காலப்பகுதியாகவே காட்சியளிக்கின்றது. ஏறக்குறைய ஒரு நூற்றண் டளவிலே தமிழ்நாட்டையாண்ட களப்பிரரின் வலிமை நாளடை விற் குன்றத் தொடங்கியது. பின்னர் கி. பி. ஆறாம் நூற்றண்டின் பிற்பகுதியிற் சோழநாட்டைப் பல்லவரும்இ பாண்டி நாட்டைப் பாண்டியரும் கைப்பற்றி ஆளத்தொடங்கினர்.
03.சங்கமருவிய கால இலக்கிய வளர்ச்சிற்கு ஏதுவாக அமைந்த சமய நிலைகளை விளக்குக?
அல்லது
சங்கமருவியகால சமய நிலையினை விளக்ககுக?
சமய நிலை
சங்ககாலத்து மக்கள் சிவன்இ திருமால்இ முருகன்இ கொற்றவையாகிய தெய்வங்களை வழிபட்டுவந்தனர். வேத நெறிவல்ல அந்தணர் தமிழ்நாட்டிற்கு வந்ததன் பயனாக இந்திரன்இ ஐயனார்இ சுப்பிரமணியர் முதலிய ஆரியக் கடவூளர்க் சங்கமருவிய காலம் தமிழ்நாட்டிலே கோவில்கள் எழுந்தன. தமிழ்மக்கள் தாம் தொன்றுதொட்டு வணங்கிவந்த முருகன் முதலிய தெய்வங்க ளோடு சுப்பிரமணியர் முதலிய தெய்வங்களையூம் சேர்த்துச் சங்கமருவிய காலத்தில் வணங்கத்தொடங்கினர். அக்காலப் பகுதியிற் சோழநாட்டை யாண்ட அரசருட் கோச்செங்கணான் என்னும் சோழ அரசன்இ சிவனுக்கும் திருமாலுக்கும் நாடெங்கும் பல கோவில்களைக் கட்டுவித்தான். அக்காலத்திலே சைவம் வைணவமாகிய சமயங்கள் சிறப்பாக வளர்ச்சியூற்று வந்தன வென்பது காரைக்காலம்மையார்இ முதலாழ்வார்கள் முதலியோர் பாடியூள்ள திருப்பாடல்களால் அறியக்கிடக்கின்றது. பாசுபதம்இ காபாலிகம்இ காளாமுகம் என்ற பிரிவூகளும் சைவசம் யத்திலே தோன்றலாயின. அக்காலத்தில் விளங்கிய வைணவ சமயத்தில் இவைபோன்ற பிரிவூகள் தோன்றவில்லையென்றே கூறலாம்.
சமண முனிவரும் பௌத்த சந்நியாசிகளும் பெருந்தொகையினராய்த் தமிழ்நாட்டிற்கு வந்து தம் சமயக் கொள்கைகளைப் பரப்புதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்துவந்தனர். அவர் தமிழ்நாட்டிற் பற்பல இடங்களில் ஆங்காங்கு பள்ளிகளையூம் விகாரைகளையூங் கட்டினர். வாழ்க்கையிற் சமண முனிவர்கள் அனுசரிக்கவேண்டிய ஒழுக்க நெறிகளை வகுத்தற்பொருட்டும் சமண - சமயத்தைத் தமிழ்நாட்டில் வளர்த்தற்பொருட்டும் கி. பி. 470 இல் வச்சிரநந்தி என்னும் சமணமுனிவர் 'திராவிட் 'சங்கம்' எனப் பெயரிய சங்கமொன்றை மதுரையில் அமைத்தன ரென அறியக்கிடக்கின்றது. அக்காலந்தொட்டுச் சமண சமயம் தமிழ்நாட்டிற் சிறப்பாக வளரத்தொடங்கியது.
சமணரைப் போலவே பௌத்தரும் தம் சமயக் கொள்கைகளை மக்களிடையே பரப்பிவந்தனர். பௌத்த சமயப் பிரசாரத்திற்குக் காவிரிப்பூம் பட்டினமே தமிழ்நாட்டில் முக்கிய இடமாக இருந்தது என்பது சோழநாட்டில் அக்காலத்திலிருந்த புத்த தத்தர் என்னும் பெரியார் பாளி மொழியி லியற்றியூள்ள நூல் களாலும்இ சாத்தனாரியற்றிய மணிமேகலையாலும் அறியக்கிடக்கின்றது. காவிரிப்பூம் பட்டினத்தைக் கடல்கொண்டபின் பௌத்த சந்நியாசிகள் காஞ்சியைத் தமக்கு இடமாகக்கொண்டு தம் சமயத்தைத் தமிழ்நாட்டிலே பரப்பிவந்தனர். சங்கமருவிய கால முற்பகுதியிலும் களப்பிரர் ஆண்ட காலத்திலும் தமிழ்நாட்டில் விளங்கிய பல்வேறு சமயங்களுக்கு மிடையே பகை மூளவில்லையென்றே கூறலாம். களப்பிர ராட்சிக்குப்பின்பே சமயப்பகை தோன்றிற்றெனலாம்.
பல்லவர் காலத்திற் பெருக்கெடுத்துச் சென்ற பத்தி மார்க்கம் அறவொழுக்கங்களைச் சிறப்பாகப் பாராட்டிய சங்கமருவிய காலத்தின் பிற்பகுதியில் ஊற்றெடுக்கத் தொடங்கிற்றெனலாம். அக்காலப்பகுதியில் வாழ்ந்த பொய்கையாழ்வார்இ பூதத்தாழ்வார்இ பேயாழ்வார் ஆகிய முதலாழ்வார்களும் காரைக்காலம்மையார் முதலிய சைவப்பெரியார்களும் சிறந்த பத்திவைராக்கிய முடையோராய்இ இறைவன் திருவூருவைக் கண்டனுபவித்தல்இ அவன் புகழ் பாடுதல் என்பவற்றைத் தம் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு தம் காலத்தைக் கழித்தனர். உலகவாழ்விற் பிறிதொன்றனையூம் விரும்பாது இறைவன் திருமேனியழகில் லயப்பட்டுநிற்ற லொன்றனையே அவாவின ரென்பதை அவர் பாடிய திருவந்தாதிகள் வாயி லாக அறியக்கிடக்கின்றது. காரைக்காலம்மையார் பாடியருளிய பிரபந்தங்கள் அற்புதத் திருவந்தாதிஇ திருவிரட்டை மணிமாலைஇ திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் என்பன. அவையாவூம் 140 செய்யூட்களை உடையனவெனினும்இ அவை பல்லவர் காலத்துச் சமய இலக்கியங்களை ஒரு புதுவழியிற் செல்லவைத்த அத்துணைப் பெருமை வாய்ந்தவை. அம்மையார் அருளிச்செய்த பிரபந்தங்களும் முதலாழ்வார்கள் அருளிச்செய்த திருவந்தாதிகளும் பல்லவர் காலத்துப் பத்திப் பாடல்கள் தோன்றுதற்கு ஓர் அறிகுறியாக அவற்றுக்குமுன் விடிவெள்ளிபோன்று உதயமானவையெனினும்இ பல்லவர்கால இலக்கியப்போக்கிற்கு வழிகாட்டிவைத்த பெருமை அம்மையார் அருளிச்செய்த பிரபந்தங்களுக்கே உண்டு. அதனால்இ அம்மையார் தமிழ்நாட்டுப் பெரும்புலவர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க சிறப்புவாய்ந்தவர் எனக் கூறுதல் பொருத்த முடைத்தாகும்.
சிலப்பதிகாரக் கதை இளங்கோவடிகள் காலத்தில் நடை பெற்ற உண்மை நிகழ்ச்சிதான் என்று நூலைப்படிப்போர் எவரும் நம்பக்கூடிய முறையிலே கதை புனையப்பட்டிருத்தல் அடிகளுடைய புலமைத் திறனுக்கு ஒரு சான்ருகின்றது. அது உண்மையில் அக்காலத்தில் நிகழ்ந்ததொன்றன்று. சங்க காலத் தில் வழங்கிவந்த ஒரு கதையை எடுத்துஇ அதனைக் காவிய உருவத்தில் அடிகள் அழகுற அமைத்துக் காட்டுகின்றர் என்றே கூறுதல் வேண்டும். துன்பம் மீதூரப்பட்ட பெண்ணொருத்தி தன் முலையொன்றை அறுத்தெறிந்த வரலாறு நற்றினைச் செய்யூளொன்றிற் குறிக்கப்பட்டுள்ளது. அதைக் குறிக்கும் செய்யூட் பகுதி வருமாறு:- எரிம்ருள் வேங்கைக் கடவூள் காக்கும் குருகார் கழனியின் இதணத் தாங்கண் ஏதி லாளன் கவலை கவற்ற ஒருமுலை யறுத்த திருமா வூண்ணி'.
சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டுள்ள கதையின் தொடர்ச்சி யாகஇ மதுரைக் கூலவாணிகன் சாத்தனர் தாம் இயற்றிய மணிமேகலையென்னும் காவியத்தில்இ கோவலன் இறந்தபின் மாதவியூம் அவள் மகள் மணிமேகலையூம்இ பௌத்த சங்கத் தைச் சார்ந்து வாழ்ந்த கதையையூம்இ மணிமேகலை துற வொழுக்கம் பூண்டு அறவண அடிகள் பாற் றரும உபதேசம் பெற்று ஈற்றிலே 'பவத்திறம் அறுக’ என அவள் நோற்ற கதையையூம் எடுத்துக் கூறுகின்றனர். இந்நூலாசிரியர் பௌத்தசமய சித்தாந்தத்தையூம் பௌத்தசாதகக் கதைகளையூம் நன்கு கற்றறிந்த பெரியாரென்பதையூம்இ பௌத்தசமயக் கொள்கைகளையூம் துறவொழுக்கத்தின் பெருமையையூம் தமிழ் மக்களுக்கு எடுத்துக்காட்டிஇ அச்சமயத்தை நாட்டிற் பரவச் செய்யூம் நோக்கங்கொண்டு இந்நூலை இயற்றினுர் என்பதை யூம் இந்நூல் தௌpவாகக் காட்டுகின்றது. வீட்டுநெறிக்கு ஏதுவாகவூள்ள துறவொழுக்கத்தைப் கலைக்கும்இ அறம் பொருள் இன்பங்களைச் சிறப்பித்துக் கூறும் சிலப்பதிகாரத்திற்கு மிடையே நெருங்கிய கதைத்தொடர்பு இருப்பதால்இ அவையிரண்டும் அறம்இ பொருள்இ இன்பம்இ வீடு ஆகிய நாற்பொருளையூம் கூறும் ஒரு நூலின் இருபாகங்கள் போலக் காட்சியளிக்கின்றன. இங்ஙூனம் இந்நூல்களுக் கிடையே கதைத்தொடர்பு காணப்படலாலும் இளங்கோவடிகள் வஞ்சிக்காண்டத்திலே சாத்தனூர் என்ற புலவர் ஒருவரைக் குறிப்பிடுவதாலும் பிறவற்ருலும் இந்நூல்கள் இரண்டும் ஒரே காலத்தில் இயற்றப்பட்டவை என்பர் சிலர் உண்மையிற் சிலப்பதிகாரந் தோன்றிப் பல ஆண்டுகள் சென்றபின் இந் நூல் தோன்றியிருத்தல் வேண்டும் எனக் கொள்ளுதற்குச் சான்றுகள் பலவூள. தமிழிலக்கியமரபுஇ மொழிமரபுஇ செய்யூள் மரபு முதலியவற்றின் வளர்ச்சிக் கிரமத்தை நோக்குமிடத்தும்இ இந்நூல்கள் குறிக்கும் பண்பாடுஇ சமயநிலை இ முதலியவற்றை நோக்குமிடத்தும் சிலப்பதிகாரம் எழுந்த காலத்தில் இந்நூல் எழவில்லையென்பது புலனுகும்.
காலத்தின் போக்கிற்கு இணங்க இலக்கியம் அமைகிறது என்பதற்கு மணிமேகலையை ஒர் உதாரணமாகக் கூறலாம். இந்நூல் எழுந்த காலம் பல்வேறு சமயவாதிகள் தத்தம் சமயமே மெய்ச்சமயம் என்பதை நிலைநாட்டப் பிரசாரம் செய்த காலமாகும். ஆகவேஇ இக்காலப்பகுதியில் வாழ்ந்த புலவர்கள் சமயக் கருத்துக்கள் பொதிந்த கதைகள் கூறும் இலக்கியங் களை யாத்தனர். வளையாபதிஇ குண்டலகேசி முதலிய காவி யங்களும் தமிழ்நாட்டிலே சமயக்கொள்கைகளைப் பரப்பும் நோக்கமாக எழுந்தவை. மணிமேகலையாசிரியர் பௌத்தசம யக் கருத்துக்களை விளக்குதற்கு மாதவிமகள் மணிமேகலை யின் கதையை ஆதாரமாகக் கொண்டனர். இபளத்தசமய நெறியிலே துறவொழுக்கமும் சமுதாயத்தொண்டும் முக்கிய இடம்பெறுதலால் அவையிரண்டையூம் சிறப்பாக எடுத்துக் காட்டுதற்பொருட்டு நூலை இயற்றினர்; அதனுல்இ இந்நூலுக்குத் துறவூ உயிர்படியாக அமைகின்றது. சங்கச் செய்யூளுக்குக் காதல் பொருளாக அமைந்ததை நாம் முந்திய அதிகா ரத்திற் கண்டோம். அக்காலப்பகுதி நீங்கஇ துறவொழுக்கத்தை மக்கள் போற்றும் காலப்பகுதி வருதலால்இ இலக்கியத்திற் காதல் பெற்றிருந்த இடத்தைத் துறவூ பெறுகின்றது. உதய குமரன் என்னும் இளவரசன் மணிமேகலையிடத்திற் காதல் கொண்டு அவள் அன்பைப்பெற அரும்பாடுபடுகிருன் மணி மேகலைக்கும் அவனிடத்திற் காதல் உண்டாகின்றதெனினும் அவளுடைய உள்ளமானது துறவொழுக்கத்தை நாடிநிற்கின் றது. அதனுல்இ அவனிடத்திலே தனக்குண்டான காதலை வெளிப்படுத்த விரும்பாதுஇ அதைக்கரந்து ஒழுகுகின்ருள். அவள்மேல் அவன்வைத்த காதலை மறக்கச்செய்யூம் நோக்கமாக அவள் பல சந்தர்ப்பங்களிலும் யாக்கை நிலையாமை முதலியவற்றை அவனுக்கு எடுத்துக்கூறுகின்றாள். இவ்வா றெல்லாம் அவள்இ முயன்றபோதும் அவர்கள் ஒருவரில் ஒருவர் கொண்ட காதல் தணியவில்லை. ஆகவேஇ உதயகுமரன்பால் அவள் வைத்தகாதல் அவளை ஒருபுறம் இழுக்கத் துறவொழுக்கம் பூண்பதில் அவளுக்குண்டான வேணவா மற்றொரு புறம் இழுக்கஇ இவையிரண்டிற்குமிடையே கிடந்து ஊசலாடு கின்றது அவளுள்ளம். இதனைச் சாத்தனார் சித்திரித்துக்காட்டும் வகை அவர் - ஒரு பெரும்புலவன் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைகின்றது. மணிமேகலை காயசண்டிகை வடிவெய்தக் காயசண்டிகையின் கணவனாகிய காஞ்சனனென்னும் விச்சாதரன் வந்துஇ அவள் காயசண்டிகையா மெனக் கருதிஇ அவள் பின்னிலைவிடா உதயகுமரனை வாளால் வெட்டிக் கொன்றபோதுஇ அவள் ஆற்றொணாத் துன்பமுற்றுக் கூறிய வார்த்தைகள் மிக்க சோகரசம் பொருந்தியனவாக உள்ளன. அவை வருமாறு: "உவ்வன மருங்கினின்பாலுள்ளந்தவிர்விலே னாதலிற் றலைமக டோன்றி மணிப்பல் லவத்திடை யென்னையாங் குய்த்துப் பிணிப்பறு மாதவன் பீடிகை காட்டி யென்பிறப் புணர்ந்த வென்முற் றௌன்றியூன்பிறப் பெல்லா மொழிவின் றுரைத்தலிற் பிறந்தோ ரிறத்தலு மிறந்தோர் பிறத்தலும் அறந்தரு சால்பு மறந்தரு துன்பமும் யானினக் குரைத்து நின் னிடர்வினை யொழிக்கக் காயசண் டிகைவடி வானேன் காதல வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின் வெவ்வினை யூருப்ப விளிந்தனை யோவென விழுமக் கிளவியின் வெய்துயிர்த்துப் புலம்பி...'' உதயகுமரன் இறந்தபின் அவளுடைய உள்ளமானது துறவூமார்க்கத்தில் விரைந்து செல்கின்றது. ஆகவேஇ அவள் அறவண அடிகள் பாற் சென்று தரும் உபதேசம் பெற்றுஇ ஈற்றிலே பவத்திறம் அறுதற்பொருட்டு நோற்கின்ருள். காலத் தின் போக்கிற்கு இணங்கக் காதல் தோற்றுப்போகத் துறவூ வெற்றிபெறுதலே நாம் இக்காவியத்திற் சிறப்பாதக் காணலாம்.
04. சங்கமருவிய கால இலக்கிய வளர்ச்சிற்கு ஏதுவாக அமைந்த சமூகஇ பண்பாட்டு நிலை காரணிகளை விளக்குக? அல்லதுசங்கமருவிய கால சமூகஇ பண்பாட்டு நிலையினை விளக்ககுக?
சமூகஇ பண்பாட்டு நிலை
சங்ககாலத்திலே குறிஞ்சி முதலிய நிலங்களில் வாழ்ந்த மக்கள் தத்தமக்குரிய நிலங்களின் தன்மைக்கிணங்க இயற்கை யோடு கூடிச் சிறப்புடன் வாழ்ந்துவந்த வகையினை முந்திய அதிகாரத்திற் கூறினுேம். தத்தம் நிலங்களின் தன்மைக் கிணங்கவே அவர்களின் வாழ்க்கையூம் அமைந்திருந்தது. ஒவ் வொரு நிலத்திலும் வாழ்ந்த மக்கள் தத்தம் நிலத்திற்கும் தொழிலிற்கும் ஏற்புடையனவாயிருந்த பழக்க வழக்கங்களைப் போற்றி ஒழுகிவந்தமையால்இ பண்பாட்டு வளர்ச்சி ஒவ்வொரு நிலத்து மக்களிடையேயூங் காணப்பட்டது. வாழ்க்கைமுறை முதலியவற்றில் வேறுவேறு நிலங்களிலிருந்த மக்கட் குழுவினரிடையே வேறுபாடு இருந்தபோதிலும்இ அவர்களுக் கிடையே உயர்வூ தாழ்வூ பாராட்டப்பட வில்லையென்றும்இ எல் லோரும் ஒரு குடும்பத்திலுள்ளவர்களைப் போலவே தம்மை மதித்து வாழ்ந்துவந்தனரென்றும்இ அக்காலத்து இலக்கியங் களினின்றும் அறியலாம். இவ்வாறு சமத்துவமுடையோராய்த் தமிழ்மக்கள் வாழ்ந்ததனுல்இ சங்ககாலத்து மக்களின் பண்பாட்டுநிலை யாவராலும் பாராட்டத்தகுந்த தனிப்பெருமை வாய்ந்ததாய் விளங்கிற்றெனலாம்.
அத்தகைய நிலையிலிருந்த தமிழ் மக்களின் பண்பாடு சங்க மருவியகாலம் ஆரம்பித்தபின் மாறுபட்டதற்குப் பலஇ கார ணங்களுள. ஆரியர் பெருந் தொகையினராய்த் தமிழ்நாட்டிற்கு வந்து தங்கியிருந்துஇ தம் அறிவூ ஆற்றல் ஒழுக்கங்களால் மக்களைத் தம் வசப்படுத்தித் தம் பண்பாட்டினை அவர்களி டையே பரவச்செய்தமையை அக்காரணங்களுள் ஒன்ருகக் கூறலாம். சங்ககாலத்தில் ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்து தங்கி யிருந்தபோதிலும்இ அவர்களுக்கும் தமிழ் மக்களுத்குமிடையே நெருங்கிய தொடர்பிருக்காமையால்இ ஆரியரின் பண்பாடு தமிழ்மக்களின் பண்பாட்டோடு பெரிதும் கலக்கவில்லை யென்றே கூறுதல் வேண்டும்.
தமிழ்நாட்டின் செல்வப் பெருக்கை யறிந்துஇ ஆரியர் பெருந்தொகையினராய் வந்து தமிழ்மக்க ளோடு கூடிவாழ்ந்ததின் பயனுகஇ பிராமணர்இ சத்திரியர்இ வைசியர்இ சு+த்திரர் என்னும் நால்வகை வருணப் பாகுபாடு மக்களிடையே புகுந்தது. ஏற்றத்தாழ்வில்லாத வகையில் மக்கள் ஒருவரோடொருவர் கூடி வாழ்தற்கு உதவியாயிருந்த தமிழ்ப் பண்பாட்டு முறையினைஇ மக்களுக்கிடையே ஏற்றத்தாழ்வூ உண்டு என்பதை அடிப்படையாகக் கொண்டு ஆரியரிடத்தி லெழுந்த நால்வகை வருணப் பாகுபாட்டோடு கூடிய அவர் தம் பண் பாடு தாக்கியதால்இ சங்கமருவிய காலத்து மக்களின் பண்பாட்டிற் பெரியதோர் மாறுதலேற்பட்டது. தமிழ்மக்கள் ஆரியர் போற்றிய மணவினைக் கரணங்களையூம் ஒழுக்க ஆசாரங்களையூம் தழுவத்தொடங்கினர். அதனுல்இ இயற்கையோடு மக்கள் வாழ்க்கை தொடர்புற்றிருந்த சங்ககாலத்தில் எழுந்த தமி ழிலக்கியத்திலும் வேறுபட்ட பண்பினையூடையதாய்ச் சங்க மருவிய காலத்து இலக்கியம் செல்லத் தொடங்கிற்று. இலக்கியம் வாழ்க்கையை ஆதாரமாகக்கொண்டு எழுவதாகலின்இ சங்கமருவிய காலத்து இலக்கியமும் அக்கால மக்கள் வாழ்க்கைக்கு இணங்க உருப்பெறுவதாயிற்று. அதனால்இ வடமொழி நூற் கருத்துக்களும் கதைகளும் பிறவூம் தமிழிலக்கியங்களில் இடம்பெறத் தொடங்கின. அவற்றைத் தொல்காப்பியம்இ கலித் தொகைஇ சிலப்பதிகாரம் முதலிய நூல்களிற் கண்டு தௌpயலாம்.
ஆரியர் வகுத்த யாகங்கள் முதலியவற்றைச் செய்வதில் அரசர் பெருவிருப்பும் ஊக்கமும் உடையராய் வாழ்ந்தமையைப் புலவர் பலர் பாராட்டியிருக்கின்றனர். அதிலிருந்து அக்கால மக்களுக்கும் யாகங்கள்இ கிரியைகள் முதலியவற்றிலிருந்த பெருமதிப்பை அறியலாம். தமிழ்நாட்டின் பண்பாட்டு நிலை இவ்வாறிருக்கஇ வேதநெறியை ஆதாரமாகக் கொண்டெழுந்த சமயங்களை அழிக்கமுயன்ற சமண முனிவர்களும் பௌத்த சந்நியாசிகளும் தமிழ்நாட்டில் வந்து தங்கியிருந்து தம் கொள்கைகளைப் பரப்பத் தொடங்கினர். அவர்கள் அற வூரைகளை நிகழ்த்தியூம்இ அவற்றினுண்மைகளைச் சாதனையாற் காட்டியூம் மக்களைத் தம் வசப்படுத்த முயன்றனர். அறவொழுக்கங்களை ஆதாரமாகக்கொண்ட அவர் மார்க்கம் மக்களிடையே பாவத்தொடங்கியதால் மக்கள் வாழ்க்கையில் அறவொழுக்கங்கள் சிறப்பிடம் பெற்றுவிளங்கின. அதனால்இ அக் காலப்பகுதியிலெழுந்த இலக்கியங்களுட் பெரும்பாலன அறநூல்களாகவூம் அறவழியைப் போற்றுவனவாகவூம் உள்ளன
05.சங்கமருவிய காலத்தில் எழுந்த கீழ்க்கணக்கு நூல்களை தருக?
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் காலம்
பதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகுதியில் அடங்கும் தனித்தனி நூல்களின் காலத்தை வரையறுப்பது எளிதன்று. எனினும்இ இவற்றை இருண்ட காலத்துக்கு உரியன என்று பொதுவாகச் சுட்டுகின்றனர். கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை அமைந்துள்ள காலம் இருண்ட காலம் எனப்படுகிறது.
இத்தொகுப்பில் அடங்கும் நூல்களின் பெயர்களை எளிதில் நினைவில் கொள்வதற்கு ஏதுவாக இடைக்காலத்துச் சான்றௌர் ஒருவரால் எழுதப்பட்ட வெண்பாவொன்று வழங்குகின்றது. அது வருமாறு:
நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்
பால் கடுகம் கோவை பழமொழி மா மூலம்
இன்னிலைய காஞ்சியூடன் ஏலாதி என்பவே
கைந்நிலையூம் ஆம்கீழ்க் கணக்கு.
ஷஷ
இப்பாட்டின்படிஇ இத்தொகுப்பில் அடங்கும் பதினெட்டு நூல்களின் பெயர்களும் கீழே தரப்படுகின்றன.
1) நாலடியார்
2) நான்மணிக்கடிகை
3) இன்னா நாற்பது
4) இனியவை நாற்பது
5) கார் நாற்பது
6) களவழி நாற்பது
7) ஐந்திணை ஐம்பது
8) ஐந்திணை எழுபது
9) திணைமொழி ஐம்பது
10) திணைமாலை நூற்று ஐம்பது
11) திருக்குறள்
12) திரிகடுகம்
13) ஆசாரக்கோவை
14) பழமொழி
15) சிறுபஞ்சமூலம்
16) முதுமொழிக்காஞ்சி
17) ஏலாதி
18) கைந்நிலை
மேலே காட்டிய வெண்பாவில் ஒரு பாடவேறுபாட்டைப் புகுத்திஇ கைந்நிலையின் இடத்தில் இன்னிலை என்ற நீதி நூலை வைத்து எண்ணுவாரும் உளர். எனினும் கைந்நிலையே பெரும்பாலோருக்கும் உடன்பாடானது.
06.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் வகைப்பாட்டினை தருக?
இப்பதினெட்டு நூல்களையூம்
1. நீதி உரைப்பவை (11 நூல்கள்)
2. காதலைச் சிறப்பிப்பவை (6 நூல்கள்)
3. போர் பற்றியது (ஒன்று) என மூன்று பிரிவூகளுள் அடக்கலாம
07.சங்கமருவிய கால நீதி நூல்களை தருக?
பதினெண்கீழ்க்கணக்குத் தொகுதியில் நீதி பற்றியனவே பெரும்பான்மையென்று முன்னர்ச் சுட்டப்பட்டது. அவை வருமாறு:
1) திருக்குறள்
2) நாலடியார்
3) பழமொழி
4) திரிகடுகம்
5) நான்மணிக்கடிகை
6) சிறுபஞ்சமூலம்
7) ஏலாதி
8) இன்னா நாற்பது
9) இனியவை நாற்பது
10) முதுமொழிக்காஞ்சி
11) ஆசாரக்கோவை
08.சங்கமருவிய காலம் ஒர் இருண்ட காலம் என்பதை விளக்குக?
அல்லது
சங்கமருவியகாலம் ஒர் இருண்டகாலமா என்பதை ஆராய்க?
தமிழ் இலக்கிய வரலாற்றில் அவ்வக் காலத்தில் தோன்றிய இலக்கியங்களை ஆதாராமாகக் கொண்டு இயற்கை நெறிக் காலம் என்றும் அறநெறிக் காலம் என்றும் சொல்லப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது அதேபோல் அக்காலத்தில் தோன்றுகின்ற சில குறைபாடுகளை வைத்து இருண்ட காலம் வரண்ட காலம் என்று சொல்லுகின்ற தன்மையூம் காணப்படுகின்றது. இந்த வகையில் சங்கமருவிய காலத்தில் காணப்பட்ட சில அம்சங்களை அடிப்படையாக வைத்து அக்காலத்தை தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒர் இரண்ட காலம் என்றும் சொல்லப்படுகின்றது. ஆவ்வாறு கூறுவதற்கான காரணங்கள் பின்வாருமாறு.
அந்தியராட்சிக் காலம் என்பதால்
சங்கங்கள் அமைத்து தமிழ் வளர்க்காத காலம் என்பதால்
உன்னத சமுக பொருளாதார சுஸ்ரீழல் இல்லாதிருந்ததால்
கவிசுவை குறைந்த இலக்கியங்கள் காணப்பட்டமையால்
நான்கு வகை வர்ணப் பாகுபாடு காணப்பட்டமையால்
அந்நியராட்சிக் காலம் என்பதால்
இக்காலப் பகுதியில் தமிழ் நாட்டுத் தமிழர்கள் அல்லா;களால் அந்நியர அதவாது வடநாட்டில் இருந்து வந்த கள்பினர் என்ற பெயரை கொண்டவர்களால் ஆட்சி செய்யப்பட்டது.இதனால் தமிழ் நாட்டில் அதுவரை இருந்து வந்த அரசர்களுக்கும் புலவர்களுக்கும் அரசர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையிலான தொடர்பும் தளர்ச்சியூற்றது. இதனால் இக்காலத்தில் சங்க காலத்தைப் போல் உன்னதமான இலக்கியங்கள் தோன்றவில்லை அதுமட்டுமல்லாமல் ஆட்சியாளர்கள் வட நாட்டவர்களாக இருந்ததனால் தமிழ் மொழியை வளர்ப்பதில் அவர்கள் அதிக ஆர்வம் கொள்ளவில்லை .மாறாக வடமொழியை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர். இதனால் தமிழ் மொழி அதிகம் வளர்வதற்குப் பதிலாக வடமொழியே வளர்ந்து வந்தது.இவ்வாறன காரணங்களினால் இக்காலத்தை இருண்ட காலம் என்று சொல்லும் வழக்கம் காணப்பட்டது.
சங்கங்கள் வைத்து தமிழ் வளர்க்காத காலம் என்பதனால்
முச்சங்கள் அமைந்தது முடிவூடை முவேந்தர்கள் தமிழ் வளர்த்த காலமாக சங்ககாலம் விளங்கிமையினாலேயே அக்காலத்தை தமிழ் இலக்கிய வரலாற்றில் உன்னதமான காலமாகப் போற்றப்படுகின்றது . முதற்சங்கம் இஇடைசங்கம் இகடைச்சங்கம் ஆகிய முன்று சங்கங்கள் சங்கமருவிய காலத்தில் வளர்க்கப் படவில்லை .தவிர இஏற்கனவே இருந்த சங்கங்கள் அருகியதாலேயே சங்கமருவிய காலம் என்ற பெயர் கொண்டும் அழைக்கப்பட்டது. எனவே இந்த விடயமும் அக்காலத்தை இருண்ட காலம் என்று கூறுவதற்கு வழி வகுத்த்துள்ளது.
உன்னத சமுக பொருளதார சூழல் இல்லாதிருந்ததால்
ஒரு காலத்தில் காணப்படுகின்ற அரசியல் இபொருளதார நிலைகளே இக்காலத்து இலக்கிய ங்களின் சிறந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடியதாக அமைந்தன. அந்த வகையில் சங்கமருவிய காலச் சுஸ்ரீழ்நிலையானது சிறப்பான இலக்கியங்களைத் தோற்றுவிப்கபதற்குச் சாதகமாக அமையவில்லை இதனால் மக்களது பெரும் வாழ்வோ இநாடு நகரங்கள் பற்றிய வருணனைகளோ இ புலவர்களது கவனத்தை ஈர்க்கவில்லை .மேலும் இ களப்பிரர்கள் ஆட்சி செய்தமையால் அவர்களது கலாசாரஇ பண்பாட்டு நிலைகள் தமிழ் நாட்டில் ஆட்சி செலுத்தி இருந்தன.இந்த நிலையில் இக்காலத்திலே எவ்வாறு உன்னத இலக்கியங்கள் தோற்றம் பெற முடியூம்? என்ற கேள்வி இலக்கிய ஆர்வர்களிடத்தில் எமுந்து நிற்கின்றது. எனவேதான் இக் காலத்தை இருண்ட காலம் என்று கூறும் நிலைகாணப்படுகின்றது.
கவிச்சுவை குறைந்த இலக்கியங்கள் காணப்படாமை
சங்க காலம் இயற்கையோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமையால் அங்கு இயற்கை வருணனையூடன் கூடிய இ கவிச்சுவையில் நிறைந்த இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. சங்கமருவிய காலத்தில் இத்தகைய சுஸ்ரீழல் இல்லாமையால் இக்கால இலக்கியங்களில் கவிச்சுவையானது குறைந்த நிலையிலேயே காணப்பட்டது. ஏனெனில் இக்காலத்தில் போர்ச் சுஸ்ரீழலும் பஞ்சத்தினால் வடிக் கிடந்த நிலைமையூம் சமுக ஏற்றத் தாழ்வூகளும் காணப்பட்டமை குறிப்பிடத் தக்கது. இத்தகைய நிலைமையானது உயர்வானஇகற்பனையூடன் கூடிய உன்னதமான இலக்கியங்கள் தோற்றம் பெறுவதற்கு துணை நிற்கவில்லை. இதன் காரணமாகவூம் இக்காலத்தை தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒர் இருண்ட காலம் என்று குறிப்பிடுகின்ற நிலை காணப்படுகின்றது.
நான்கு வகை வர்ணப்பாகுபாடு காணப்பட்டமை
சங்கமருவிய காலத்தில் வட நாட்டவரான களப்பிரர் ஆண்டதானல் அவர்களது ஆரியப்பண்பாடுகளாக க் காணப்பட்ட இருக்கு இயூசஸ்ரீர் இசாமம் அதர்வனம் எனும் நான்கு வகை வேத விடயங்களும் பிரமணர் சத்திரியர் வைசிகர் (வேளாளர் )சூத்திரர் ஆகிய நான்கு வகை வர்ணப் பாகுபாடு வகைகளும் அதிகமாகப் பின்பற்றப்பட்டமையினால் மக்கள் மத்தியில் தீண்டாமை சாதிப் பாகுபாடு போன்ற அமசங்கள் வீறு கொண்டு எழுந்தன.இந்த நிலையியைப் போக்குவதற்காகவே அறம் பக்தி சம்மந்தமான இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. இந்த நிலைமையூம் இக் காலத்தை இருணட காலம் என்று கூறுவதற்கு வழி வகுத்துள்ளது.
இவ்வாறான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு சங்கமருவிய காலத்தை இருண்ட காலம் என்று சொன்னாலும் முற்று முழுதாக அவ்வாறு சொல்லும் நிலை அறிஞர்கள் மத்தியில் காணப்படாமை குறிப்பிடத்தக்கது.
09.சங்கமருவியகால இலக்கியங்களின் பொதுப் பண்புகள் யாவை?
அறக்கருத்துக்கள் நேரடியாகவூம் கதைகள் மூலமும் வலியூறுத்தப்படுகின்றன.
அறக்கருத்தை வலியூறுத்தப் பொருத்தமான வெண்பா யாப்பு இக்காலத்தில் செல்வாக்குப் பெறுகின்றது.
உலகியல் வாழ்வினை நிராகரிக்கும் அளவிற்கு சமணஇ பௌத்தர்களின் போதனைகள் அமைந்தநிலையிலஇ; அதனால் சலித்துப்போன மக்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பினையூம் உற்சாகத்தினையூம் ஊட்டுவனவாகச் சைவஇ வைணவ பக்தி இலக்கியங்கள் தோற்றம் பெறுகின்றன. அவை அடுத்து வரும் காலத்தில் வளர்ச்சியடைந்தன.
உணர்ச்சிகளை வெளிப்படுத்தப் பொருத்தமான விருத்தப்பாஇ கட்டளைக் கலித்துறை முதலான புதிய யாப்புக்களும் அந்தாதிஇ பதிகம் முதலான புதிய இலக்கிய வடிவங்களும் தோற்றம் பெறுகின்றன.
10.சங்கமருவிய கால உரைநடை இலக்கிய வளர்ச்சி பற்றி ஆராய்க?
சங்ககாலப் பகுதியிலும் சங்கமருவிய காலப் பகுதியிலு மெழுந்த செய்யூளிலக்கியங்களைப் பற்றி மட்டுமே இதுகாறுங் கூறிஇ உரைநடையிலக்கியங்களைப்பற்றி யாதும் குறிப்பிடவில்லைஇ அக்காலப் பகுதிகளில் உரைநடையிலக்கியங்கள் தமிழில் எழவில்லையென்பது கருத்தன்று. பாட்டிடை வைத்த குறிப்பினுணும் பாவின் றெழுந்த கிளவியானும் பொருண் மரபில்லாப் பொய்மொழியானும் பொருளொடு புணர்ந்த நகைமொழியானு மென்வகை நடையே நான்கென மொழிபஇ எனத் தொல்காப்பியர் கூறுவதை நோக்குமிட்த்து அவர் காலத்திற்கு முன்னேயூம் தமிழ் உரைநடையில் நால்வகை யிலக்கியங்கள் இருந்தனவென்று கருதக்கிடக்கின்றது. அவை யாவூம் அழிந்துபோயின. தொல்காப்பியர் காலத்துக்குப் பின்னும் அத்தகைய உரைநடை யிலக்கியங்கள் எழுந்திருத்தல் வேண்டும். அவையாவூம் எமக்குக் கிடைத்தில. அதனுல்இ பண்டைக்காலத்து உரை நூல்களைப்பற்றி நாம் யாதும் கூறமுடியாதிருக்கின்றது.
எம் மொழியிலாயினும் இலக்கியம் தோன்றும்பொழுது அது முதலிற் செய்யூள் வடிவத்திலேயே தோன்றுகின்றது. பாட்டைத் தொடர்ந்து உரைநடை வெளிவருகின்றது. எனவேஇ தமிழ்மொழியிலும் முதலிலே தோன்றியது பாட்டு என்றும் அதனைத் தொடர்ந்து உரைநடை தோன்றிற்றென்றும் கொள் ளுதல் பொருத்தமுடைத்தாகும். அங்கனம் தோன்றும்பொழுதுஇ அது அக்காலத்து வழக்கிலுள்ள செய் யூளையொத்த ஒரு நடையிலேதான் தோன்றுகிறது. எனவேஇ உரைநடை தோன்றுகின்ற காலத்துச் செய்யூள் நடைக்கும் அவ்வூரை நடைக்கும் உள்ள பேதம் பெரிதன்று. காலஞ்செல்லச் செல்ல அவற்றிற்கிடையேயூள்ள வேறுபாடு கூடிக் கொண்டு போகிறது. காலகதியில் அவ்வூரைகடைக்கும் அதற்கு ஆதாரமாயிருந்த செய்யூள் நடைக்கும் ஒரு தொடர்பும் இருந்திருக்கவில்லை என்று ஒருவர் கொள்ளக்கூடிய நிலைக்கு உரைநடை மாற்றம் அடைந்துவிடுகின்றது. தமிழில் உரைநடை எப்பொழுது ஆரம்பித்ததுஇ அது எவ்வாறு வளர்ந்து வந்தது என்று நாம் திட்டமாகக் கூறமுடியாதிருப்பினும்இ சிலப்பதிகாரத்திற் காணப்படும் உரைநடைப் பகுதிகள் பாட்டினை ஒத்த ஒசைச் சிறப்பினவாகக் காணப்படலால்இ தமிழில் உரைநடை சிலப்பதிகார காலத்தையொட்டி ஆரம்பித்தது எனக் கொள்ளுதல் பிழையாகாது. சிலப்பதிகாரம் பாட்டும் உரை யூம் கலந்துவந்த காவியமாகலின்இ அது உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யூள் என்று அழைக்கப்படுகின்றது. அங் நூலிலுள்ள கானல்வரிஇ ஆய்ச்சியர் குரவைஇ குன்றக்குரவை என்னும் பகுதிகளில் வந்துள்ள உரைப்பாகங்களைப் பார்க்கும்போதுஇ அவை தமிழுரைநடையின் ஆரம்ப நிலையினை ஞாபகப்படுத்தி நிற்கின்றன.
மேல்வரும் உரைப்பகுதி ஆய்ச் சியர் குரவையின் தொடக்கத்திலுள்ளது: கய லெழுதிய இமய நெற்றியின் அய லெழுதிய புலியூம் வில்லும் நாவலந் தண்பொழின் மன்னர் ஏவல் கேட்பப் பாரா சாண்ட மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலிற் காலை முரசங் கனேகுரல் இயம்புமாகலின் நெய்ம் முறை நமக்கின்ரு மென்று ஐயை தன் மகளைக் கூஉய்க் கடை கயிறு மத்துங் கொண்டிடை முதுமகள் வந்து தோன்றுமன்இ செய்யூளிலுள்ள ஒசை நுட்பங்களை அறிந்துகொள்ள யாதவர்கள் இவ்வூரைப்பகுதியைப் பாட்டென்றே கருதிக் கொள்வார்கள். செய்யூட்களுக்குச் சிறப்பாக உரிய எதுகைத் தொடை முதலியன இவ்வூரைப்பகுதியிலும் வந்துள்ளன.
சிலப்பதிகார காலத்தில் எழுந்த அகவற்பாட்டுக்கள் சில வற்றின்கண் அடியெதுகைத் தொடைகள் இடையீடின்றி வந்திருத்தலைக் காணலாம். அதேபோலஇ இவ்வூரைப்பகுதியி லும் கயல்-அயல்இ நாவல்-ஏவல்இ மாலை-காலைஇ நெய்ம்முறைஐயைதன்இ கடைகயிறு-இடை முதுமகள் என அடியெதுகைத் தொடைகள் இடையீடின்றி வந்துள்ளன. சிலப்பதிகாரத்திலுள்ள அகவற்பாக்களுக்கும் இவ்வூரைப் பகுதிக்கும் தொடை யளவில் ஒப்புமை இருத்தல் கண்கூடு. இங்ங்னம் இவ்வூரைப் பகுதிக்கும் அந்நூலில் வரும் செய்யூட் பகுதிகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருத்தலால்இ சிலப்பதிகார காலத்தில் அல்லது அதற்குச் சிறிது முன்பு தமிழில் உரைநடை தோன்றியிருத்தல் கூடும் எனக் கொள்ளுதற்கு இடமுண்டா கிறது. சிலப்பதிகாரத்திலுள்ள வேறு உரைப்பகுதிகள் சில வற்றிலே வெண்பாஇ கலிப்பாஇ வஞ்சிப்பா ஆகிய ஏனைப் பாக்களுக்குரிய ஓசைச் சிறப்புக்கள் வங்திருத்தலைக் காணலாம். இத்தகைய உரைப்பகுதிகள் சிலப்பதிகாரத்தில் உரைப்பாட்டு மடை' எனக் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றை உரைப்பாட்டு' என்று கூறுவதிலிருந்து அவற்றின்கண் உரையின் பண்பும் பாட்டின் பண்பும் அடங்கியிருக்கின்றன என்பது தெரிகிறது.
தமிழில் உரைநடை ஆரம்பித்தபொழுதுஇ அது இவ்வாறு பாட்டைப்போன்ற நடையினையூடையதாய் ஆரம்பித்தது என்று ஒருவாறு கூறலாம். பாட்டிடை வைத்த குறிப்பினும்' எனத் தொடங்கும் தொல்காப்பியச் சு+த்திரத்தை நோக்கும்பொழுதுஇ அந்நூல் எழுந்த காலத்திலே தமிழில் நால்வகை உரைநடை இலக்கி யங்கள் இருந்தன என்பது பெறப்படுகின்றது. " பாட்டிடை வைத்த குறிப்பு' என்பதையூம் தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே என்னும் சு+த்திரத்தையூம் நாம் ஒருங்கு சேர்த்துப் பார்க்கும் பொழுதுஇ பாட்டும் இடையிடையே உரைநடைப் பகுதிகளும் கலந்துவந்த நூல்கள் பல அக்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என நாம் கொள்ளக்கிடக்கின்றது. பிற மொழி களிலுள்ள ஆரம்ப உரைநடை நூல்களும் பாட்டும் உரையூங் கலந்த நூல்களாகவே காணப்படுகின்றன. வடமொழியில் இத்தகைய நடையினைச் சம்புகடை என்பர். தமிழில் இத்தகைய நடையில் எழுந்த நூல்களுக்குப் பெருந்தேவனுர் பாரதம்இ தகடுர் யாத்திரை முதலியவற்றை உதாரணமாகக்காட்டுவர். அங்ஙூனம் உரையூம் பாட்டுமாக வருகின்ற முறையைத் தொடர்ந்து தனியே உரை நடையில் இலக்கியம் தோன்றுதலுண்டு. இத்தகைய வளர்ச்சி முறையினைத் தமிழில் மட்டுமன்றி ஏனை மொழிகளிலும் காணலாம்.
சங்கமருவிய கால இலக்கியங்களின் யாப்பு பயன்பாடு பற்றி விளக்குக?
அகவல்இ வெண்பாஇ வஞ்சிஇ கலிப்பா என்னும் யாப்பு வகைப் பாவினுள்இ அகவற்பாவூக்குரிய அகவலோசையூம் வெண்பாவூக்குரிய செப்பலோசையூம் மூலவோசைகள் என்று சொல்லப்படுவன. அவை பண்டைக்காலத்து உலக வழக்கிற் காணப்பட்டவை. அவற்றிலிருந்து முறையே வஞ்சியூம் கலியூம் பிறந்தன என்பர் தொல்காப்பியர். அவை நான்கினு மிருந்தே தாழிசைஇ துறைஇ விருத்தம் என்னும் பாவினங்கள் தோன்றலாயின. அகவலும் அதனேடு தொடர்புடைய வஞ்சியூம் சங்ககாலப் பகுதியிற் சிறப்பாக வழங்கப்பட்டமை போலவேஇ வெண்பாவூம் அதோடுதொடர்புடைய கலியூம் சங்கமருவிய காலப்பகுதியிற் சிறப்பாகக் கையாளப்பட்டன. பலவாறகச் சொல்லிப் புலம்புதல்இ அழைத்தல் முதலிய வற்றைப் புலப்படுத்துதற்குச் சங்ககாலப் புலவர்கள் அகவ. லோசையையூட்ய அகவற்பாவை எவ்வாறு பொருத்த முடைய தொன்ருகக் கருதினரோ அவ்வாறே சொல்லுதல்இ விடையிறுத்தல்இ ஏவூதல் முதலியவற்றிற்குச் செப்பலோசையையூடைய வெண்பாவைப் பொருத்தமுடையதொன்றகச் சங்கமருவிய காலத்துப் புலவர்கள் கருதினர்.
பழமொழிநானூறு - வெண்பா யாப்பு
பழமொழி நானூறு என்னும் நூல் 400 வெண்பாக்களையூடையது. இந்நூலிலுள்ள ஒவ்வொரு வெண்பாவூம் ஒவ் வொரு பழமொழியைக்கொண்டு விளங்குகின்றது. சில அறி வூரைகளை ஒவ்வொரு வெண்பாவிலும் எடுத்துக்கூறும் புலவர்இ அவற்றை விளக்குதற்கு ஒவ்வொரு பழமொழியைக் கையாண்டிருக்கின்றனர். இந்நூலிலே புலவர் தம் காலத்தில் வழங்கிய பழமொழிகளைக் கருவியாகக்கொண்டுஇ தம்முடைய கருத்துக்களையூம் அனுபவங்களையூம் புலப்படுத்தியிருக்கும் வகையினை நோக்கும்போதுஇ அவர் ஒரு பெரும்புலவர் என் பது தெரிகிறது. நாலடி நானுறு என்னும் நூலிலுள்ள செய்யூட்கள் சிலவற்றிலும் பழமொழிகள் பயன்படுத்தப்பட் டிருக்கின்றன. ஒரு நாட்டு மக்களின் பண்பாடுஇ மன இயல்புஇ பழக்கவழக்கங்கள் முதலியவற்றை அறிந்துகொள்ளுதற்கு அந் நாட்டில் வழங்கும் பழமொழிகள் பெரிதும் பயன்படுகின்றன. ஆகவேஇ இந்நூலிலுள்ள பழமொழிகளின் உதவிகொண்டு இந்நூலெழுந்த காலத்துத் தமிழ் நாட்டின் பண்பாட்டு நிலையினை ஒருவாறு மட்டிடலாம். இந்நூலிலுள்ள செய்யூட்களுக்கு ஒர் உதாரணம் வருமாறு: பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன் சொல்லாலே தன்?னத் துயர்ப்படுக்கும்-நல்லாய் மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலுந்தன் வாயாற் கெடும்.
திருக்குறள்இ காலடியார் - வெண்பாக்களைக் கொண்டது
பதினெட்டு நூல்களுள் அறம்இ பொருள்இ இன்பமாகிய முப்பொருளையூம் கூறும் நூல்கள் திருக்குறள்இ காலடியார் என்பன இரண்டுமே. இவையிரண்டும் பண்டைக் காலந் தொடக்கம் இன்றுவரையூம் புலவர்களாற் போற்றப் பட்டு வந்தமைக்குத் தமிழிலக்கிய நூல்கள் சான்றக விளங்கு கின்றன. 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்னும் பழமொழியூம் இந்நூல்களின் பெருமையை வலியூறுத்துகின்றது. இவற்றுள் திருக்குறள் சங்க மருவிய காலத்து ஆரம்பத்தில் இயற்றப்பட்டதாதல் வேண்டும். அதுபற்றி மேலே குறித்துள்ளோம். காலடியார் என்னும் நூல் காலடி நானூறு என்றும் கூறப்படும். சமண முனிவர்கள் பலர் இயற்றிய வெண்பாக்களுள் 400 வெண்பாக்களைப் பதுமனுர் என்பவர் தெரிந்துஇ அவற்றை இந்நூலில் 40 அதிகாரங்களாக வகுத்து அமைத்தனர் என்று கூறப் படுகிறது. இந்நூலிலே கி. பி. 8ஆம் நூற்றண்டின் தொடக் கத்தில் வாழ்ந்த பெருமுத்தரையர் என்பாரைக் குறிக்கும் இரு செய்யூட்கள் காணப்படலால்இ இது பல்லவர் காலத்துக்கு உரியது என்பர் சிலர் நூல் தொகுக்கப்பட்ட காலம் பல்லவர் ஆட்சிக்காலமாகலாம். அங்ஙூனமாயின்இ அக்காலத்துச் செய்யூட்கள் சில இந்நூலில் இடம்பெற்றிருத்தல் கூடும். அதனுல்இ இந்நூலிலுள்ள எல்லாச் செய்யூட்களும் பல்லவர் காலத்தவை யெனக் கொள்ளுதல் பொருந்தாது. இந்நூலிலுள்ள செய்யூட்கள் மக்களுக்கு உறுதிபயக்கும் உண்மைகளை எடுத்துக் கூறுகின்றனவெனினும்இ உலக இன் பங்களை இழித்துக்கூறித் துறவறத்தின் பெருமையைப் பல்லாற்ருனும் போற்றுகின்றன் நீதி ஒழுக்கங்களை வற்புறுத்திக் கூறுகின்றன. இந்நூலிலுள்ள உவமைகள் சங்க காலத்து உவமைகளைப்போலச் சிறப்புடை யனவாகவூம் பொருளைத் தௌpவாகப் புலப்படுத்துதற்கு ஏற்ற கருவிகளாகவூம் அமைந்துள்ளன. இந்நூலிலுள்ள செய்யூட்கள் குறட்பாக்களைப்போலவே ஒன்றைக் கூறும்பொழுதுஇ அது படிப்போர் உள்ளத்திலே நன்கு பதியூமாறு சுருங்கிய சொற்களிலே தௌpவாகக் கூறுகின்றன. அதனுல்இ "பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் என இந்நூலையூம் திருக்குறளையூம் ஒளவையார் பாராட்டியூள்ளனர்.
அகவற்பா பயன்பாடு
காதலையூம் வீரத்தையூம் சிறப்பாகப் பாராட்டிச் செய்யூள் செய்த சங்ககாலப் புலவர்கள் அகவற்பாவைப் பெரிதும் கையாண்டனர். அறநெறிகளையூம் ஒழுக்க ஆசாரங்களையூம் சிறப்பாகப் பாராட்டிய சங்கமருவியகாலப் புலவர்கள் வெண்பாவைப் பெரிதும் கையாண்டனர். வெண்மை தூய்மையைக் குறிப்பதனுல் தூய்மை பொருந்தியபா வெண்பா எனப்பட்டது. குறிப்பாகவூம் வெளிப்படையாகவூம் பல பொருளையூணர்த்தாதுஇ கருதிய பொருளொன்றை மட்டுமே வெளிப்படையாக உணர்த்துதல் வெண்பாவிற்குரிய தூய்மையாகும். வினுவிற்கு விடையிறுக்கும்பொழுதுஇ அவ்விடை வினுவிய பொருளையன்றி வேறெதனையூம் உணர்த்தாதுஇ தௌpவூம் சொற்சுருக்கமும் உடையதாய் அமைதல் சிறப்பாகும். விடையிறுத்தற்ருழிலைச் செய்யூம் செப்பலோசையையூடைய வெண்பாவூம் தௌpவூஇ சொற்சுருக்கம்இ வேறு பொருளை யூணர்த்தாது கருதியபொருளை மாத்திரமே உணர்த்தல் முதலிய இலக் கணங்களையூடையதாய் அமைதல் இன்றியமையாதது. அத்தகைய வெண்பா அறநெறி முதலியவற்றை யெடுத்துக் கூறுதற்கு ஏனைய பாவகைகளிலும் சிறந்ததொன்று. அதனுலேயே அறநெறியைக் கூறும் நூல்களுட்பெரும்பாலன வெண்பா யாப்பில் அமைந்துள்ளன. அறவொழுக் கங்களை மக்கள் போற்றிய சங்கமருவிய காலப்பகுதியில் வெண்பா சிறப்பாகப் பாராட்டப்பட்டமையூம்இ அது அந்தணர்ப்பாவென்று அழைக்கப்பட்டமையூம் ஈண்டுக் குறிப்பிடத்தக்கவை. காதல்இ வீரம் முதலியவற்றைப் பாடுதற்குச்சங்ககாலப் புலவர்கள் சிறப்பாக அகவற்பாவைக் கையாண்டிருக்கச்இ சங்கமருவியகாலப் புலவர்கள் ஆப்டாவினைவிட்டு அவற்றை வெண்பாவிற் பாடியமைஇ அக்காலத்தில் வெண் பாவிற்கிருந்த பெருமதிப்பைக் காட்டுகின்றது. அதற்குக் கார்நாற்பதுஇ களவழிகாற்பதுஇ ஐந்திணையைம்பது முதலிய நூல்கள் தக்க உதாரணங்களாகும்.
தாழிசைஇ துறைஇ விருத்தம்
சங்கமருவியகாலப் பிற்பகுதியில் வாழ்ந்த முதலாழ்வார்களும் காரைக்காலம்மையார் முதலிய சைவப் பெரியார்களும் தம் உணர்ச்சியனுபவங்களை வெண்பாவிற் புலப்படுத்தியிருப்பதும் அக்காலத்தில் வெண்பாவிற்கிருந்த பெருமதிப்பைக் காட்டுகின்றது. இ சங்க காலத்தில் வழங்கிய அகத்திணை புறத்திணைப் பொருள் மரபுபற்றிச் சுருக்கமாக முந்திய அதிகாரத்திற்குறித்துள்ளோம். பத்திப்பாடல் மரபு இக்காலப் பிரிவில் ஆரம்பித்த போதும்இ அது விருத்தியடைந்த வகையினைப் பல்லவர் காலத்து இலக்கியங்களிற் சிறப்பாகக் காணலாம். பத்தியனுபவங்களைப் புலப்படுத்துதற்கு ஏற்ற கவிமரபு சங்கமருவிய காலப்பகுதியிலேயே தோன்றலாயிற்று. அக்காலத்திற்குமுன் கடவூளரை வாழ்த்துதற்கும் பரவூதற்கும் உரிய மரபு இருந் திருக்கிறது என்பதற்குத் தொல்காப்பியத்திற் சான்றுகளுள. பத்தியனுபவம் அம்மரபுக்குள் அடங்காமையால்இ அதனைப் புலப்படுத்துதற்கு அகத்தினை புறத்திணைப் பொருள் மரபுகளையூம் பயன்படுத்தவேண்டியிருந்தது. அத்தகைய ஒரு புதிய கவிமரபு காரைக்காலம்மையார் காலத்திலே தோன்றிற்று. அங்ங்னம் அது தோன்றி வளர்ந்தவாற்றை அடுத்துவரும் அதிகாரத்திற் கூறுவோம். காரைக்காலம்மையார் பாடியருளிய பிரபந்தங்கள் அற்புதத் திருவந்தாதிஇ திருவிரட்டை மணிமாலைஇ திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் என்பன. அவையாவூம் 140 செய்யூட்களை உடையனவெனினும்இ அவை பல்லவர் காலத்துச் சமய இலக்கியங்களை ஒரு புதுவழியிற் செல்லவைத்த அத்துணைப் பெருமை வாய்ந்தவை. அம்மையார் அருளிச்செய்த பிரபந்தங்களும் முதலாழ்வார்கள் அருளிச்செய்த திருவந்தாதிகளும் பல்லவர் காலத்துப் பத்திப் பாடல்கள் தோன்றுதற்கு ஓர் அறிகுறியாக அவற்றுக்குமுன் விடிவெள்ளிபோன்று உதயமானவையெனினும்இ பல்லவர்கால இலக்கியப்போக்கிற்கு வழிகாட்டிவைத்த பெருமை அம்மையார் அருளிச்செய்த பிரபந்தங்களுக்கே உண்டு.
சிலப்பதிகாரம் - கலிப்பாஇ வஞ்சிப்பா
சிலப்பதிகார காலத்தில் எழுந்த அகவற்பாட்டுக்கள் சில வற்றின்கண் அடியெதுகைத் தொடைகள் இடையீடின்றி வந்திருத்தலைக் காணலாம். அதேபோலஇ இவ்வூரைப்பகுதியி லும் கயல்-அயல்இ நாவல்-ஏவல்இ மாலை-காலைஇ நெய்ம்முறைஐயைதன்இ கடைகயிறு-இடை முதுமகள் என அடியெதுகைத் தொடைகள் இடையீடின்றி வந்துள்ளன. சிலப்பதிகாரத்திலுள்ள அகவற்பாக்களுக்கும் இவ்வூரைப் பகுதிக்கும் தொடை யளவில் ஒப்புமை இருத்தல் கண்கூடு. இங்ங்னம் இவ்வூரைப் பகுதிக்கும் அந்நூலில் வரும் செய்யூட் பகுதிகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருத்தலால்இ சிலப்பதிகார காலத்தில் அல்லது அதற்குச் சிறிது முன்பு தமிழில் உரைநடை தோன்றியிருத்தல் கூடும் எனக் கொள்ளுதற்கு இடமுண்டா கிறது. சிலப்பதிகாரத்திலுள்ள வேறு உரைப்பகுதிகள் சில வற்றிலே வெண்பாஇ கலிப்பாஇ வஞ்சிப்பா ஆகிய ஏனைப் பாக்களுக்குரிய ஓசைச் சிறப்புக்கள் வங்திருத்தலைக் காணலாம்.
11.சங்கமருவிய கால இலக்கியப் பண்புகளை விளக்குக?
வடநாட்டினர் போற்றிய பண்பாடு முதலியவற்றைத் தமிழ் மக்களும் போற்றத் தொடங்கினர். சு+ழ்நிலைக்கிணங்க இலக்கியம் அமைகிறது என்பதற்குச் சங்கமருவிய காலத்தில் எழுந்த இலக்கியம் ஒரு தக்கஎடுத்துக்காட்டாகும். சங்கமருவிய காலத்துச் சு+ழ்நிலை சங்க காலத்துச் சு+ழ்நிலையிலிருந்து வேறுபட்டிருந்தமையால்இ சங்கஇலக்கியத்திலிருந்து வேறுபட்ட இலக்கியம் சங்கமருவிய காலத்தில் எழலாயிற்று. களப்பிரராகிய பிற நாட்டினர் தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆளக்கூடிய அத்துணை இழிந்த நிலையிலே தமிழ்நாடு அக்காலத்தில் இருந்திருக்கிறது. அக்காலப்பகுதி தமிழ்நாட்டின் சரித்திரத்தில் ஓர் இருளடைந்த காலப்பகுதியெனக் கருதப்படுகிறது. அங்ங்னம் ஒரு நாடு வலியிழந்திருக்குங் காலத்தில் அந்நாட்டு மக்களின் பண்பாடு ஒழுக்க நெறி முதலியன குன்றிப்போதல் இயல்பாகும் சமண முனிவர்களும் பௌத்த சங்கியாசிகளும் தத்தம் சமயக் கொள்கைகளைப் பரப்பிஇ நாட்டு மக்களைத் தம்வழி ஒழுகச் செய்வதற்கு அக்காலநிலை ஏற்றதொன்றக இருந்தது. அதனுல்இ அச்சமயங்கள் போற்றிய அறநெறிகளும் பிறவூம் நூல்கள் வாயிலாகவூம் மக்களிடையே பரப்பப்பட்டன. அக்காலத்தில் வடநூற் கருத்துக்கள்இ அறநெறிகள்இ ஒழுக்க ஆசாரங்கள் முதலியனவூம் தமிழ்நாட்டிற் பரவலாயின. அதனுல்இ வடநாட்டினர் போற்றிய பண்பாடு முதலியவற்றைத் தமிழ் மக்களும் போற்றத் தொடங்கினர். அதன் விழைவாக அறநூல்களும் சமயப்பிரசார நூல்களும் தமிழில் எழத்தொடங்கின. இங்ங்ணம் ஒரு புதிய சு+ழ்நிலை ஏற்பட இலக்கிய வரலாற்றிலும் ஒரு புதுமரபு தோன்றலாயிற்று.
அறநூற் காலம்
சங்கமருவிய காலப்பகுதியைப் பொதுவாக ஓர் அறநூற் காலம் என்று கூறலாம். அக்காலத்தில் எழுந்த நூல்களுட் பெரும்பாலானவை அறங்களைப் போற்றுவனவாக உள்ளன். அவையாவற்றுள்ளும் தலைசிறந்து விளங்குவது திருக்குறளாகும். நீதிகளையூம் அறவொழுக்கங்களையூம் எடுத்துக் கூறு தற்கு வெண்பா அகவற்பாவிலும்இ சிறந்தது. அதனுல்இ சங்கமருவிய காலத்துப் புலவர்கள் அறநூல்களை வெண்பாவில் இயற்றினர். அக்காலத்தில் வெண்பா பெரு வழக்காயிருந்தமையால்இ அகத்தினைப் பொருள் முதலியவற்றைக் கூறுதற்கும் புலவர்கள் அதனைப் பயன்படுத்தினர்.
யாப்பு பயன்பாடு
அகவல்இ வெண்பாஇ வஞ்சிஇ கலிப்பா என்னும் யாப்பு வகைப் பாவினுள்இ அகவற்பாவூக்குரிய அகவலோசையூம் வெண்பாவூக்குரிய செப்பலோசையூம் மூலவோசைகள் என்று சொல்லப்படுவன. அவை பண்டைக்காலத்து உலக வழக்கிற் காணப்பட்டவை. அவற்றிலிருந்து முறையே வஞ்சியூம் கலியூம் பிறந்தன என்பர் தொல்காப்பியர். அவை நான்கினு மிருந்தே தாழிசைஇ துறைஇ விருத்தம் என்னும் பாவினங்கள் தோன்றலாயின. அகவலும் அதனேடு தொடர்புடைய வஞ்சியூம் சங்ககாலப் பகுதியிற் சிறப்பாக வழங்கப்பட்டமை போலவேஇ வெண்பாவூம் அதோடுதொடர்புடைய கலியூம் சங்கமருவிய காலப்பகுதியிற் சிறப்பாகக் கையாளப்பட்டன. பலவாறகச் சொல்லிப் புலம்புதல்இ அழைத்தல் முதலிய வற்றைப் புலப்படுத்துதற்குச் சங்ககாலப் புலவர்கள் அகவ. லோசையையூட்ய அகவற்பாவை எவ்வாறு பொருத்த முடைய தொன்ருகக் கருதினரோ அவ்வாறே சொல்லுதல்இ விடையிறுத்தல்இ ஏவூதல் முதலியவற்றிற்குச் செப்பலோசையையூடைய வெண்பாவைப் பொருத்தமுடைய தொன்றகச் சங்கமருவிய காலத்துப் புலவர்கள் கருதினர்.
காதலையூம் வீரத்தையூம் சிறப்பாகப் பாராட்டிச் செய்யூள் செய்த சங்ககாலப் புலவர்கள் அகவற்பாவைப் பெரிதும் கையாண்டனர். அறநெறிகளையூம் ஒழுக்க ஆசாரங்களையூம் சிறப்பாகப் பாராட்டிய சங்கமருவியகாலப் புலவர்கள் வெண்பாவைப் பெரிதும் கையாண்டனர். வெண்மை தூய்மையைக் குறிப்பதனுல் தூய்மை பொருந்தியபா வெண்பா எனப்பட்டது. குறிப்பாகவூம் வெளிப்படையாகவூம் பல பொருளையூணர்த்தாதுஇ கருதிய பொருளொன்றை மட்டுமே வெளிப்படையாக உணர்த்துதல் வெண்பாவிற்குரிய தூய்மையாகும். வினுவிற்கு விடையிறுக்கும்பொழுதுஇ அவ்விடை வினுவிய பொருளையன்றி வேறெதனையூம் உணர்த்தாதுஇ தௌpவூம் சொற்சுருக்கமும் உடையதாய் அமைதல் சிறப்பாகும். விடையிறுத்தற்ருழிலைச் செய்யூம் செப்பலோசையையூடைய வெண்பாவூம் தௌpவூஇ சொற்சுருக்கம்இ வேறு பொருளை யூணர்த்தாது கருதியபொருளை மாத்திரமே உணர்த்தல் முதலிய இலக் கணங்களையூடையதாய் அமைதல் இன்றியமையாதது. அத்தகைய வெண்பா அறநெறி முதலியவற்றை யெடுத்துக் கூறுதற்கு ஏனைய பாவகைகளிலும் சிறந்ததொன்று. அதனுலேயே அறநெறியைக் கூறும் நூல்களுட்பெரும்பாலன வெண்பா யாப்பில் அமைந்துள்ளன. அறவொழுக் கங்களை மக்கள் போற்றிய சங்கமருவிய காலப்பகுதியில் வெண்பா சிறப்பாகப் பாராட்டப்பட்டமையூம்இ அது அந்தணர்ப்பாவென்று அழைக்கப்பட்டமையூம் ஈண்டுக் குறிப்பிடத்தக்கவை. காதல்இ வீரம் முதலியவற்றைப் பாடுதற்குச்சங்ககாலப் புலவர்கள் சிறப்பாக அகவற்பாவைக் கையாண்டிருக்கச்இ சங்கமருவியகாலப் புலவர்கள் ஆப்டாவினைவிட்டு அவற்றை வெண்பாவிற் பாடியமைஇ அக்காலத்தில் வெண் பாவிற்கிருந்த பெருமதிப்பைக் காட்டுகின்றது. அதற்குக் கார்நாற்பதுஇ களவழிகாற்பதுஇ ஐந்திணையைம்பது முதலிய நூல்கள் தக்க உதாரணங்களாகும்.
சங்கமருவியகாலப் பிற்பகுதியில் வாழ்ந்த முதலாழ்வார்களும் காரைக்காலம்மையார் முதலிய சைவப் பெரியார்களும் தம் உணர்ச்சியனுபவங்களை வெண்பாவிற் புலப்படுத்தியிருப்பதும் அக்காலத்தில் வெண் பாவிற்கிருந்த பெருமதிப்பைக் காட்டுகின்றது. சங்க காலத்தில் வழங்கிய அகத்திணை புறத்திணைப் பொருள் மரபுபற்றிச் சுருக்கமாக முந்திய அதிகாரத்திற்குறித் துள்ளோம். அப்பொருள் மரபே சங்கமருவிய காலப் பகுதியிலும் வழங்கலாயிற்று. சங்கப் புலவர்கள் துறைப்பொருள் ஒன்றை ஒரு செய்யூளில் அமைத்துப் பாடினர். அத்தகைய தனிச் செய்யூட்களே சங்கத் தொகை நூல்களிலுள்ளன. துறைகள் ஒன்றன்பின் ஒன்றகத் தொடர்ந்துவரச் செய்யூளியற்றும் மரபு சங்கமருவிய காலத்திற் பெருவழக்காக இருந்திருக்கிறது. அங்ஙூனம் வரும் செய்யூட்களைக் கார்நாற்பது முதலிய கீழ்க்கணக்கு நூல்களிற் காணலாம். அந்நூல்களை நோக்கும் பொழுதுஇ பிற்காலத்திலே தோன்றிய கோவை முதலிய பந்தங்களுக்கு அவை வழிகாட்டியாக விளங்கினவென ஒருவாறு கொள்ளலாம். புலவன் தான் கூற எடுத்துக் கொண்ட பொருளைப் பல செய்யூட்களில் அமைத்துப் பாடும்வழக்கு சங்கமாவிய காலம் தொடக்கமாகவே வந்திருக்கிறது.
பத்திப்பாடல் மரபு இக்காலப் பிரிவில் ஆரம்பித்த போதும்இ அது விருத்தியடைந்த வகையினைப் பல்லவர் காலத்து இலக்கியங்களிற் சிறப்பாகக் காணலாம். பத்தியனுபவங்களைப் புலப்படுத்துதற்கு ஏற்ற கவிமரபு சங்கமருவிய காலப்பகுதியிலேயே தோன்றலாயிற்று. அக்காலத்திற்குமுன் கடவூளரை வாழ்த்துதற்கும் பரவூதற்கும் உரிய மரபு இருந் திருக்கிறது என்பதற்குத் தொல்காப்பியத்திற் சான்றுகளுள. பத்தியனுபவம் அம்மரபுக்குள் அடங்காமையால்இ அதனைப் புலப்படுத்துதற்கு அகத்தினை புறத்திணைப் பொருள் மரபுகளையூம் பயன்படுத்தவேண்டியிருந்தது. அத்தகைய ஒரு புதிய கவிமரபு காரைக்காலம்மையார் காலத்திலே தோன்றிற்று. அங்ங்னம் அது தோன்றி வளர்ந்தவாற்றை அடுத்துவரும் அதிகாரத்திற் கூறுவோம்.
பதினெட்டு நூல்களுள் அறம்இ பொருள்இ இன்பமாகிய முப்பொருளையூம் கூறும் நூல்கள் திருக்குறள்இ காலடியார் என்பன இரண்டுமே. இவையிரண்டும் பண்டைக் காலந் தொடக்கம் இன்றுவரையூம் புலவர்களாற் போற்றப் பட்டு வந்தமைக்குத் தமிழிலக்கிய நூல்கள் சான்றக விளங்கு கின்றன. 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்னும் பழமொழியூம் இந்நூல்களின் பெருமையை வலியூறுத்துகின்றது. இவற்றுள் திருக்குறள் சங்க மருவிய காலத்து ஆரம்பத்தில் இயற்றப்பட்டதாதல் வேண்டும். அதுபற்றி மேலே குறித்துள்ளோம். காலடியார் என்னும் நூல் காலடி நானூறு என்றும் கூறப்படும். சமண முனிவர்கள் பலர் இயற்றிய வெண்பாக்களுள் 400 வெண்பாக்களைப் பதுமனுர் என்பவர் தெரிந்துஇ அவற்றை இந்நூலில் 40 அதிகாரங்களாக வகுத்து அமைத்தனர் என்று கூறப் படுகிறது. இந்நூலிலே கி. பி. 8ஆம் நூற்றண்டின் தொடக் கத்தில் வாழ்ந்த பெருமுத்தரையர் என்பாரைக் குறிக்கும் இரு செய்யூட்கள் காணப்படலால்இ இது பல்லவர் காலத்துக்கு உரியது என்பர் சிலர் நூல் தொகுக்கப்பட்ட காலம் பல்லவர் ஆட்சிக்காலமாகலாம். அங்ஙூனமாயின்இ அக்காலத்துச் செய்யூட்கள் சில இந்நூலில் இடம்பெற்றிருத்தல் கூடும். அதனுல்இ இந்நூலிலுள்ள எல்லாச் செய்யூட்களும் பல்லவர் காலத்தவை யெனக் கொள்ளுதல் பொருந்தாது. இந்நூலிலுள்ள செய்யூட்கள் மக்களுக்கு உறுதிபயக்கும் உண்மைகளை எடுத்துக் கூறுகின்றனவெனினும்இ உலக இன் பங்களை இழித்துக்கூறித் துறவறத்தின் பெருமையைப் பல்லாற்ருனும் போற்றுகின்றன் நீதி ஒழுக்கங்களை வற்புறுத்திக் கூறுகின்றன. இந்நூலிலுள்ள உவமைகள் சங்க காலத்து உவமைகளைப்போலச் சிறப்புடை யனவாகவூம் பொருளைத் தௌpவாகப் புலப்படுத்துதற்கு ஏற்ற கருவிகளாகவூம் அமைந்துள்ளன. இந்நூலிலுள்ள செய்யூட்கள் குறட்பாக்களைப்போலவே ஒன்றைக் கூறும்பொழுதுஇ அது படிப்போர் உள்ளத்திலே நன்கு பதியூமாறு சுருங்கிய சொற்களிலே தௌpவாகக் கூறுகின்றன. அதனுல்இ "பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் என இந்நூலையூம் திருக்குறளையூம் ஒளவையார் பாராட்டியூள்ளனர்.
12.சங்கமருவிய கால பக்திமரபினை விளக்குக? அல்லதுசங்கமருவிய கால பக்திமரபு பல்லவர் கால பக்திமரபுக்கு வித்திட்ட முறையை விளக்குக?
பத்துப்பாட்டிலுள்ள திருமுருகாற்றுப்படையூம் சங்கமருவிய காலத்துக்குரியது என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அது குறிஞ்சி நிலத்துத் தெய்வமாகிய முருகனையூம் வடமொழிப் புராணங்களிற் போற்றப்படும் சுப்பிரமணியக் கடவூளையூம் ஒருவராகக்கொண்டு தமிழ் மக்கள் வழிபட்ட காலத்தில் எழுந்ததாதல் வேண்டும். அங்ஙூனங் கொள்ளின் நெடுநல்வாடையைப் பாடிய சங்கத்துச் சான்றௌராகிய நக்கீரரும் திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீர ரும் ஒருவரல்லர் என்பது பெறப்படும். தொல்காப்பியத்துக்குப்பின் எழுந்த இறையனாரகப்பொருளுக்கு உரை கண்ட நக்கீரரும் திருக்கண்ணப்பதேவர் திருமறம் முதலிய பதினொராந் திருமுறையிலுள்ள பிரபந்தங்களைப் பாடியருளிய நக்கீரதேவநாயனாரும் சங்கமருவிய காலத்துக்கு உரியவர்கள் என்று கூறுவாருமுளர்.
பல்லவர் காலத்திற் பெருக்கெடுத்துச் சென்ற பத்தி மார்க்கம் அறவொழுக்கங்களைச் சிறப்பாகப் பாராட்டிய சங்கமருவிய காலத்தின் பிற்பகுதியில் ஊற்றெடுக்கத் தொடங்கிற்றெனலாம். அக்காலப்பகுதியில் வாழ்ந்த பொய்கையாழ்வார்இ பூதத்தாழ்வார்இ பேயாழ்வார் ஆகிய முதலாழ்வார்களும் காரைக்காலம்மையார் முதலிய சைவப்பெரியார்களும் சிறந்த பத்திவைராக்கிய முடையோராய்இ இறைவன் திருவூருவைக் கண்டனுபவித்தல்இ அவன் புகழ் பாடுதல் என்பவற்றைத் தம் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு தம் காலத்தைக் கழித்தனர். உலகவாழ்விற் பிறிதொன்றனையூம் விரும்பாது இறைவன் திருமேனியழகில் லயப்பட்டுநிற்ற லொன்றனையே அவாவின ரென்பதை அவர் பாடிய திருவந்தாதிகள் வாயி லாக அறியக்கிடக்கின்றது. காரைக்காலம்மையார் பாடியருளிய பிரபந்தங்கள் அற்புதத் திருவந்தாதிஇ திருவிரட்டை மணிமாலைஇ திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் என்பன. அவையாவூம் 140 செய்யூட்களை உடையனவெனினும்இ அவை பல்லவர் காலத்துச் சமய இலக்கியங்களை ஒரு புதுவழியிற் செல்லவைத்த அத்துணைப் பெருமை வாய்ந்தவை. அம்மையார் அருளிச்செய்த பிரபந்தங்களும் முதலாழ்வார்கள் அருளிச்செய்த திருவந்தாதிகளும் பல்லவர் காலத்துப் பத்திப் பாடல்கள் தோன்றுதற்கு ஓர் அறிகுறியாக அவற்றுக்குமுன் விடிவெள்ளிபோன்று உதயமானவையெனினும்இ பல்லவர்கால இலக்கியப்போக்கிற்கு வழிகாட்டிவைத்த பெருமை அம்மையார் அருளிச்செய்த பிரபந்தங்களுக்கே உண்டு. அதனால்இ அம்மையார் தமிழ்நாட்டுப் பெரும்புலவர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க சிறப்புவாய்ந்தவர் எனக் கூறுதல் பொருத்த முடைத்தாகும்.
நான்கு சிறிய பிரபந்தங்களை இயற்றிய ஒருவரைப் பெரும் புலவர் வரிசையில் வைத்து எண்ணுவது எவ்வாறு பொருக்தும் என்று ஒருவர் வினாவலாம். ஒரு புலவனின் பெருமையை அல்லது சிறுமையை அவன் பாடிய பாடற்றொகையை மட்டும் கொண்டு அளவிடுதல் பொருந்தாது. அது அவன் பாடியவற்றின் சிறப்பில் அல்லது சிறப்பின்மையிற்றான் பெரும் பாலும் தங்கியிருக்கிறது. அம்மையார் இயற்றியவை நான்கு சிறிய பிரபந்தங்களெனினும்இ அவை பல்லவர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் பொருள் மரபிலும் யாப்பமைதியிலும் வழிகாட்டி நின்றதனால்இ அவரை ஒரு பெரும்புலவர் என்றே கொள்ளவேண்டி யிருக்கிறது. காலத்தின் போக்கிற்கு இணங்க அம்மையார் தம்முடைய பத்தியனுபவங்களை வெண்பாயாப்பைக் கைக்கொண்டு அற்புதத் திருவந்தாதியிற் புலப்படுத்தினர். "ஏனெனில்இ வெண்பா யாப்பு ஒன்றுமே சங்கமருவிய காலத்திற் பெருவழக்காயிருந்தது. வினாவூக்கு இறுக்கும் விடையிற் காணப்படவேண்டிய சொற்சுருக்கம்இ கருதிய பொருளன்றிப் பிறிது பொருள் புண ராமை முதலிய பண்புகளும் வெண்டளை பிழையாமை செப்ப லோசை குன்றாமை முதலிய கட்டுப்பாடுகளும் உடையதாக விளங்கும் வெண்பாயாப்பு உணர்ச்சிபேதங்களையூம் தெய் வானுபவங்களையூம் வெளிப்படுத்துதற்கு ஏற்ற கருவியாகாது. இதனை அம்மையார் நன்கு அறிந்து கட்டளைக்கலித்துறையைத் திருவிரட்டைமணிமாலையிலும் விருத்தப்பாவைத் திருவாலங் காட்டு மூத்ததிருப்பதிகங்களிலும் கையாண்டுள்ளனர். இவ் வாறு அம்மையார் காட்டிய வழியைப் பல்ல்வர் காலத்துப் புலவர்கள் பின்பற்றி விருத்தம் முதலிய பாவினங்களைக் கையாண்டு தம்முடைய பத்திப்பெருக்கை வெளிப்படுத்தினர். இதனுலேதான் தமிழிலக்கிய வரலாற்றில் அம்மையார் ஒரு புதிய இலக்கிய மரபினை ஆரம்பித்துவைத்தனர் எனக் கொள்ளப்படுகின்றது.
முதலாழ்வார்கள் மூவரும் காரைக்காலம்மையாரும் பாடியருளிய திருவந்தாதிகள் சிறந்த பத்தியனுபவங்களைப் புலப் படுத்துவதோடு உயர்ந்த கவிதைகளிற் காணப்படும் தௌpவூஇ உணர்ச்சிப்பெருக்குஇ பொருட்செறிவூஇ ஒசைகயம் முதலிய சிறப்பியல்புகளை உடையனவாக விளங்குதலால்இ அவற்றிற்குத் தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு தனிப்பெருமை எக்காலத்திலுமுண்டு.
பொய்கையாழ்வார் பாட்டு:
பழுதேபலபகலும் போயினவென்றஞ்சி அழுதேன் அரவணைமேற் கண்டு - தொழுதேன் கடலோதம் காலலைப்பக் கண்வளரும் செங்கண்மு அடலோத வண்ணரடி.
பூதித்தாழ்வார் பாட்டு:
மாலே நெடியோனே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன் துளாய்க் கண்ணியனே-மேலால் விளவின்காய் கன்றினுல் வீழ்த்தவனே என்தன் அளவன்ருல் யானுடைய அன்பு.
பேயாழ்வார் பாட்டு:
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்-செருக்கிளரும் பொன்னழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் என்னுழி வண்ணன் பால் இன்றுஇ அன்றுந் திருவூருவங் காணுதே ஆட்பட்டேன் இன்றுந் திருவூருவங் காண்கிலேன்-என்றுந்தான் எவ்வூருவோ நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன் எவ்வூருவோ நின்னுருவ மேது.
13.சங்கமருவிய கால நீதி நூல்கள் பற்றி கருத்துறை வழங்குக? அல்லதுநீதி நூல்கள் பற்றி விளக்குக?
பதினெண்கீழ்க்கணக்குத் தொகுதியில் நீதி பற்றியனவே பெரும்பான்மையென்று முன்னர்ச் சுட்டப்பட்டது. அவை வருமாறு:
1) திருக்குறள்
2) நாலடியார்
3) பழமொழி
4) திரிகடுகம்
5) நான்மணிக்கடிகை
6) சிறுபஞ்சமூலம்
7) ஏலாதி
8) இன்னா நாற்பது
9) இனியவை நாற்பது
10) முதுமொழிக்காஞ்சி
11) ஆசாரக்கோவை
01.திருக்குறள்
அறிமுகம்
தமிழில் உள்ள அறநூல்களுள் காலத்தால் முந்தியதும் தன்மையால் தலைசிறந்ததும் திருக்குறளாகும். ஈரடி வெண்பாஇ குறள் வெண்பா எனப்படும். அவ்வெண்பாவால் ஆன நூலும் ஆகுபெயராகக் குறள் என்று பெயர் பெற்றது. அதன் சிறப்பு நோக்கித் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருக்குறள் என்று வழங்கி வருகின்றௌம்.
நூல் அமைப்பு
திருக்குறளில் அறத்துப்பால்இ பொருட்பால்இ காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவூகள் உள்ளன. ஒவ்வொரு பெரும்பிரிவிலும் பல உட்பிரிவூகள் உள்ளன. இவை இயல்கள் எனப்படும். இயல்களின் உட்பிரிவூகளாக அதிகாரங்கள் அமைகின்றன. ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துப்பத்துக் குறட்பாக்கள் இடம் பெறுகின்றன. இதில் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் உள்ளன. மூன்று அதிகாரங்களிலும் அடங்கும் இயல்கள்இ அவற்றிற்குரிய அதிகாரங்கள் பற்றிய பட்டியலைக் கீழே காணலாம்.
பால்கள் இயல்கள் அதிகாரங்கள்
அறத்துப்பால் பாயிர இயல் 1 முதல் 4 ஸ்ரீ 4
இல்லற இயல் 5 முதல் 24 ஸ்ரீ 20
துறவற இயல் 25 முதல் 37 ஸ்ரீ 13
ஊழ் இயல் 38 ஸ்ரீ 1
-----
38
-----
பொருட்பால் அரசியல் 39 முதல் 63 ஸ்ரீ 25
அங்க இயல் 64 முதல் 95 ஸ்ரீ 32
ஒழிபியல் 96 முதல் 108 ஸ்ரீ 13
-----
70
-----
காமத்துப்பால் களவூ இயல் 109 முதல் 115 ஸ்ரீ 7
கற்பு இயல் 116 முதல் 133 ஸ்ரீ 18
-----
25
-----
திருவள்ளுவர் வரலாறு
பெரும்புகழ்க்குரிய திருவள்ளுவர் பற்றிய உண்மையான வரலாறுஇ அறிய முடியாததாக உள்ளது. இவர் மயிலையில் பிறந்தவர் என்று ஒருசாரார் கருதுகின்றனர். அவ்வூ+ரில் அவர்க்குக் கோயில் ஒன்றும் எழுப்பியூள்ளனர். அவர் மதுரையைச் சேர்ந்தவர் என்றும் கூறுவர். இவர்க்குரிய இயற்பெயர் யாது என்றும் தெரியவில்லை. பிறந்த குடி பழம் பெருமை மிக்க வள்ளுவக்குடி என்பர். இக்குடியினர் இன்றும் சோதிடம் வல்லவர்களாக அறியப்படுகின்றனர். இவர்கள் பண்டை மன்னர்களுக்கு மிக அணுக்கமாக இருந்தவர்கள் என்று பெருங்கதை முதலிய தமிழ் நூல்கள் அறிவிக்கின்றன. வள்ளுவர் - வாசுகி கதைஇ வள்ளுவர் - ஏலேல சிங்கன் உறவூஇ வள்ளுவரின் நூல் அரங்கேற்றம் ஆகியன பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன. இவற்றை உண்மையெனக் கருத முடியவில்லை.
வள்ளுவர் காலம்
இவர் வாழ்ந்த காலம் பற்றியூம் ஒருமித்த கருத்து இல்லை. கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 6ஆம் நூற்றாண்டுவரைஇ பல வேறு காலங்களை அறிஞர் கூறுகின்றனர். திருக்குறளில் வெளிப்படும் சில பண்பாட்டு நிலைகள்இ மொழிக்கூறுகள் ஆகியவை கொண்டு அதுஇ சங்க இலக்கியங்களை அடுத்துத் தோன்றியது என்று பொதுவாகக் கூறலாம்.
திருக்குறள் உரையாசிரியர்கள்
திருக்குறளுக்குப் பத்துப்பேர் இடைக்காலத்தில் உரையெழுதி உள்ளனர். இவ்வூரையாசிரியர் பெயர்களைப் பின்வரும் வெண்பாவால் அறியலாம். தருமர்இ மணக்குடவர்இ தாமத்தர்இ நச்சர் பரிமேலழகர்இ பருதிஇ திருமலையர்இ மல்லர்இ பரிப்பெருமாள்இ காளிங்கர்இ வள்ளுவர் நூற்கு எல்லை உரை செய்தார் இவர் இவர்களுள் மணக்குடவர்இ காளிங்கர்இ பரிப்பெருமாள்இ பரிதியார்இ பரிமேலழகர் ஆகியோர் உரைகளே இப்பொழுது கிடைக்கின்றன. இவற்றுள் பரிமேலழகர் உரையே பெரியோர்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றது. இக்காலத்தில் எண்ணற்ற புதிய உரைகள் நாளும் தோன்றிக் கொண்டே உள்ளன.
நூலின் சிறப்பு
வடமொழியில் உள்ள மனுநீதி முதலிய நீதி நூல்கள் வருணங்களின் அடிப்படையில் அறம் உரைப்பவை. திருக்குறள் ‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கருத்தின் அடிப்படையில் மனித குலம் அனைத்திற்கும் பொதுவான அறம் கூறுவது. வள்ளுவர் காலத்தில் வைதீகம்இ சமணம்இ பௌத்தம் முதலான பல சமயங்கள் வழக்கில் இருந்தன. ஆனால் வள்ளுவர் எச்சமயத்தையூம் சார்ந்து நின்று அறம் உரைக்கவில்லை. அதனால்தான் ‘சமயக்கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருள் இது என்ற வள்ளுவர்’ என ஒரு புலவர் பாராட்டினர்.
2.நாலடியார்
அறிமுகம்
திருக்குறளுக்கு அடுத்த இடத்தில் வைத்து எண்ணப்படுவது நாலடியார். நாலடி வெண்பாக்கள் கொண்ட நீதி நூல்கள் வேறு பல உண்டு. எனினும்இ இதன் சிறப்புக் கருதி இதனை மட்டும் நாலடி என்று வழங்கினர்; மேலும் ‘ஆர்’ விகுதி சேர்த்து நாலடியார் என்று வழங்குகிறது. நானூறு வெண்பாக்கள் உடைமையால் நாலடி நானூறு என்றும் வழங்கும். இதற்கு வேளாண் வேதம் என்ற பெயரும் உண்டு.
நாலடியாரின் தோற்றம்
இந்நூல் ஒருவரால் இயற்றப்பட்டதன்று. இதனைஇ சமண முனிவர் பலரும் இயற்றிய 8000 வெண்பாக்களில் இருந்து தொகுத்த 400 வெண்பாக்களைக் கொண்ட நூல் என்பர். நாலடியார் சமணர்களின் நூல் என்பதும்இ அதிலுள்ள செய்யூட்கள் அழிந்து போன ஒரு பெருந்தொகுதியின் பகுதி என்பதும் அறிதற்கு உரியது.
நூலின் அமைதி
இந்நூல் திருக்குறள் போன்றே முப்பால்களாகவூம்இ பல இயல்களாகவூம்இ அதிகாரங்களாகவூம் பகுக்கப்பட்டுள்ளது. அறத்துப்பாலில் துறவற இயல்இ இல்லற இயல் என்ற இரண்டு இயல்களும் 13 அதிகாரங்களும் உள்ளன. பொருட்பாலில் அரசு இயல்இ நட்பு இயல்இ இன்ப இயல்இ துன்ப இயல்இ பொது இயல்இ பகை இயல்இ பல்நெறி இயல் என ஏழு இயல்களும் 24 அதிகாரங்களும் அடங்கும். காமத்துப்பாலில் இன்ப துன்ப இயல்இ இன்ப இயல் என இரண்டே இயல்களும்இ 3 அதிகாரங்களும் உள்ளன.
சிறப்புச் செய்திகள்
நாலடியாரில் சமண சமயத்திற்கே சிறப்பாகவூரிய பல உண்மைகள் அழகாகக் கூறப்பட்டுள்ளன. செல்வம் நிலையாமைஇ இளமை நிலையாமைஇ யாக்கை நிலையாமை ஆகியவற்றை அழகிய உவமைகள் வாயிலாக இந்நூல் விளக்கியூள்ளமை சிறப்பாகும். இளமையின் கழிவினுக்குப் பயன்தரும் மரங்களில் இருந்து கனிகள் உதிர்வதனை உவமையாக்குகிறது ஒரு செய்யூள்.
பனிபடு சோலைப் பயன்மரம் எல்லாம்
கனி உதிர்ந்து வீழ்ந்தற்று இளமை - 17
சமண சமயத்தின் உயிர்நாடியான கொள்கைகளுள் கொல்லாமையூம்இ புலால்மறுத்தலும் அடங்கும். புலால் உண்பாரின் வயிற்றினைப் பறவைகளுக்கும்இ விலங்குகளுக்கும் உரிய சுடுகாடு என்று இழித்துரைக்கிறது இந்நூல். இதனைஇ தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலம்கெட்ட புல்லறிவாளர் வயிறு என்கின்றது.
3.பழமொழி
அறிமுகம்
நாலடி போலவே நானூறு வெண்பாக்கள் கொண்ட நீதிநூல் பழமொழியாகும். பழமொழி நானூறு என்றும் இது வழங்கும். இதிலுள்ள ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம்பெறும். பாட்டு முழுவதும் அப்பழமொழியின் விளக்கமாக அமையூம். பழமொழிகளைத் தொகுத்து இலக்கியமாக்கப்பட்டவற்றில் தொன்மையான தமிழ்நூல் இதுவேயாகும். திருக்குறள்இ நாலடியார் போன்ற அற நூல்களைத் தழுவிச் செல்வது இந்நூல்.
நூலாசிரியர்
பழமொழியின் ஆசிரியர் முன்றுறை அரையனார் என்பவர். அரையனார் என்பது இயற்பெயர் அன்று. அரையர் குடியில் பிறந்தவர் என்பதால் இவர் அரையனார் எனப்பட்டார் எனலாம் (அரையர் – அரசர்). எனவே இவர் ஒரு குறுநில மன்னராகவோஇ அரசியலில் உயர் பதவி வகித்தவராகவோ இருந்திருக்கலாம். முன்றுறை என்பது ஊர்ப்பெயர். இவ்வூ+ர் எப்பகுதியில் இருந்தது என்று அறியமுடியவில்லை. இவ்வாசிரியர் சமண சமயத்தினர் என்பது நூலின் தற்சிறப்புப் பாயிரத்தில் ‘பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி ------- முன்றுறை மன்னவன் செய்து அமைத்தான்’ என்று வருவது கொண்டு உணரலாம்.
சிறப்புச் செய்திகள்
இந்நூலகத்தே பண்டை மன்னர்கள் பலரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.
மனுநீதிச் சோழன் தன் மகனைத் தேரினைச் செலுத்திக் கொன்ற செய்தியூம் (93)இ பாரி முல்லைக்குத் தேரும்இ பேகன் மயிலுக்குப் போர்வையூம் அளித்த வரலாறும் (361)இ கரிகாலன் இரும்பிடர்த் தலையார் உதவியால் அரசு பெற்று ஆண்ட வரலாறும் (105)இ கரிகாலனுக்கு யானை மாலையிட்டு மன்னனாக்கிய செய்தியூம் (62)இ அவனே நரைமுடிந்து வந்து நீதி வழங்கிய வரலாறும் (21)இ வேறு பல வரலாறுகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
இந்நூலில் இடம் பெறும் குறிப்பிடத்தக்க சில பழமொழிகள் வருமாறு:
குலவிச்சை கல்லாமல் பாகம்படும் (21)
கற்றலின் கேட்டலே நன்று (61)
வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று (175)
நுணலும் தன் வாயால் கெடும் (184)
முதல் இல்லார்க்கு ஊதியம் இல்(லை) (312)
ஒருவர் பொறை இருவர் நட்பு (247)
4.திரிகடுகம்
அறிமுகம்
கடவூள் வாழ்த்தோடு சேர்ந்து 101 வெண்பாக்களைக் கொண்ட நீதிநூல் இது. இதில்இ திரிகடுகம் என்ற மருந்தில் அடங்கியூள்ள சுக்குஇ மிளகுஇ திப்பிலி என்னும் மூன்று காரப் பொருள்கள் போன்ற மூன்று அறக்கருத்துக்களை ஒவ்வொரு பாடலும் கூறுவதால் இப்பெயர் பெற்றது. (திரி ஸ்ரீ மூன்று; கடுகம் ஸ்ரீ காரப்பொருள்) திரிகடுகச் சு+ரணம் உடல் நோயைத் தீர்ப்பது போல்இ அப்பெயர் கொண்ட இந்நூல் அகநோயைத் தீர்க்கவல்லது.
நூலின் ஆசிரியர்
இதன் ஆசிரியர் நல்லாதனார். திருத்து என்னும் ஊரில் பிறந்தவர் இவர் என்பது செல்வத்திருத்து உளார் செம்மல் என்ற சிறப்புப்பாயிரச் செய்யூளால் தெரிகின்றது. இவ்வூ+ர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது என்பர். இவ்வாசிரியர் இயற்றிய கடவூள் வாழ்த்தில் திருமாலின் புகழ் பேசப்படுவதால் இவர் வைணவ நெறியினர் என்பது பெறப்படுகிறது.
சிறப்புச் செய்திகள்
இந்நூலாசிரியர் திருக்குறள்இ நாலடியார்இ நான்மணிக்கடிகை ஆகியவற்றின் கருத்துக்களை எடுத்தாண்டுள்ளார். இதில் காணும் பழமொழிகளாவன
(1) உமிக்குற்றுக் கை வருந்துவார்
(2) தம் நெய்யில் தாம் பொரியூமாறு
(3) துஞ்சு ஊமன் கண்ட கனா
(4) தூற்றின்கண் தூவிய வித்து முதலியனவாகும். இந்நூலில் நெஞ்சில் நிறுத்தத்தக்க
பொன்மொழிகளுள் சில வருமாறு:
ஈதற்குச் செய்க பொருளை (90)
நிறை நெஞ்சு உடையானை நல்குரவூ அஞ்சும் (72)
கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் (52)
நெஞ்சம் அடங்குதல் வீடாகும் (43)
ஊன் உண்டலையூம்இ வேள்வியில் உயிர்க்கொலை செய்தலையூம் இந்நூல் கண்டிக்கின்றது (36). சு+தினால் வந்த பொருளை விரும்பல் ஆகாது
(42). விருந்தின்றி உண்ட பகல் அறிவூடையவர்க்கு நோயாகும்
(44). பொய் நட்பின் சிறப்பை அழித்து விடும்
(83) முதலிய இந்நூற் கருத்துகள் என்றும் நினைவில் நிற்பனவாம்.
5.நான்மணிக்கடிகை
அறிமுகம்
நான்கு உயர்ந்த மணிகளால் ஆன அணிகலன் போல ஒவ்வொரு பாட்டிலும் நான்கு அரிய உண்மைகளைத் தொகுத்துக் கூறும் வெண்பாக்களைக் கொண்ட நூல் நான்மணிக்கடிகை. கடவூள் வாழ்த்து இரண்டு உட்படஇ இதில் 104 செய்யூட்கள் உள்ளன. வாழ்த்துச்செய்யூட்கள் திருமாலை வாழ்த்துவதால் இதன் ஆசிரியர் விளம்பி நாகனார் வைணவர் என்பது விளங்கும். வெற்றுச்சொல் யாதும் இன்றி ஒவ்வொரு பாட்டிலும் மிக உயர்ந்த வாழ்வியல் உண்மைகள் நான்கினைத் திறம்படத் தொடுத்துக் கூறியூள்ள ஆசிரியர் திறம் பாராட்டத்தக்கது. இதன் சிறந்த பாடல்களில் ஒன்று வருமாறு:
கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை கொண்டானின்
துன்னிய கேளிர் பிறர் இல்லைஇ மக்களின்
ஒண்மைய வாய்சான்ற பொருள் இல்லை ; ஈன்றாளொடு
எண்ணக் கடவூளும் இல்.
(கொண்டான் ஸ்ரீ கணவன்; கேளிர் ஸ்ரீ உறவினர்; ஒண்மை ஸ்ரீ சிறப்பு)
6.சிறுபஞ்சமூலம்
அறிமுகம்
சிறுபஞ்சமூலம் என்னும் தொடர் ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவ்வேர்களாவன : சிறுவழுதுணைஇ நெருஞ்சிஇ சிறுமல்லிஇ பெருமல்லிஇ கண்டங்கத்திரி என்பனவற்றின் வேர்களாகும். இவ்வேர்கள் உடற்பிணி போக்கி நலம் செய்வது போலஇ மக்களின் உயிர்ப்பிணியாகிய அறியாமையைப் போக்கி அதன் ஈடேற்றத்திற்கு உதவூம் அரிய பெரிய உண்மைகளை ஐந்து ஐந்தாகச் செய்யூள்தோறும் கூறும் நூலும் சிறுபஞ்சமூலம் என்று பெயர் பெற்றது.
ஆசிரியர்
இதன் ஆசிரியர் காரியாசான். இவர் மதுரையாசிரியர் மாக்காயனார் என்பவரின் மாணாக்கர் என்றும்இ சைன சமயத்தினர் என்றும் நூலிலிருந்து தெரிய வருகிறது. இதில்இ சிறப்புப்பாயிரங்கள் இரண்டும் 104 வெண்பாக்களும் உள்ளன. இரு செய்யூட்கள் இடைச்செருகல் எனக் கருத இடமுண்டு.
சிறப்புச் செய்திகள்
உயிர்களைக் கொன்று அவற்றின் ஊனை உண்பவன் நாக்கு அழியூம் என்கிறார் ஆசிரியர். இவ்வாறே பொய்ச்சான்று கூறுபவன் நாக்கும் சாகும் என்கின்றார் (8). வலிமையில்லாதவன் சேவகம் செய்வதும்இ செந்தமிழை அறியாதான் கவிபுனைதலும் நகைப்புக்கு இடமானவை என்கிறார் (10). கொல்லுதலும்இ கொன்றதன் ஊனை உண்டலும் கொடும் நஞ்சு; தனக்கு நிகர் இல்லாதவனை எதிர்த்து வெல்லுதலும் கொடும் நஞ்சு என்கிறார் (11).
7.ஏலாதி
அறிமுகம்
ஏலம்இ இலவங்கம்இ நாக கேசரம்இ மிளகுஇ திப்பிலிஇ சுக்கு என்னும் ஆறு பொருள்களையூம் முறையே 1 : 2 : 3 : 4 : 5 : 6 என்ற விகிதத்தில் கலந்து செய்வது ஏலாதிச் சு+ரணமாகும். இம்மருந்து போலஇ ஒவ்வொரு செய்யூளாலும் ஆறு அரிய அறக்கருத்துக்களைக் கொண்ட 80 வெண்பாக்களால் ஆன நூலும் ஏலாதி எனப் பெயர் பெற்றது. உடல்நோய் தீர்க்கும் ஏலாதிச் சு+ரணம் போலஇ இச் செய்யூட்களில் வற்புறுத்தப்படும் அறங்களும் அகநோய் நீக்கி நலம் செய்யூம் என்பது கருத்து.
நூலாசிரியர்
இதன் ஆசிரியர் கணிமேதையார். கணிமேதாவியார் என்றும் கூறுவர். இவர் சோதிட நூல் வல்லவர் என்பது இவர் பெயரால் அறியப்படுகின்றது. திணைமாலை நூற்றைம்பதின் ஆசிரியரும் இவரே. இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கராவார். அருகனுக்கு வணக்கம் சொல்லி நூலைத் தொடங்குவதால் இவர் சமணர் எனக் கருதலாம்.
சிறப்புச் செய்திகள்
இந்நூலின் (2இ 19இ 42இ 46) பாடல்கள் சமணர் சிறப்பாகப் போற்றும் கொல்லாமைஇ புலால்மறுத்தல்இ கள்ளுண்ணாமை என்னும் ஒழுக்கங்களை வற்புறுத்துகின்றன. வீடுஇழந்தவர்இ கண்ணில்லார்இ தம் செல்வத்தை இழந்தவர்இ நெல் இழந்தவர்இ கால்நடைச் செல்வம் இழந்தவர் ஆகியோர்க்கு உணவூ கொடுத்தவர் பல்யானைகளைக் கொண்டு உலகாளும் மன்னராய் வாழ்வர் (52) என்றும்இ கடன்பட்டவர்இ பாதுகாப்பு இல்லாதவர்இ கையில் பொருள் இல்லார்இ கால் முடம்பட்டவர்இ வயது முதிர்ந்தவர்இ வயதில் இளையார் ஆகியோருக்கு உணவூ ஈந்தவரும் மண்மேல் படை கொண்டு ஆளும் பேறு அடைவர் (53) என்றும் இவர் கூறுவது சிறப்பாக உள்ளது. கல்வியின் சிறப்பை வற்புறுத்தும்
இடை வனப்பும்இ தோள் வனப்பும்இ ஈடின் வனப்பும்
நடை வனப்பும்இ நாணின் வனப்பும் - புடை சால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல ; எண்ணோ(டு)
எழுத்தின் வனப்பே வனப்பு (74)
என்ற செய்யூள் நினைந்து இன்புறுத்தக்கது.
8.இன்னா நாற்பது
இன்னா நாற்பதும்இ இனியவை நாற்பதும் நாற்பது பாடல்களைக் கொண்டவை எனும் ஒற்றுமையூடன் இனியவைஇ இன்னாதவை என்பவற்றை ஒன்று கூட்டிச் சொல்லும் தன்மை உடையவைஇது கடவூள் வாழ்த்து உள்பட 41 வெண்பாக்களைக் கொண்ட அறநூல். இதிலுள்ள ஒவ்வொரு பாட்டும் இன்னது இன்னது துன்பம் தருவது என்று கூறுவதால் இன்னா நாற்பது என்று பெயர் பெற்றது. தொல்காப்பியர் கூறும் அம்மை என்னும் வனப்பைச் சார்ந்தது இது. இதன் ஆசிரியர் கபிலர். இவர் சங்க காலத்துக் கபிலர் அல்லர். இந்நூலில் கூறியது கூறல் எனும் முறை காணப்படுகின்றது. கருத்தின் பெருமை கருதிஇ அக்கருத்து மக்கள் உள்ளத்தில் நன்கு பதிய வேண்டும் என்ற நோக்கத்தில் மீண்டும் மீண்டும் கூறியிருக்கக்கூடும் என்பர்.
இன்னாஇ ஈன்றாளை ஓம்பாவிடல் (18)
அடைக்கலம் வவ்வூதல் இன்னா (41)
ஊனைத்தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா (23)
உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா (16)
அறிவூ அறியா மக்கள் பெறல் இன்னா (29)
பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா (38)
9.இனியவை நாற்பது
வாழ்விற்கு நன்மை தரும் இனிய அறக்கருத்துக்களைக் கூறும் நாற்பது வெண்பாக்களைக் கொண்ட நூல் இனியவை நாற்பதாயிற்று. இதன் கடவூள் வாழ்த்தில் சிவபெருமானும்இ திருமாலும்இ நான்முகனான பிரம்ம தேவனும் வாழ்த்தப்படுகின்றனர். இந்நூலின் நான்கு பாடல்கள் மட்டும் (1இ 3இ 4இ 5) நான்கு இனிய பொருள்களைக் கூறுகின்றன. ஏனையவற்றில் மும்மூன்று கருத்துகளே கூறப்பட்டுள்ளன. இந்நூல் திரிகடுகத்தினை அடியொற்றிச்செல்வது என்பர். இந்நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். பூதன் என்பது இவர் தந்தையார் பெயர் ஆகும்.
நட்டார்க்கு நல்ல செயல் இனிது (17)
மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே (13)
கற்றறிந்தார் கூறும் கருமப்பொருள் இனிதே (32)
என்பவை நினைவில் நிறுத்தத்தக்க சில சிறந்த வரிகள். இந்நூலுக்குப் பழைய உரையொன்று உண்டு.
10.முதுமொழிக்காஞ்சி
முதுமொழி என்பது மூதுரை அல்லது முதுசொல்லாகும். ஆண்டாலும் அறிவாலும் மூத்தோர் ஏனையோர்க்கு உலகியல் உண்மைகளை எடுத்துக் கூறுவது என்னும் பொருளில் முதுமொழிக் காஞ்சி எனப்பட்டது. பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியூம் உலகியல் பொருள் முடிவூ உணரக் கூறின்று என்பது புறப்பொருள் வெண்பாமாலையில் இடம்பெறும் முதுமொழிக்காஞ்சித் துறைக்கு உரிய விளக்கமாகும். காஞ்சியென்பது மகளிர் இடையில் அணியூம் மணிக்கோவையூம் ஆகும். அது போல முதுமொழிகள் பல கோக்கப்பட்ட நூல் என்னும் பொருளில் இப்பெயர் அமைந்தது என்றும் கூறலாம்.
இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கூடலூர்கிழார் எனக் குறிக்கப்படுகின்றார். புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் என்ற சங்கப் புலவரினும் இவர் வேறானவர். இந்நூலில் பத்துப்பத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு பத்திலும் பத்து அறிவூரைகள் உள்ளன. ஒவ்வொரு பத்தும் ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் என்று தொடங்குகின்றது. ஒவ்வொரு பத்துக்கும் ஒவ்வொரு பெயர் தலைப்பாக அமைகிறது. அப்பெயர் அப்பத்தில் அமைந்த எல்லாப் பத்துப் பாடல்களின் அடிகளிலும் இடம்பெறும். சிறந்த பத்துஇ அறிவூப்பத்துஇ துவ்வாப்பத்து என்றவாறு அப்பெயர்கள் அமையூம். இந்நூலின் பாடல்களை உரையாசிரியர்கள் மேற்கோளாகக் காட்டியூள்ளனர். இதற்குத் தௌpவான பழைய பொழிப்புரை உள்ளது. திருக்குறளின் கருத்துக்களும் தொடர்களும் இதில் பரவலாகக் காணப்படுகின்றது.
11.ஆசாரக்கோவை
‘ஆசாரம்’ என்னும் வடசொல் ஒழுக்கம் என்று பொருள்படுவது. நல்லொழுக்கக் கோட்பாடுகளைத் தொகுத்துக் கோவையாகத் தருவதனால் இப்பெயர் பெற்றது. சிறப்புப் பாயிரம் நீங்கலாக இதில் நூறு வெண்பாக்கள் உள்ளன. வெண்பா வகையில் குறள்இ சிந்தியல்இ நேரிசைஇ இன்னிசைஇ பஃறொடை ஆகிய பல வகையூம் இதில் உள்ளன. இது வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. இதனை
ஆரிடத்துத் தானறிந்த மாத்திரையான் ஆசாரம்
யாரும் அறிய அறனாய மற்று அவற்றை
ஆசாரக் கோவை எனத் தொகுத்தான்
என்ற சிறப்புப்பாயிரப் பகுதியால் அறியலாம்.
ஆசிரியர்
இதன் ஆசிரியர் கயத்தூர்ப் பெருவாயில் முள்ளியார் என்னும் சான்றௌர். பெருவாயில் என்ற ஊரினர் இவர் என்று தெரிகிறது. கயத்தூர் என்ற பெரிய ஊர் இதன் அருகில் இருந்தது போலும்! இவர் வடமொழி வல்ல கல்வியாளர் என்பது நூலால் விளங்கும்.
சிறப்புச் செய்திகள்
அகந்தூய்மையளிக்கும் உயர்ந்த அறங்களை வற்புறுத்துவதோடுஇ அன்றாட வாழ்க்கையில கடைப்பிடிக்க வேண்டிய நல்ல ஒழுகலாறுகளையூம் இது வற்புறுத்தியூள்ளது. காலையில் எழுதல்இ காலைக்கடன் கழித்தல்இ நீராடல்இ உணவூ உட்கொள்ளல்இ உறங்குதல் ஆகிய நடைமுறைகளின் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை இது போல் வேறு எந்த நூலும் சொல்லவில்லை.
15.சங்கமருவிய கால நூல்கள் பற்றி கருத்துறை வழங்குக?
நூல்கள்
சங்கமருவிய காலத்தில் எழுந்த நூல்கள் எவையென 'நாம் திட்டமாகக் கூறமுடியாதிருக்கின்றது. ஒரு நூலின் மொழிநடைஇ யாப்பமைதிஇ அந்நூல் குறிக்கும் பண்பாட்டு நிலைஇ மக்கள் வாழ்க்கைநிலைஇ பழக்க வழக்கங்கள் முதலிய வற்றை ஆதாரமாகக்கொண்டு அந்நூல் எழுந்த காலத்தை நிச்சயிக்கலாம். அங்ஙூனம் நிச்சயிப்பதாயின் தொல்காப்பியம் திருக்குறள்இ சிலப்பதிகாரம்இ மணிமேகலை முதலியனவூம் காரைக்காலம்மையாரும் முதலாழ்வார்கள் மூவரும் பாடியருளிய பத்திப் பாடல்களும் கலித்தொகைஇ பரிபாடல் என்னும் தொகை நூல்களிலுள்ள பாட்டுக்களுட் பலவூம் அக்காலப் பகுதிக்குரியவையெனக் கொள்ளுதற்குச் சான்றுகள் பலவூள்ளன.
பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் திருக்குறள் மட்டுமன்றிஇ வேறு சில நூல்களும் அக்காலப்பகுதிக்கு உரியவை என்றே கூறலாம். மேற்கூறிய நூல்களுள் தொல்காப்பியம் ஏனைய நூல்களுக் கெல்லாம் காலத்தால் முந்தியதாகும். அதற்குப்பின் முறையே திருக்குறள்இ சிலப்பதிகாரம்இ மணிமேகலை என்னும் நூல்கள் எழுந்தன என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ''அந்நிலை மருங்கின் அறமுதலாகிய மும்முதற் பொருள் எனவருந் தொல்காப்பியச் சு+த்திரத்தை அடிப்படையாகக் கொண்டே திருவள்ளுவர் அறத்துப்பால்இ பொருட்பால்இ காமத்துப்பால் என முப்பாலாகத் திருக்குறளை அமைத்தாரென்பது தெரிகின்றது - 3 தொல்காப்பியச் சு+த்திரங்களிலுள்ள பல சொற்றொடர்கள் திருக்குறளில் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பிய விதிக்கு மாறன மொழிவழக்குகள் சில திருக்குறளிற் காணப்படுகின்றன. ஆகவேஇ திருக்குறள் தொல்காப்பியத்துக்குக் காலத்தாற் பிந்தியதாகும். சிலப்பதிகாரம்இ மணிமேகலை என்னும் இரு காவியங்களும் திருக்குறளுக்குக் காலத்தாற் பிந்தியவை என்பதற்கு அந்நூல்களிற் சான்றுகள் உள்ளது.
நமக்குக் கிடைத்துள்ள தமிழிலக்கண நூல்களுள்ளே காலத்தால் முந்தியது தொல்காப்பியமாகும். இது தமிழ்மொழி யின் இலக்கண அமைதியினையூம் பண்டைத் தமிழர் பண் பாட்டினையூம் பழந்தமிழிலக்கிய மரபினையூம் திறம்பட எடுத்துக் காட்டும் ஓர் அரிய நூலாகும். இந்நூலிற் கூறப்பட்டுள்ள அரும்பொருள்களை உள்ளவாறு அறிந்துகொள்ளுதற்கு இந் நூல் எழுந்த காலத்தை ஆராய்ந்தறிதல் இன்றியமையாத தாகும். இது கி. மு. இரண்டாம் நூற்றண்டிற்குமுன் எழுந்தது என்று ரா. இராகவையங்கார் அவர்கள் கொண்டனர். தொல்காப்பியம் எழுந்த காலம் கி.பி. நான்காம் அல்லது ஐந்தாம் நூற்ருண்டு என்று வையாபுரிப்பிள்ளையவர்கள் பல ஆதாரங்கள் காட்டி நிறுவினர்.
வித்துவான் க. வெள்ளைவாரணன் அவர்கள் பலவாறு ஆராய்ந்து தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 5320 என்று கூறியூள்ளனர். இங்ஙூனம் பலரும் பலவாறு கூறலால் தொல்காப்பியத்தின் காலம் எது என்பதை நிச்சயிக்க முடியாதிருக்கின்றது. இந்நூலின் மொழிகடைஇ இந்நூல் கூறும் பண்பாடுஇ பொருள் மரபுஇ செய்யூள் மரபு முதலியன இன்னும் தௌpவாக ஆராயப்படவில்லை என்றே கூறலாம். நூல்வல்லார் அவற்றைச் செவ்வனே ஆராய்ந்தபின்னன்றி இந்நூல் எழுந்த காலத்தைத் திட்டமாக அறியமுடியாது. ஆரியர் போற் றிய நால்வகை வருணப் பாகுபாடு தமிழ் மக்களிடையேயூம் புகுந்திருந்தமையைத் தொல்காப்பியச் சு+த்திரங்கள் தௌpவாக எடுத்துக் காட்டுகின்றன. ஆரியருடைய மணவினைக் கரணங்கள்
1. தமிழ் வரலாறு.
2. தமிழ்ச்சுடர் மணிகள்இ
3இ தமிழ் இலக்கிய வரலாறு-தொல்காப்பியம்.
முதலியவற்றைத் தமிழ் மக்களும் அனுசரித்து கடந்தனர் என்பதும் இந்நூலால் அறியக்கிடக்கின்றது. இந்நூலின் மொழி நடையினை நோக்கும்போதுஇ அது நற்றினை முதலியவற்றி லுள்ள சங்க காலச் செய்யூட்களிற் காணப்படும் மொழிநடை யிலும் காலத்தாற் பிந்தியது என்பது தெரிகின்றது. சங்க கால வழக்கிலிருந்த சில சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் வழக்கொழிந்தன என்பது இந்நூலிலுள்ள உரிச்சொல்லியல் முதலியவற்றிலிருந்து அறியலாம். இந்நூல் குறிக்கும் பண் பாடு சங்க காலப் பண்பாட்டிலும் வேறுபட்டதொன்று என்பது இந்நூலைப் படிப்பார்க்கு நன்கு புலனுகும். தொல்காப்பியம்
கூறும் கைக்கிளைஇ பெருந்தினையாகிய ஒழுக்கங்கள் கற்றினைஇ குறுந்தொகைஇ அகநானூறு ஆகிய தொகைநூல்களில் இடம் பெறவில்லையென்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. இவை போன்ற பல காரணங்களால் இந்நூல் சங்ககாலத்தின் முடிவில் எழுந்திருத்தல்கூடும் என ஒருவாறு துணியலாம். தொல்காப்பியம் என்னும் நூற்பெயர் தொல்காப்பியன் என்னும் நூலாசிரியன் பெயரிலிருந்து எழுந்தது. தொல்காப்பியர் உலக வழக்குஇ செய்யூள் வழக்கு என்னும் இரு வகை வழக்குகளையூம் அடிப்படையாகக்கொண்டு எழுத்துஇ சொல்இ பொருள் என்னும் மூவகை இலக்கணங்களையூம் ஆராய்ந்துஇ அவற்றை முறையே எழுத்ததிகாரம்இ சொல்லதி காரம்இ பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாக வகுத்துக் கூறியூள்ளார். இயல்இ இசைஇ நாடகம் என்னும் முத்தமிழுள் இயற்றமிழுக்குரிய இலக்கணத்தை மட்டுமே தொல்காப்பியர் தம்நூலிற் குறித்துள்ளனர்.
உலகம் போற்றும் உத்தம நூலாகிய திருக்குறள் தமிழிலக்கியங்களுள் தலைமைபெற்று நிற்பதொன்றகும். இது அறத்துப்பால்இ பொருட்பால்இ காமத்துப்பால் என மூன்று பிரிவூகளையூடையது. அறத்துப்பால் முப்பத்தெட்டு அதிகாரங் களையூம்இ பொருட்பால் எழுபது அதிகாரங்களையூம்இ காமத்துப்
பால் இருபத்தைந்து அதிகாரங்களையூம் கொண்டுள்ளன. இந் நால் சங்ககாலத்திற்கு உரியது எனச் சிலர் கருதுகின்றனர். உயிர்களிடத்தெல்லாம் அன்புகாட்டி மக்கள் ஒழுகுதற்கான அறநெறியை யெடுத்துக்கூறும் இந்நூல் எழுந்த காலத்தி லிருந்த பண்பாட்டிற்கும் மீன்இ இறைச்சிஇ கள் ஆகியவற்றை மக்கள் விரும்பியூண்டு இன்பக்களியாட்டிலீடுபட்ட சங்க காலப் பண்பாட்டிற்குமிடையே எத்துணை வேறுபாடு உண்டென் பதைப் பண்டைநூல்களைப் படித்தறிந்துகொள்ளலாம். சமண நூற் கருத்துக்கள் தமிழ்நாட்டில் மலிந்திருந்த காலத்திலே திருக்குறள் இயற்றப்பட்டதாதல் வேண்டுமெனக் கொள்ளு தற்குப் பல சான்றுகள் இந்நூலிற் காணப்படுகின்றன. சங்க காலத்தில் வழங்கிய தமிழினும் சிறிது பிந்திய காலத்துத் தமிழிலேயே திருக்குறள் இயற்றப்பட்டுள்ளது. சங்கச்செய்யூட்களில் உயர்திணையில் வாராத 'கள்' விகுதியூம்இ எல்லாம் என்னும் சொல்லும் திருக்குறளில் உயர் திண்யில் வந்துள்ளன. சங்கச் செய்யூளில் வாராத "ஆநின்று' என்னும் இடைநிலை 'மாட்டு முதலிய உருபுகள்இ கால்' முதலிய விகுதிகள்இ விடு முதலிய துணைவினைகள்இ கில் முதலிய இடைச்சொற்கள்இ உருவகங்கள்இ வடசொற்கள்இ இன்னுரன்ன பலவூம் திருக்குறளில் வந்துள்ளன. திருக்குறள் குறிக்கும் அரசியலை நோக்கும்பொழுதும் இந்நூலெழுந்த காலத்துத் தமிழ்நாட்டரசியல் முறை மிக உயர்ந்த நிலையில் இருந்திருத்தல் வேண்டு மெனக் கருதலாம். அதனுல்இ தமிழ்நாட்டரசியலும் பண்பாடும் மிகச்சிறந்து விளங்கிய சங்கமருவியகால ஆரம்பத்தில் இந்நூல் எழுந்திருத்தல் வேண்டுமெனக் கொள்ளக்கிடக்கின்றது.
பண்டைக்காலங் தொடக்கமாகத் தமிழ்நாட்டின் பண்பாட்டை உருப்படுத்தி வளர்த்துவந்த பேரிலக்கியங்களுக் கெல்லாம் வழிகாட்டியாக அமைந்தது திருக்குறள் எனலாம். இந்நூலைப்போலத் தமிழ் மக்களது உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட தமிழ்நூல் வேறு யாதுமில்லை. இந்நூற் பாக்களையூம் கருத்துக்களையூம் எடுத்தாளாத தமிழ்ப் புலவர் இல்லை. சிலப்பதிகாரம்இ சிந்தாமணி முதலிய பேரிலக்கியங்கள் வள்ளுவர் வாக்கைப் போற்றிப் புகழ்ந்து பாராட்டியூள்ளன. இந்நூலா சிரியரைப் பொய்யில் புலவன் என்றும் தெய்வப் புலவன் என்றும் இந்நூலைப் பொய்யாமொழியென்றும் தெய்வநூலென்றும் பலவாறாக நம் முன்னோர் பாராட்டியூள்ளனர். அறவழி நின் றொழுகும் ஒரு சமுதாயத்தைத் தமிழ் நாட்டில் உருவாக்க வேண்டும் என்னும் குறிக்கோளைக் கொண்டு எழுந்த இந்நூல்இ எல்லாச் சாதியினர்க்கும் எல்லாச் சமயத்தினர்க்கும் உரிய உலகப் பொதுநூலாக நின்று மக்களுடைய நல்வாழ்விற்குப் பேருதவி புரிந்துவருகின்றது. இந்நூல் 'வையத்துள் வாழ் வாங்கு வாழும்' வகையினை வகுத்துக் காட்டுதலாற் பிற மொழியாளரும் இதனைத் தத்தம் மொழிகளில் மொழிபெயர்த்துப் போற்றுகின்றனர்.
வாழ்க்கைக்கு உறுதுணையாக உள்ள ஒழுக்கநெறிகளைக் கூறும் நூல்கள் பல உளவெனினும்இ திருக்குறளைப் போலச் சொற்சுருக்கமும் பொருட்செறிவூம் உள்ள குறட்பாக்களிலே கற்றௌரும் கல்லாதோரும் மனங்கொண்டு கற்கக்கூடிய முறை யில் அறிவூரைகளைக் கவிச்சுவையூடன் கலந்து கூறும் நூல் வேறில்லை. திருக்குறளைப் படிப்போர் மனதிலெல்லாம் இது. ஒரு சிறந்த நீதிநூல் என்ற எண்ணம் நிலவூகின்றதன்றி. நடையழகில் ஒப்புயர்வற்ற இந்நூல் ஒரு கவிதைக் களஞ்சி யம் என்ற எண்ணம் உண்டாவதில்லை. உண்மையில் இந் நூலிலுள்ள ஒவ்வொரு குறட்பாவூம் ஒவ்வொரு சொல்லோவிய மாகக் காட்சியளிப்பதை நாம் காணலாம். குறளுருக் கொண்ட திருமால் மூவூலகையூம் ஈரடியால் அளந்ததுபோல்இ வள்ளுவரும் மக்கள் மனதில் எண்ணுவன யாவற்றையூம் அளந் தறிந்துஇ அவற்றையெல்லாம் வண்ணமும் வனப்பும் உவமை முதலிய அணிச்சிறப்பும் உணர்ச்சிப் பெருக்கும் உள்ள ஈரடி வெண்பாவால் வெளிப்படுத்தியூள்ளனர். வள்ளுவருடைய உணர்ச்சியனுபவங்களையூம் கற்பனைச் சிறப்பினையூம் கவிச் சுவை நிரம்பிய காமத்துப்பாலில் மட்டுமன்றிஇ அறத்துப்பால் பொருட்பாலாகிய ஏனைப் பால்களிலும் காணலாம். திருவள் ளுவமாலை இந்நூலுக்கு ஒரு முகவூரைபோல நின்று இதன் கணுள்ள சிறப்புக்கள் பலவற்றைச் சுருக்குமாக எடுத்துக் காட்டுகின்றது. 'அது திருக்குறளைப் படித்து அனுபவித்த பெரும்புலவர்கள் தம் கருத்தை வெளிப்படுத்திப் பாடிய வெண்பாக்களைக் கொண்ட ஒரு தொகைநூலாகும்.
சிலப்பதிகாரக் கதை இளங்கோவடிகள் காலத்தில் நடை பெற்ற உண்மை நிகழ்ச்சிதான் என்று நூலைப்படிப்போர் எவரும் நம்பக்கூடிய முறையிலே கதை புனையப்பட்டிருத்தல் அடிகளுடைய புலமைத் திறனுக்கு ஒரு சான்ருகின்றது. அது உண்மையில் அக்காலத்தில் நிகழ்ந்ததொன்றன்று. சங்க காலத் தில் வழங்கிவந்த ஒரு கதையை எடுத்துஇ அதனைக் காவிய உருவத்தில் அடிகள் அழகுற அமைத்துக் காட்டுகின்றர் என்றே கூறுதல் வேண்டும். துன்பம் மீதூரப்பட்ட பெண்ணொருத்தி தன் முலையொன்றை அறுத்தெறிந்த வரலாறு நற்றினைச் செய்யூளொன்றிற் குறிக்கப்பட்டுள்ளது. அதைக் குறிக்கும் செய்யூட் பகுதி வருமாறு:- எரிம்ருள் வேங்கைக் கடவூள் காக்கும் குருகார் கழனியின் இதணத் தாங்கண் ஏதி லாளன் கவலை கவற்ற ஒருமுலை யறுத்த திருமா வூண்ணி'.
நல்ல பதிவு நன்றி
ReplyDeleteசிறுகதை, நாவல், ஏனைய காலங்கள்
குறிப்பு, மாதிரி வினா விடை இருந்தால் lkfarhan@gmail
.com
என்ற அனுப்பி வைக்க முடியுமா.தயவு செய்ய
Download aahatha
ReplyDeleteSuppers sir
ReplyDelete